பாடம்.1 வெப்பம் மற்றும் வெப்பநிலை
பாடம்.1 வெப்பம் மற்றும் வெப்பநிலை
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. வெப்பநிலையினை அளப்பதற்கான SI அலகுமுறை _________________
- கெல்வின்
- பாரன்ஹீட்
- செல்சியஸ்
- ஜூல்
விடை : கெல்வின்
2. வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்
- விரிவடைகிறது
- சுருங்குகிறது
- அதே நிலையில் உள்ளது
- மேற்கூறிய ஏதுமில்லை.
விடை : விரிவடைகிறது
3. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை
- 0°C
- 37°C
- 98°C
- 100°C
விடை : 37°C
4. ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது _________________
- பாதுகாப்பான திரவம்
- தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது.
- ஒரே சீராக விரிவடையக்கூடியது.
- விலை மலிவானது
விடை : ஒரே சீராக விரிவடையக்கூடியது.
5. கீழே உள்ளவற்றில் எந்த இணை தவறானது
K ( கெல்வின்) = °C ( செல்சியஸ்) + 273.15
°C | K |
அ) – 273.15 | 0 |
ஆ) – 123 | +150.15 |
இ) + 127 | +400.15 |
ஈ) + 450 | +733.15 |
விடை : + 450 +733.15
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. மருத்துவர்கள் _______________ வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி மனிதனின் உடல் வெப்பநிலையனை அளவிடுகின்றனர்
விடை : மருத்துவ
2. அறைவெப்ப நிலையில் பாதரசம் _______________ நிலையில் காணப்படுகிறது.
விடை : திரவ
3. வெப்ப ஆற்றலானது _______________ பொருளில் இருந்து _______________ பொருளுக்கு மாறுகிறது.
விடை : சூடான, குளிர்ச்சியான
4. 7°C வெப்பநிலையானது 0°C வெப்பநிலையினை விட _______________
விடை : குறைவானது
5. பொதுவாக பயன்படுத்தப்படும் ஆய்வக வெப்பநிலைமானி _______________ வெப்பநிலைமானி ஆகும்.
விடை : பாதரச
III. பொருத்துக
1. மருத்துவ வெப்பநிலைமானி | ஆற்றல் |
2. சாதாரண மனிதனின் உடல் வெப்பநிலை | 100°C |
3. வெப்பம் | 37°C |
4. நீரின் கொதிநிலை | 0°C |
5. நீரின் உறைநிலை | உதறுதல் |
விடை : 1 – உ, 2 – இ, 3 – அ, 4 – ஆ, 5 – ஈ |
IV. மிகக் குறுகிய விடையளி
1. ஸ்ரீநகரின் (ஜம்மு & காஷ்மீர்) வெப்பநிலை -4°C மேலும் கொடைக்கானலின் வெப்பநிலை 3°C. இவற்றில் எப்பகுதியின் வெப்பநிலை அதிகமாகும். அப்பகுதிகளுக்கிடையே காணப்படும் வெப்பநிலை வேறுபாடு எவ்வளவு?
கொடைக்கானலின் வெப்பநிலை அதிகமாகும் | |
வெப்பநிலை வேறுபாடு | = -4°C – 3°C = – 7°C |
ஃ வெப்பநிலை வேறுபாடு | – 7°C |
2. ஜோதி சூடான நீரின் வெப்பநிலையினை மருத்துவ வெப்பநிலைமானியினை பயன்படுத்தி அளக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். இச்செயல் சரியானதா அல்லது தவறானதா ? ஏன்?
- இச்செயல் தவறானது. ஏனெனில் மருத்துவ வெப்பநிலைமானியில் உள்ள பாதரசம் அதிக வெப்பநிலையில் விரிவடையும்.
- பாதரசத்தின் அதிகமான விரிவினால் உருவாகம் அழுத்த்தின் காரணமாக வெப்பநிலைமானியானது உடைந்து விடக்கூடும்.
3. நம்மால் ஏன் மருத்துவ வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி காற்றின் வெப்பநிலையினை அளக்க இயலாது?
- மருத்துவ வெப்பநிலைமானி மனித உடலின் வெப்பநிலையை அளக்கப் பயன்படுகிறது.
- நமது உடலுடன் தொடர்பில் இருக்கும்போது மட்டுமே மருத்தவ வெப்பநிலைமானி வெப்பநிலையை அளக்கிறது.
- எனவே இதைப் பயன்படுத்தி காற்றின் வெப்பநிலையினை அளக்க இயலாது
4. மருத்துவ வெப்பநிலைமானியில் காணப்படும் சிறிய வளைவின் பயன்பாடு யாது?
மருத்துவ வெப்பநிலைமானிகளின் குழாயினில் ஒரு குறுகிய வளைவு காணப்படுகிறத. இக்குறுகிய வளைவானது வெப்பநிலைமானியை நோயாளின் வாயிலிருந்து எடுத்தவுடன் பாதரசமானது மீண்டும் குமிழுக்குள் செல்வதை தடுக்கிறது. எனவே நம்மால் வெப்பநிலையை எளிதாக குறித்துக் கொள்ள இயலும்
5. மருத்துவ வெப்பநிலைமானியினை உடலின் வெப்பநிலையினை பரிசோதிக்க பயன்படுத்தும் முன் அதனை உதறுவதற்கான காரணம் யாது?
பாதரச மட்டத்தினை கீழே கொண்டு வருவதாற்காக வெப்பநிலைமானியை ஒரு சில முறை உதற வேண்டும்.
V. குறுகிய விடையளி .
1 . வெப்பநிலைமானியில் நாம் ஏன் பாதரசத்தினை பயன்படுத்துகிறோம்? பாதரசத்திற்கு பதிலாக நீரினைப் பயன்படுத்த இயலுமா? அவ்வாறு பயன்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
- பாதரசம் திரவ நிலையிலேயே தொடர்ந்து காணப்படுவதால் வெப்பநிலைமானியின் பாதரசத்தை பயன்படுத்துகிறோம்
- பாதரசம் அதிக வெப்பவிரிவு குணகத்தைப் பெற்றுள்ளது
- பாதசத்திற்குப் பதிலாக நீரினை பயன்படுத்த இயலும்
- ஆனால் 0°Cயை விடக் குறைவான வெப்பநிலை மற்றும் 100°Cயை விட அதிகமான வெப்பநிலையை நீரினை பயன்படுத்துவதால் அளக்க முடியாது.
2. சுவாதி ஆய்வக வெப்பநிலைமானியினை சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பின்பு வெப்பநிலைமானியினை வெளியே எடுத்து நீரின் வெப்பநிலையினை குறித்துக்கொண்டாள். இதனைக் கண்ட ரமணி இது வெப்பநிலையினை குறிப்பதற்கான சரியான வழிமுறை அல்ல என்று கூறினாள். நீங்கள் ரமணி கூறுவதினை ஏற்றுக்கொள்கிறீர்களா? காரணத்தினைக் கூறவும்
- ஆம் நான் ரமணி கூறுவதினை ஏற்கிறேன்
- வெப்பநிலையானது சூடான நீரில் இருக்கும் நிலையிலேயே அளவீடானது எடுக்கப்பட வேண்டும்.
- வெப்பநிலைமானியை சூடான நீரை விட்டு வெளியே எடுத்த பின்பு வெப்பநிலையினை அளவிடக் கூடாது.
3. இராமுவின் உடல் வெப்பநிலை 99°F. அவர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளாரா? இல்லையா? ஏன்?
- ஆம் அவர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார்
- ஏனெனில் மனித உடலின் வெப்பநிலை98.6°F.
- இராமுவின் உடல் வெப்பநிலை 99°F மனித உடலின் சாதரண வெப்பநிலையை விட அதிகமாகும்.
VI. விரிவான விடையளி
1. மருத்துவ வெப்பநிலைமானியின் படம் வரைந்து அதன் பாகங்களை குறிக்கவும்.
2. ஆய்வக வெப்பநிலைமானிக்கும், மருத்துவ வெப்பநிலைமானிக்கும் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் யாவை ?
ஒற்றுமை
ஆய்வக வெப்பநிலைமானி, மருத்துவ வெப்பநிலைமானி இரண்டிலும் வெப்பநிலையை அளவிட பாதரசமே பயன்படுத்தப்படுகிறது
வேற்றுமை
ஆய்வக வெப்பநிலைமானி | மருத்துவ வெப்பநிலைமானி |
1. மருத்துவ வெப்பநிலைமானியானது 35°C முதல் 42°C வரை அல்லது 94°F முதல் 108°F வரை அளவீட்டினைக் கொண்டுள்ளது. | ஆய்வக வெப்பநிலைமானியானது பொதுவாக -10°C முதல் 110°C வரை அளவிடப்பட்டிருக்கும். |
2. பாதரச மட்டமானது தானாகவே கீழ் இறங்காது. அதில் உள்ள குறுகிய வளைவானது பாதரச மட்டத்தினை கீழ் இறங்காமல் பாதுகாக்கிறது. | குறுகிய வளைவு இல்லாத காரணத்தினால் பாதரச மட்டமானது தானாகவே கீழ் இறங்கிவிடும். |
3. கைகளுக்கு அடியில் இருந்தோ அல்லது வாயிலிருந்தோ வெப்பநிலைமானியினை எடுத்த பிறகு அளவீடானது எடுக்கப்படுகிறது. | வெப்பநிலைமானியானது வெப்பமூலத்தில் இருக்கும் நிலையிலேயே அளவீடானது எடுக்கப்படுகிறது. எ.கா திரவம் அல்லது வேறு ஏதேனும் பொருள் |
4. பாதரசத்தினை கீழே கொண்டு வர வெப்பநிலைமானியினை உதற வேண்டும். | பாதரச மட்டத்தினை கீழே கொண்டு வர வெப்பநிலைமானியினை உதற வேண்டியதில்லை. |
5. இது உடல் வெப்பநிலையினை அளக்க பயன்படுகிறது. | இது ஆய்வகத்தில் பல்வேறு பொருள்களின் வெப்பநிலையை அளக்க பயன்படுகிறது |
சில பயனுள்ள பக்கங்கள்