பாடம்.3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
பாடம்.3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. பனிக்கட்டி நீராக உருகும்போது ஏறபடும் மாற்றம் ________ ஆகும்.
- இட மாற்றம்
- நிற மாற்றம்
- நிலை மாற்றம்
- இயைபு மாற்றம்
விடை : நிலை மாற்றம்
2. ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ________ ஆகும்.
- வேதியியல் மாற்றம்
- விரும்பத்தகாத மாற்றம்
- மீளா மாற்றம்
- இயற்பியல் மாற்றம்
விடை : இயற்பியல் மாற்றம்
3. பால் தயிராக மாறுவது ________ ஒரு ஆகும்
- மீள் மாற்றம்
- வேகமான மாற்றம்
- மீளா மாற்றம்
- விரும்பத்தகாத மாற்றம்
விடை : மீளா மாற்றம்
4. கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?
- துருப்பிடித்தல்
- பருவநிலை மாற்றம்
- நில அதிர்வு
- வெள்ளப்பெருக்கு
விடை : பருவநிலை மாற்றம்
5. காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு ________ ஆகும்
- மீள் மாற்றம்
- வேகமான மாற்றம்
- இயற்கையான மாற்றம்
- மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்
விடை : மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. காந்தம் இரும்பு ஊசியைக் கவர்ந்திழுக்கும். இது ஒரு _________ மாற்றம். (மீள் / மீளா)
விடை : மீள் மாற்றம்
2. ஒரு முட்டையை வேகவைக்கும் போது _________ மாற்றம் நிகழ்கிறது. (மீள் / மீளா)
விடை : மீளா மாற்றம்
3. நமக்கு ஆபத்தை விளைவிப்பவை _________ மாற்றங்கள் (விரும்பத்தக்க / விரும்பதகாத)
விடை : விரும்பதகாத மாற்றம்
4. தாவரங்கள் கரியமில வாயு மறறும் நீரைச் சேர்த்து ஸ்டார்ச்சை உருவாக்குவது _________ (இயற்கையான / மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்) ஆகும்.
விடை : இயற்கையான மாற்றம்
5. பட்டாசு வெடித்தல் என்பது ஒரு _________ மாற்றம்; விதை முளைத்தல் ஒரு _________ மாற்றம் (மெதுவான / வேகமான)
விடை : வேகமான, மெதுவான
III. சரியா (அ) தவறா எனக கூறுக. தவறாக
இருப்பின சரியாக எழுதவும
1. குழந்தைகளுக்குப் பற்கள் முளைப்பது மெதுவான மாற்றம்.
விடை : சரி
2. தீக்குச்சி எரிவது ஒரு மீள் மாற்றம்.
விடை : தவறு
சரியான விடை : தீக்குச்சி எரிவது ஒரு மீளா மாற்றம்.
3. அமாவாசை பௌர்ணமியாக மாறும் நிகழ்வு மனிதனால் ஏறபடுத்தப்படட கூடிய மாற்றம்.
விடை : தவறு
சரியான விடை : அமாவாசை பௌர்ணமியாக மாறும் நிகழ்வு இயற்கையால் நடகக்ககூடிய மாற்றம்.
4. உணவு செரித்தல் என்பது ஓர் இயற்பியல் மாற்றம்.
விடை : தவறு
சரியான விடை : உணவு செரித்தல் என்பது ஓர் மீளா மாற்றம்.
5. உப்பு நீரில் கரைத்து உருவாக்கும் கரைசலில், நீர் ஒரு கரைபொருள் ஆகும்.
விடை : தவறு
சரியான விடை : உப்பு நீரில் கரைத்து உருவாக்கும் கரைசலில், நீர் ஒரு கரைப்பான் ஆகும்.
IV. ஒப்புமை தருக
1. பால் தயிராதல் : மீளா மாற்றம் : : மேகம் உருவாதல் : _________ மாற்றம்
விடை : மீள் மாற்றம்
2. ஒளிச்சேர்க்கை : _________ மாற்றம் : : நிலக்கரி எரிதல் : மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்
விடை : இயற்கையான மாற்றம்
3. குளுக்கோஸ் கரைதல் : மீள் மாற்றம் : : உணவு செரித்தல் : _________ மாற்றம்
விடை : மீளா மாற்றம்
4. உணவு சமைத்தல் : விரும்பத்தக்க மாற்றம் : : உணவு கெட்டுப்போதல் : _________ மாற்றம்.
விடை : விரும்பத்தகாத மாற்றம்
5. தீக்குச்சி எரிதல் : _________ மாற்றம் : : பூமி சுற்றுதல் : மெதுவான மாற்றம்.
விடை : வேகமான மாற்றம்
V. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதற்கான காரணத்தைக் கூறுக.
1. குழந்தை வளருதல், கண் சிமிட்டுதல், துருப்பிடித்தல், விதைமுளைத்தல்.
விடை : துருப்பிடித்தல்
காரணம் : துருப்பிடித்தல் என்பது வேதியியல் மாற்றம். மற்றவை மெதுவான மாற்றம்
2. மின் விளக்கு ஒளிர்தல், மெழுகுவர்த்தி எரிதல், காபிக் குவளை உடைதல், பால் தயிராதல்.
விடை : பால் தயிராதல்
காரணம் : பால் தயிராதல் என்பது மீளா மாற்றம். மற்றவை வேகமான மாற்றம்
3. முட்டை அழுகுதல், நீராவி குளிர்தல், முடிவெட்டுதல், காய் கனியாதல்.
விடை : முட்டை அழுகுதல்
காரணம் : முட்டை அழுகுதல் என்பது விரும்பத்தகாத மாற்றம். மற்றவை மெதுவான மாற்றம்
4. பலூன் ஊதுதல், பலூன் வெடித்தல், சுவற்றின் வண்ணம் மங்குதல், மண்ணெண்ணெய் எரிதல்.
விடை : சுவற்றின் வண்ணம் மங்குதல்
காரணம் : சுவற்றின் வண்ணம் மங்குதல் என்பது மெதுவான மாற்றம். மற்றவை வேகமான மாற்றம்
VI. மிகக் குறுகிய விடையளி
1. தாவரங்கள் மட்குதல் என்ன வகையான மாற்றம்?
தாவரங்கள் மட்குதல் என்பது இயற்கையான வகையான மாற்றம்
2. உங்களிடம் சிறிது மெழுகு தரப்பட்டால் அதை வைத்து உங்களால் மெழுகு பொம்மை செய்ய முடியுமா? அவ்வாறு செய்ய முடியுமெனில் எவ்வகை மாற்றம் எனக் குறிப்பிடுக.
முடியும். மெழுகினை வெப்பப்படுத்தி உருக்கி அதனை பொம்மை அச்சில் ஊற்றி குளிரவைத்தால் மெழுகு பொம்மை கிடைக்கும் இது ஒரு மீள் மாற்றம் ஆகும்
3. மெதுவான மாற்றத்தை வரையறு.
சில மாற்றங்கள் நிகழ அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. (மணிகள்/நாட்கள்/ மாதங்கள்/ஆண்டுகள்) இவை மெதுவான மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன.
எ.கா: நகம் மற்றும் முடி வளர்தல், பருவநிலை மாற்றம், விதை முளைத்தல்.
4. கரும்புச் சர்க்கரையை நன்றாக வெப்பப்படுத்தும் போது என்ன நிகழும்? இதில் நடைபெறும் ஏதேனும் இரண்டு மாற்றங்களைக் குறிப்பிடுக.
மீளா மாற்றம் மற்றும் வேதிமாற்றம் ஆகும்
காரணம்
சர்க்கரையை வெப்பப்படுத்தம்போது சர்க்கரையில் உள்ள நீர் ஆவியாகி மேல செல்கிறது. மீதம் உள்ள கார்பன் மட்டும் கருமையாகி அடியில் தங்குகிறது.
5. கரைசல் என்றால் என்ன?
ஒரு கரைசல் என்பத கரைபொருள் கரைப்பான்களால் ஆன ஒரு படித்தான கலவையாகும்
VII. குறுகிய விடையளி
1. காகிதத்தை எரிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் யாவை? விவரிக்கவும்.
சில மாற்றங்கள் நிகழ குறைந்த அளவே நேரத்தை எடுத்துக்க கொள்கின்றன (நொடிகள் / நிமிடங்கள்) இவை வேகமான மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன.
காகிதம் எரிக்கும்போது வேகமாக எரிகின்றது. எனவே இது ஒரு வேகமான மாற்றம் ஆகும்
2. காடுகளை அழித்தல் என்பது விரும்பத்தக்க மாற்றமா? உங்கள் பதிலுக்கான காரணத்தை விவரிக்கவும்.
விரும்பத்தகாத மாற்றங்கள் சுற்றுச்சூழலுக்குப் பயன்தராத அல்லது தீங்கு விளைவிக்ககூடிய, நம்மால் விரும்பப்படாத மாற்றங்கள் விரும்பதகாத மாற்றங்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு : காடுகள் அழிதல், பழம் அழுகுதல், இரும்பு துருப்பிடித்தல்.
3. விதையிலிருந்து செடி முளைத்தல் என்ன வகையான மாற்றம்? விவரிக்கவும்.
சில மாற்றங்கள் நிகழ அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. (மணிகள்/நாட்கள்/ மாதங்கள்/ஆண்டுகள்) இவை மெதுவான மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன.
எ.கா: நகம் மற்றும் முடி வளர்தல், பருவநிலை மாற்றம், விதை முளைத்தல்.
VIII. விரிவான விடையளி
1. உன்னைச் சுற்றி நடக்கும் மாற்றங்களிலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாற்றத்திற்கும் தகுந்த எடுத்துக்காட்டு தருக.
அ. மெதுவான / வேகமான மாற்றம்
மெதுவான மாற்றங்கள்
சில மாற்றங்கள் நிகழ அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. (மணிகள்/நாட்கள்/ மாதங்கள்/ஆண்டுகள்) இவை மெதுவான மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன.
எ.கா: நகம் மற்றும் முடி வளர்தல், பருவநிலை மாற்றம், விதை முளைத்தல்.
வேகமான மாற்றங்கள்
சில மாற்றங்கள் நிகழ குறைந்த அளவே நேரத்தை எடுத்துக் கொள்கின்றன (நொடிகள் / நிமிடங்கள்). இவை வேகமான மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன.
எ.கா: பலூன் வெடித்தல், கண்ணாடி உடைதல், பட்டாசு வெடித்தல், காகிதம் எரிதல்.
ஆ. மீள் / மீளா மாற்றம்
மீள் மாற்றம்
சில மாற்றங்கள் நிகழும்போது, மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்ப முடிந்தால் அவை மீள் மாற்றம் என்றழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு: தொட்டால் சிணுங்கி தாவரம் (தொடுதலுக்குத் துலங்குதல்), ரப்பர் வளையம் நீளுதல், பனிக்கட்டி உருகுதல்.
மீளா மாற்றம்
சில மாற்றங்கள் நிகழும்போது, மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்பமுடியாது. அதாவது மீண்டும் ஆரம்பநிலைப் பொருள்களை பெற முடியாது. அவ்வகை மாற்றம் மீளா மாற்றம் என்றழைக்கப்படும்.
எடுத்துக்காட்டு: பால் தயிராக மாறுதல், உணவு செரித்தல், மாவிலிருந்து இட்லி தயாரித்தல்.
இ. இயற்பியல் / வேதியல் மாற்றம்
இயற்பியல் மாற்றங்கள்
இயற்பியல் மாற்றம் என்பது ஒரு தற்காலிக மாற்றம் ஆகும். ஒரு பொருளின் வேதியியல் இயைபு மாறாமல் அதன் இயற்பியல் பண்புகளில் மட்டுமே மாற்றங்கள் நிகழ்வது இயற்பியல் மாற்றங்கள் ஆகும். இங்கு புதிய பொருள் எதுவும் உருவாவது இல்லை.
எடுத்துக்காட்டு: பனிக்கட்டி உருகுதல், உப்பு அல்லது சர்க்கரையினை கரைசலாக்குவது, இரப்பர் வளையத்தினை இழுத்தல்.
வேதியியல் மாற்றங்கள்
பொருள்களின் வேதிப்பண்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது வேதியியல் மாற்றங்கள் எனப்படும். வேதியியல் மாற்றங்கள் புதிய பொருள்களை உண்டாக்குகின்றன.
எடுத்துக்காட்டு: மரம் எரிதல், சோளம் பொரிதல், வெள்ளி ஆபரணங்கள் கருமையாதல், மற்றும் இரும்பு துருப்பிடித்தல்.
ஈ. இயற்கையான / செயற்கையான அல்லது மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்
இயற்கையான மாற்றங்கள்
இயற்கையில் தானாகவே நிகழும் மனித கட்டுபாட்டிற்கு அப்பாற்பட்ட மாற்றங்கள் இயற்கையான மாற்றங்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு: புவியின் சுழற்சி, மழை பெய்தல், அமாவாசை முதல் பௌர்ணமி வரை நிலவின்வெவ்வேறு நிலைகள்.
மனிதனால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அல்லது செயற்கையான மாற்றங்கள்
மனிதன் தன் விருப்பத்திற்காக ஏற்படுத்தும் மாற்றங்கள் மனிதனால் எற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அல்லது செயற்கையான மாற்றங்கள் எனப்படும். இத்தகைய மாற்றங்கள் தன்னிச்சையாக நிகழாது.
எடுத்துக்காட்டு: சமைத்தல், காடுகளை அழித்தல், பயிரிடுதல், கட்டிடங்கள் கட்டுதல்.
உ.விரும்பத்தக்க / விரும்பத்தகாத மாற்றம்.
விரும்பத்தக்க மாற்றங்கள்
சுற்றுச்சூழலுக்குப் பயன்தரும் அல்லது சுற்றுச்சூழலைப் பாதிக்காத, நம்மால் விரும்பப்படும் மாற்றங்கள் விரும்பத்தக்க மாற்றங்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு: காய் கனியாதல், பருவ நிலை மாற்றம், தாவரங்கள் வளருதல், உணவு சமைத்தல், பால் தயிராதல்.
விரும்பத்தகாத மாற்றங்கள்
சுற்றுச்சூழலுக்குப் பயன்தராத அல்லது தீங்கு விளைவிக்ககூடிய, நம்மால் விரும்பப்படாத மாற்றங்கள் விரும்பதகாத மாற்றங்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு:காடுகள் அழிதல், பழம் அழுகுதல், இரும்பு துருப்பிடித்தல்.
6th Science Book Link – Download
சில பயனுள்ள பக்கங்கள்