7th Std Science Term 2 Solution | Lesson.3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

பாடம்.3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் பாட விடைகள்

பாடம்.3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. கம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால், அம்மாற்றத்தினை ____________ ஆக வகைப்படுத்தலாம்.

  1. இயற்பியல் மாற்றம்
  2. வேதியியல் மாற்றம்
  3. வெப்பம் கொள் மாற்றம்
  4. வெப்ப உமிழ் மாற்றம்

விடை : வேதியியல் மாற்றம்

2. பின்வருவனவற்றுள் ____________ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.

  1. குளிர்வடைதல் மற்றும் உருகுதல்
  2. குளிர்வடைதல் மற்றும் உறைதல்
  3. ஆவியாதல் மற்றும் உருகுதல்
  4. ஆவியாதல் மற்றும் உறைதல்

விடை : ஆவியாதல் மற்றும் உருகுதல்

3. கீழ்கண்டவற்றில்____________ வேதியியல் மாற்றமாகும்.

  1. நீர் மேகங்களாவது
  2. ஒரு மரத்தின் வளர்ச்சி
  3. பசுஞ்சாணம் உயிர் – எரிவாயுவாவது
  4. பனிக்கூழ் கரைந்த நிலை – பனிக்கூழாவது

விடை : ஒரு மரத்தின் வளர்ச்சி

4. ____________ என்பது கால – ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

  1. பூகம்பம்
  2. வானில் வானவில் தோன்றுவது
  3. கடலில் அலைகள் தோன்றுவது
  4. மழை பொழிவு

விடை : கடலில் அலைகள் தோன்றுவது

5. ____________ வேதிமாற்றம் அல்ல.

  1. அம்மோனியா நீரில் கரைவது
  2. கார்பன் – டை – ஆக்ஸைடு நீரில் கரைவது
  3. உலர் பனிக்கட்டி நீரில் கரைவது
  4. துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது

விடை : துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒரு பலூனினுள் வெப்பக் காற்றினை அடைப்பது ____________ மாற்றமாகும்.

விடை : வேதியியல்

2. தங்க நாணத்தினை ஒரு மோதிரமாக மாற்றுவது ____________ மாற்றமாகும்.

விடை : இயற்பியல்

3. ஒரு காஸ் சிலிண்டரின் திருகினை திருப்புவதன் மூலம் ____________ எரிபொருள் ____________ எரிபொருளாக மாறும். இது ____________ மாற்றத்திற்கு எடுத்துக்காட்டாகும். 

விடை : திரவ, வாயு, வேதியியல்

4. உணவு கெட்டுப்போதல் என்பது ____________ மாற்றமாகும்.

விடை : வேதியியல்

5. சுவாசம் என்பது ____________ மாற்றமாகும்.

விடை : வேதியியல்

III. சரியா – தவறா எனக் குறிப்பிடு. தவறு எனில் சரியான விடையை எழுதுக

1. ஒரு துணியினை வெட்டுதல் என்பது கால – ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்

விடை : தவறு

சரியான விடை : ஒரு துணியினை வெட்டுதல் என்பது இயற்பியல் மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்

2. ஒரு குவளை நீரினை எடுத்து அதனை குளிர்சாதனப் பெட்டியின் அதிகுளிர் பகுதியில் வைத்து குளிர்விப்பது ஒரு வேதியியல் மாற்றமாகும்.

விடை : தவறு

சரியான விடை : ஒரு குவளை நீரினை எடுத்து அதனை குளிர்சாதனப் பெட்டியின் அதிகுளிர் பகுதியில் வைத்து குளிர்விப்பது ஒரு இயற்பியல் மாற்றமாகும்.

3. ஒரு அவரைத் தாவரம் சூரிய ஒளியினைப் பெற்று, அவரை விதைகளாக மாறுவது ஒரு இயற்பியல் மற்றும் கால – ஒழுங்கற்ற மாற்றமாகும்.

விடை : தவறு

சரியான விடை : ஒரு அவரைத் தாவரம் சூரிய ஒளியினைப் பெற்று, அவரை விதைகளாக மாறுவது ஒரு வேதியியல் மற்றும் கால – ஒழுங்கு மாற்றமாகும்.

4. ஒரு பொருளின் வேதியியல் பண்புகள் மாறாமல் இருந்து, அதன் நிலை அல்லது வடிவம் மாறுபட்டிருந்தால், அது கால ஒழுங்கு மாற்றமாகும்.

விடை : தவறு

சரியான விடை : ஒரு பொருளின் வேதியியல் பண்புகள் மாறாமல் இருந்து, அதன் நிலை அல்லது வடிவம் மாறுபட்டிருந்தால், அது இயற்பியல் மாற்றமாகும்.

5. வெள்ளி நகையின் நிறம் மங்குதல் என்ற நிகழ்வு வெப்ப ஏற்பு மாற்றமாகும்..

விடை : சரி

IV. பொருத்துக

1. உருகுதல்திரவம் நிலையில் இருந்து திண்ம நிலைக்கு மாறுதல்கடிகார முள் துடிப்பது
2. குளிர்வித்தல்திரவம் நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறுதல்பனிக்கட்டி உருவாவது
3. ஆவியாதல்திண்ம நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல்பூக்கள் சேகரித்தல்
4. உறைதல்வாயு நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல்பனிக்கட்டி நீராதல்
5. கால ஒழுங்கு மாற்றம்ஒழுங்கற்ற கால இடைவெளியில் நடைபெறுவதுநீரில் இருந்து நீராவி
6. கால ஒழுங்கற்ற மாற்றம்ஒழுங்கற்ற கால இடைவெளியில் நடைபெறுகிறதுநீராவி நீர்துளிகள்
ஆவது.
விடை : 1 – இ – ஈ, 2 – ஈ – ஊ, 3 – ஆ – உ, 4 – அ – ஆ, 5 – உ – அ, 6 – ஊ – இ

V. பின்வரும் மாற்றங்களை இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களாக வகைப்படுத்துக

சொரப்பான மரக்கட்டையினை மணலிட்டு தேய்த்து வழுவழுப்பாக்குவது, இரும்பு ஆணி துருப்பிடித்தல் இரும்பு கதவில் பெயிண்ட்டில் பூசுவது, ஒரு காகித கிளிப்பினை வளைப்பது, வெள்ளியை தட்டாக மாற்றுவது, சப்பாத்தி மாவை உருட்டி மெலிதாக்குவது, இரவு- பகல் மாற்றம், எரிமலை வெடிப்பது, தீக்குச்சி எரிவது, மாவிலிருந்து தோசை தயாரிப்பது, கண் இமை சிமிட்டுதல், இடி முழக்கம் தோன்றுவது, புவியின் சுழற்சி, கிரகணங்கள் தோன்றுதல்.

இயற்பியல் மாற்றம்வேதியியல் மாற்றம்
சொரப்பான மரக்கட்டையினை மணலிட்டு தேய்த்து வழுவழுப்பாக்குவதுஇரும்பு ஆணி துருப்பிடித்தல்
ஒரு காகித கிளிப்பினை வளைப்பதுஇரும்பு கதவில் பெயிண்ட்டில் பூசுவது
வெள்ளியை தட்டாக மாற்றுவதுஎரிமலை வெடிப்பது
சப்பாத்தி மாவை உருட்டி மெலிதாக்குவதுதீக்குச்சி எரிவது
கண் இமை சிமிட்டுதல்மாவிலிருந்து தோசை தயாரிப்பது
புவியின் சுழற்சிஇடி முழக்கம் தோன்றுவது
கிரகணங்கள் தோன்றுதல்.

VI. ஒப்புமை தருக

1. இயற்பியல் மாற்றம் : கொதித்தல் :: வேதியியல் மாற்றம் : _________

விடை : எரிதல்

2. மரக்கட்டையிலிருந்து மரத்தூள் : ________ : : மரக்கட்டையிலிருந்து சாம்பல் : வேதியியல் மாற்றம்.

விடை : இயற்பியல் மாற்றம்

3. காட்டுத்தீ : ________ மாற்றம் : : ஒரு பள்ளியில் பாட வேளை மாறுபாடு : கால ஒழுங்கு மாற்றம்.

விடை : கால ஒழுங்கற்ற மாற்றம்.

VII. வலியுறுத்தல் – காரணம் வகை வினா

  1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
  2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் கூற்று காரணத்திற்கு சரியான விளக்கம் அல்ல
  3. கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
  4. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

1. கூற்று : பட்டாசு வெடித்தல் ஒரு இயற்பியல் மாற்றம்.

காரணம் : இயற்பியல் மாற்றம் ஒரு மீள் மாற்றமாகும்.

விடை : கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

2. கூற்று : திரவ நிலை நீர் வெப்பப்படுத்துவதால் அதன் வாயு நிலைக்கு மாறுவது கொதித்தல் எனப்படும்.

காரணம் : நீராவி குளிர்வடைந்து நீராக மாறுவது குளிர்வித்தல் எனப்படும்.

விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.

3. கூற்று : மரக்கட்டையை எரித்து கரியாக்குதல் ஒரு இயற்பியல் மாற்றமாகும்.

காரணம் : ஒரு மரக்கட்டை துண்டினை எரிப்பதால் கிடைக்கும் விளைபொருள்களை எளிதாக மீண்டும் மரக்கட்டையாக மாற்ற முடியும்.

விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டு தவறு

4. கூற்று : இரும்பிலிருந்து இரும்பு ஆக்ஸைடு உருவாவது ஒரு வேதியியல் மாற்றமாகும்.

காரணம் : இரும்பிலிருந்து துரு உருவாக, அது காற்று மற்றும் நீருடன் வினை பட வேண்டும்.

விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.

5. கூற்று : ஒரு துளி பெட்ரோலினை விரலால் தொட்டால் குளிச்சியான உணர்வு ஏற்படுகிறது. 

காரணம் : மேற்கூறிய நிகழ்வு வெப்பம் கொள் மாற்றமாகும்.

விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.

VIII. மிகக் குறு வினாக்கள்

1. கால ஒழுங்கு மாற்றங்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  • பூமியின் சுழற்சி மற்றும் சுற்றுதல்
  • இதய துடிப்பு

2. இரு வெப்ப உமிழ் வினைகளைக் குறிப்பிடுக.

  • மக்னீசியா நாடா எரிதல்
  • மரம் எரிதல்

3. குளிர்ந்த பாலினை வெப்பப்படுத்தினால் அது சூடாகிறது. இது எந்த வகையான மாற்றம்?

வெப்ப ஏற்பு மாற்றம்

4. செயற்கை முறையில் பழத்தினை பழுக்க வைத்தல் எந்த வகை மாற்றமாகும்?

வேதிமாற்றம்

5. ஒரு காகிதத்தை வண்ணமடித்தல் எவ்வகை மாற்றமாகும்?

வேதிமாற்றம்

6. இதயத்துடிப்பு கால ஒழுங்கு மாற்றமாகும். ஏன்?

குறிப்பிட்ட கால இடைவெளியில் இதயம் துடிப்பதால் இதயத்துடிப்பு கால ஒழுங்கு மாற்றமாகும்

7. ஒரு பனிக்கட்டி உருகும்பொழுது எந்த மாதிரியான ஆற்றல் மாற்றங்கள் நிகழ்கின்றன?

  • பனிக்கட்டி உருகும்போது சூழலிலிருந்து வெப்பத்தை உறிஞ்சுகிறது
  • பனிக்கட்டி உருகும்போது திடநிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறுகிறது
  • இது ஒரு இயற்பியல் மாற்றம்

IX. சிறு வினாக்கள்

1. இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் வேறுபடுத்துக.

இயற்பியல் மாற்றங்கள்வேதியியல் மாற்றங்கள்
1. ஒரு பொருளின் வேதியியல் இயைபில் எந்தவொரு மாற்றத்தையும் நிகழ்த்தாமல் அப்பொருளின் இயற்பியல் பண்புகளில் மட்டுமே ஏற்படும் மாற்றங்களுக்கு இயற்பியல் மாற்றங்கள் என்று பெயர்.மாறுபட்ட வேதியியல் இயைபுடன் புதிய பொருள் உருவாவதோடு, வெப்பமோ, ஒளியோ வெளியிடப்பட்டோ அல்லது பொருள் வேறு பொருளாக மாறுவதே வேதியியல் மாற்றங்கள் எனப்படும்.
2. இயற்பியல் மாற்றத்தில் புதிய
பொருள் எதுவும் உண்டாவதில்லை.
இயற்பியல் மாற்றத்தில் புதிய பொருள்கள் உருவாகிறது
3. ஒரு இயற்பியல் மாற்றம் என்பது பொதுவாக தற்காலிகமானதும், மீள்தன்மை கொண்டதுமாகும்.ஒரு வேதியியல் மாற்றம் என்பது பொதுவாக நிரந்தரமானதும், மீள்தன்மை கொண்டதுமாகும்.
(எ.கா) பனிக்கட்டி உருகுதல், நீரினை வெப்பப்படுத்துதல்(எ.கா) இரும்பு துருப்பிடித்தல், பால்
தயிராதல்,

2. ஒரு பொருளில் மாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது?

  • மாற்றம் என்பது ஒரு பொருளின் இயற்பியல் பண்புகளில் ஏற்படும் மாற்றமாகவோ அல்லது அப்பொருளில் வேதியியல் பண்புகளில் ஏற்படும் மாற்றமாகவோ இருக்கும்
  • வெப்பப்படுத்துவதால் ஒரு பொருள் மாற்றம் ஏற்படுகிறது

3. கடல் நீரில் இருந்து நீரைப் பெறும் முறை ஒன்றினை உம்மால் கூற முடியுமா?

  • ஆவியாதல் என்ற முறையானது கடல் நீரில் இருந்து நீரைப் பெறப் பயன்படுகிறது.
  • ஆவியாதல் என்ற தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி கரைந்த நிலையில் உள்ள திண்மங்களை அதன் திண்மம் – திரவம் கலவையில் இருந்த பிரித்தெடுக்க முடியும். இம்முறையின் மூலம் உப்பளங்களில் இருந்து உப்பை பெற முடியும்

4. சூரியக் கிரகணம் கால ஒழுங்கு மாற்றமா? காரணம் தருக.

  • இந்திகழ்வு ஒரு கால ஒழுங்கு மாற்றமாகும்

சூரிய கிரணம் குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டுமே நடைபெறும்

நிலவின் வட்டப்பாதைக்கு அருகே சூரியன் இருக்கும் நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும்

5. சர்க்கரைக் கரைதல் மற்றும் சர்க்கரை எரிதல் – இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?

சர்க்கரைக் கரைதல்சர்க்கரை எரிதல்
1. இது இயற்பியல் மாற்றமாகும்இது வேதியியல் மாற்றமாகும்
2. புதிய பொருள் உருவாவது இல்லைசர்க்கரைக்கும் ஆக்ஸிஜனுக்கும் இடையே எரிதல் என்ற வேதிவினை நடைபெறுவதால் புதிய பொருள் உருவாகிறது

X. நெடு வினா

1. உணவு செரித்தல் ஒரு வேதியியல் மாற்றம் – இவ்வாக்கியத்தினை விளக்கவும்.

  • உணவு செரிததல் ஒரு வேதியியல் மாற்றம் ஆகும்
  • காரணம் – குடல் மற்றும் வயிற்றில் உள் நொதிகள் பெரிய மூலக்கூறுகளை சிறிய மூலக்கூறுகளாக சிதைக்கின்றன. எனவே உடல் எளிதாக உணவை உறிஞ்சுகிறது.
  • வேதி வினையின் காரணமாக புதிய பொருள்கள் உருவாகின்றன
  • இது ஒரு மீளா வினையாகும்

XI. படம் சார்ந்த வினா

1. படத்தினை உற்றுநோக்கி இதனுடன் தொடர்புடைய மாற்றங்களைப் பட்டியலிடவும்.

நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் பாட விடைகள்
  • வேதியியல் மாற்றம்
  • மீளா மாற்றம்
  • கால ஒழுங்கு மாற்றம்

2. படத்தில் காணும் கெட்டிலில் உப்பு நீர் இருப்பதாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் பாட விடைகள்

அ. கெட்டிலில் நடைபெறும் நிகழ்வின் பெயர் என்ன?

கொதித்தல்

ஆ. கெட்டிலில் உள்ள திரவம் என்னவாகும்.

ஆவியாகும்

இ. உலோகத் தட்டின் குளிர்ந்த பகுதியில் நிகழக்கூடிய மாற்றம் என்ன?

இயற்பியல் மாற்றம்

ஈ. முகவையில் சேகரிக்கப்படும் நீரின் தரம் பற்றி நீவிர் அறிவது என்ன?

தூய நீர்

 

சில பயனுள்ள பக்கங்கள்