பாடம் 2.4 பாதம்
எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன. உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இக்கதை “தாவரங்களின் உரையாடல்” என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. |
நெடுவினா
பாதம் கதையைச் சுருக்கி எழுதுக.
காலணி தைக்கும் மாரி வழக்கம்போல் தியேட்டர் வாசலில் உட்கார்ந்திருந்தார். காலையிலே தொடங்கிய மழை இடைவிடாது பெய்து கொண்டிருந்தது. மாரி எவரேனும் காலணி தைக்க வரக்கூடுமோ எனப பசியுடன் காத்திருந்தார். வலுத்துப் பெய்யத் தொடங்கிய மழையுடன் காற்றும் சேர்ந்து கொண்டது.
அந்த நீண்ட தெரு எவருமில்லை. அவரும் ஒரு மரமு் எட்டு பழைய செருப்புகளும் தவிர, சினிமா தியேட்டரின் குறுகிய வலதுப்புறச் சந்தில் இருந்து குடையில்லாமல் நனைந்தபடி சிறுமியொருத்தி, அவன் அருகில் வந்து, தனது இடக்கையில் வைத்திருந்த காலணி ஒன்றை குனிந்து தரையிலிட்டு, தைத்து வைக்கும்படி சொல்லி விட்டு அவர் நிமிர்ந்து அவளைப் பார்க்கும் முன்பு தெருவில் ஓடி அடுத்த வளைவின் சுவர்களை கடந்து சென்றாள்.
அந்தக் காலணி நிறத்தில் இருந்தது. வழக்கமான சிறுமிகளின் காலணி போல அல்லாது தைத்துப் கொண்ட காலணியாக இருந்தது. மாரி கிழிசலைத் தைத்துக் கொண்டு காத்திருந்தார். நிச்சயம் இரண்டு ரூபாய் கிடைக்குமு் ஆவலில் இருந்தார் மாரி.
ஆனால் மாலை வரை அந்தச் சிறுமி வரவில்லை. மாரி இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா வரை மரத்தடியில் காத்துக் கொண்ருந்தார். அவள் வரவில்லை. காலணியைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு வீடு போய் சேர்ந்தார். மறுநாளும் அந்தச் சிறுமிக்காக காத்திருந்தார். அன்றும் அவள் வரவில்லை. இப்படி மூன்று நாட்கள் கடந்தன. அவர் வரவேயில்லை.
இருந்தாலும் அவர் மனம் சோர்ந்து போகவில்லை. தினமும் கொண்டு வந்து காத்துக் கொண்டே இருந்தார். ஓர் இரவில் மாரியின் மனைவி அந்த காலணியைக் கண்டாள். அதன் வசீகரம் தொற்றிக் கொள்ள கையில் எடுத்துப் பார்த்தாள்.
சிறுமியின் காலணி போலிருந்தது. அதைப் போட்டுப் பார்க்க ஆசையாக இருந்தது. தனது வலது காலில் அந்தக் காலணியை நுழைத்துப் பார்த்தாள். அது அவளுக்கு சரியாக இருந்தது.
சிறுமியின் காலணி அவளுக்குப் பொருந்துகிறது என்றவள் மற்றொரு காலணியைத் தேடிப் பையில் கொட்டினாள். மாரி உள்ளே கோபமாகச் சப்தமறிந்து வந்தபோது மனைவியின் வலக்காலில் இருந்த சிவப்புக் காலணியைக் கண்டார். ஆத்திரத்துடன் திட்டி, அவள் சொல்வதைக் கேட்காமல் கழற்றச் சொல்லி கிழிந்து விட்டதா எனப் பார்க்கக் கையில் எடுத்து உயர்த்தினார் கிழியவில்லை. காலணி அவருக்குள்ளும் ஆசையைத் தூண்டியது.
போட்டுப் பார்க்கலாமென, தன் வலக்காலைச் சிறிய காலணியில் நுழைத்தபோது அது தனக்கும் சரியாகப் பொருந்துவதைக் கண்டார். விசித்திரமாயிருந்து மாரிக்கு. இந்தச் செய்தி நகரில் பரவியது. அந்தக் காலணியைப் போட்டுப் பார்க்க ஆசை கொண்ட பலர் தினமும் வந்து அணிந்து தமக்கும் சரியாக உள்ளதை கண்டு அதிசயித்துப் போயினார்.
அந்தக் காலணி ஒரு வயது குழந்தை முதல் வயசாளி வரை எல்லாருக்கும் பொருந்துவதாக இருந்தது. அதைக் காலில் அணிந்தவுடன் மேகத்துணுக்குகள் காலடியில் பரவுவது போலவும், பனியின் மிருது படவர்வது போலவும் இருப்பதாக பதில் கூறினர். அந்தச் செருப்பை அணிந்த பார்க்க சிலர் பணம் தரவும் தொடங்கினர். திசரியாகப் பணம் பெருகிக் கொண்டே போனது. வருடங்கள் புரண்டன. அவர் பசு இரண்டு வாங்கினார். வீடு கட்டிக் கொண்டார்.
வாழ்வின் நிலை உயர்ந்து கொண்டு போனது. இப்போதும், அந்தச் சிறுமி வரக்கூடும் என்று பலர் முகத்தின் ஊடேயும் அவளைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
இப்படியா மாரியின் முப்பது வருடம் கடந்தது. ஓர் இரவில் காலணியோடு வீடு திரும்பும் போது, அதைத் திருட முனைந்த இருவர் தடியால் தாக்க பலமிழந்து கத்தி கீழே விழுந்தார். யாரோ அவரைக் காப்பாற்றினார்கள். காலணி திருடு போகவில்லை.
ஆனால் தலையில் பட்ட அடி அவரைப் பலவீனமடையச் செய்தது. வீட்டை விட்டு வெளியேறி நடக்க முடியாதவராகிப் போனார். அந்தச் சிறுமிக்காக மனம் காத்துக் கொண்டே இருந்தது. தனது மரணத்தின் முன்பு ஒரு தரம் அவளைச் சந்திக்க முடியாதோன என்ற ஏக்கம் பற்றிக் கொண்டது.
ஒரு மழை இரவில் அந்தச் சிறுமி பெரியவளாக மாரியின் வீட்டிற்கு வந்து நின்றாள். அடையாளர் கண்டு கொண்ட மாரி அவளுடைய செருப்பை அவளிடம் கொடுத்தார். அந்தச் செருப்பின் சிறப்பை அவளிடம் கூறி அவளைப் பற்றி அறிய அவளை வினவினார் மாரி.
ஆனால் அவள் பதில் ஏதும் கூறாமல் சிரித்தபடியே மாரியின் வீட்டை விட்டு நீங்கினாள். வெளியே சென்றதும் அந்த வலதுகால் செருப்பை அணிந்தாள். அது அவளுக்கு பொருந்தவில்லை.
கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. தற்காலத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்.ராதாகிருஷ்ணன்
- எஸ்.கிருஷ்ணன்
- எஸ்.இராமலிங்கனார்
விடை: எஸ்.ராமகிருஷ்ணன்
2. பாதம் என்ற கதை ________ என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
- தாவரங்களின் வளர்ச்சி
- தாவரங்களின் உரையாடல்
- சூரிய வெளிச்சம்
- காலணி
விடை: தாவரங்களின் உரையாடல்
II. குறுவினா
1. எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புகளை எழுதுக
- உபபாண்டவம்
- கதாவிலாசம்
- தேசாந்திரி
- கால் முளைத்த கதைகள்
2. எஸ்.ராமகிருஷ்ணன் பற்றிய சிறுகுறிப்பு வரைக
- தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
- நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன.
- படைப்புகள்: உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள்
சில பயனுள்ள பக்கங்கள்