6th Std Social Science Term 1 Solution | Lesson.6 நிலப்பரப்பும் பெருங்கடல்களும்

பாடம்.6 நிலப்பரப்பும் பெருங்கடல்களும்

நிலப்பரப்பும் பெருங்கடல்களும் பாட விடைகள்

பாடம்.6 நிலப்பரப்பும் பெருங்கடல்களும்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. மிகச் சிறிய பெருங்கடல்?

  1. பசிபிக் பெருங்கடல்
  2. இந்தியப் பெருங்கடல்
  3. அட்லாண்டிக் பெருங்கடல்
  4. ஆர்க்டிக் பெருங்கடல்

விடை : ஆர்க்டிக் பெருங்கடல்

2. மலாக்கா நீர்ச்சந்தியை இணைப்பது

  1. பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்
  2. பசிபிக் பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்
  3. பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
  4. பசிபிக் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்

விடை : பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்

3. அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்

  1. பசிபிக் பெருங்கடல்
  2. அட்லாண்டிக் பெருங்கடல்
  3. இந்தியப் பெருங்கடல்
  4. ஆர்க்டிக் பெருங்கடல்

விடை : அட்லாண்டிக் பெருங்கடல்

4. உறைந்த கண்டம்

  1. வட அமெரிக்கா
  2. ஆஸ்திரேலியா
  3. அண்டார்டிகா
  4. ஆசியா

விடை : அண்டார்டிகா

5. இரண்டு நீர்ப் பகுதிகளை இணைக்கும் குறுகிய நீர்ப் பகுதி

  1. நீர்சந்தி
  2. சிறுகுடல்
  3. தீவு
  4. தீபகற்பம்

விடை : நீர்சந்தி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. உலகின் மிகப்பெரிய கண்டம் ___________________

விடை : ஆசியா

2. இந்தியாவில் கனிமவளம் நிறைந்த பீடபூமி ___________________ 

விடை : சோட்டா நாக்பூர்

3. பெருங்கடல்களில் மிகப்பெரியது  ___________________

விடை : பசிபிக்பெருங்கடல்

4. டெல்டா ___________________ நிலத்தோற்றம்

விடை : மூன்றாம் நிலை

5. தீவுக் கண்டம் என அழைக்கப்படுவது ________________ 

விடை : ஆஸ்திரேலியா

III. பொருந்தாதைத் தேர்ந்தெடு.

1. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை

விடை : இலங்கை

2. ஆர்க்டிக் பெருங்கடல், மத்திய தரைக்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல்

விடை : மத்திய தரைக்கடல்

3. பீடபூமி, பள்ளத்தாக்கு, சமவெளி, மலை

விடை : பள்ளத்தாக்கு

4. வங்காள விரிகுடா, பேரிங் கடல், சீனாக் கடல், தாஸ்மானியா கடல்

விடை : வங்காள விரிகுடா

5. ஆண்டிஸ், ராக்கி, எவரெஸ்ட், இமயமலை

விடை : எவரெஸ்ட்

IV. பொருத்துக:

1. தென்சாண்ட்விச் அகழிஅட்லாண்டிக் பெருங்கடல்
2. மில்வாக்கி அகழிதென் பெருங்கடல்
3. மரியானா அகழிஇந்தியப் பெருங்கடல்
4. யுரேஷியன் படுகைபசிபிக் பெருங்கடல்
5. ஜாவாஅகழிஆர்டிக் பெருங்கடல்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – உ, 5 – இ

V. காெடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.

1. சமவெளிகள் ஆறுகளால் தாேற்றுவிக்கப்படுகின்றன.

2. இந்தியப் பெருங்கடலின் ஆழமான பகுதி ‘சாண்ட்விச்’ அகழி. 

3. பீடபூமிகள் வன்சரிசவைக் காெண்டிருக்கும்.

மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே காெடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.

  1. 1 மற்றும் 3
  2. 2 மற்றும் 3
  3. 1,2 மற்றும் 3
  4. 2 மட்டும

விடை : 1 மற்றும் 3

2. கூற்று 1 : மலைகள் இரண்டாம் நிலை நிலத்தாேற்றங்கள் ஆகும்.

கூற்று 2 : மிகவும் ஆழமான அகழி மரியானா அகழி

  1. கூற்று 1 சரி; கூற்று 2 தவறு
  2. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
  3. இரண்டு கூற்றுகளும் சரி
  4. இரண்டு கூற்றுகளும் தவறு

விடை : இரண்டு கூற்றுகளும் சரி

VI. வினாக்களுக்கு விடையளி

1. உலகின் உயரமான பீடபூமி எது?

திபெத்திய பீடபூமி

2. இரண்டாம் நிலை நிலத்தாேற்றம் எவை?

மலைகள்

3. ஒரு நாட்டின் பெயரைக் காெண்டுள்ள பெருங்கடல் எது?

இந்தியப் பெருங்கடல்

4. அரபிக் கடலில் உள்ள தீவுகள் யாவை?

லட்சத்தீவுகள்

5. கடலிலுள்ள ஆழமான பகுதி யாது?

டிரென்ச்

IX. சுருக்கமான விடையளி

1. கண்டம் என்றால் என்ன?

புவியின் மிகப்பெரும் நிலப் பரப்புகளே கண்டங்கள்.

2. அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லைகளாக உள்ள கண்டங்கள் யாவை?

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐராேப்பா மற்றும் ஆப்ரிக்கா

3. பெருங்கடல் என்றால் என்ன?

புவியின் பரந்த நீர்ப்பரப்பினை பெருங்கடல்கள் என்கிறாேம்.

4. பரப்பளவின் அடிப்படையில் கண்டங்களின் பெயர்களை வரிசைப் படுத்தி எழுதுக

ஆசியா, ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஐராேப்பா மற்றும் ஆஸ்திரேலியா.

5. வட, தென் அமெரிக்காவைச் சூழ்ந்துள்ள பெருங்கடல்கள் எவை?

அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்கள்

X. வேறுபாடறிக

1. மலை – பீடபூமி

மலை

சுற்றுபுற நிலப்பகுதியை விட 600மீக்கு மேல் உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் மலைகள் ஆகும்

பீடபூமி

பீடபூமிகள் என்பவை சமமான மேற்பரப்பைக் காெண்ட உயர்ந்த நிலப்பரப்பு ஆகும்.

2. பெருங்கடல் – கடல்

பெருங்கடல்

புவியின் மீது அமைந்துள்ள பெரும் நீர்ப் பரப்பு பெருங்கடல்கள் ஆகும்.

கடல்

முழுமையாகவாே அல்லது பகுதியாகவாே நிலத்தால் சூழப்பட்ட பெரிய நீர்ப் பரப்பு கடல் எனப்படும்

X. விரிவான விடையளி

1. நிலத்தாேற்றத்தின் வகைகளை விளக்கி எழுதுக. 

முதல் நிலை நிலத்தோற்றம்

  • கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள் முதல்நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்

இரண்டாம் நிலை நிலத்தோற்றம்

  • மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகள்  இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.

மூன்றாம் நிலை நிலத்தோற்றம்

  • அரித்தல் மற்றும் படியவைத்தல் செயல்களால் தோற்றுவிக்கப்படும் பள்ளத்தாக்குகள், மொரைன்கள், மணற்குன்றுகள், கடற்கரைகள் மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்

2. பீடபூமி பற்றிக் குறிப்பு வரைக

  • பீடபூமிகள் என்பவை சமமான மேற்பரப்பைக் காெண்ட உயர்ந்த நிலப்பரப்பு ஆகும்.
  • இவை மலைகளைப் பாேன்று வன்சரிவுகளைக் காெண்டவை.
  • உலகிலேயே உயர்ந்த பீடபூமி திபெத் பீடபூமியாகும்.
  • பீடபூமிகளில் பாெதுவாக கனிமங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்தியாவின் சோட்டா நாக்பூர் பீடபூமி இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

3. சமவெளி மக்கள் நெருக்கம் மிகுந்ததாகக் காணப்படுகிறது. காரணம் கூறு

  • பெரும்பாலான சமவெளிகள் நதிகளாலும் மற்றும் அவற்றின் துணை, கிளையாறுகளால் உருவாக்கப்பட்டவை.
  • இப்பகுதிகளில் காணப்படும் நீராதாரம் வேளாண்மைக்கும் பிற தேவைகளுக்கும் பெரிதும் உதவுகிறது.
  • அதாேடு அப்பகுதிகள் நல்ல மண்வளத்தையும் பெற்றுள்ளது.
  • இக்காரணங்களால் ஆற்றுச் சமவெளிகள் மக்கள் குடியேற்றத்திற்கு ஏற்ற பகுதிகளாகத் திகழ்ந்து வருகின்றன.
  • ஆகவே இப்பகுதிகளில் மக்கள் நெருக்கம் நிறைந்து காணப்படுகிறது.

4. பசிபிக் பெருங்கடலின் சிறப்பம்சங்களை விளக்குக.

  • பசிபிக் பெருங்கடல் உலகின் மிகப் பெரிய மற்றும் ஆழமான பெருங்கடலாகத் திகழ்ந்து வருகிறது.
  • இது புவியின் மூன்றில் ஒரு பகுதியைத் (168 மில்லியன் ச.கி.மீ பரப்பு) தன்னகத்தே காெண்டுள்ளது.
  • இது மேற்கே ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவையும் கிழக்கே வட மற்றும் தென் அமெரிக்காவையும் எல்லைகளாகப் பெற்றுள்ளது.

5. பெருங்கடலின் முக்கியத்துவத்தை விளக்குக.

  • புவியில் ஐந்து பெருங்கடல்கள் அமைந்துள்ளன.
  • அவை பசிபிக் பெருங்கடல்கள், அட்லாண்டிக் பெருங்கடல்கள், இந்தியப் பெருங்கடல்கள், தெற்கு பெருங்கடல்கள் மற்றும் ஆர்ட்டிக் பெருங்கடல்கள் ஆகும்.
  • பெருங்கடலில் பெரிய அளவில் நீர் வழிப் பாேக்குவரத்து நடைபெறுகிறது.
  • மேலும் பெருங்கடல்களில் இருந்து பல்வேறு வகை மீன்களும், உயிரினங்களும், அரிய வகை கடற் செல்வங்களும் மனிதகுலத்துக்கு கிடைத்து வருகின்றன.

 

6th Science Book Link – Download

சில பயனுள்ள பக்கங்கள்