பாடம்.1 அளவீட்டியல்
பாடம்.1 அளவீட்டியல்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. பின்வருவனவற்றுள் எது வழி அளவு?
- நிறை
- நேரம்
- பரப்பு
- நீளம்
விடை : பரப்பு
2. பின்வருவனவற்றுள் எது சரி?
- 1 லி = 1 கன செ.மீ
- 1 லி = 10 கன செ.மீ
- 1 லி = 100 கன செ.மீ
- 1 லி = 1000 கன செ.மீ
விடை : 1 லி = 1000 கன செ.மீ
3. அடர்த்தியின் SI அலகு
- கிகி / மீ2
- கிகி / மீ3
- கிகி / மீ
- கி / மீ3
விடை : கிகி / மீ3
4. சம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம
- 1:2
- 2:1
- 4:1
- 1:4
விடை : 1:2
5. ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?
- தொலைவு
- நேரம்
- அடர்த்தி
- நீளம் மற்றும் நேரம்
விடை : நீளம் மற்றும் நேரம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருட்களின் பருமனை அளக்க __________ விதி பயன்படுகிறது
விடை : ஆர்க்கிமிடிஸ்
2. ஒரு கன மீட்டர் என்பது ________ கன சென்டிமீட்டர்.
விடை : 1,00,000
3. பாதரசத்தின் அடர்த்தி ________
விடை : 13,600 கிகி / மீ3
4. ஒரு வானியல் அலகு என்பது _________
விடை : 149.6 மில்லியன் கிமீ = 149.6 × 106 கிமீ = 1.496 × 1011 மீ.
5. ஓர் இலையின் பரப்பை _________ பயன்படுத்தி கணக்கிடலாம்.
விடை : வரைபடத்தாளை
III. சரியா தவறா எனக் கூறுக.
1. ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் கனஅளவு எனப்படும்.
விடை : சரி
2. திரவங்களின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
விடை : சரி
3. நீர் மண்ணெண்ணெயை விட அடர்த்தி அதிகம் கொண்டது.
விடை : சரி
4. இரும்பு குண்டு பாதரசத்தில் மிதக்கும்.
விடை : சரி
5. ஓரலகு பருமனில் குறைந்த எண்ணிக்கையில் மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்த்தி அதிகம் கொண்டப் பொருள் எனப்படும்.
விடை : தவறு
IV. பொருத்துக
A)
1. பரப்பு | ஓளி ஆண்டு |
2. தொலைவு | மீ3 |
3. அடர்த்தி | மீ2 |
4. கன அளவு | கிகி |
5. நிறை | கிகி / மீ3 |
விடை : 1 – இ, 2 – அ, 3 – உ, 4 – ஆ, 5 – ஈ |
A)
1. பரப்பு | கிகி / மீ3 |
2. நீளம் | அளவிடும் முகவை |
3. அடர்த்தி | பொருளின் அளவு |
4. கன அளவு | கயறு |
5. நிறை | தள வடிவ பொருள் |
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ, 5 – இ |
V. பின்வருவனவற்றை சரியான வரிசையில் எழுதவும்:
1. 1 லிட்டர், 100 கன செ.மீ, 10 லிட்டர், 10 கன செ.மீ
விடை : 10 கன செ.மீ , 100 கன செ.மீ, 1 லிட்டர், 10 லிட்டர்
2. தாமிரம், அலுமினியம், தங்கம், இரும்பு
விடை : அலுமினியம், இரும்பு, தாமிரம், தங்கம்
VI.ஒப்புமையைக் கொண்டு நிரப்புக
1. பரப்பு : மீ2 :: கன அளவு :_________
விடை : கன மீட்டர் (அ) மீ3
2. திரவம் : லிட்டர் :: திடப்பொருள் : _________
விடை : கிலோகிராம்
3. நீர் : மண்ணெண்ணெய் :: _________ : அலுமினியம்
விடை : இரும்பு
VII. கூற்று-காரணம் வகைக் கேள்விகள். உங்களது விடையைப் பின்வருமாறு தேர்ந்தெடுத்து எழுதுக.
- கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
- கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.
- கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
- கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
1. கூற்று : கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
காரணம் : கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.
விடை: கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
2. கூற்று : மரக்கட்டை நீரில் மிதக்கும்.
காரணம் : நீர் ஒரு ஒளி ஊடுருவும் திரவம்.
விடை : கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
3. கூற்று : ஒர் இரும்பு குண்டு நீரில் மூழ்கும்.
காரணம் : நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.
விடை : கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
VIII. ஓரிரு வார்த்தைகளில் விடையளி.
1. ஒரு சில வழி அளவுகளைக் கூறுக.
- பரப்பு
- கனஅளவு
- வேகம்
- நீளம்
- நிறை
- நேரம்
- வெப்பநிலை
- மின்னோட்டம்
- பொருளின் அளவு
- ஒளிச்செறிவு
2. ஓர் ஒளி ஆண்டின் மதிப்பைத் தருக.
ஒளி ஆண்டு = 9.46×1015 மீ
3. ஓர் உருளையின் கனஅளவைக் காணும் சூத்திரத்தை எழுதுக.
உருளையின் கனஅளவு = π × r2 × உயரம்
4. பொருட்களின் அடர்த்திக்கான வாய்ப்பாட்டைத் தருக.
அடர்த்தி (D) = நிறை (M) / பருமன் (V)
5. எந்த திரவத்தில் இரும்பு மூழ்கும்?
நீரில் இரும்பு மூழ்கும்
6. வானியல் பொருள்களின் தொலைவைக் காண உதவும் அலகுகளைக் கூறுக.
- வானியல் அலகு
- ஒளியாண்டு
7. தங்கத்தின் அடர்த்தி எவ்வளவு?
19,300 கிகி / மீ3
IX. ஓரிரு வாக்கியங்களில் விடையளி.
1. வழி அளவுகள் என்றால் என்ன?
அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் வழி அளவுகள் எனப்படும்.
எ.கா : பரப்பு , கனஅளவ
2. ஓரு திரவத்தின் கன அளவையும் ஒரு கலனின் கொள்ளளவையும் வேறுபடுத்துக.
திரவத்தின் கன அளவு | கலனின் கொள்ளளவு |
திரவத்தின் கன அளவு என்பது அது கலனில் நிரப்பும் அளவைக் குறிக்கிறது என்பதே ஆகும். | ஒரு கொள்கலனில் ஊற்றக்கூடிய அதிகபட்ச திரவத்தின் பருமனே கொள்ளவு ஆகும். |
3. பொருட்களின் அடர்த்தியை வரையறு.
ஒரு பொருளின் அடர்த்தி என்பது அதன் ஓரலகு பருமனில் (1 மீ3) அப்பொருள் பெற்றுள்ள நிறைக்குச் சமம் ஆகும்.
அடர்த்தி (D) = நிறை (M) / பருமன் (V)
4. ஓர் ஒளி ஆண்டு என்றால் என்ன?
ஒளி ஆண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் தொலைவே ஆகும்.
1 ஒளி ஆண்டு = 9.46×1015 மீ.
5. ஓரு வானியல் அலகு வரையறு.
ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு ஆகும்.
1 வானியல் அலகு = 149.6×106 கிமீ = 1.496×1011 மீ.
X. விரிவாக விடையளி.
1. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத்தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரி.
- ஏதேனும் ஒரு மரத்திலிருந்து ஓர் இலையை எடுத்துக் கொள்க.
- அந்த இலையை ஒரு வரைபடத் தாளின் மீது வைத்து, அதன் எல்லையை ஒரு பென்சிலைக் கொண்டு வரைந்து கொள்க.
- இலையின் எல்லைக் கோட்டிற்குள் அமைந்த முழு சதுரங்களை எண்ணவும். இதனை, M எனக் கொள்க
- பிறகு, பாதியளவு பரப்பிற்கு மேல் உள்ள சதுரங்களை எண்ணவும். இதனை, N எனக் கொள்க.
- அடுத்து, பாதி அளவு பரப்புள்ள சதுரங்களை எண்ணவும். இதனை, P எனக் கொள்க.
- இறுதியாக, பாதி அளவு பரப்பிற்குக் கீழ் உள்ள சதுரங்களை எண்ணவும். இதனை, Q எனக் கொள்க
- இப்போது, இலையின் பரப்பளவினை தோராயமாக பின்வரும் சூத்திரத்தின் மூலம் கண்டறியலாம்.
- இலையின் தோராயமான பரப்பு = M + 3/4 N + 1/2 P + 1/4 Q சதுர செ.மீ
- இலையின் பரப்பு = __________ செமீ2.
2. ஒரு கல்லின் அடர்த்தியை ஒரு அளவிடும் முகவை மூலம் எவ்வாறு கண்டறிவாய்?
- ஒரு அளவிடும் குவளையை எடுத்து அதில் சிறிது நீரை ஊற்றவும்.
- நீரின் கனஅளவினை அளவிடும் குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ளவும். அதனை V1 எனக் குறிக்கவும்.
- இப்போது, ஒரு சிறிய கல்லை எடுத்து, அதை ஒரு நூலினால் கட்டவும். நூலைப் பிடித்துக்கொண்டு, கல்லை நீரினுள் மூழ்கச்செய்யவும்.
- இவ்வாறு மூழ்கச்செய்யும்போது, கல் குவளையின் சுவர்களைத் தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- தற்போது, குவளையில் நீரின் மட்டம் உயர்ந்திருக்கும்.
- நீரின் கனஅளவினை அளவிடும் குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ளவும். அதனை V2 எனக் குறிக்கவும். கல்லின் கனஅளவு அதிகரித்துள்ள நீரின் கனஅளவிற்குச் சமம்.
கல்லின் கனஅளவு = V2 – V1
XI. கணக்கிடுக.
1. ஒரு வட்ட வடிவத் தட்டின் ஆரம் 10 செமீ எனில், அதன் பரப்பை சதுர மீட்டரில் காண்க. (π = 22/7 எனக் கொள்க).
ஆரம் r | = 10 செ.மீ. (அ) .1 மீ |
π | = 22/7 |
வட்டத்தின் பரப்பு | = πr2 |
= 22/7 x 0.1 x 0.1 | |
= 0.0315 மீ2 |
2. ஒரு பள்ளியின் விளையாட்டுத் திடலின் பரிமாணம் 800 மீ × 500 மீ. அத்திடலின் பரப்பைக் காண்க.
l = 800 மீ, b = 500 மீ
பள்ளி விளையாட்டுத் திடலின் பரிமாணம் (செவ்வகம்) | = l x b |
= 800 மீ x 500 மீ | |
= 4,00,000 மீ2 |
3. ஒரே அளவுடைய இரு கோளங்கள் தாமிரம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் நிறைகளின் விகிதத்தைக் காண்க (தாமிரம் மற்றும் இரும்பின் அடர்த்தி முறையே 8900 கிகி / மீ3 மற்றும் 7800 கிகி / மீ3).
தாமிரம் அடர்த்தி = 8900 கிகி/மீ3
இரும்பின் அடர்த்தி = 7800 கிகி/மீ3
நிறை (M) | = அடர்த்தி (D) x கன அளவு (V) |
தாமிரம் நிறை | = தாமிரம் அடர்த்தி x தாமிரம் கன அளவு |
இரும்பு நிறை | = இரும்புஅடர்த்தி x இரும்பு கன அளவு |
தாமிரம் அடர்த்தி x தாமிரம் கன அளவு | = இரும்பு அடர்த்தி x இரும்பு கன அளவு |
8900 கிகி/மீ3 x V | = 7800 கிகி/மீ3 x V |
V | 8900 கிகி/மீ3 / 7800 கிகி/மீ3 |
நிறைகளின் விகிதம் | 1.141 கிகி/மீ3 |
4. 250 கி நிறையுள்ள ஒரு திரவம் 1000 கன செ.மீ இடத்தை நிரப்புகிறது. திரவத்தின் அடர்த்தியைக் காண்க.
திரவத்தின் நிறை (M) | = 250 கி |
பருமன் | = 1000 க.செ.மீ |
திரவத்தின் அடர்த்தி | = ? |
அடர்த்தி | = நிறை / பருமன் |
= 250 கி / 1000 க.செ.மீ | |
= 250 கி / மீ3 |
5. 1 செமீ ஆரமுள்ள ஒரு கோளம் வெள்ளியினால் செய்யப்படுகிறது. அக்கோளத்தின் நிறை 33 கி எனில், வெள்ளியின் அடர்த்தியைக் காண்க (π = 22/7 எனக் கொள்க).
கோளத்தின் ஆரம் = 1செமீ
கோளத்தின் நிறை = 33கி
கோளத்தின் அடர்த்தி = ?
அடர்த்தி | = நிறை / பருமன் |
கோளத்தின் பருமன் | = 4/3πr3 |
= 4/3 x 22/7 x 1 x 1 x 1 | |
கோளத்தின் பருமன் | = 4.187 |
அடர்த்தி | = நிறை / பருமன் |
= 33 / 4.187 | |
வெள்ளியின் அடர்த்தி | = 7.889 கி / மீ3 |
சில பயனுள்ள பக்கங்கள்