பாடம்.8 சமத்துவம் பெறுதல்
பாடம்.8 சமத்துவம் பெறுதல்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. பின்வருவனவற்றுல் எது பாரபட்சத்திற்கான காரணம் அல்ல
- சமூகமயமாக்கல்
- பொருளாதார நன்மைகள்
- அதிகாரத்துவ ஆளுமை
- புவியியல்
விடை : புவியியல்
2. பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது
- பாலின பாகுபாடு
- சாதி பாகுபாடு
- மத பாகுபாடு
- சமத்துவமின்மை
விடை : பாலின பாகுபாடு
3. பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவது
- திரைப்படங்கள்
- விளம்பரங்கள்
- தொலைகாட்சி தொடர்கள்
- இவை அனைத்தும்
விடை : இவை அனைத்தும்
4. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகங்கள்
- இந்தியா 2020
- அக்கினிச்சிறகுகள்
- எழுச்சி தீபங்கள்
- இவை அனைத்தும்
விடை : இவை அனைத்தும்
5.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
- 1997
- 1996
- 1995
- 1994
விடை : 1997
6. விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு
- 1995
- 1986
- 1987
- 1998
விடை : 1998
7. இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு
- செஸ்
- மல்யுத்தம்
- கேரம்
- டென்னிஸ்
விடை : கேரம்
8. “அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படடியில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது?
- 14(1)
- 15(1)
- 16(1)
- 17(1)
விடை : 15(1)
9. பி.ஆர். அம்பேத்கார் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
- 1990
- 1989
- 1986
- 1987
விடை : 1990
10. 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்
- நாமக்கல்
- சேலம்
- கன்னியாகுமரி
- சிவகங்கை
விடை : கன்னியாகுமரி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ___________________ என்பது மற்றவர்களைப்பற்றி எதிமறையாக அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.
விடை : ஒத்தகருத்து
2. ___________________ ஆம் ஆண்டு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தார்.
விடை : இராமேஸ்வரத்தில், 1931
3. இந்தியாவில் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதினை முதன் முதலில் பெற்றவர் ___________________
விடை : விஸ்வநாதன் ஆனந்த்
4. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் __________________
விடை : டாக்டர் B.R. அம்பேத்கர்
5. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த பாலின விகிதம் உள்ள மாவட்டம் __________________
விடை : தர்மபுரி
III. பொருத்துக:
1. பாரபட்சம் | தீண்டாமை ஒழிப்பு |
2. ஒத்தக் கருத்து உருவாதல் | மற்றவர்களை காட்டிலும் சிலரை தாழ்வாக நடத்துவது |
3. பாகுபாடு | சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் |
4. பிரிவு 14 | தவறான பார்வை அல்லது தவறான கருத்து |
5. பிரிவு 17 | பிறரை பற்றி எதிமறையாக மதிப்பிடுதல் |
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 5 – அ |
IV. வினாக்களுக்கு விடையளி
1. பாரபட்சம் என்றால் என்ன?
- பாரபட்சம் என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.
- அவர்களைப் பற்றி அறிந்து காெள்ளாமலேயே தவறான முன்முடிவு எடுப்பதாகும்.
- மக்கள் தவறான நம்பிக்கைகளையும் கருத்துகளையும் காெண்டிருக்கும் பாேது பாரபட்சம் ஏற்படுகிறது.
2. ஒத்த கருத்து என்றால் என்ன?
- ஒத்த கருத்து என்பது தவறான கண்ணாேட்டம் அல்லது ஏதாே ஒன்றைப் பற்றிய தவறான கருத்தாகும்.
- பாலின அடிப்படையில் ஒத்த கருத்துகளை பற்றி திரைப்படங்கள் மற்றும் தாெலைக்காட்சி தாெடர்களில் சித்தரிக்கப்படுவதைக் காணலாம்.
3. பாகுபாடு என்றால் என்ன?
- சமத்துவமின்மை என்பது ஒருவர் மற்றாெருவரை பாகுபாட்டுடன் நடத்துவதாகும்.
- சாதி ஏற்றத்தாழ்வு, சமய சமத்துவமின்மை, இன வேறுபாடு அல்லது பாலின வேறுபாடு பாேன்ற ஏற்றத்தாழ்வுகள் பாகுபாட்டை ஏற்படுத்துகிறது.
4. இந்திய அரசியலமைப்பின்படி எந்த பிரிவுகள் சமத்துவத்தை பற்றி கூறுகிறது?
- இந்திய அரசியலசமப்பின் 14வது சட்டப்பிரிவு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறது.
- மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 17ன் படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது.
V. விரிவான விடையளி
1. பாரபட்சத்திற்கான காரணங்களை கூறுக.
- சமூகமயமாக்கல்
- நிர்ணயிக்கப்பட்ட நடத்தை
- பொருளாதார பயன்கள்
- சர்வாதிகார ஆளுமை
- இன மையக் கொள்கை
- கட்டப்பாடான குழு அமைப்பு
- முரண்பாடுகள்
2. பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.
சாதி பாகுபாடு
- சாதி முறை சமத்துவமின்மைக்கு மற்றும் பாகுபாட்டிற்கான முக்கிய காரணமாகும்
- இதனை எதிர்த்து பேராடியவர்களில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் குிறப்பிடத்தக்கவர் ஆவார்
பாலின பாகுபாடு
- பாலின பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களிடையே ஏற்படும் உடல்நலம், கல்வி, பொருளாதாரம், அரசியல் சமத்துவமின்மையை குறிக்கிறது
3. இந்திய சமுதாயத்தில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டை நீக்குவதற்கான தீர்வுகளை விவரி.
- அனைவருக்கும் தரமான உடல் நலம் மற்றும் கல்வியினை கிடைக்கச் செய்தல்
- தவறான பாலின பாரபட்சத்தை தெரிந்து கொள்ளுதல்
- பாெது வாழ்வில் பெண்களின் திறன்களை வெளிப்படுத்துதல்
- எல்லா சமயங்களைப் பற்றி தெரிந்து காெள்ளும் மனப்பான்மை
- வகுப்பறையில் குழுக்களாக உணவு அருந்துதல் மூலம் சாதி, மத, பாலின பாரபட்சமின்றி மாணவர்களை ஒன்றிணைக்கச் செய்தல்
- சட்டங்களை முறையாக அமுல்படுத்துதல் பாேன்றவற்றால் சமுதாயம் மேம்பட வாய்ப்புகள் உருவாகும்.
6th Science Book Link – Download
சில பயனுள்ள பக்கங்கள்