பாடம்.4 செல் உயிரியல்
பாடம்.4 செல் உயிரியல்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. உயிரினங்களின் அடிப்படையாக உள்ளது
- செல்
- புரோட்டோப் பிளாசம்
- செல்லுலோஸ்
- உட்கரு
விடை : செல்
2. நான் ஒரு விலங்குசெல்லின் வெளிப்புற அடுக்கு. நான் யார்?
- செல் சுவர்
- உட்கரு
- செல் சவ்வு
- உட்கரு சவ்வு
விடை : செல் சவ்வு
3. செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?
- லைசோசோம்
- ரைபோசோம்
- மைட்டோகாண்ட்ரியா
- உட்கரு
விடை : உட்கரு
4. ____________ செல் பகுப்பிற்கு உதவுகிறது.
- எண்டோபிளாஸ்மிக் வளை
- கோல்கை உறுப்புகள்
- சென்ட்ரியோல்
- உட்கரு
விடை : உட்கரு
5. செல்லின் பல்வேறு உறுப்புகளுக்குப் பொருத்தமான அறிவியல் சொல் _______
- திசு
- உட்கரு
- செல்
- செல் நுண்உறுப்பு
விடை : செல் நுண்உறுப்பு
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. செல்லில் உள்ள ஜெல்லி போன்ற பொருள் ____________என்று அழைக்கப்படுகிறது
விடை :சைட்டோசோல்
2. நான் தாவரத்தில் சூரிய ஆற்றலை உணவாக மாற்றுவேன். நான் யார்?____________
விடை : பசுங்கணிகம்
3. முதிர்ந்த இரத்தச் சிவப்பு செல்லில் ____________ இல்லை
விடை : உட்கரு
4. ஒரு செல் உயிரினங்களை ____________ மூலமே காண இயலும்.
விடை :நுண்ணோக்கியின்
5. சைட்டோபிளாசம் + உட்கரு =__________
விடை : புரோட்டோபிளாசம்
III. சரியா – தவறா எனக் குறிப்பிடு. தவறு எனில் சரியான விடையை எழுதுக
1. விலங்கு செல்களில் செல் சுவர் உள்ளது.
விடை : தவறு
சரியான விடை : தாவர செல்களில் செல் சுவர் உள்ளது.
2. சால்மோனெல்லா என்பது ஒரு செல்லால் ஆன பாக்டீரியா ஆகும்.
விடை : சரி
3. செல் சவ்வு அனைத்தையும் ஊடுருவ அனுமதிக்கக்கூடியது.
விடை : தவறு
சரியான விடை : செல் சவ்வு தேர்ந்தெடுக்கப்ட்ட பொருட்களை மட்டும் ஊடுருவ அனுமதிக்கக்கூடியது.
4. தாவர செல்களில் மட்டுமே பசுங்கணிகங்கள் உள்ளன.
விடை : சரி
5. மனித வயிறு ஒரு உறுப்பாகும்
விடை : சரி
6. ரைபோசோம் ஒரு சவ்வுடன் கொண்ட சிறிய நுண் உறுப்பு ஆகும்.
விடை : சரி
IV. பொருத்துக
1. கடத்தும் கால்வாய் | உட்கரு |
2. தற்கொலைப் பை | எண்டோபிளாச வலைப்பின்னல் |
3. கட்டுப்பாட்டு அறை | லைசோசோம் |
4. ஆற்றல் மையம் | பசுங்கணிகம் |
5. உணவு தயாரிப்பாளர் | மைட்டோகாண்ட்ரியா |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ, 4 – உ, 5 – ஈ |
V. ஒப்புமை தருக
1. பாக்டீரியா : நுண்ணுயிரி:: மா மரம் : _______
விடை : பெரிய உயிரி (பலசெல் உயிரி)
2. அடிப்போஸ் : திசு: கண் : ________
விடை : உறுப்பு
3. செல் சுவர் : தாவரம் : : சென்ட்ரியோல்: _____
விடை : விலங்கு
4. பசுங்கணிகம்: ஒளிச்சேர்க்கை : : மைட்டோகாண்ட்ரியா: _______
விடை : செல் சுவாசம்
VI. பின்வருவதில் இருந்து சரியான மாற்றியத்தைத் தேர்வு செய்யவும்
- A மற்றும் R இரண்டும் சரியானவை
- A மற்றும் R ஆகிய இரண்டும் தவறானவை
- A சரி ஆனால் R தவறானது.
- A தவறு ஆனால் R சரியானது.
1. வலியுறுத்தல் (A) : திசு என்பது மாறுபட்ட செல்களைக் கொண்ட ஒரு குழு.
காரணம் (R) : தசைத் திசு தசை செல்களால் ஆனது.
விடை : A தவறு ஆனால் R சரியானது.
2. வலியுறுத்தல் (A) : பெரும்பான்மை செல்களை நேரடியாக வெறும் கண் கொண்டு பார்க்க முடியாது ஏனெனில்
காரணம் (R) : செல்கள் மிக நுண்ணியது
விடை : A மற்றும் R இரண்டும் சரியானவை
VII. மிகக் குறு வினாக்கள்
1. தாவர செல்லில் செல் சுவரின் பணிகள் யாவை?
- தாவர செல்லிற்குப் பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கான சட்டகமாகச் செயல்படுகிறது.
- செல் சுவரில் உள்ள செல்லுலோஸ் தாவர செல்லிற்கான வடிவத்தைத் தருகிறது.
2. சூரியனின் ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்டார்ச் தயாரிக்கும் நுண் உறுப்பு எது?
சூரியனின் ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்டார்ச் தயாரிக்கும் நுண் உறுப்பு பசுங்கணிகம் ஆகும். இதில் உள்ள நிறமி பச்சையமாகும்
3. உட்கருவில் உள்ள முக்கிய பொருள்கள் யாவை?
- உட்கரு உறை உட்கருவைச் சூழ்ந்துள்ளது.
- ஒன்றுஅல்லது இரண்டு நியூக்ளியோலஸ் மற்றும் குரோமேட்டின் உடல் ஆகியவை உட்கருவின் உள்ளே உள்ளன. செல்பிரிதலின் போது, குரோமேட்டின் உடலானது குரோமோசோமாக அமைக்கப்படுகிறது.
- உட்கருவின் உள்ளே உள்ள திரவம் உட்கரு திரவம் என அழைக்கப்படுகிறது
4. செல் சவ்வு என்ன செய்கிறது?
விலங்கு செல்லினைச் சுற்றி எல்லையாக இருப்பது பிளாஸ்மா சவ்வு. இது செல் சவ்வு எனவும் அழைக்கப்படுகிறது.
செல் சவ்வுகள் அரிதி கடத்தியாகும் அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்களை மட்டுமே செல்லிற்குள்ளேயும் வெளியேயும் செல்ல அனுமதிக்கின்றன.
5. லைசோஸோம், செல்களின் துப்புரவாளர்கள் என ஏன் அழைக்கப்படுகிறது?
லைசோஸோம், செல்களின் துப்புரவாளர்கள் என அழைக்கப்படுகிறது ஏனெனில்
- செல்லின் முதன்மையான செரிமான பகுதி லைசோஸோம் ஆகும். இவை
- செல்லிலேயா சிதைவடையும்
6. “ஒரு வைரஸ் ஒரு உயிரினம் அல்ல” என ஆசிரியர் கூறினார். நீங்கள் அவரது கூற்றினை ஏற்றுக் கொள்கிறீர்களா? இல்லையா? ஏன் என விளக்குக.
“ஒரு வைரஸ் ஒரு உயிரினம் அல்ல” என்ற ஆசிரியர் கூற்றினை ஏற்றுக் கொள்கிறேன்
- வைரஸ் என்பவை உயிருள்ள பொருட்கள் அல்ல.
காரணம்
- வைரஸ் உயிருள்ள செல்லில் நுழையும் போது மட்டும் தான் பல்கிப் பெருகும்
VIII. சிறு வினாக்கள்
1. செல் நமக்கு ஏன் மிக முக்கியம்?
- உயிரினத்தின் அடிப்படை செயல் அலகு செல் என்று அழைக்கப்படுகிறது.
- ஒரு செல் அமைப்பு என்பது ஒரு செல்லிற்குள் உள்ள பல நுண்ணுறுப்புகள் அல்லது செல்லின் பாகங்களைக் குறிக்கிறது.
- செயல் என்பது ஒரு செல்லில் உள்ள ஒவ்வொரு பகுதி அல்லது நுண்ணுறுப்புகளின் செயல்பாடாகும்.
- செல்கள் என்பது உயிரினங்களின் அடிப்படைக் கட்டுமானப் பொருளாகும்.
- எனவே செல் நமக்கு மிக முக்கியம்
2. பின்வரும் ஜோடிகளுக்கு இடையே உள்ள வேறுபாடு தருக.
I) சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல் மற்றும் மென்மையான எண்டோபிளாச வலைப்பின்னல்.
சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல் | மென்மையான எண்டோபிளாச வலைப்பின்னல். |
1. சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல் என்பது ரைபோசோம்கள் இணைந்து காணப்படுகின்றது | சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல் என்பது ரைபோசோம்கள் அற்று காணப்படுகின்றது |
2. புரதச் சேர்க்கைக்கு உதவுகிறது | கொழுப்புகள், ஸ்டீராய்டுகள் ஆகியவற்றை தயாரிப்பிலும் கடத்தலிலும் பங்கு கொள்வது இதன் பிரதான பணியாகும் |
II) செல் சுவர் மற்றும் செல் சவ்வு.
செல் சுவர் | செல் சவ்வு. |
1. தாவர செல்லில் காணப்படுகிறது | விலங்கு செல்லில் காணப்படுகிறது |
2. திடமான வடிவத்தை கொண்டது | மென்மையானது |
3. பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கான சட்டமாக செயல்படுகிறது | செல்சவ்வு அரிதிற் கடத்தியாகும். செல் சவ்வுகள் அரிதி கடத்தியாகும் அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்களை மட்டுமே செல்லிற்குள்ளேயும் வெளியேயும் செல்ல அனுமதிக்கின்றன. |
III) பசுங்கணிகம், மைட்டோகாண்ட்ரியா.
பசுங்கணிகம் | மைட்டோகாண்ட்ரியா |
1. தாவரங்களின் உணவு தயாரிப்பாளர்கள் | செல்லின் ஆற்றல் மையம் |
2. தாவர செல்களில் மட்டுமே காணப்படும் | தாவர மற்றும் விலங்கு செல்களில் மட்டுமே காணப்படும் |
3. ஒளிச்சேர்க்கை நிகழ்வு நடைபெறுகிறது | காற்றுச் சுவாசம் நடைபெறுகிறது |
3. செல்லிருந்து உயிரினம் வரையிலான வரிசையை சரியாக எழுது?
செல் → திசு → உறுப்பு → உறுப்பு மண்டலம் → உயிரினம்
4. உட்கரு பற்றி சிறு குறிப்பு எழுதுக.
- உட்கரு செல்லின் மூளையாகச் செயல்படுகிறது
- தாவர மற்றும் விலங்கு செல்களில், சைட்டோபிளாசத்திற்கு உள்ளே உட்கரு உள்ளது.
- உட்கரு உறை உட்கருவைச் சூழ்ந்துள்ளது.
- ஒன்று அல்லது இரண்டு நியூக்ளியோலஸ் மற்றும் குரோமேட்டின் உடல் ஆகியவை உட்கருவின் உள்ளே உள்ளன.
- செல்பிரிதலின் போது, குரோமேட்டின் உடலானது குரோமோசோமாக அமைக்கப்படுகிறது.
- உட்கருவின் உள்ளே உள்ள திரவம் உட்கரு திரவம் என அழைக்கப்படுகிறது
பணிகள்
- உட்கரு. செல்லில் நடைபெறும் அனைத்து உயிர் செயல்களையும் வேதிவினைகளையும் கட்டுப்படுத்துகின்றன
- ஒரு தலைமுறையிலிருந்து, அடுத்த தலைமுறைக்கு மரபுவழி பண்புகளைக் கடத்துதல்
5. பின்வரும் அட்டவணையில் செல்கள், திசுக்கள், உறுப்புக்கள் என வகைப்படுத்தவும்,
நரம்பு செல், நுரையீரல்.சைலம், மூளை, கொழுப்புத் திசு, இலை, சிவப்பனு, வெள்ளையனு, செல்கள் கை, தசை, இதயம், முட்டை, செதில், புளோயம், குருத்தெலும்பு
செல் | திசு | உறுப்பு |
சிவப்பனு | சைலம் | நுரையீரல் |
கொழுப்புத் திசு | மூளை | |
வெள்ளையனு | தசை | இலை |
முட்டை | செதில் | கை |
நரம்பு செல் | புளோயம் | இதயம் |
குருத்தெலும்பு |
IX. நெடு வினா
1. ஏதேனும் மூன்று நுண்உறுப்புகளைப் பற்றி விவரிக்கவும்
மைட்டோகாண்ட்ரியா
- இது “செல் ஆற்றல் மையம்” என்று அழைக்கப்படுகிறது
- கோள அல்லது குச்சி வடிவிலான, இரட்டை சவ்விலான நுண்ணுறுப்பாகும்
- காற்றுச்சுவாச வினைகளில் ஈடுபட்டு, ஆற்றல் வெளியீடு செய்யப்படுகின்றன.
- மைட்டோகாண்டிரியாவால் உற்பத்தி செய்யப்படும் ஆற்றல், அனைத்து வளர்சிதை மாற்றங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது
பசுங்கணிகம்
- பசுங்கணிகம் தாவரங்களின் உணவு தயாரிப்பளார்கள் என அழைக்கப்படுகிறது
- சூரியனின் ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்டார்ச் தயாரிக்கும் நுண் உறுப்பு பசுங்கணிகம் ஆகும். இதில் உள்ள நிறமி பச்சையமாகும்
- பச்சையம் சூரிய ஒளி ஆற்றைலைப் பெற்று வேதி ஆற்றலாக மாற்றி உணவு தயாரிக்கிறது
- அதை தாவரமும், விலங்குகளும் பயன்படுத்துகின்றன
லைசோசோம்
- லைசோசோம் நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்கக்கூடிய மிகவும் சிறிய அமைப்பாகும்
- இவை செல்லின் முதன்மையான செரிமான பகுதி ஆகும்.
- இவை செல்லிலேயே சிதைவடைவதால் இவற்றை “தற்கொலைப்பை” என்று அழைக்கிறோம்.
2. தாவர செல் மற்றும் விலங்கு செல்களை ஒப்பிட்டு கீழே உள்ளவற்றை நிறைவு செய்யுங்கள்
இரண்டிற்கும் பொதுவானவை
- உட்கரு
- ரிபோசோம்
- சைட்டோபிளாசம்
- கோல்கி உடலம்
- எண்டோபிளாச வலைப்பின்னல்
- மைட்டோகாண்ரியா
தாவர செல் | விலங்கு செல் |
1. விலங்கு செல்லினைச் சுற்றி எல்லையாக இருப்பது பிளாஸ்மா சவ்வு. இது செல் சவ்வு எனவும் அழைக்கப்படுகிறது | செல் சவ்விற்கு வெளியே சுற்றி கூடுதல் அடுக்குகளைக் கொண்டுள்ளது |
2. சென்ட்ரியோல்கள் அல்லது சென்ட்ரோசோம்கள் விலங்க செல்லில் மட்டுமே காணப்படுகிறது. மற்றும் செல் பகுப்பில் ஈடுபடுகிறது | பசுங்கணிகம் தாவர செல்லில் மட்டுமே காணப்படுகிறது. மற்றும் ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகிறது. |
3. சிறிய குமிழ்கள் காணப்படுகின்றன | பெரிய குமிழ்கள் காணப்படுகின்றன |
சில பயனுள்ள பக்கங்கள்