பாடம்.2 மின்னியல்
பாடம்.2 மின்னியல்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. ஒரு வேதி ஆற்றலை மின்னாற்றைலாக மாற்றும சாதனம்
- மின் விசிறி
- சூரிய மின்கலன்
- மின்கலன்
- தொலைக்காட்சி
விடை : மின்கலன்
2. மின்சாரம் தயாரிக்கப்படும் இடம்
- மின்மாற்றி
- மின் உற்பத்தி நிலையம்
- மின்சாரக் கம்பி
- தொலைக்காட்சி
விடை : மின் உற்பத்தி நிலையம்
3. மின்கல அடுக்கின் சரியான குறியீடடைத் தேர்ந்தெடு
விடை : a
4. கீழ்க்கண்ட மின்சுற்றுகளில் எதில் மின்விளக்கு ஒளிரும்?
விடை : d
5. கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?
- வெள்ளி
- மரம்
- அழிப்பபான்
- நெகிழி
விடை : வெள்ளி
II. சரியா? தவறா?
1. பக்க இணைப்பு மின்சுற்றில், ஒனறுக்கு மேற்பட்ட மின்னோட்டப் பாதைகள்
உணடு.
விடை : சரி
2. இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் எதிர் முனையை மற்றொரு மின்கலத்தின எதிர் முனையோடு இணைக்க வேண்டும்
விடை : தவறு
சரியான விடை : இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் எதிர் முனையை மற்றொரு மின்கலத்தின் நேர் முனையோடு இணைக்க வேண்டும்
3. சாவி என்பது மின்சுற்றினைத் திறக்க அல்லது மூடப்பயன்படும் மின்சாதனம ஆகும்.
விடை : சரி
4. தூய நீர் என்பது ஒரு நற்கடத்தியாகும்.
விடை : தவறு
சரியான விடை : சிறிதளவு உப்பினை நீரில் சேர்த்தால் மட்டும் தான் மின்சாரத்தை கடத்தும்
5. துணை மின்கலன்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
விடை : தவறு
சரியான விடை : துணை மின்கலன்களை பலமுறை மின்னேற்றம் செய்து தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
III. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. __________ பொருள்கள் தன் வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றன.
விடை : மின்கடத்தி
2. ஒரு மூடிய மின்சுற்றினுள் பாயும் மின்சாரம் __________ எனப்படும்.
விடை : மூடிய மின்சுற்று
3. __________ என்பது மின்சுற்றை திறக்க அல்லது மூட உதவும் சாதனமாகும்.
விடை : சாவி
4. மின்கலனின் குறியீட்டில் பெரிய செங்குத்து கோடு __________ முனையைக் குறிக்கும்.
விடை : நேர்
5. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு __________ ஆகும்.
விடை : மின்கல அடுக்கு
IV.பொருத்துக
திறந்த சாவி | ||
மின்கலன் | ||
ஒளிரும் மின்விளக்கு | ||
மின்கல அடுக்கு | ||
ஒளிராத மின்விளக்கு | ||
விடை : 1 – ஈ, 2 – உ, 3 – அ, 4 – இ, 5 – ஆ |
V. பின்வரும் சொற்களைக் கொண்டு ஒரு முழுமையான வாக்கியத்தை உருவாக்குக
வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் மின்கலன் ஆகும்
VI. மிகக் குறுகிய விடையளி
1. கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் மினவிளக்கு A மடடும் ஒளிர வேண்டும் எனில் எந்தெந்த சாவி(கள்) மூடப்பட வேண்டும்
K1, K2 சாவிகள் மூடப்பட வேண்டும்
2. கூற்று (A) : நமது உடலானது மின்அதிர்வை வெகு எளிதில் ஏற்றுக் கொள்கிறது.
காரணம் (R) : மனித உடலானது ஒரு நல்ல மின்கடத்தியாகும்.
- A மற்றும் R இரணடும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.
- A சரி, ஆனால் R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல
- A தவறு ஆனால் R சரி.
- A மற்றும் R இரணடும் சரி. R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
விடை : A மற்றும் R இரணடும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.
3. எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்னோட்டத்தை உருவாக்க முடியுமா?
உருவாக்க முடியும் எலுமிச்சைப் பழத்தில் காப்பர் மற்றும் துத்தநாக தகடுகளை செருகினால் இவற்றிற்கிடையே அயனிகள் பரிமாற்றம் செய்து மின்னோட்டம் உருவாகும்.
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து மின்கடத்தியைக் கண்டுபிடித்து எழுதுக
இரும்பு சங்கிலி மின்கடத்தி ஆகும்
5. டார்ச் விளக்கில் எவ்வகையான மின்சுற்று பயன்டுத்தப்படுகிறது?
டார்ச் விளக்கில் பயன்படுத்தப்படும் மின்சுற்று என்பது மின்கலத்திலன் நேர்முனையிலிருந்து எதிர் முனைக்கு மின்னூட்டம் செல்லுதம் தொடர்ச்சியான மூடிய பாதையாகும்
6. பொருந்தாததை வட்டமிடுக. அதற்கான காரணம் தருக
சாவி, மின்விளக்கு, மின்கல அடுக்கு, மின்னியறறி
விடை : மின்னியறறி
VI. குறுகிய வினா
1. தொடரிணைப்பு ஒன்றிற்கு மின்சுற்றுப் படம் வரையவும்.
2. கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன மூலம் நமக்கு மின் அதிர்வு ஏற்படுமா? விளக்கம் தருக
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன மூலம் நமக்கு மின் அதிர்வு ஏற்படாது
ஏனென்றால் கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் குறைந்த மின் அழுத்ததினை கொண்டுள்ளது
3. வெள்ளி உலோகம் மிகச் சிறந்த மின்கடத்தியாகும். ஆனால் அது மின் கம்பி உருவாக்கப் பயன்படுத்தப்படுவதில்லை? ஏன்?
வெள்ளி விலை மதிப்பு மிக்க உலோகம் எனவே அது மின் கம்பி உருவாக்கப் பயன்படுத்தப்படுவதில்லை
VIII. விரிவான விடையளி
1. மின்மூலங்கள் என்றால் என்ன? இந்தியாவில் உள்ள பல்வேறு மின் நிலையங்கள் பற்றி விளக்குக.
அனல்மின் நிலையங்கள்
அனல்மின் நிலையங்களில் நிலக்கரி, டீசல் அல்லது வாயுக்களை எரிப்பதன் மூலம் கிடைக்கும் வெப்ப ஆற்றலால் நீராவி உருவாக்கப்படுகிறது. இந்த நீராவியால் டர்பைன் இயங்குகிறது. டர்பைன் இயங்கும் பொழுது இரு மின்காந்தங்களுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ள கம்பிச்சுருள் சுழல்வதால் உருவாகும் மின்காந்தத் தூண்டலால் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு வெப்ப ஆற்றலானது மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
நீர்மின் நிலையங்கள்
நீர்மின் நிலையங்களில் அணைக் கட்டிலிருந்து பாயும் நீரால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது. நீர்மின் நிலையங்கள் அதிக காலம் இயங்கக்கூடியவை மற்றும் சிக்கனமானவை.
அணுமின் நிலையங்கள்
அணுமின் நிலையங்களில் அணுக்கரு ஆற்றலைக்கொண்டு நீரானது கொதிக்க வைக்கப்படுகிறது. இதனால் உருவாகும் நீராவியைக் கொண்டு டர்பைன் இயக்கப்படுகிறது. டர்பைனின் இயக்கத்தால் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு அணுக்கரு ஆற்றலானது இயக்க ஆற்றலாகவும் பின் மின்னாற்றலாகவும் மாற்றப்படுகிறது.
காற்றாலை நிலையங்கள்
காற்றாலைகளில், காற்றின் ஆற்றலால் டர்பைன் சுழற்றப்படுகிறது. இதன்மூலம் மின்சாரம் உருவாகிறது. இங்கு இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
2. மின்சுற்றுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் பட்டியலிடுக..
மின்சாதனம் | படம் | குறியீடு | குறிப்பு |
மின்கலன் | பெரிய செங்குத்துக் கோடு நேர் முனையாகவும் சிறிய செங்குத்துகோடு எதிர் முனையாகவும் குறிப்பிடப்படுகின்றன | ||
தொடர் மின்கலன் (மின்கல அடுக்கு) | இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்கள் தொடராக இணைக்கப்பட்ட அமைப்பு | ||
தொடு சாவி திறந்தது | தொடுசாவி செயல்படா நிலை (OFF) (சுற்றில் மின்னோட்டம் செல்லாது) | ||
தொடு சாவி மூடியது | தொடுசாவி செயல்படும் நிலை (ON) (சுற்றில் மின்னோட்டம் பாயும்) | ||
மின் விளக்கு | மின்விளக்கு ஒளிரவில்லை | ||
மின்விளக்கு ஒளிர்கிறது | |||
இணைப்புக் கம்பி | மின்சாதனங்களை இணைக்கப் பயன்படும் |
3. மின்கடத்திகள் மற்றும் அரிதிற்கடத்திகள் குறித்து சிறு குறிப்பு வரைக
மின் கடத்திகள்
கடத்தியில் மின்னூட்டங்கள் பாயும் வீதமே மின்னோட்டம் எனப்படும். அவ்வாறு எந்தெந்த பொருள்கள் தன் வழியே மின்னூட்டங்களைச் செல்ல அனுமதிக்கின்றனவோ அவற்றை நாம் மின் கடததிகள் என்கிறோம்.
எ.கா : உலோகங்களான தாமிரம், இரும்பு, அலுமினியம், மற்றும் மாசுபட்ட நீர், புவி,
போன்றவை
அரிதிற் கடத்திகள் (மின் கடத்தாப் பொருள்கள்)
எந்தெந்தப் பொருள்கள் தன் வழியே மின்னூட்டங்களைச் செல்ல அனுமதிக்கவில்லையோ அவற்றை நாம் அரிதிற்கடத்திகள் (அ) மின்கடத் தாப் பொருள்கள் என்கிறோம்.
எ.கா : பிளாஸ்டிக், கண்ணாடி, மரம், ரப்பர், பீங்கான், எபோனைட்
சில பயனுள்ள பக்கங்கள்