6th Std Science Term 1 Solution | Lesson.2 விசையும் இயக்கமும்

பாடம்.2 விசையும் இயக்கமும்

விசையும் இயக்கமும் பாட விடைகள்

பாடம்.2 விசையும் இயக்கமும்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. வேகத்தின் அலகு _________ 

  1. மீ
  2. விநாடி
  3. கிலோகிராம்
  4. மீ/வி

விடை : மீ/வி

2.  கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்?

  1. பூமி தன் அச்சைப் பற்றிச் சுழலுதல்
  2. நிலவு பூமியை சுற்றி வருதல்
  3. அதிவுறும் கம்பியின் முன்பின் இயக்கம்
  4. மேற்கண்ட அனைத்தும்

விடை : அதிவுறும் கம்பியின் முன்பின் இயக்கம்

3.  கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு.

  1. வேகம் = தொலைவு X காலம்
  2. வேகம்= தொலைவு X காலம்
  3. வேகம் = காலம் X தொலைவு
  4. 1/ (தொலைவு X காலம்)

விடை : வேகம்= தொலைவு X காலம்

4. கீதா தன் தந்தையின் வண்டியினை எடுத்துக்கொண்டு அைளுவடய வீட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள மாமா வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு செல்வதற்கு 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள்.

கூற்று 1 – கீதாவின் வேகம் 1 கி.மீ/ நிமிடம்

கூற்று 2: கீதாவின் வேகம் 1 கி.மீ/ மணி

  1. கூற்று 1 மட்டும் சரி
  2. கூற்று 2 மட்டும் சரி
  3. இரண்டு கூற்றுமே சரி
  4. இரண்டு கூற்றுகளும் தவறு

விடை :  கூற்று 1 மட்டும் சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  சாலையில் நேராகச் செல்லும் ஒரு வண்டியின் இயக்கம் ________ இயக்கத்திற்கு ஒரு உதாரணமாகும். 

விடை : நேர்கோட்டு இயக்கம்

2. புவி ஈர்ப்பு விசை ________ விசையாகும்.

விடை : தொடா

3.  மண்பாண்டம் செய்பவரின் சக்கரத்தின் இயக்கம் ________ இயக்கமாகும்.

விடை : சுழற்சி

4. ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவைக் கடக்குமானால், அப்பொருளின் இயக்கம் ________ 

விடை : சீரான இயக்கம்

II. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக.

1. மையப்புள்ளியைப் பொறுத்து முன்னும் பின்னும் இயங்கும் இயக்கம் அலைவு இயக்கம் ஆகும்.

விடை : சரி

2. அதிர்வு இயக்கமும், சுழற்சி இயக்கமும் கால ஒழுங்கு இயக்கமாகும்

விடை : தவறு

சரியான விடை :  அதிர்வு இயக்கமும், அலைவு இயக்கமும் கால ஒழுங்கு இயக்கமாகும்

3. மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனங்கள் சீரான இயக்கத்தில் உள்ளன.

விடை : தவறு

சரியான விடை :  மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனத்தின் இயக்கம் ஒரு சீரற்ற இயக்கமாகும்.

4. வருங்காலத்தில் மனிதர்களின் பதிலாக ரோபோட்டுகள் செயல்படும்.

விடை : சரி

IV. தாெடர்பின் அடிப்படையில் நிரப்புக.

1. பந்தை உதைத்தல் : தொடு விசை :: இலை கீழே விழுதல் : ________

விடை : தாெடா விசை

2. மனிதனின் தொலைவு : மீட்டர்:: வேகம் : ________

விடை : மீட்டர்/ வினாடி

3. சுழற்சி இயக்கம் : பம்பரம் சுற்றுதல் :: அலைவு இயக்கம் : ________

விடை : ஊஞ்சலின் இயக்கம்.

V.பொருத்துக

விசையும் இயக்கமும் பாட விடைகள்வட்ட இயக்கம்
விசையும் இயக்கமும் பாட விடைகள்அலைவு இயக்கம்
விசையும் இயக்கமும் பாட விடைகள்நேர்கோட்டு இயக்கம்
விசையும் இயக்கமும் பாட விடைகள்சுழற்சி இயக்கம்
விசையும் இயக்கமும் பாட விடைகள்நேர்கோட்டு இயக்கமும், சுழற்சி இயக்கமும்
Ans : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 5 – உ

VI. சீரான வேகத்தில் காட்டினுள் செல்லும் ஒரு யானை கடக்கும் தொலைவு, காலத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. சீரான வேகத்தின் அடிப்படையில் கீழ்கண்ட அட்டவணையைப் பூர்த்தி செய்

தொலைவு (மீ)048121620
காலம் வி)0246810

VII. ஒரு வார்த்தையில் விடையை எழுதுக.

கால ஒழுங்கற்ற இயக்கம்கால ஒழுங்கு இயக்கம்சுழற்சி இயக்கம்
குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக நடைபெறாத இயக்கம்குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும் இயக்கம்குறிப்பிட்ட அச்சைப் பற்றிச் சுழலும் இயக்கம்

VIII. ஒரு வார்த்தையில் விடையை எழுதுக.

1. தொடுதல் நிகழ்வின்றி ஒரு பொருள் மீது செயல்படும் விசையின் பெயர் _______

விடை : தொடா விசை

2. காலத்தைப் பொறுத்து ஒரு பொருளின் நிலை மாறுபடுவது _______

விடை :  இயக்கம்.

3. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்பத் திரும்ப நிகழும் இயக்கம் _______ எனப்படும்.

விடை : கால ஒழுங்கு இயக்கம்

4. சமகால இடைவெளியில், சமதொலைவைக்
கடக்கும் பொருளின் இயக்கம் _______

விடை : சீரான இயக்கம்.

5. நுணுக்கமான அல்லது கடினமான வேலகளைச் செய்யுமாறு கணினி நிரல்களால் வடிவமைக்கப்பட்ட இயந்திரம் _______

விடை : ரோபாேட்

IX. ஓரிரு வார்த்தைகளில் விடையளி

1. விசை – விடையறு.

பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால்  செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே விசை என அழைக்கப்படுகிறது.

2. பாெருள் நகரும் பாதையைப் பாெறுத்து இயக்கங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?

  • நேர்க்கோட்டு இயக்கம்
  • வளைவுப்பாதை இயக்கம்
  • வட்டப்பாதை இயக்கம்
  • சுழற்சி இயக்கம்
  • அலைவு இயக்கம்
  • ஒழுங்கற்ற இயக்கம்.

3. நீ, இயங்கும் மகிழுந்தினுள் உட்கார்ந்திருக்கும் பாேது உன்னருகில் அமர்ந்திருக்கும் உன் நண்பனைப் பாெறுத்து நீ என்ன நிலையில் உள்ளாய்?

என் நண்பனைப் பொறுத்தவரையில் நான் ஓய்வில் உள்ளேன்.

4. பூமியின் சுழற்சி கால ஒழுங்கு இயக்கமாகும்-விவரி.

பூமியின் சுழற்சி கால ஒழுங்கு இயக்கமாகும். ஏனெனில் பூமியானது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக இயங்குகிறது.

5. சுழற்சி இயக்கம், வளைவுப்பாதை இயக்கம் வேறுபடுத்துக. 

சுழற்சி இயக்கம்வளைவுப்பாதை இயக்கம்
ஒரு பொருள் தன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல் சுழற்சி இயக்கமாகும்.பொருளானது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும்.
(எ.கா) பம்பரத்தின் இயக்கம்(எ.கா) பந்தினை வீசுதல்

X. கணக்கீடுக

1. ஒரு வண்டியானது 5 மணி நேரத்தில் 400 கி.மீ. தூரத்தை கடந்தால் வண்டியின் சராசரி வேகம் என்ன?

வாகனம் கடந்த தூரம்= 400 கி.மீ.
வாகனம் எடுத்துக் கொண்ட நேரம்= 5 மணி நேரம்
சராசரி வேகம்= கடந்த தூரம் / எடுத்துக் கொண்ட நேரம்
= 400 கி.மீ / 5 நேரம்
= 80 கி.மீ / நேரம்

XI. விரிவாக விடையளி.

1. இயக்கம் என்றால் என்ன?

காலத்தைப் பொறுத்து ஒரு பொருளின்நிலை மாறுபடுவது இயக்கம் எனப்படும்.

6th-Std-Science-Book-Back-Answers-Term-1-Lesson-2-5 a

2. பல்வேறு இயக்கங்களை உதாரணத்துடன் வகைப்படுத்துக.

நேர்கோட்டு இயக்கம்

நேர்கோட்டுப் பாதையில் நடைபெறும் இயக்கம்.
எ.கா: நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதன்.

வளைவுப்பாதை இயக்கம்

முன்னோக்கிச் சென்றுகொண்டு, தனது பாதையின் திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும் பொருளின் இயக்கம்.
எ.கா. வீசி எறியப்பட்ட பந்து.

வட்டப்பாதை இயக்கம்

வட்டப்பாதையில் நடைபெறும் இயக்கம்.
எ.கா. கயிற்றின் முனையில் கட்டப்பட்டு சுழற்றப்படும் கல்லின் இயக்கம்.

தற்சுழற்சி இயக்கம்

ஒரு அச்சினை மையமாகக் கொண்டிருக்கும் பொருளின் இயக்கம்.
எ.கா. பம்பரத்தின் இயக்கம்.

அலைவு இயக்கம்

ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ மாறி மாறி நகரும் பொருளின் இயக்கம்.
எ.கா. தனிஊசல்.

ஒழுங்கற்ற இயக்கம்

வெவ்வேறு திசையில் நகரும் பொருளின் இயக்கம்.
எ.கா. மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம்.

XII. எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்.

நேர்கோட்டு இயக்கம்தென்னை மரத்திலிருந்து விழும் தேங்காயின் இயக்கம்
வளைவுப்பாதை இயக்கம்காகித விமானத்தின் இயக்கம்
தற்சுழற்சி இயக்கம்வண்டிச் சக்கரத்தின் இயக்கம்
வட்ட இயக்கம்சூரியனைச் சுற்றி வரும் நிலவின் இயக்கம்
அலைவு இயக்கம்ஆடிக் கொண்டிருக்கும் நாய் வாலின் இயக்கம்
ஒழுங்கற்ற இயக்கம்மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம்.

 

சில பயனுள்ள பக்கங்கள்