6th Std Science Term 3 Solution | Lesson.4 நமது சுற்றுச்சூழல்

பாடம்.4 நமது சுற்றுச்சூழல்

நமது சுற்றுச்சூழல் பாட விடைகள்

பாடம்.4 நமது சுற்றுச்சூழல்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.  நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக

  1. குளம்
  2. ஏரி
  3. நதி
  4. இவை அனைத்தும்

விடை : இவை அனைத்தும்

2. உற்பத்தியாளர்கள் எனப்படுபவை 

  1. விலங்குகள்
  2. பறவைகள்
  3. தாவரங்கள்
  4. பாம்புகள்

விடை : தாவரங்கள்

3. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு

  1. நெகிழி
  2. சமயலறைக்கழிவுகள்
  3. கண்ணாடி
  4. அலுமினியம்

விடை : சமயலறைக்கழிவுகள்

4. காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.

  1. மறுசுழற்சி
  2. மீண்டும் பயன்படுத்துதல்
  3. மாசுபாடு
  4. பயன்பாட்டைக் குறைத்தல்

விடை : மாசுபாடு

5. களைக்கொல்லிகளின் பயன்பாடு ________________ மாசுபாட்டை உருவாக்கும்

  1. காற்று மாசுபாடு
  2. நீர் மாசுபாடு
  3. இரைச்சல் மாசுபாடு
  4. அ மற்றும் ஆ

விடை : அ மற்றும் ஆ

II. சரியா? தவறா? 

1. கடல் சூழ்நிலை மண்டலத்திற்கு பசிபிக் பெருங்கடல் ஓர் எடுத்துக்காட்டாகும்.

விடை : சரி

2. பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியன சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.

விடை : சரி

3. மனிதக் கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும், உயிரினச் சிதைவிற்கு உட்படாத கழிவுகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும்.

விடை : தவறு

சரியான விடை : மனிதக் கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும், உயிரினச் சிதைவிற்கு உட்படும் கழிவுகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும்.

4. அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால் ஒலி மாசுபாடு உருவாகும்.

விடை : தவறு

சரியான விடை : அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால் நில மாசுபாடு உருவாகும்.

5. பள்ளியின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, கழிவுகளை நாம் இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும்.

விடை : சரி

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. தாவரங்களை உண்பவை நிலை ______________ நுகர்வோர்கள் ஆகும்.

விடை : முதல்

2. சோப்பு வெப்பநிலை, ஒளி மற்றும் காற்று போன்றவை ______________ காரணிகள் ஆகும். 

விடை : இயற்பியல்

3. __________________ என்ற நிகழ்வின்மூலம் கழிவுப்பொருள்களிலிருந்து புதிய பொருள்களை உருவாக்கலாம்.

விடை : மறுசுழற்சி

4. நீர் மாசுபாடு மனிதனுக்கு ________________ நோயை உருவாக்குகிறது.

விடை : டைபாய்டு

5. 3R என்பது பயன்பாட்டைக் குறைத்தல், ___________ மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றைக் குறிக்கிறது

விடை : மீண்டும் பயன்படுத்துதல்

IV.பொருத்துக

1. உயிரினக் கூறுகள்நிலவாழ் சூழ்நிலை மண்டலம்
2. சாக்கடைக் கழிவுகள்நில மாசுபாடு
3. செயற்கை உரங்கள்காற்று மாசுபாடு
4. பாலைவனம்நீர் மாசுபாடு
5. புகைவிலங்குகள்
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ, 5 – இ

V. சரியான வரிசையில் எழுதி, உணவுச் சங்கிலியை உருவாக்கு

1. முயல் – கேரட் – கழுகு – பாம்பு

விடை : கேரட் – முயல் – பாம்பு – கழுகு

2. மனிதன் – பூச்சி – ஆல்கா – மீன்

விடை :  ஆல்கா – பூச்சி – மீன் – மனிதன்

VI. மிகக் குறுகிய விடையளி

1. சூழ்நிலை மண்டலம் – வரையறு.

உயிருள்ள காரணிகளையும், உயிரற்ற காரணிகளையும் ஒன்று சேர்ந்த ஒரு கட்டமைப்பே சூழ்நிலை மண்டலமாகும்.

2. சூழ்நிலை மண்டலத்தின் இரு வகைகள் யாவை?

  • இயற்கை சூழ்நிலை மண்டலம்
  • செயற்கை சூழ்நிலை மண்டலம்

3. மறுசுழற்சி அடையக்கூடிய பொருள்களில் எவையேனும் இரண்டினை எழுதுக

கழிவுகளிலிருந்து பயன்தரத்தக்க பொருள்களைப் பிரித்தெடுத்து மீண்டும் பயன்படுத்துவதற்கு மறுசுழற்சி என்று பெயர்.

(எ.கா)

  • பழைய துணிகளை காகிதத் தயாரிப்பில் பயன்படுத்துதல்
  • சிலவகை நெகிழிகளை உருக்கி நடைபாதை விரிப்புகள்
  • நெகிழி அட்டைகள், நீர்பாய்ச்சும் குழாய்கள் போன்றவை தயாரித்தல்.

4. மாசுபாட்டின் வகைகளைக் குறிப்பிடுக.

  1. காற்று மாசுபாடு
  2. நீர் மாசுபாடு
  3. நில மாசுபாடு
  4. ஒலி மாசுபாடு

5. நீர்வாழ் உணவுச்சங்கிலிக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.

நமது சுற்றுச்சூழல் பாட விடைகள் 2021

6. மாசுபடுத்திகள் என்றால் என்ன?

மனிதனின் செயல்பாடுகளால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. எந்தப் பொருள்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை உருவாக்குகின்றனவோ அவை மாசுபடுத்திகள் எனப்படுகின்றன.

7. பின்வருவன உருவாக்கும் மாசுபாடுகளை எழுதுக.

அ. ஒலி பெருக்கி

  • ஒலிமாசுபாடு

ஆ. நெகிழி

  • நில மாசுபாடு

VII. குறுகிய விடையளி

1. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் என்றால் என்ன?

உயிரினச் சிதைவுறுதல் அல்லது மட்குதல் என்பது இயற்கைக் காரணிகளான நீர், ஆக்சிஜன், சூரியனின் புற ஊதாக் கதிர்கள் மற்றும் நுண்ணுயிரிகளால் சிதைவுறும் பொருள்கள் ஆகும்.

காய்கறி மற்றும் பழக் கழிவுகள், உணவுக்கழிவுகள் மற்றும் தோட்டக் கழிவுகள் (புற்கள், இலைகள், களைகள் மற்றும் சிறு கிளைகள்) ஆகியவை உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் ஆகும்.

2. நீர் மாசுபாட்டை நாம் எவ்வாறு குறைக்கலாம்?

  • மீதமுள்ள எண்ணெய், பழைய மருந்துகளை நீருடன் கலத்தலைத் தவிர்க்க வேண்டும்.
  • வயலில் பயிர்கள் வளர்வதற்காகப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மற்றும் செயற்கை உரங்கள் அளவைக் குறைக்க வேண்டும்.
  • வீட்டின் கழிவுநீரை வீட்டுத் தோட்டம் அமைத்துப் பயன்படுத்தலாம்.
  • குளங்கள், ஏரிகள், ஆறுகளில் கழிவுகளை கலப்பதையும், கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும். எப்பொழுதும் குப்பை தொட்டியைப் பயன்படுத்த வேண்டும்.

3. உணவுச் சங்கிலியின் முக்கியத்துவத்தை எழுதுக.

  • ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உண்ணுதல் மற்றும் உண்ணப்படுதலுக்கான வரிசைமுறையை நாம் உணவுச்சங்கிலி என்கிறோம்.
  • ஓர் உயிரினம் எவ்வாறு பிற உயிரினங்களை உண்பதன் மூலம் உணவையும், சத்துக்களையும் பெறுகிறது என்பதை உணவுச்சங்கிலி விளக்குகிறது

VIII. விரிவான விடையளி

1. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக.

உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் (மட்கும் கழிவுகள்)

  • உயிரினச் சிதைவுறுதல் அல்லது மட்குதல் என்பது இயற்கைக் காரணிகளான நீர், ஆக்சிஜன், சூரியனின் புற ஊதாக் கதிர்கள் மற்றும் நுண்ணுயிரிகளால் சிதைவுறும் பொருள்கள் ஆகும்.
  • வாழைப்பழத் தோல்கள், இலைத்தழைகள் ஆகியவற்றை நாம் மண்ணில் போடும்போது, பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் மற்றும் சிறு பூச்சிகளின் செயல்பாடுகளால் மண்ணோடு, மண்ணாக மட்கிப்போவதை நாம் பார்த்திருக்கிறோம்.
  • காய்கறி மற்றும் பழக் கழிவுகள், உணவுக்கழிவுகள் மற்றும் தோட்டக் கழிவுகள் (புற்கள், இலைகள், களைகள் மற்றும் சிறு கிளைகள்) ஆகியவை உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் ஆகும்.
  • இயற்கைக் காரணிகளான ஆக்சிஜன், நீர், ஈரப்பதம் மற்றும் வெப்பம் ஆகியவை மட்குதலுக்கு உதவி செய்து, சிக்கலான கரிமப் பொருள்களை எளிய மூலக்கூறுகளாக மாற்றுகின்றன.
  • இவ்வாறு உயிரினச் சிதைவிற்கு உள்ளான பொருள்கள் எளிய தாதுப் பொருள்களாகவும், சத்துப்பொருள்களாகவும் மண்ணை அடைந்து, மண்ணை வளப்படுத்துகின்றன.

உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் (மட்காத கழிவுகள்)

  • நுண்ணுயிரிகள் மற்றும் இயற்கைக் காரணிகளால் எளிய மூலக்கூறுகளாக சிதைவுற முடியாத பொருள்கள் உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் அல்லது மட்காத கழிவுகள் எனப்படுகின்றன.
  • நெகிழிப்பொருள்கள், உலோகங்கள், அலுமினியக் கேன்கள் மற்றும் கண்ணாடிப் பாட்டில்கள் ஆகியவை உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் ஆகும்.
  • இவை இயற்கைச் செயல்பாடுகளால் சிதைவுறாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மண்ணில் நீடித்திருக்கின்றன.

2. ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.

  • ஒலி மாசுபாடு சுற்றுப்புறத்தைப் பாதிக்கிறது. நாம் அனைவருமே அமைதியான, அதிக சத்தம் இல்லாத இடத்தில் இருக்கவே விரும்புகிறோம்.
  • நம்மில் யாருக்கும் அதிக சத்தம் பிடிப்பதில்லை. சத்தமான இசை, மோட்டார் வாகனங்களிலிருந்து வெளிவரும் இரைச்சல், பட்டாசு வெடிக்கும் போது உருவாகும்
  • இரைச்சல், இயந்திரங்களின் ஓசை போன்றவை இரைச்சலை உருவாக்குகின்றன. தொடர்ந்து வரும் இரைச்சல் நம் தூக்கத்தைக் கெடுக்கிறது. நம்மை நிம்மதியாகவும் படிக்க விடுவதில்லை.

நமது சுற்றுச்சூழல் பாட விடைகள் 2021

  • அதிக இரைச்சல் (அல்லது) அதிக இரைச்சலோடு வரும் பாடல்கள் போன்றவை நம் காதுகளைப் பாதிக்கின்றன. இரைச்சலினால் நமக்கு உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் மற்றும் கேட்கும் திறன் பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன.
  • இரைச்சல் மாசுபாடு நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளுக்கும், குறிப்பாகப் பறவைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடலுக்கடியில் உள்ள திமிங்கலங்கள் கப்பலினால் ஏற்படும் இரைச்சலினால் தங்கள் பாதையிலிருந்து திசை மாறுகின்றன.

ஒலி மாசுபாட்டை எவ்வாறு குறைப்பது?

  • மின்கருவிகள் பயன்படாத நிலையில், அணைத்து விடவும்.
  • தொலைக்காட்சி மற்றும் மின்னணுக் கருவிகளின் ஒலி அளவைக் குறைத்து வைத்துக் கேட்கலாம்.
  • ஓட்டுநர்கள் வாகனங்களின் ஒலிப்பான்களைத், தேவை எற்படும்போது மட்டுமே பயன்படுத்தகேட்டுக் கொள்ளலாம்.
  • பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கலாம்.
  • பேசலாம், ஆனால் அதிக சத்தம் போட வேண்டாம்.

6th Science Book Link – Download

சில பயனுள்ள பக்கங்கள்