பாடம் 3.3. முடிவில் ஒரு தொடக்கம்
மதிப்பீடு
1. முடிவில் ஒரு தொடக்கம் என்ற தலைப்பின் காரணம் குறித்துக் கூறுக.
மனிதன் மற்றொரு மனிதன்பால் கொள்ளும் நேயமே மனிதநேயம். இந்த உலகம் பல உயிர்களின் தோட்டம். மனித பூக்கள் அதில் ஏராளம். பார்த்து ரசிப்பது ஒரு இனம். பறித்து சூடுவது ஒரு இனம் மலரைப் பார்ப்பதற்கு உரிமம் தேவையில்லை. பறிப்பதற்கு அந்த செடியின் சொந்தக்காரராய், அதன் பராமரிப்பாளராய், பாதுகாவலராய் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.
அவ்வாறு இருக்கையில் தனது உயிரையே பிறருக்கு தானமாக அளித்த ஹிதேந்தரேயன் பெற்றோர் செயலை என்னவென்று சொல்வது தெரியவில்லை. ஆயிரம் கனவுகளோடு வளர்த்த மகனின் உடல் உறுப்புகளை பிறருக்கு கொடுக்க முன்வந்தனர். அவன் இறந்தும் வாழ வேண்டும் எனறு நினைத்தனர். அவனது முடிவு ஒரு தொடக்கமாகப் பிறருக்கு அமைய வேண்டும் என்று எண்ணினர். ஹிதேந்திரனின் இறுதி முடிபவு பல மனிதர்களுக்கு தொடக்கமாக அமைந்துள்ளது. அரக்ள எடுத்த முடிவு சரியானதே.
ஹிதேந்திரன் பெற்றோர் மருத்துவராக இருந்ததால் தக்க தருணத்தில் முடிவை எடுக்க முடிந்தது. ஆனால், நம்பில் பலர் இந்தச் சூழ்நிலைக்கு பல நேரங்களில் ஆட்படுகின்றோம். ஆனால் சரியான முடிவை எடுக்காமல் தவிக்கின்றோம். இதனால் பல மனிதர்களின் முடிவு முடிவாகவே அமைந்து விடுகின்றது. அவை மண்ணுக்குள்ளேயே மடிந்தும் முடிந்தும் விடுகிறது. பல உயிர்கள் வாழ வழிவகை இல்லாமல் போய்விடுகிறது.
இதனால் பல உயிர்கள் மடிந்தும் விடுகின்றது. ஒரு மனிதனின் முடிவு பல மனிதர்களின் தொடக்கத்திற்கு வழிவகை செய்கிறது. ஆகவே “முடிவில் ஒரு தொடக்கம்” என்ற தலைப்புத் தக்க காரணத்துடன் நம் பாடத்தலைப்பிற்கு பொருந்தி வந்துள்ளது.
2. இக்கதைக்குப் பொருத்தமாக மற்றொரு தலைப்பு இடுக.
இறந்தும் வாழ்வர்
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. சிறு குழந்தைக்கு இதயத்தை தானமாக கொடுத்த இளைஞரின் பெயர் _______
விடை: ஹிதேந்திரன்
2. ஹிதேந்திரனின் பெற்றோர்கள் _______ ஆவர்
விடை: அசோகன் – புஷ்பாஞ்சலி
II. குறுவினா
1. எது வள்ளல் தன்மை அன்று?
பொன்னையும் பொருளையும் வாரி வழங்குவது மட்டும் வள்ளல் தன்மை அன்று.
2. வள்ளல் தன்மை என்பது யாது?
நமது இறப்பிற்குப் பின் மண்ணுக்குச் செல்லும் உடல் உறுப்புகளைப் பிறர் வாழ வழங்குவதும் வள்ளல் தன்மைேய.
3. உறுப்பு கொடை பற்றிய சூளுரையை கூறுக
உறுப்புக் கொடை செய்வோம். மண்ணில் ஒருவரையாவது வாழ வைப்போம்.
4. இக்கால வள்ளல்கள் யார்?
மனித நேயத்தின் மகத்தான சாதனையாகத் தம் மகனின் துடிக்கும் இதயத்தையே கொடையாகத் தந்த இக்கால வள்ளல்கள் தாம் அசோகன் – புஷ்பாஞ்சலி என்ற மருத்துவத் தம்பதியினர்.
5. சிறுமிக்குப் பொருத்தப்பட்ட இதயத்திற்குரிய அந்த இளைஞனின் பெயர் என்ன?
சிறுமிக்குப் பொருத்தப்பட்ட இதயத்திற்குரிய அந்த இளைஞனின் பெயர் ஹிதேந்திரன்
சில பயனுள்ள பக்கங்கள்