பாடம் 3.4 உழைப்பே மூலதனம்
சுருக்கி எழுதுக.
உழைப்பே மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக.
முன்னுரை:-
“உழைப்பே உயர்வு தரும்” என்பார்கள் சான்றோர்கள், உழைப்பின் உயர்வை “உழைப்பே மூலதனம் கதை” என்னும் கதையில் காணலாம்.
அருளப்பரின் நிபந்தனை:-
பூங்குளம் என்னுமு் ஊரில் அருளப்பர் என்னும் வணிகர் இருந்தார். ஒருமுறை அவர் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டி இருந்தது. தமது பிள்ளைகள் வளவன், அமுதால எழிலன் ஆகிய மூவரையும் அழைத்து, நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஐம்பதாயிரம் பணம் தருகிறேன். அதைக் கவனமாகப் பாதுகாத்து என்குத் திருப்பித்தரவேண்டும். எனக் கூறி பணம் கொடுத்து அருளப்பர் வெளிநாட்டிற்கு சென்றார்.
வாரிசுகளின் முயற்சி:-
வளவன் உழவுத்தொழில் செய்யலாம் என்று முடிவு செய்து, காய்கறித் தோட்டத்தை அமைத்தான். பாதுகாத்துப் பராமரித்து வந்தான். தோட்டம் முழுவதும் அவரை, பாகல், வெண்டை, கத்தரி முதலிய காய்கள் காய்த்துக் குலுங்கின. அவற்றை நகரத்திற்குக் கொண்டு சென்று விற்பனை செய்து லாபம் ஈட்டினான்.
அமுதாவிற்கு ஆடுமாடுகள் வளர்ப்பதில் விருப்பம் அதிகம், நாட்டுப் பசுக்களை வாங்கி பராமரித்து, அவை தந்த பாலை வீடு வீடாகச் சென்று விற்றாள். மேலும் தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் விற்றுப் பொருள் ஈட்டினாள்.
எழிலன் தந்தை கொடுத்த பணத்தைப் பெட்டியில் வைத்து வீட்டின் பின்புறம் குழி தோண்டி மூடி வைத்தான்.
அருளப்பரின் விசாரணை:-
தம் பணத்தை முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். தான் வேளாண்மை செய்து இருமடங்காக சேர்த்து வைத்து பணத்தைத் தந்தையின் முன் வைத்தான் வளவன். தந்தை மகிழ்ச்சி அடைந்து, அப்பணத்தை அவனையே வைத்துக் கொள்ளுமாறு கூறினான். தொடர்ந்து வேளாண்மை செய்ய ஊக்கமளித்தார்.
அடுத்து அமுதா தான் மாடுகள் வளர்ப்பு மூலமாக சேர்த்து வைத்த இரு மடங்கு பணத்தை தந்தையிடம் அளித்தாள். தந்தை மகிழ்ச்சி அடைந்து, அப்பணத்தை அவளையே வைத்துக் கொள்ளுமாறு கூறி, தொடர்ந்து பண்ணையை நடத்த ஊக்கமளித்தார்.
அருளப்பரின் அறிவுரை:-
அடுத்தடுத்து எழிலனை அழைத்துப் பணத்தைக் கேட்க, புதைத்து வைத்திருந்து பணத்தை எழிலன் கொடுத்தான். தந்தை ஏமாற்றமடைந்தார். “நீ கடமையைச் செய்ய தவறி விட்டாய். நீ பணத்தையும் பயன்படுத்தவில்லை. காலத்தையும் வீணாக்கி விட்டாய். நீ என்னுடன் இருந்து தொழிலைக் கற்றுக்கொள்”. என்று தந்தை கூறினார்.
முடிவுரை:-
எழிலனும் தன் தவற்றை உணர்ந்து தொழில் கற்று முன்னேற முடிவு செய்தான். உழைப்பின் உன்னதத்தைப் புரிந்து கொண்டான் எழிலன்.
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. _________ என்பது வங்கி காப்பறையில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய பொருளன்று.
விடை: பணம்
2. தந்தை கொடுத்த பணத்தை _______ வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரமாக வைத்திருந்தான்
விடை: எழிலன்
3. பிறருக்கு ______ வாழ வேண்டும்.
விடை: உதவியாக
I. குறு வினா
1. பணம் வைத்திருப்போருக்கு ஔவையாரின் அறிவுரை என்ன?
பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்” என்பது ஔவையாரின் அறிவுரை.
2. மடமை என்பது என்ன?
பணத்தைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பது மடமை ஆகும்.
3. பணத்தின் பயன் என்ன?
- பணத்தைக் கொண்டு ஏதேனும் ஒரு தொழில் செய்து வாழ்வில் முன்னேறாம்.
- பிறருக்கு உதவியாக வாழலாம்.
4. அருளப்பர் தன் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பணம் கொடுத்தார்?
அருளப்பர் தன் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்
5. வளவனும், அமுதாவும் தம் தந்தை எதற்காக பணம் கொடுத்தார் என நினைத்தார்கள்?
வளவனும், அமுதாவும் தம் தந்தை “நமது திறமையை எடைபோடவே நமக்குப் பணத்தைக் கொடுத்திருக்கிறார்“ என நினைத்தார்கள்
6. உழைப்பே மூலதனம் மூலம் நாம் தெரிந்து கொள்வதென்ன?
பணம் என்பது வங்கி காப்பறையில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய பொருளன்று. அதைப் பயன்படுத்தித் தொழில் செய்து முன்னேறுவது இளம் வயதும் ஆற்றலும் உடையோர் செயல்.
சில பயனுள்ள பக்கங்கள்