பாடம்.5 விலங்குலகம்
பாடம்.5 விலங்குலகம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. உயிருள்ள பொருள்கள் அல்லது உயிரினங்களைப் பற்றி படிப்பது
- உளவியல்
- உயிரியல்
- விலங்கியல்
- தாவரவியல்
விடை: விலங்கியல்
2. கீழ்க்காணும் எவற்றுள் எவை உயிருள்ளவைகளின் பண்புகளாகக் கருதப்படுகின்றன?
i. சுவாசம் | ii. இனப்பெருக்கம் |
iii. தகவமைப்பு | iv. கழிவு நீக்கம் |
சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
- i, ii மற்றும் iv மட்டும்
- i, ii மட்டும்
- ii மற்றும் iv மட்டும்
- i, iv, ii மற்றும் iii
விடை: i, iv, ii மற்றும் iii
3. பல்லிகள் எதன்மூலம் சுவாசிக்கின்றன?
- தோல்
- செவுள்கள்
- நுரையீரல்கள்
- சுவாச நுண்குழல்
விடை: நுரையீரல்கள்
4. அனைத்து விலங்குகளுக்கும் தேவையானது
- உணவு மற்றும் நீர்
- நீர் மட்டும்
- காற்று, உணவு மற்றும் நீர்
- உணவு மட்டும்
விடை: காற்று, உணவு மற்றும் நீர்
5. எந்த விலங்கு செவுள்கள் எனப்படும் சுவாச உறுப்பைப் பெற்றுள்ளது?
- மண்புழு
- குள்ளநரி
- மீன்
- தவளை
விடை: மீன்
6. ஒரு வாழிடத்தின் உயிரிக்காரணிகளை மட்டும் குறிக்கும் தொகுப்பினைத் தேர்ந்தெடு.
- புலி, மான், புல், மண்
- பாறைகள், மண், தாவரங்கள், காற்று
- மண், ஆமை, நண்டு, பாறைகள்
- நீர்வாழ்த்தாவரம், மீன், தவளை, பூச்சிகள்
விடை: நீர்வாழ்த்தாவரம், மீன், தவளை, பூச்சிகள்
7. கீழ்கண்டவற்றுள் எதை வாழிடமாகக் கூற முடியாது?
- ஒட்டகங்களுடன் கூடிய பாலைவனம்
- மீன்கள் மற்றும் நத்தைகளுடன் கூடிய குளம்
- மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம்
- காட்டு விலங்குகளுடன் கூடிய காடு
விடை: மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம்
8. பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவி செய்வது எது?
- கனமான மற்றும் வலிமையான எலும்புகள்
- மென்மையான மற்றும் தடித்த எலும்புகள்
- உள்ளீடற்ற மற்றும் இலேசான எலும்புகள்
- தட்டையான மற்றும் தடித்த எலும்புகள்
விடை: மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம்
9. பாரமீசியம் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இடம்பெயர்வதற்கு உதவுவது
- போலிக்கால்கள்
- கசையிழை
- பாதம்
- குறு இழை
விடை: குறு இழை
10. கங்காரு எலி வசிப்பது
- நீர் வாழிடம்
- பாலைவன வாழிடம்
- புல்வெளி வாழிடம்
- மலைப்பிரதேச வாழிடம்
விடை: பாலைவன வாழிடம்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. நீர் நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை ________ என்று அழைக்கலாம்
விடை : சூழ்நிலை மண்டலம்
2. செல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விலங்குகளை ________ மற்றும் ________ உயிரினங்கள் என வகைப்படுத்தலாம்.
விடை : ஒரு செல் மற்றும் பல செல்
3. பறவைகளின் வால் திசை திருப்புக் கட்டையாக செயல்பட்டு ________ பயன்படுகிறது
விடை : திரும்புவதற்கு
4. அமீபா ________ உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது
விடை : பாேலிக்கால்கள்
III. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறாக
இருப்பின் சரியான கூற்றை எழுதுக
1. ஒரு உயிரி வாழக்கூடிய அல்லது இருக்கக்கூடிய இடம் வாழிடம் எனப்படும்.
விடை : சரி
2. புவியியல் அமைப்பு மற்றும் சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
விடை : தவறு
சரியான விடை : புவியியல் அமைப்பு மற்றும் சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லாமல் இடத்திற்கு இடம் மாறுபடும்.
3. ஒரு செல் உயிரியான அமீபா, பொய்க்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.
விடை : சரி
4. பறவைகளால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடியும்.
விடை : தவறு
சரியான விடை : பறவைகளால் ஒரு நேரத்தில் இரு கண்கள் இரு வெவ்வேறு பொருட்களை பார்க்க முடியும்.
5. பாரமீசியம் ஒரு பல செல் உயிரி.
விடை : தவறு
சரியான விடை : பாரமீசியம் ஒரு செல் உயிரி.
IV. பின்வருவனவற்றை நிறைவு செய்க
1. மழைக் காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை நிலப்பரப்பு _________ என்று அழைக்கின்றோம்
விடை : சுற்றுச்சூழல்.
2. ஒரு செல்லால் ஆன உயிரினங்கள் _________ என்று அழைக்கப்படுகின்றன.
விடை : ஒரு செல் உயிரிகள்.
3. மீனின் சுவாச உறுப்பு _________ ஆகும்
விடை : செவுள்கள்
4. கால்களில் உள்ள வளை நகங்களின் மூலம் பல்லிகள் தரைகளில் _________
விடை : இறங்கும்
5. ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் _________ சேமிக்கின்றன.
விடை : காெழுப்பைச்
V. மிகச் சுருக்கமாக விடையளி.
1. பறவைகள் தங்கள் இரைகளை எவ்வாறு பிடிக்கின்றன?
பறவைகள் கூர்மையான நகங்கள் மற்றும் சக்திவாய்ந்த அலகு ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்கள் இரைகளை பிடிக்கின்றன
2. இந்தியாவில் ஒட்டகங்களை நாம் எங்கு காண முடியும்?
இந்தியாவில் ஒட்டகங்களை பாலைவனத்தில் காண முடியும்
3. அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு எது?
அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு பொய்க்கால்கள் ஆகும்.
4. பாம்புகளின் உடல் பகுதிகள் யாவை?
- தலை
- வால்
- உடம்பு
- நாக்கு
- வாய்
- கண்
5. பறவைகள் காற்றில் பறக்கும் பாெழுது எந்த உடலமைப்பைப் பயன்படுத்தி பறக்கும் திசையை மாற்றிக் காெள்கின்றன?
பறவைகள் காற்றில் பறக்கும் பாெழுது வால்பகுதியினை பயன்படுத்தி பறக்கும் திசையை மாற்றிக் காெள்கின்றன
VI. சுருக்கமாக விடையளி.
1. ஒரு செல் உயிரிகளை பல செல் உயிரிகளிடமிருந்து வேறுபடுத்துக.
ஒரு செல் உயிரி | பல செல் உயிரி |
1. ஒரு செல்லால் ஆனவை | பல செல்களால் ஆனவை |
2. உயிரியல் உள்ள ஒரு சொல்லே வாழ்க்கைச் செயல்கள் அனைத்தையும் மேற்கொள்கிறது. | செல்களுக்கிடையே வாழ்க்கைச் செயல்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு செல்கள் வெவ்வேறு செயல்களை செய்வதற்கேற்ப சிறப்பு அம்சங்கள் பெற்றுள்ளன. |
3. பொதுவாக இவை அளவில் மிகச் சிறியவை | பொதுவாக இவை அளவில் பெரியவை |
4. நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க இயலும். | கண்களால் பார்க்க இயலும். |
5. இவற்றில் திசுக்கள், உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் கிடையாது. | இவற்றில் திசுக்கள், உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் உள்ளன. |
6. செல்களின் அளவு அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சி அடைகிறது. | செல்பிரிவு மூலம் செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வளர்ச்சி அடைகிறது |
எ.கா. அமீபொ, பாரமீசியம் மற்றும் யூக்ளினா | எ.கா. மண்புழு, மீன், தவளை, பல்லி மற்றும் மனிதன் |
2. துருவ கரடிகள் மற்றும் பென்குயின்களில் காணப்படும் தகவமைப்புகளை எழுதுக
துருவக் கரடி:
பாதிகாப்பிற்கான தடிமனான தோல், வெண்மையான உரோமங்கள் போன்ற தகவமைப்புகளை பெற்றுள்ளன.
பென்குயின்கள்:
நீந்துவற்கான துடுப்புகள், நடப்பதற்கான இரண்டு கால்கள் போன்ற தகவமைப்புகளை பெற்றுள்ளன.
3. பறவைகளின் எவ்வகையான உடலமைப்பு காற்றில் பறக்க உதவி செய்கிறது?
பறவையின் வால் பறக்கும் திசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பறத்தலின்போது ஏற்படும் அழுத்தத்தினைத் தாங்குவற்கு வலிவை மிக்க மார்புத் தசையினைப் பெற்றுள்ளன.
4. முதுகெலும்பற்ற விலங்குகளின் வகைகள் யாவை?
- தொகுதி ஆர்த்ரோபோட்ஸ்
- தொகுதி மெல்லுடலிகள்
- தொகுதி வலைத் தசைப்புழுக்கள்
- தொகுதி சீலெண்ட்டெரேட்டா
VII. விரிவான விடையளி
1. பாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களில் காணப்படும் தகவமைப்புகளை விவரி
- இதன் நீண்ட கால்கள் பாலைவனத்தில் உள்ள சூடான மணலில் இருந்து உடலை பாதுகாக்கின்றன.
- இவை நீர் கிடைக்கும்போதெல்லொம் அதிக அளவு நீரை அருந்தி, தன் உடலில் தேக்கி வைத்துக் கொள்கின்றன.
- உலர்ந்த பாலைவனத்திற்கு ஏற்றாற்போல் தன் உடலில் நீர் சேமிக்கும் தகவமைப்பைப் பெற்றுள்ளன.
- ஒட்டகம் குறைந்த அளவு சிறுநீரை வெளியேற்றுகிறது. அதன் சாணம் வறண்டு காணப்படும். மேலும் அதன் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதில்லை.
- ஒட்டகம் தன் உடலில் இருந்து சிறிதளவு நீரையே இழப்பதால் அவற்றால் பல நாட்களுக்கு நீர் அருந்தாமல் உயிர் வாழ முடியும்.
- ஒட்டகம் திமில் பகுதியில் கொழுப்பை சேமித்து வைக்கின்றது. சக்தி தேவைப்படும் காலங்களில் ஒட்டகம் தன் திமில் பகுதியில் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பை சிதைத்து ஊட்டம் பெறுகின்றது.
- ஒட்டகம் பெரிய, தட்டையான திண்டு கால்கள் மூலம் மிருதுவான மணலில் நன்றாக நடக்கும் தன்மையைப் பெற்றுள்ளன. இதனால் ஒட்டகத்தை “பாலைவனக் கப்பல்” என்று அழைப்பார்கள்.
- ஒட்டகங்களின் நீண்ட கண் இமைகள் மற்றும் தோல் அதன் கண் மற்றும் காதுகளை புழுதிப் புயலில் இருந்து பாதுகாக்கிறது.
- நாசித் துவாரங்கள் தூசிகள் உள்ளே செல்வதைத் தடுப்பதற்காக மூடிய நிலையில் காணப்படும்.
சில பயனுள்ள பக்கங்கள்