6th Std Science Term 2 Solution | Lesson.5 செல்

பாடம்.5 செல்

செல் பாட விடைகள்

பாடம்.5 செல்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.  செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு

  1. சென்டி மீட்டர்
  2. மில்லி மீட்டர்
  3. மைக்ராே மீட்டர்
  4. மீட்டர்

விடை : மைக்ராே மீட்டர்

2. நுண்ணாேக்கியில், பிரியா செல்களைப் பார்க்கும்பாேது அச்செல்லில் செல்சுவர் இருக்கிறது. ஆனால் நியூக்ளியஸ் இல்லை. பிரியா பார்த்த செல். 

  1. தாவர செல்
  2. விலங்கு செல்
  3. நரம்பு செல்
  4. பாக்டீரியா செல்

விடை : பாக்டீரியா செல்

3. யூகேரியாேட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது

  1. செல் சுவர்
  2. நியூக்ளியஸ்
  3. நுண்குமிழ்கள்
  4. பசுங்கணிகம்

விடை : நியூக்ளியஸ்

4.  கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?

  1. ஈஸ்ட்
  2. அமீபா
  3. ஸ்பைராேகைரா
  4. பாக்டீரியா

விடை : ஸ்பைராேகைரா

5.  யூகேரியாேட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்

  1. செல்சுவர்
  2. சைட்டாேபிளாசம்
  3. உட்கரு (நியூக்ளியஸ்)
  4. நுண்குமிழ்கள்

விடை : சைட்டாேபிளாசம்

II. சரியா? தவறா? 

1. உயிரினங்களின் மிகச் சிறிய அலகு செல்

விடை : சரி

2. மிக நீளமான செல் நரம்பு செல்.

விடை : சரி

3. பூமியில் முதன் முதலாக உருவான செல் புராேக்கேரியாேட்டிக் செல் ஆகும்.

விடை : சரி

4. தாவரத்திலும், விலங்கிலும் உள்ள நுண்ணுறுப்புகள், செல்களால் ஆனவை

விடை : தவறு

சரியான விடை : தாவரத்திலும், விலங்கிலும் உள்ள செல்கள் நுண்ணுறுப்புகளால் ஆனவை

5. ஏற்கனவே உள்ள செல்களிலிருந்து தான் புதிய செல்கள் உருவாகின்றன

விடை : சரி

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. செல்களைக் காண உதவும் உபகரணம் ___________

விடை : கூட்டு நுண்ணாேக்கி

2. நான் செல்லில் உணவு உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறேன் நான் யார்? ____________

விடை : ஆக்சிஜன்

3.  நான் ஒரு காவல்காரன். நான் செல்லினுள் யாரையும், உள்ளேயும் விடமாட்டேன், வெளியேயும் விடமாட்டேன், நான் யார்? ____________ 

விடை : செல்சுவர்

4. செல் என்ற வார்த்தையை உருவாக்கியவர்

விடை : ராபர்ட்ஹூக்

5. நெருப்புக் கோழியின் முட்டை ____________ தனிசெல் ஆகும்.

விடை : மிகப்பெரிய

IV.பொருத்துக

1. கட்டுப்பாட்டு மையம்செல் சவ்வு
2. சேமிப்பு கிடங்குமைட்டோகாண்ட்ரியா
3. உட்கரு வாயில்நியூக்ளியஸ்(உட்கரு)
4. ஆற்றல் உற்பத்தியாளர்உட்கரு உறை
5. செல்லின் வாயில்நுண்குமிழ்கள்
விடை : 1 – இ, 2 – உ, 3 – ஈ, 4 – ஆ, 5 – அ

V.  சரியான முறையில் வரிசைப்படுத்துக.

1. யானை, பசு, பாக்டிரியா, மாமரம், ரோஜாச் செடி.

விடை : பாக்டிரியா, ரோஜாச் செடி, மாமரம், பசு, யானை,

2. கோழி முட்டை, நெருப்புக் கோழி முட்டை, பூச்சிகளின் முட்டை

விடை : பூச்சிகளின் முட்டை, கோழி முட்டை, நெருப்புக் கோழி முட்டை

VI. ஒப்புமை தருக

1. புரோகேரியோட் : பாக்டிரியா : : யூகேரியோட் : _____________________

விடை : ஆல்கா

2. ஸ்பைரோகைரா : தாவர செல் : : அமீபா : _____________________

விடை : விலங்குசெல்

3. உணவு உற்பத்தியாளர் : பசுங்கணிகம் : : ஆற்றல் மையம் : _____________________

விடை : மைட்டாேகாண்டிரியா

VII. மிகக் குறுகிய விடையளி

1. 1665 ஆம் ஆண்டு செல்லைக் கண்டறிந்தவர் யார்?

ராபர்ட்ஹூக்

2. நம்மிடம் உள்ள செல்கள் எந்த வகையைச் சார்ந்த செல்கள்?

யூகேரியோட்

3. செல்லின் முக்கிய கூறுகள் யாவை?

  • செல்லைச் சுற்றி காணப்படும் வெளி உறையான செல்சவ்வு
  • திரவநிலை சைட்டோபிளாசம்
  • உட்கரு

4. தாவர செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு எது?

பசுங்கணிகம்

5. யூகேரியாட்டிக் செல்லிற்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக?

  • தாவர செல்கள்
  • விலங்கு செல்கள்,
  • பெரும்பான்மையான பூஞ்சைகள் மற்றும் ஆல்காக்கள்.

6. நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?

சைட்டோ பிளாசம்

7. சிவா “சிறிய வெங்காயத்தை பெரிய வெங்காயத்தோடு ஒப்பிடும் போது, பெரிய வெங்காயம் பெரிய செல்களைக் கொண்டுள்ளன” என்கிறான். இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? மறுக்கிறாயா? ஏன்?

பெரிய உயிரினங்களக்கு அதிகமான செல்கள் இருக்கும். சிறிய உயிரனங்களுக்கு குறைவான செல் இருக்கும். எனவே நான் இதை மறுக்கிறேன்

VIII. குறுகிய விடையளி

1.  உயிரினங்களைக் கட்ட உதவும் கட்டுமானம், செல் எனப்படுகிறது ஏன்?

செங்கல்தான் சுவரின் அடிப்படை அலகு. செங்கல் சுவரைப் போலவே உங்கள் உடலும் ஒரு அடிப்படை அலகாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் பெயரே செல் ஆகும். உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு செல் ஆகும்.

செல்கள் ஒர் உயிரியின் அனைத்து அடிப்படைப் பண்புகளையும் செயல்பாடுகளையும் கட்டமைக்கின்றன.

2. பின்வரும் தாவர செல்லில் ஏதேனும் நான்கு பாகங்களைக் குறி.

செல் பாட விடைகள்

3. புரோகேரியாட்டிக், யூகேரியாட்டிக் செல்கள் – வேறுபடுத்துக.

புரோகேரியாட்டிக் செல்கள் யூகேரியாட்டிக் செல்கள்
1. ஒன்று முதல் இரண்டு மைக்ரான் விட்டம் கொண்டவைபத்து முதல் நூறு மைக்ரான் விட்டம் கொண்டவை.
2. செல் நுண்உறுப்புகளைச் சுற்றி சவ்வு  காணப்படுவதில்லைசெல் நுண்உறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுகின்றது
3. தெளிவற்ற உட்கரு கொண்டவை.தெளிவான உட்கரு கொண்டவை
4. நியுக்ளியோலஸ் காணப்படுவதில்லைநியுக்ளியோலஸ் காணப்படும்

4. நுண்ணோக்கியில் நீ கண்ட தாவர செல் மற்றும் விலங்கு செல்லின் படம் வரைக.

தாவர செல்விலங்கு செல்
செல் பாட விடைகள்

5. செல் உயிரியலில் இராபட் ஹூக்கின் பங்களிப்பு பற்றி விளக்குக

ராபர்ட் ஹூக், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர், கணித அறிஞர் மற்றும் கண்டுபிடிப்பாளர். இவர் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட நுண்ணோக்கியை மேம்படுத்தி ஒரு கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கினார். நுண்ணோக்கியின் அருகில் வைக்கப்பட்டுள்ள விளக்கில் இருந்து வரும் ஒளியை, நீர் லென்ஸ் கொண்டு குவியச் செய்து நுண்ணோக்கியின் கீழ் வைக்கப்பட்டுள்ள பொருளிற்கு ஒளியூட்டினார். அதன் மூலம் அப்பொருளின் நுண்ணிய பகுதிகளை நுண்ணோக்கியின் மூலம் தெளிவாகக் காண முடிந்தது.

IX. விரிவான விடையளி

1. எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக.

செல்லின் பாகம்முக்கிய பணிகள் சிறப்புப் பெயர்
1 செல் சுவர்• செல்லைப் பாதுகாக்கிறது.
• செல்லிற்கு உறுதி மற்றும் வலிமையைத் தருகிறது
தாங்குபவர் (அல்லது) பாதுகாப்பவர்.
2 செல் சவ்வு• செல்லிற்குப் பாதுகாப்பு தருகிறது.
• செல்லின் போக்குவரத்திற்கு உதவுகிறது
செல்லின் கதவு
3. சைட்டோபிளாசம்• நீர் அல்லது ஜெல்லி போன்ற, செல்லில் உள்ள நகரும் பொருள்செல்லின் நகரும் பகுதி
4 மைட்டோ
காண்டிரியா
• செல்லிற்குத் தேவையான அதிக சக்தியை உருவாக்கித் தருகிறதுசெல்லின் ஆற்றல் மையம
5. பசுங்கணிகம்• இதில் பச்சையம் என்ற நிறமி உள்ளது.
• இது சூரிய ஒளியை ஈர்த்து ஒளிச் சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்க உதவுகிறது.
செல்லின் உணவுத் தொழிற்சாலை
6. நுண்குமிழ்கள்• இது உணவு, நீர் மற்றும் வேதிப் பொருள்களைச் சேமிக்கிறது.சேமிப்புக் கிடங்கு
7. உட்கரு (நியூக்ளியஸ்)• செல்லின் மூளையாகச் செயல்படுகிறது.
• செல்லின் அனைத்துச் செயல்களையும் ஒருங்கிணைத்துக் கட்டுப்படுத்துகிறது.
செல்லின் கட்டுப்பாட்டு மையம்.
8 உட்கரு உறை (நியூக்ளியஸ் உறை)நியூக்ளியஸைச் சுற்றி அதைப் பாதுகாக்கிறது
• நியூக்ளியஸின் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்புகிறது.
உட்கரு வாயில் (அல்லது) உட்கரு கதவு

2. புரோகேரியாட்டிக் செல்லின்படம் வரைந்து பாகங்களைக் குறி

பாக்டீரியா போன்ற ஒரு செல் நுண்ணியிரிகளில் புரோகேரியாட்டிக் செல்கள் காணப்படுகின்றன. இவை தெளிவான உட்கருவினை கொண்டிருக்காது. இவற்றின் உட்கரு நியூக்ளியாய்டு என அழைக்கப்படுகின்றது. இச்செல்களின் நுண்ணுறுப்புகளைச் சுற்றி சவ்வுகள் காணப்படுவதில்லை.

இப்புவியில் முதன்முதலில் உருவான செல் புரோகேரியாட்டிக் செல் ஆகும். இவை 0.003 மைக்ரோமீட்டர் முதல் 2.0 மைக்ரோமீட்டர் வரையிலான விட்டம் கொண்டவை.

எ.கா: எக்ஸெரிச்சியா கோலை பாக்டீரியா.

செல் பாட விடைகள்

6th Science Book Link – Download

சில பயனுள்ள பக்கங்கள்