Tamil Nadu 6th Standard Tamil Book Term 3 அணி இலக்கணம் Solution | Lesson 3.4

பாடம் 3.4. அணி இலக்கணம்

கற்றவை கற்றபின்

I. பின்வரும் பாடலைப் படித்து இதில் அமைந்துள்ள அணியைக் குறிப்பிடுக.

ஆறு சக்கரம் நூறு வண்டி
அழகான ரயிலு வண்டி
மாடு கன்னு இல்லாமத்தான்
மாயமாத்தான் ஓடுது
உப்புப் பாரம் ஏத்தும் வண்டி
உப்பிலிப் பாளையம் போகும் வண்டி

இப்பாடல் இயல்பு நவிற்சி அணியாகும். கவிஞர் தம் கருத்தை இயல்பாக உள்ளபடியே அழகுடன் கூறியமையால் இயல்பு நவிற்சி அணி ஆகும்.

II. குறுவினா

1. உள்ளதை உள்ளவாறு கூறும் அணியின் பெயர் யாது?

ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.

2. உயர்வு நவிற்சி அணி என்பது யாது

ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.

மொழியை ஆள்வோம்

1. அணி என்றால் என்ன?

உடலுக்கு அழகு தரும் அணிகலன் போல் சொல்லும் பொருளும் அழகுற அமைவது அணி ஆகும். கவிஞர் தம் கருத்தை சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி.

மருந்தை தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது அணியாகும். அணி என்பதற்கு அழகு என்பது பொருள்

2. இயல்பு நவிற்சி அணியை சான்றுடன் விளக்குக

ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.

(எ. கா.)

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி

– கவிமணி தேசிக விநாயகனார்

இப்பாடலில் கவிஞர் பசுவும் கன்றும் ஒன்றுடன் ஒன்று கொஞ்சி விளையாடுவதை இயல்பாக எடுத்துக் கூறியுள்ளார். எனவே இது இயல்பு நவிற்சி அணி ஆகும்.

3. உயர்வு நவிற்சி அணியை சான்றுடன் விளக்குக

ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.

(எ. கா.)

குளிர்நீரில் குளித்தால்
கூதல் அடிக்குமென்று
வெந்நீரில் குளித்தால்
மேல கருக்குமென்று
ஆகாச கங்கை
அனல் உறைக்குமென்று
பாதாள கங்கையைப்
பாடி அழைத்தார் உன் தாத்தா

என்று ஒரு தாய் தாலாட்டுப் பாடுகிறாள். இதில் உயர்வு நவிற்சி அணி அமைந்துள்ளது.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. அணி என்பதற்கு _________ என்பது பொருள்.

விடை: அழகு

2. கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது _________.

விடை: அணி

3. ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது _________ ஆகும். 

விடை: இயல்பு நவிற்சி அணி

4. இயல்பு நவிற்சி அணியினை _________ என்றும் கூறுவர். 

விடை: தன்மை நவிற்சி அணி

5. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது ____________ ஆகும்.

விடை: உயர்வு நவிற்சி அணி

மொழியை ஆள்வோம்

I. அகரவரிசைப்படுத்துக.

ஒழுக்கம், உயிரி, ஆடு, எளிமை, அன்பு, இரக்கம், ஓசை, ஐந்து, ஈதல், ஊக்கம், ஏது, ஓளவை

விடை :

அன்பு, ஆடு, இரக்கம், ஈதல், உயிரி, ஊக்கம், எளிமை, ஐந்து, ஏது, ஐந்து, ஒழுக்கம், ஓசை, ஓளவை

II. பத்தியைப் படித்துக் கீழக்காணும் வினாக்களுக்கு விடையளிக்க

அரசர் ஒருவர் தன் மக்களிடம் “அமைதி” என்றால் என்ன என்பதை விளக்கும் வகையில் ஓவியமாக வரைந்து கொடுப்பவர்களுக்கு மிகச்சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை வெளிப்படுத்தும் வகையில் பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்குக் கொண்டு வந்தனர். அரசர் ஒவ்வாெரு ஓவியமாகப் பார்த்துக் கொண்டே வந்தார். அழகிய மலையின் அடிவாரத்தில் ஓர் ஏரி இருப்பது போல் ஓவியம் ஒன்று இருந்தது. அது மிகவும் சிறப்பாக இருந்தது. பார்த்த உடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களின் ஓவியம் ஒன்று இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியைத் தங்களுக்குத் தோன்றியபடி ஓவியத்தில் வெளிப்படுத்தி இருந்தனர். ஓர் ஓவியத்தில் ஒரு மலைமேல் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியின் படம் வரையப்பட்டிருந்தது. அதிலேயே இடியாேடு மழை கொட்டிக் கொண்டு இருந்தது சற்று உற்றுப் பார்த்தால் அருவியின் கீழே இருந்த மரம் ஒன்றில் பறவைக் கூட்டில் பறவை ஒன்று தனது குஞ்சுகளாேடு இருந்தது.

“இந்த ஓவியத்தை வரைந்தது யார்?” என்று அரசர் கேட்டார். அந்த ஓவியர் வந்தார். “இந்த ஓவியத்தில் அமைதி எங்கே இருக்கிறது?” என்றார் அரசர். அதற்கு ஓவியர் “ மன்னா பிரச்சனையும் போராட்டமும் ஆரவாரமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அன்று. இவை எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்தும், எதற்கும் கலங்காமலும், தன்னை எதுவும் பாதிக்க வி்டாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி” என்பார்

1. அமைதி என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்ன?

அசாதாரண நிலையில் சாதரணத்தை தேடுவது

2. இக்கதையில் அமைதி எங்கு இருப்பதாக தோன்றுவது என்ன?

பிரச்சனையும் போராட்டமும் ஆரவாரமும் இல்லாத இடத்தில் இருப்பத அமைதி அன்று. இவை எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்தும், எதற்கும் கலங்காமலும், தன்னை எதுவும் பாதிக்க விடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பது உண்மையான அமைதி

3. நீங்கள் இந்த ஓவியப் போட்டியில் பங்கு பெற்று இருந்தால் என்ன ஓவியம் வரைந்து இருப்பீர்கள்?

போர்களத்தில் போர்களின் மத்தியில் ஒரு குழந்தை உறங்கிக் கொண்டிருப்பது போல் வரைந்திருப்பேன்

4. இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக?

அமைதி தேடும் மனங்கள்

மொழியோடு விளையாடு

I. கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக

நேற்றுஎங்கள் ஊரில் மழைபெய்கிறது
இன்றுபெய்யும்
நாளைபெய்தது

நேற்று எங்கள் ஊரில் மழை பெய்தது
இன்று எங்கள் ஊரில் மழை பெய்கிறது
நாளை எங்கள் ஊரில் மழை பெய்யும்

இது போன்று மூன்று காலங்களையும் காட்டும் சொற்றொடர்களை அமைக்க

1. நேற்று நான் ஊருக்கு போனேன்
இன்று நான் ஊருக்கு போகிறேன்
நாளை நான் ஊருக்கு போவேன்

2. நேற்று வயலில் ஆடு மேய்ந்தது
இன்று வயலில் ஆடு மேய்கிறது
நாளை வயலில் ஆடு மேயும்

3. நேற்று என் அப்பா வந்தார்
இன்று என் அப்பா வருகிறார்
நாளை என் அப்பா வருவார்

II. கட்டங்களில் மறைந்துள்ள அணிகலன்களின் பெயர்களை எழுதுக

ணிமாேபு
ம்திம்ளை
ளா
ல்சூம்சில்
டுக்ன்
  • கம்மல்
  • சூளாமணி
  • மோதிரம்
  • சிலம்பு
  • வளையல்
  • கடுக்கன்

நிற்க அதற்குத் தக

I. கலைச்சாெல் அறிவாேம்

  1. மனிதநேயம் – Humanity
  2. கருணை – Mercy
  3. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை – Transplantation
  4. நாேபல் பரிசு – Nobel Prize
  5. சரக்குந்து – Lorry

 

சில பயனுள்ள பக்கங்கள்