7th Std Science Term 1 Solution | Lesson.2 விசையும் இயக்கமும்

பாடம்.2 விசையும் இயக்கமும்

விசையும் இயக்கமும் பாட விடைகள்

பாடம்.2 விசையும் இயக்கமும்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டபபாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்த பின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி

  1. அ. சுழி
  2. r
  3. 2 r
  4. r / 2

விடை : 2 r

2. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் திசைவேகம் காலம் வரைபடத்திலிருந்து
அப்பொருளானது

  1. சீரான இயக்கத்தில் உள்ளது.
  2. ஓய்வு நிலையில் உள்ளது.
  3. சீரற்ற இயக்கத்தில் உள்ளது.
  4. சீரான முடுக்கத்தில் பொருள் இயங்குகிறது.

விடை : சீரான முடுக்கத்தில் பொருள் இயங்குகிறது.

3. கீழே உள்ள படங்களில் எப்படமானது இயஙகும் பொருளின் சீரான இயக்கத்தினைக் குறிக்கிறது.

விடை : d

4. ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ / வி என்ற மாறத வேகத்தில் சுற்றி
வருகிறான். இககூற்றிலிருந்து நாம் அறிவது

  1. சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்.
  2. சிறுவனின் இயக்கம் முடுக்கப்படாத இயக்கமாகும்.
  3. சிறுவனின் இயககம் முடுககப்பட்ட இயக்கமாகும்.
  4. சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயஙகுகிறான்.

விடை : சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயஙகுகிறான்.

5. ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.

  1. ஈர்பபு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்.
  2. ஈர்பபு மையத்தின் உயரத்தினை அதிகரித்தல்.
  3. பொருளின் உயரத்தினை அதிகரித்தல்
  4. பொருளின் அடிப்பரப்பின் அகலத்தினைக் குறைத்தல்

விடை : ஈர்பபு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த நேர்கோட்டுப் பாதை ___________ எனப்படும்.

விடை : இடப்பெயர்ச்சி

2. திசைவேகம் மாறும் வீதம் ___________ ஆகும்.

விடை : முடுக்கம்

3. ஒரு தபொருளின் திசைவேகமானது காலத்தினைப பொருத்து அதிகரித்தால்
அப்பொருள் ___________ முடுககத்தினைப் பெற்று இருக்கிறது என்கிறோம்

விடை : சீரான

4. வேகம்–காலம் வரைபடத்தின் சாய்வு _________ மதிப்பினைத் தருகிறது.

விடை : முடுக்கத்தின்

5. _________ நிலையில் ஈர்பபு மையத்தின் நிலை மாறுவதில்லை.

விடை : நடுநிலை

III. பொருத்துக

1. இடப்பெயர்ச்சிஓளி ஆண்டு
2. வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்வடிவியல் மையம்
3. கப்பலின் வேகம்மீட்டர்
4. ஒழுங்கான பொருள்களின் ஈர்ப்பு மையம்அகலமான அடிப்பரப்பு
5.சமநிலைசீரான திசைவேகம்
விடை : 1 – இ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – ஈ

IV.ஒப்புமையைக் கொண்டு நிரப்புக

1. திசைவேகம் : மீட்டர்/விநாடி :: முடுக்கம் : _________

விடை : மீட்டர்/விநாடி2

2. அளவுகோலின் நீளம் :: மீட்டர் : வானூர்தியின் வேகம் _________

விடை : நாட்

3. இடப்பெயர்ச்சி / காலம் : திசைவேகம் :: தொலைவு / காலம் : _________ 

விடை : வேகம்

V. பின்வரும் அட்டவணையை நிரப்புக.

முதல் நகர்வு இரண்டாம் நகர்வு தொலைவு (m)இடப்பெயர்ச்சி
1. நகர்வு 4 மீட்டர் கிழக்குநகர்வு 2 மீட்டர் மேற்கு62 மீட்டர் கிழக்கு
2. நகர்வு 4 மீட்டர் வடக்குநகர்வு 2 மீட்டர் தெற்கு62 மீட்டர் வடக்கு
3. நகர்வு 2 மீட்டர் கிழக்குநகர்வு 4 மீட்டர் மேற்கு62 மீட்டர் மேற்கு
4. நகர்வு 5 மீட்டர் கிழக்குநகர்வு 5 மீட்டர் மேற்கு100
5. நகர்வு 2 மீட்டர் தெற்குநகர்வு 2 மீட்டர் வடக்கு40
6. நகர்வு 10 மீட்டர் மேற்குநகர்வு 3 மீட்டர் கிழக்கு137 மீட்டர் மேற்கு

VI. மிகக் குறுகிய விடையளி

1. ஒழுங்கான வடிவமுடைய பொருள்களின் ஈர்ப்பு மையம் எங்கு அமைந்துள்ளது?

வடிவியம் மையம்

2. அவள் மாறாத திசையில் மாறாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறாள் – இவ்வாக்கியத்தினை இயக்கத்தின் வகைகளுடன் தொடர்புபடுத்தி மாற்றவும்.

இவள் சீரான திசைவேகத்தில் நேர்கோ்டு இயக்கத்தில் சென்று கொண்டிருக்கிறார்

3. உனது நண்பன் பின்வரும் வாக்கியத்தினைக் கூறுகிறான் . – முடுக்கமானது ஒரு பொருளின் நிலை எவ்வளவு வேகத்தில் மாறுகிறது என்பதனைப் பற்றிய தகவலை நமக்கு அளிக்கிறது. இவ்வாக்கியத்தில் உள்ள பிழையினைக் கண்டறிந்து மாற்றுக.

முடுக்கமானது ஒரு பொருளின் வேகம் எவ்வளவு நேரத்தில் மாறுகிறது என்பதனைப் பற்றிய தகவலை நமக்கு அளிக்கிறது.

VII. குறுகிய விடையளி

1. வேகம் மற்றும் திசைவேகம் இவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டினைக் கூறுக.

வேகம்திசைவேகம்
1. தொலைவு மாறுபடும் வீதம் வேகம்
எனப்படும்.
இடப்பெயர்ச்சி மாறுபடும் வீதம் திசைவேகம் எனப்படும
2. வேகம் = தொலைவு / காலம்திசைவேகம் (V) = இடப்பெயர்ச்சி / காலம்
3. வேகத்தின் அலகு மீட்டர் / விநாடி ( மீ / வி)திசைவேகத்தின் SI அலகு மீட்டர் / விநாடி (மீ / வி) ஆகும்.

2. சீரான முடுக்கம் என்பது பற்றி நீவிர் கருதுவது யாது?

ஒரு பொருளில் சீரான கால இடைவெளியில் காலத்தினைப் பொருத்து திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் (அதிகரித்தல் அல்லது குறைதல்) சீரானதாக இருப்பின் அம்முடுக்கம் சீரான முடுக்கம் எனப்படும்.

3. ஈர்ப்பு மையம் என்றால் என்ன?

ஈர்ப்பு மையம் – எப்புள்ளியில் ஒரு பொருளின் எடை முழுவதும் செயல்படுவது போல் தோன்றுகிறதோ அப்புள்ளியே அப்பொருளின் ஈர்ப்பு மையம் எனப்படும்.

VIII. விரிவான விடையளி

1. சமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

ஒரு பொருளின் ஆரம்பநிலையினைத் தக்கவைத்துக்கொள்ளும் திறனே அப்பொருளின் சமநிலை எனப்படும்.

சமநிலை மூன்று வகைப்படும்.

  1. உறுதிச்சமநிலை
  2. உறுதியற்ற சமநிலை
  3. நடுநிலை சமநிலை

உறுதிச் சமநிலை :

கூம்பானது மிகஅதிகக் கோணத்திற்குச் சாய்க்கப்பட்டுப் பின்னர் விடப்பட்டாலும் கவிழ்ந்துவிடாமல் மீண்டும் பழையநிலையை அடையும்.

கூம்பு சாய்க்கப்படும்போது அதன் ஈர்ப்பு மையம் உயர்கிறது. ஈர்ப்பு மையத்தின் வழியாக வரையப்படும் செங்குத்துக்கோடானது சாய்க்கப்பட்ட நிலையிலும் அதன் அடிப்பரப்பிற்கு உள்ளேயே விழுகிறது. எனவே அதனால் மீண்டும் தனது பழைய நிலையை  அடையமுடிகிறது

உறுதியற்ற சமநிலை :

கூம்பானது சிறிது சாய்க்கப்பட்டாலும் கவிழ்ந்துவிடும். கூம்பினைச் சாய்க்கும்போது ஈர்ப்புமையம் அதன் நிலையிலிருந்து உயர்கிறது. ஈர்ப்புமையம் வழியாக வரையப்படும் செங்குத்துக்கோடானது அதன் அடிப்பரப்பிற்கு வெளியே விழுகிறது. எனவே கூம்பானது கீழே கவிழ்கிறது.

நடுநிலை சமநிலை :

கூம்பானது உருள்கிறது. ஆனால் அது கீழே கவிழ்க்கப்படுவதில்லை.

கூம்பினை நகர்த்தும்போது அதன் ஈர்ப்புமையத்தின் உயரம் மாறுவதில்லை. கூம்பினை எவ்வாறு நகர்த்தினாலும் அதே நிலையிலேயே நீடித்து இருக்கிறத

2. ஒழுங்கற்ற ஒரு தகட்டின் ஈர்ப்பு மையத்தினைக் காணும் சோதனையை விவரி.

தேவையான பொருள்கள்:

ஒழுங்கற்ற வடிவமுடைய அட்டை, நூல், ஊசல் குண்டு, தாங்கி.

செய்முறை

ஒழுங்கற்ற வடிவமுடைய அட்டையில் மூன்று துளைகளை இடவும். படத்தில் காட்டியவாறு ஒரு துளையினைத் தாங்கியில் பொருத்தி அட்டையினைத் தொங்கவிடவும்.

தாங்கியில் இருந்து அட்டையின் மேல்புறமாக அமையுமாறு குண்டுநூலினை தொங்கவிடவும்.

அட்டையின் மேல் குண்டுநூலின் நிலையினை ஒரு கோடாக வரைந்துகொள்ளவும்

மேற்கூறியவாறு மற்ற இரு துளைகளையும் தாங்கியில் இருந்து தொங்கவிட்டுக் கோடுகள் வரைந்து கொள்ளவும்.

மூன்றுகோடுகளும் வெட்டும் புள்ளியின் நிலையினை X எனக் குறித்துக்கொள்ளவும்.

X என்ற புள்ளியே ஒழுங்கற்ற வடிவமுடைய அட்டையின் ஈர்ப்பு மையம் ஆகும்.

IX. கணக்கீடுக

1. கீதா தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு மிதிவண்டியில் 15 நிமிடங்களில் சென்று அடைந்தாள். மிதிவண்டியின் வேகம் 2 மீ / வி எனில் அவளது வீட்டிற்கும் பள்ளிக்கும் உள்ள தொலைவினைக் காண்க.

வேகம்= தொலைவு /  காலம்
தொலைவு=  வேகம் x காலம்
மிதிவண்டியின் வேகம்= 2 மீ/வி
காலம்= 15 நிமிடங்கள்
= 15 x 60 = 900விநாடி
தொலைவு= 2 x 900 விநாடி
தொலைவு= 1800 மீட்டர்

2. ஒரு மகிழுந்து அமைதி நிலையிலிருந்து 10 விநாடிகளில் 20 மீட்டர் / விநாடி என்ற வேகத்தில் பயணம் செய்யத் தொடங்குகிறது. மகிழுந்தின் முடுக்கம் யாது?

மகிழுந்தின் தொடக்க திசைவேகம் U= 0
மகிழுந்தின் இறுதி திசைவேகம் V=  20 மீ/வி
t= 10 விநாடிகள்
முடுக்கம் a= V-U / t
= 20 – 0 / 10
மகிழுந்தின் முடுக்கம் a = 2 மீ/வி-2

3. ஒரு பேருந்தின் முடுக்கப்படும் வேகம் 1 மீ / வி2 எனில் அப்பேருந்தானது 50 கிமீ / வி என்ற வேகத்தில் இருந்து 100 கிமீ / வி என்ற வேகத்தினை அடைய எடுத்துக் கொள்ளும் காலத்தினைக் கணக்கிடுக.

பேருந்தின் முடுக்கம் a= 1 மீ/வி2
இறுதி திசைவேகம் V=  100 கி.மீ/வி
தொடக்க திசைவேகம் U=  50 கி.மீ/வி
காலம் t= V-U / a
= 100 – 50 / 1
காலம் t = 50 விநாடிகள்

 

சில பயனுள்ள பக்கங்கள்