Tamil Nadu 6th Standard Tamil Book Term 1 கிழவனும் கடலும் Solution | Lesson 2.4

பாடம் 2.4 கிழவனும் கடலும்

Samacheer Kalvi Solutions for Class 6 Tamil Term 1 Chapter 2 கிழவனும் கடலும் Lesson are available here.

These solutions are prepared by our experts to provide a proper understanding of this lesson.

After you have studied the lesson, you must be looking for answers to its questions. Here you can get complete Solutions for 6th Standard Term I Tamil.

இயற்கை > கிழவனும் கடலும்

IV. வினாக்கள்

1. கிழவனும் கடலும் படக்கதையை உங்கள் சொந்த நடையில் கதையாகக் கூறுக.

கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் ஆகும். இதில் வாழும் மக்கள் மீனவர்கள் அம்மீனவர்களுக்கு வற்றாத செல்வமாக விளங்குபவர் கடலன்னை ஆவாள்.

சாண்டியாகோ வயது முதிர்ந்த மீனவர் அவரிடம் மீன் பிடிக்க கற்றுக் கொள்வதாக மனோலின் என்னும் சிறுவன் வந்தான் முன்பெல்லாம் கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல் திரும்பமாட்டார். ஆனால் கடந்த எண்பத்து நான்கு நாள்களாக ஏனோ அவருக்கு ஒரு மீனும் கிடைக்கவில்லை.

மனோலின் முதல் நாற்பது நாள்களும் அவருடன் கடலுக்குச் சென்றான். அவன், அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்ததோடு பேச்சுத் துணையாகவும் இருந்தான்.

அவராேடு கடலுக்குப் போனால் ஒரு மீனும் கிடைப்பத்தில்லை என்று அவனை வேறொரு படகிற்கு அனுப்பி விட்டனர். அவனது பெற்றோர் இப்போதெல்லாம் தனியாகவே மீன் பிடிக்கச் செல்கிறார் சாண்டியாகோ

அன்று 85வது நாள் சாண்டியாகோ எனக்கு மீன்பிடிக்கத் தெரியாது என்று மக்கள் நினைக்கின்றனர். அதை மாற்றிக் காட்டவேண்டும் என்ற எண்ணத்துடன் கடலுக்குள் செல்கிறார்.

இரவு முழுவதும் பாடுபட்டும் ஒன்றும் ஒன்றும் கிடைக்கவில்லை. காலையும் வந்தது அவர் மனதில் ஒரு போராட்டம் மீன் பிடிக்காமல் கரைக்குத் திரும்ப போவதில்லை என்று முடிவு செய்தார்.

நண்பகல் வேளையும் ஆனது. அவர் இட்டிருந்த தூண்டில் மெதுவாக அசைந்தது. அவர் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி தூண்டில் கயிற்றை இழுக்கின்றார். அவரால் இழுக்க முடியவில்லை.

ஆகவே பெரிய மீன்தான் சிக்கியுள்ளது என உணர்ந்து பல போராட்டங்களுக்கு பின் அதை மேலே இழுத்து தான் வைத்திருந்து ஈட்டியால் கொல்கிறார்.

மீன் இறந்து விடவோ அதை கரையை நோக்கி வரும் வழியில் மீனைத் தின்றுவிட வேண்டும் என்ற ஆசையில் பல சுறாக்கள் மீனைச் சுற்றி வட்டமிடுகின்றன.

அதை கண்ட சாண்டியாகோ சுறாவை வீழத்தி இறுதியாக கரைக்கு வந்து படகை ஒரு கம்பத்தில் கட்டிவிட்டு படகையும் மீனையும் பார்க்கின்றார் சுறாக்கள் தின்றது போக மீனின் தலை. எலும்பு மட்டுமே மிஞ்சி இருந்தது.

கவலையுடன் தன் வீட்டில் இருந்த சாண்டியாகோவைக் காண மனோலின் வந்தான்.

தாத்தா எவ்வளவு பெரிய மீனைப் பிடித்திருக்கிறாய். இனி உன்னை யாரும் பழித்து பேசமுடியாது. உன் முயற்சி வென்று விட்டது. இனி நான்  உன் கூடதான் மீன் பிடிக்க வருவேன்.  உன்னிடம் நிறைய கற்றுக் கொள்ள விரும்புகிறேன். என்று மனோலின் கூறுவதைக் கேட்டதும் சாணடியாகோவிற்கு ஆறுதலாக இருந்தது.

சாண்டியாகோவின் முயற்சிக்கு வெற்றி கிட்டியது.

2. இக்கதையின் வழியாக நீங்கள் உணர்ந்தவற்றை வகுப்பில் பகிர்க

வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் அதை வாழ்ந்து தான் பார்க்கனும். வெற்றிக்கு வயது ஒன்றும் தடையில்லை.

சான்டியாகோ வயது முதிர்ந்தவராக இருந்தாலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் என்பத்து ஐந்து நாள் விடாமல் போராடி வெற்றி பெறுகிறார்.

மிகப்பெரிய மீனைப் பிடித்து தன் முற்சியின் பலனை அனுபவிக்கிறார். வெற்றி பெற பல தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து விட்டுச் சென்றதால் நோக்கம் நிறைவேறும்.

சமுதாயம் வெற்றி பெற்றவர்களையே நினைவில் வைக்கும். வாழ்க்கை என்பது மலர் படுக்கை அல்ல மாறாக முள்படுக்கை. முதிர் வயதிலும் சோர்ந்து விடாமல் தன் பாதையில் அவர் பயணித்ததால் தான் அவர் மிகப் பெரிய மீனைப் பிடிக்க முடிந்தது.

இவர் ஒரு வெற்றி நாயகன், வீர நாயகன். தான் பலமிழந்து இருந்தாலும் கூட அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் தன் வலிமையெல்லாம் ஒன்று திரட்டி அந்தப் பெரிய மீனை வீழ்த்தி வெற்றியுடன் கரைக்குத் திரும்புகிறார். முயற்சி திருவினையாக்கும் என்பதை நமக்கு உணர்த்தியுள்ளார்.

3. சாண்டியாகோ குறித்து உங்கள் கருத்து யாது?

சாண்டியாகோ ஒரு சாதனை மனிதர். இவர் முயற்சிக்கு இரு இலக்கணமாகத் திகழ்கின்றார்.

தனது முதிர் வயதிலும் சாதிக்க வேண்டும் எண்ணம் கொண்டவர் முயற்சி ஒன்றையே முழு மூச்சாகக் கொண்டு செயல்பட்டவர்.

தோல்வியைக் கண்டு துவண்டு விடாதவர். முடியும் என்பதையே தாரக மந்த்திரமாகக் கொண்டவர்.

வயதிற்குதான் முதுமை உண்டு மனதிற்கு அல்ல் என்ற எண்ணம் கொண்டு செயல்படுபர், இறுதியில் வெற்றியும் கண்டவர்.

கூடுதல் வினாக்கள்

1. கிழவனும் கடலும் என்னும் புதினம் எம்மொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

கிழவனும் கடலும் என்னும் புதினம் ஆங்கில மொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

2. கிழவனும் கடலும் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஆண்டு?

1954

3. கிழவனும் கடலும் நூலினை ஆசிரியர் யார்?

கிழவனும் கடலும் நூலினை எழுதியவர் எர்னெஸ்ட் ஹெமிங்வே.

சில பயனுள்ள பக்கங்கள்