பாடம்.1 ஒளியியல்
பாடம்.1 ஒளியியல்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. ஒளியானது எப்பொழுதும் ____________ செல்லும். இந்தப் பண்பு ____________ என அழைக்கப்படுகிறது.
- வளைகோட்டில், நிழல்கள்
- நேர்கோட்டில், நிழல்கள்
- நேர்கோட்டில், எதிரொளிப்பு
- வளைந்து பின் நேராக, நிழல்கள்
விடை : நேர்கோட்டில், நிழல்கள்
2. ஆடியில் படும் ஒளியானது ____________
- ஊடுருவிச் செல்கிறது.
- எதிரொளிப்பு அடைகிறது
- உட்கவரப்படுகிறது
- விலகலடைகிறது.
விடை : எதிரொளிப்பு அடைகிறது
3. ____________ பரப்பு ஒளியை எதிரொளிக்கிறது
- நீர்
- குறுந்தகடு
- கண்ணாடி
- கல்
விடை : கண்ணாடி
4. ஒளி என்பது ஒரு வகை ____________
- பொருள்
- ஆற்றல்
- ஊடகம்
- துகள்
விடை : ஆற்றல்
5. நீங்கள், உங்கள் பிம்பத்தைப் பளப்பளப்பான பரப்பில் பார்க்க இயலும், ஆனால், மர மேஜையின் பரப்பில் பார்க்க இயலாது, ஏனெனில் ____________
- ஒழுங்கான எதிரொளிப்பு, மர மேஜையில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு பளப்பளப்பான பரப்பில் நடைபெறுகிறது.
- ஒழுங்கான எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு மர மேஜையில் நடைபெறுகிறது
- இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கான எதிரொளிப்பு நடைபெறுகிறது.
- இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கற்ற எதிரொளிப்பு நடைபெறுகிறது.
விடை : ஒழுங்கான எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு மர மேஜையில் நடைபெறுகிறது
6. பின்வருவனவற்றில் எது பகுதி ஒளி ஊடுருவும் பொருள்?
- கண்ணாடி
- மரம்
- நீர்
- மேகம்
விடை : மேகம்
7. ஒளியானது ____________ , எதிரொளிப்பு நடைபெறுகிறது.
- எதிரொளிக்கும் பரப்பை அடையும் போது
- எதிரொளிக்கும் பரப்பை அணுகும் போது
- எதிரொளிக்கும் பரப்பின் வழியே செல்லும் போது
- மேற்கூறிய எதுவும் இல்லை.
விடை : எதிரொளிக்கும் பரப்பை அடையும் போது
8. கீழ்க்காணும் எப்பொருள், ஒளியை நன்கு எதிரொளிக்கும்?
- பிளாஸ்டிக் தட்டு
- சமதள ஆடி
- சுவர்
- காகிதம்
விடை : சமதள ஆடி
9. சிவராஜன் ஒரு மீட்டர் அளவுகோலை, காலை 7 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் நேர்க்குத்தாக நிற்க வைக்கிறான். நண்பகலில் தோன்றும் அளவுகோலின் நிழலானது ____________
- தோன்றாது
- காலையில் தோன்றிய நிழலைவிட நீளமானது மற்றும் நிழல், சூரியனின் எதிர்த்திசையில் தோன்றும்
- காலையில் தோன்றிய நிழலைவிடத் குறைவான நீளம் கொண்டது மற்றும் நிழல், சூரியனின் அதே திசையில் தோன்றும்
- காலையில் தோன்றிய நிழலைவிடத் குறைவான நீளம் கொண்டது
விடை : காலையில் தோன்றிய நிழலைவிடத் குறைவான நீளம் கொண்டது
10. ஊசித்துளைக்காமிராவில் தோன்றும் பிம்பம் தலைகீழானது, ஏனெனில் ____________
- ஒளியானது நேர்க்கோட்டில் செல்லும்
- ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்லும்போது, தலைகீழாகச் செல்கிறது.
- ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்கிறது.
- ஒளிக்கதிர்கள் எதிரொளிக்கப்படுகின்றன.
விடை : ஒளியானது நேர்க்கோட்டில் செல்லும்
11. பின்வரும் எந்தக்கூற்று, நிழல்கள் உருவாக்கத்தை விளக்குகிறது?
அ. ஒளி நேர்கோட்டில் செல்கிறது
ஆ. ஒளி ஊடுருவாப் பொருள் ஒளியைத் தன் வழியே அனுமதிப்பதில்லை
இ. எதிரொளிப்பு, கண்ணாடி போன்ற பரப்புகளில் நடைபெறுகிறது.
ஈ. இடவலமாற்றம் அடைகிறது
- அ மற்றும் ஆ
- அ மற்றும் ஈ
- அ மற்றும் இ
- அ மட்டும்
விடை : அ மற்றும் ஆ
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ஒரு சமதள ஆடியானது உருவாக்கும் பிம்பம் ____________ ஆகும்
விடை : நேரான, மாயபிம்பம்
2. ____________ எதிரொளிப்பு ஆனது பொருள்களைக் காண உதவுகிறது
விடை : ஒழுங்கான
3. ஒளிக்கதிர்கள் பளபளப்பான பரப்பின் மீது விழும்போது, அவை ____________ அடைகின்றன.
விடை : ஒழுங்கான எதிரொளிப்பு
4. சூரிய ஒளியானது, ____________ வண்ணங்களின் கலவை ஆகும்.
விடை :
5. ஒரு வெள்ளொளி ஆனது, ஏழு வண்ணங்களாகப் பிரிகையடையும் நிகழ்வு ____________ எனப்படும்
விடை : நிறப்பிரிகை
6. சந்திரன், சூரியனிடமிருந்து ஒளிக்கதிர்களை ____________ செய்கிறது
விடை : பெற்று பிரபதிலிக்க
7. ____________ பயன்படுத்தி, சூரிய ஒளியில் அடங்கியுள்ள வண்ணங்களைப் பிரிக்கலாம்
விடை : முப்பட்டகத்தினை
8. சொரசொரப்பான பரப்பின் மேல் ____________ எதிரொளிப்பு நடைபெறுகிறது.
விடை : ஒழுங்கற்ற
III. கீழ்க்காணும் கூற்றுகள் சரியா, தவறா என ஆராய்க. கூற்று தவறு எனில், சரியானகூற்றை எழுதுக
1. ஆடியின் முன் நிற்கும் போது, உன் வலக் கையின் பிம்பமும், இடக் கையின் பிம்பமும் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கின்றன.
விடை : தவறு
சரியான விடை : ஆடியின் முன் நிற்கும் போது, உன் வலக் கையின் பிம்பமும், இடக் கையின் பிம்பமும் இடவல மாற்றமாகத் தோற்றமளிக்கின்றன.
2. சூரிய ஒளியானது, நீர்த்துளிகளின் மூலம் நிறப்பிரிகை அடைந்து வானவில் தோன்றுகிறது.
விடை : சரி
3. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் அடைகிறது. எனவே பெரிஸ்கோப்பின் மூலம் தோன்றும் பிம்பமும் இடவலமாற்றம் அடைகிறது.
விடை : சரி
4. சூரிய ஒளியைக்கோள்கள் எதிரொளிப்பதன் காரணமாக அதனைக் காண முடிகிறது.
விடை : சரி
5. புத்தகத்தின் மேற்பரப்பு, ஒளியை எதிரொளிப்பதால் புத்தகத்தை நாம் காண முடிகிறது.
விடை : சரி
6. ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பம், நேர்மாறு பிம்பம் ஆகும்.
விடை : தவறு
சரியான விடை : ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பம், தலைகீழ் மெய் பிம்பம் ஆகும்.
7. ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பத்தின் அளவும், பொருளின் அளவும் சமம்.
விடை : தவறு
சரியான விடை : ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பத்தின் அளவும், பொருளின் அளவும் சமமல்ல.
8. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் தலைகீழ் மாற்றம் அடைகிறது.
விடை : தவறு
சரியான விடை : சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவல மாற்றம் சமதள ஆடியில் தோன்றும் பிம்பம்.
9. சமதள ஆடி, ஒளி ஊடுருவாத ஒரு பொருள் ஆகும்.
விடை : சரி
10. ஒரு பொருளின் நிழல், பொருளில் இருக்கும் அதே பக்கத்தில் அமையும்.
விடை : தவறு
சரியான விடை : ஒரு பொருளின் நிழல், பொருளில் எதிர் பக்கத்தில் அமையும்.
11. நம்மைச்சுற்றி இருக்கும் பொருள்களை, ஒளியின் ஒழுங்கான எதிரொளிப்பின் மூலமே காண்கிறோம்.
விடை : சரி
12. ஒரு வெள்ளொளி ஆனது, முப்பட்டகம் வழியே செல்லும்போது, அது ஏழு வண்ணங்களாகப் பிரிகை அடைகிறது.
விடை : சரி
IV. பொருத்துக
1. நேர்கோட்டுப் பண்பு | முதன்மை ஒளிமூலம் |
2. சமதள ஆடி | ஒளிராப் பொருள் |
3. மின்மினிப்பூச்சி | பெரிஸ்கோப் |
4. நிலா | ஊசித்துளைக் காமிரா |
5. அகன்ற ஒளி மூலம் | நிறப்பட்டை |
6. ஒழுங்கான எதிரொளிப்பு | ஒளிரும் பொருள் |
7. சூரியன் | புறநிழல் |
8. ஏழு வண்ணங்கள் | பளப்பளப்பான பரப்பு |
விடை : 1 – இ, 2 – ஊ, 3 – ஆ, 4 – எ, 5 – ஏ, 6 – அ, 7 – உ, 8 – ஈ |
V. சுருக்கமாக விடையளி
1. எதிரொளிப்பு விதிகளை, படத்துடன் கூறுக.
- படுகோணமும் (i), எதிரொளிப்புக் கோணமும் (r) சமம்
i = r
- படுகதிர், குத்துக்கோடு மற்றும் எதிரொளிப்புக்கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும
2. படத்தில், ஒரு பென்சில், ஓர் ஆடியில் மேலே இருக்கும் நிலையைக் காட்டுகிறது? எனில்
அ. ஆடியில் தோன்றும் பென்சிலின் பிம்பத்தை வரைக.
ஆ. பென்சிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் எவ்வாறு ஆடியில் எதிரொளிக்கப்பட்டு, கண்ணிற்கு அதன் பிம்பம் கிடைக்கிறது படம் வரைந்து காட்டுக.
- நீட்டிக்கப்பட்ட எதிரொளிப்பு கதிர்களின் குறுக்கீட்டில் பிம்பம் கிடைக்கிறது
- ஆடியின் பிம்பம் கிடைக்கிறது
3. ஒருவர், தன் முன்னால் ஆடியில் ஒரு மரத்தின் பிம்பத்தை 3.5 மீட்டர் தொலைவில் இருந்து பார்க்கிறார். மரம், அவர் கண்களிலிருந்து 0.5 மீட்டர் தொலைவில் பின்னால் இருக்கிறது, எனில் மரத்திற்கும் அவர் கண்ணிற்கும் இடையே உள்ள தொலைவு என்ன? பொருளைக் காண நமக்கு அவசியமான காரணிகள் யாவை?
மனிதருக்கும், மரத்தின் பிம்பத்திற்கு இடையே உள்ள தொலைவு (ஆடி) = 3.5 மீ
ஆடிக்கும், மரத்திற்கம் இடையே உள்ள தொலைவு = 3.5 + .05 மீ = 4 மீ
மரத்தின் பிம்பத்திற்கும் மற்றும் மனிதரின் கண்களுக்கும் இடையே உள்ள தொலைவு = மனிதருக்கும், மரத்தின் பிம்பத்திற்கு இடையே உள்ள தொலைவு + ஆடிக்கும், மரத்திற்கம் இடையே உள்ள தொலைவு
மரத்தின் பிம்பத்திற்கும் மற்றும் மனிதரின் கண்களுக்கும் இடையே உள்ள தொலைவு = 3.5 + 4 மீ = 7.5 மீ
பொருளை காண அவசியமான காரணிகள்
- ஒளி
- ஆடி
- பொருள்
4. ஒளிரும் பொருள்கள் என்றால் என்ன?
தாமாகவே ஒளிைய உமிழக்கூடிய பொருள்கள் ஒளிரும் பொருள்கள் எனப்படும்
எ.கா. சூரியன்
5. நிலா ஓர் ஒளிரும் பொருளா? காரணம் கூறு.
- நிலா ஒளிரும் பொருள் அல்ல
காரணம்
- அது சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்ற பின் அதனைப் பூமிக்குப் பிரதிபலிக்கிறது
6. ஒளியை உட்கவரும் பண்பினைப் பொருத்து , பொருள்களின் மூன்று வகைகள் யாவை?
ஒளி ஊடுருவும் பொருள்கள்:
ஒளியை முழுவதும் தன் வழியே அனுமதிக்கும் பொருள்கள் ஒளி ஊடுருவும் பொருள்கள் என அழைக்கப்படுகின்றன
பகுதி ஊடுருவும் பொருள்கள்:
ஒளியைப் பகுதியாத் தன் வழியே செல்ல அனுமதிக்கும் பொருள்கள், பகுதி ஊடுருவும் பொருள்கள் எனப்படும். சொரசொரப்பான சன்னல் கண்ணாடியின் பின்புறம் நிற்கும் ஒருவரின் பிம்பத்தைத் தெளிவாக நம்மால் காண இயலாது. ஏனெனில், சொரசொரப்பான கண்ணாடி அவரிடமிருந்து வரும் ஒளியின் ஒரு பகுதியை மட்டுமே அனுமதிக்கிறது.
ஒளி ஊடுருவாப் பொருள்கள்:
ஒளியைத் தன் வழியே முழுவதுமாக அனுமதிக்காத பொருள்கள் ஒளி ஊடுருவாப் பொருள்கள் எனப்படும். கட்டடச் சுவர், கெட்டி அட்டை, கல் போன்றவை ஒளி ஊடுருவாப் பொருள்களுக்கு உதாரணங்கள் ஆகும்.
7. நிழல்களின் பகுதிகள் யாவை?
- ஒரு புள்ளி மூலத்திலிருந்து வரும் ஒளியின் பாதையில் ஓர் ஒளிப்புகாப் பொருளை வைக்கும் போது, ஒரே சீரான கருமையான நிழல் மட்டும் திரையில் தோன்றும். இதுவே கருநிழல் எனப்படும்.
- ஒரு அகன்ற ஒளிமூலத்திலிருந்து, வரும் ஒளியின்பாதையில் ஓர் ஒளிபுகாப்பொருளை வைக்கும்போது, சிறிய கருநிழல் தோன்றும். கருநிழலைச் சுற்றிலும் ஓரளவு ஒளியூட்டப்பட்ட நிழல் பகுதி
- தோன்றுகிறது. இதுவே புறநிழல் எனப்படும். புறநிழல் பகுதியானது கருநிழலுக்கு அருகில் கருமையாகவும், வெளிப்பகுதியை நோக்கிச் செல்ல செல்ல பொலிவுமிக்கதாகவும் அமையும்.
8. நிழல்களின் பண்புகள் யாவை?
- எல்லாப் பொருள்களும் நிழல்களை உருவாக்குவதில்லை. ஒளி ஊடுருவாப் பொருள்கள் மட்டுமே நிழல்களை உருவாக்குகின்றன.
- நிழல்கள் எப்பொழுதும் ஒளி மூலம் இருக்கும் திசைக்கு எதிர்த் திசையில் உருவாகும்.
- ஒரு பொருளின் நிழலைக் கொண்டு அப்பொருளின் தன்மையைக் கண்டறிய இயலாது.
- பொருளின் நிறம் எதுவாக இருப்பினும் அப்பொருளின் நிழல் எப்பொழுதும் கருமையாகவே தோன்றும்
- ஒளி மூலம், ஒளி ஊடுருவாப்பொருள் மற்றும் நிழல் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமையும்.
- ஒரு பொருளின் நிழலின் அளவானது, ஒளிமூலம் மற்றும் பொருளுக்கு இடையே உள்ள தொலைவு; பொருள் மற்றும் திரைக்கு இடையே உள்ள தொலைவு ஆகியவற்றைச் சார்ந்துள்ளது.
9. சமதள ஆடி என்றால் என்ன?
- சமதள ஆடி என்பது, எதிரொளிப்பின் மூலம் பிம்பத்தை உருவாக்கம் வழவழப்பான ஒரு சமதள பரப்பு ஆகும்
- ஒரு சமதள ஆடியானது அதன் முன் தோன்றும் பிம்பத்தை உருவாக்கும்
10. முப்பட்டகம் என்றால் என்ன?
முப்பட்டகம் என்பது இரண்டு சமதளப்பரப்புகளுக்கு இடையே குறுங்கோணம் கொண்ட முழுவதும் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்ட பொருள் ஆகும்.
11. கண்ணுறு ஒளி என்றால் என்ன?
கண்ணுறு ஒளி என்பது பல்வேறு நிறங்களைக் க ொண்டது. ஒவ்வொரு நிறமும், குறிப்பிட்ட ஓர் அலை நீள மதிப்பைக்கொண்டது. கண்ணுறு ஒளியின் , அலைநீள நெடுக்கம் ஆனது 400 நேனோ மீட்டர் முதல் 700 நேனோ மீட்டர் வரை மதிப்பு உடையது. (1 நேனோ மீட்டர்= 10-9 மீட்டர்).
12. கீழ்க்காணும் பொருள்களை அட்டவணையில் சரியான இடத்தில் நிரப்புக.
(நட்சத்திரம், செங்கல் சுவர், தாவரங்கள், கண்ணாடி, கோள்கள், மின் பல்பு, எரியும் மெழுகுவத்தி)
ஒளிமூலங்கள்
- நட்சத்திரம்
- மின் பல்பு
- எரியும் மெழுகுவத்தி
ஒளியை எதிரொளிப்பவை
- செங்கல் சுவர்
- தாவரங்கள்
- கண்ணாடி
- கோள்கள்,
13. 1 மீட்டர் 45 செ.மீ. உயரமுடைய ஒரு சிறுவன், நீளமான ஓர் ஆடியிலிருந்து 2 மீட்டர் தொலைவில் நிற்கிறான், எனில் பின்வருவனவற்றை நிரப்புக.
அ. சிறுவன் மற்றும் அவன் பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு ___________
சிறுவன் மற்றும் அவன் பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு ஆடியிலிருந்து சிறுவன் இருக்கும் தொலைவிற்கு சமமாக உள்ளது
U = V = 2 மீ
சிறுவன் மற்றும் அவன் பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு
U + V = 2 + 2 = 4 மீ
ஆ. ஆடியில் தோன்றும் சிறுவனுடைய பிம்பத்தின் உயரம் ___________
ஆடியில் தோன்றும் சிறுவனுடைய பிம்பத்தின் உயரம் 1 மீ 46 செ.மீ ஏனென்றால் பிம்பமும் சிறுவனும் ஒரே அளவிலானவை
இ. சிறுவன் 1 மீட்டர் தொலைவு ஆடியை நோக்கிச் சென்றால், ஆடிக்கும், பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு ___________
சிறுவன் 1 மீட்டர் தொலைவு ஆடியை நோக்கிச் சென்றால், ஆடிக்கும், பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு = 4 – 1 = 3 மீ
14. அவசர கால ஊர்திகளில், AMBULANCE என்ற வார்த்தை வல, இடமாக மாற்றி எழுதப்பட்டிருப்பதன் காரணம் என்ன?
சமதள ஆடியின் இடவலமாற்றம் என்ற பண்பு இங்குப் பயன்படுத்தப்படுகிறது. ஊர்தியில் பின்னோக்கி எழுதப்பட்ட வார்த்தையின் எழுத்துகள் முன் செல்லும் வாகனத்தின் கண்ணாடியில் இடவலமாற்றத்தின் காரணமாக “AMBULANCE” என நேராகத் தெரியும்
15. ஆடியில் தோன்றும் சில பெரிய ஆங்கில எழுத்துகளின் , பிம்பங்கள் மாறாமல் இருக்கின்றன. இதர பெரிய ஆங்கில எழுத்துகளின் பிம்பங்கள் மாற்றம் அடைகின்றன. இதற்குக் காரணம் என்ன? விளக்குக.
- ஆடியில் தோன்றும் பிம்பம் இடவல மாற்றம் பெறும்
- ஆடியில் தோன்றும் பெரிய ஆங்கில எழுத்துகளின் பிம்பங்கள் மாறாமல் இருக்கின்றன. ஏனெனில் அவற்றின் இடதுபுறமும், வலதுபுறமும் ஒரே மாதியாக உள்ளன
எ.கா.
A – என்பதன் பிம்பம் ஆடியில் மாதிரியாக உள்ளளது
B – என்பதன் பிம்பம் ஆடியில் மாற்றம் அடைகிறது. ஏனெனில் அதன் வலதுபுறம் வேறுபடுகிறது
16. M1 மற்றும் M2 என்ற இரு ஒன்றுக்கொன்று செங்குத்தான சமதள ஆடிகள் படத்தில் காட்டியுள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. AB என்ற கதிர் M1 என்ற சமதள ஆடியோடு 450 படுகோணத்தை ஏற்படுத்துகிறது,
அ. ___________, ___________ ஆகியவை எதிரொளிப்புக் கதிர்கள் ஆகும்.
விடை : BC, CD
ஆ. ___________, ___________ ஆகியவை படுகதிர்கள் ஆகும்.
விடை : AB, BC
இ. BC என்ற கதிர் ஏற்படுத்தும் படுகோணம் என்ன?
படுகோணம் = 90o – 39o = 51o
ஈ. CD என்ற கதிர் ஏற்படுத்தும் எதிரொளிப்புக் கோணம் என்ன?
படுகோணம் = எதிரொளிப்பு கோணம்
எதிரொளிப்பு கோணம் = 51o
17. ராஜன், கடிகார பிம்பங்களின் படங்களைக் கொண்டு விளையாடுகிறான். அவன் தன் அறையில் உள்ள கடிகாரத்தைப் பார்க்கிறான். அது 1:40 எனக்காட்டுகிறது. பின்வரும் படங்களில், ராஜன் கடிகார மற்றும் அதன் கண்ணாடிப் பிம்பத்தில் கடிகார முட்களை எவ்வாறு வரைந்திருப்பான்?
18. ஒளியின் எதிரொளிப்பு என்றால் என்ன?
ஒளிக்திர்கள் கண்ணாடியின் பரப்பின் மேல்பட்டு மீண்டு வருகிறது. இதுவே ஒளி எதிரொளிப்பு எனப்படுகிறது
19. ஓர் ஒளிக்கதிர் 500 கோணத்தில் ஒரு சமதள ஆடியில் விழுகிறது, எனில் எதிரொளிப்புக்கோணம் என்ன?
படுகோணம் = எதிரொளிப்புக்கோணம் = 50o
ஏனெனில் i = r
எனவே படுகோணமும், எதிரொளிப்புக் கோணமும் சமம்
20. சமதள ஆடியில் இடவல மாற்றம் பற்றி நீவிர் அறிவது என்ன?
சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவல மாற்றம் பெறும்.
அதாவது, இடது பக்கத்தில் பொருளின் பிம்பம் வலது பக்கத்தில் உள்ள பொருளின் பிம்பமாக சமதள ஆடியில் எதிரொலிக்கும்.
21. வெள்ளொளியின் நிறத்தொகுப்பை எவ்வாறு பெறலாம்?
ஒரு வெள்ளொளியானது முப்பட்டத்தின் ஒரு சமதளப்பரப்பின் வழியே செல்லும்போது, மற்றொரு சமதளப்பரப்பின் வழியே ஏழு வண்ணங்களாகப் பிரிகை அடையும். இந்நிகழ்வு நிறப்பிரிகை என அழைக்கப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் நிறங்கள் நிறத்தொகுப்பு எனப்படும்.
22. நியூட்டன் வட்டினை வேகமாகச் சுழற்றும் போது, ஏன் அது வெண்மை நிறத்துடன் தோற்றமளிக்கிறது?
நியூட்டன், வட்டினை அதன் மையம் வழியேச் செல்லும் அச்சினைப் பொறுத்த வேகமாகச் சுழற்றும் போது ரெட்டினா வெண்மை நிறத்தை உணர்நத்துகிறது
காரணம்
- குறிப்பிட்ட ஒர் அலைநீளம் கொண்ட நிறம், நம் கண்ணின் விதித்திரையை அடையும் போது நம் மூளை அந்திறத்தை உணர்ந்து கொள்கிறது.
- கண்ணுறு ஒளியின் அனைந்து நிறங்களும், நம் கண்ணின் விழித்திரையை அடையும்போது மூளையானது வெண்மையை உணர்கிறது.
நியூட்டன் வட்டு மூலம், வெண்மை நிறம், ஏழு வண்ணங்களை (VIBGYOR) உள்ளடக்கியது என அறிய முடியும்.
23. நிழல் என்றால் என்ன? நிழலை உருவாக்க தேவையான பொருள்கள் யாவை?
ஒரு புள்ளி மூலத்திலிருந்து வரும் ஒளியின் பாதையில் ஓர் ஒளிப்புகாப்பொருளை வைக்கும் போது, ஒரே சீரான கருமையான நிழல் மட்டும் திரையில் தோன்றும். இதுவே கருநிழல் எனப்படும்.
நிழலை உருவாக்க தேவையான பொருட்கள்
- ஒளிபுகா பொருள்கள்
- ஒளிமூலம்
VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவாக விடையளி
1. ஒளிரும் மற்றும் ஒளிரா மூலங்கள் இவற்றிற்கிடையான வேறுபாட்டைக் கூறுக. ஒவ்வொன்றிற்கும் ஓர் எடுத்துக்காட்டு தருக.
ஒளிரும் மூலங்கள் | ஒளிரா மூலங்கள் |
தானே ஒளியை உமிழும் பொருள்கள் ஒளிரும் பொருள்கள் என அழைக்கப்படுகின்றன | தானே ஒளியை உமிழா பொருள்கள் ஒளிரா பொருள்கள் என அழைக்கப்படுகின்றன |
எ.கா. சூரியன், எரியும் மெழுகுவத்தி | எ.கா. புத்தகம், பென்சில் |
2. அன்றாட வாழ்வில் நீ காணும் ஒளியின் நேர்க்கோட்டு பண்பு நிகழ்வுகள் இரண்டினை கூறுக.
ஒளியானது நேர்க்கோட்டில் பயணிக்கிறது; அது தன்னுடையப் பாதையை தன்னிச்சையாக மாற்ற இயலாது. இதுவே ஒளியின் நேர்க்கோட்டுப் பண்பு எனப்படும். இது ஒளியின் முக்கியமான பண்புகளுள் ஒன்றாகும்.
எ.கா
- மரங்களின் கிளைகளின் வழியே சூரிய ஒளி செல்லுதல்
- சிமெண்ட் கிரிலின், சிறு துளைகளின் வழியே சூரிய ஒளி செல்லுதல்
- லேசர் விளக்கின் ஒளி செல்லுதல
3. எதிரொளிப்பு மற்றும் நிழல் – வேறுபடுத்துக
எதிரொளிப்பு | நிழல் |
1. எதிரொளிப்பு விளைவாக ஒளிக்கதிர்கள் கண்ணாடி பரப்பின்மேல்பட்டு மீண்டு வருகிறது. | ஒளி ஊடுருவாப் பொருள் ஒளியை தன் வழியே செல்ல அனுமமதிப்பதில்லை |
2. எதிரொளிப்புக் கதிர்களின் மூலமாக பிம்பம் உருவாகின்றது | ஒளிபுகாப் பொருள்கள் தன் மீது விழும் ஒளியை மேலும் பரவாமல் தடுத்து விடுவதால் நிழல்கள் உருவாகின்றன |
3. எதிரொளிப்பின் விளைவாக தோன்றும் பிம்பமும், பொருளும் ஒரே அளவில் இருக்கும் | ஒளிமூலத்தின் முன்னே வைக்கப்பட்ட வெளிப்பு வடிவத்தை மட்டுமே நிழல்கள் காட்டும் |
4. சமதள ஆடியில் தோன்றும் பிம்பத்தின் பண்புகளைக் கூறுக.
- சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் நேரானது
- சமதள ஆடியில் தோன்றும் பிம்பம், மெய் பிம்பம் ஆகும்
- சமதள ஆடியில் தோன்றும் பிம்பமும், பொருளும் ஒரே அளவில் இருக்கும்
- சமதள ஆடியிலிருந்து, பொருள் இருக்கும் தொலைவும், பிம்பம் தோன்றும் தொலைவும் சமம்
- சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் பெறும்.
5. பின்வருவனவற்றை வரையறுக்க
படுகதிர்:
எதிரொளிக்கும் பரப்பில் படும் ஒளிக்கதிர் படுகதிர் எனப்படும். படத்தில் PO என்பது படுகதிர் ஆகும்.
எதிரொளிப்புக் கதிர்:
எதிரொளிக்கும் பரப்பில் படுகதிர் விழும் புள்ளியிலிருந்து மீண்டு வரும் கதிர் எதிரொளிப்புக்கதிர் எனப்படும். படத்தில் OQ என்பது எதிரொளிப்புக்கதிர் ஆகும்.
குத்துக்கோடு:
படுபுள்ளியின் வழியாக எதிரொளிக்கும் பரப்பிற்குச் செங்குத்தாக வரையப்படும் கோடு குத்துக்கோடு எனப்படும். படத்தில் ON என்பது குத்துக்கோடு ஆகும்.
படுகோணம்:
படுகதிர் ‘PO’ -ற்கும் குத்துக்கோடு ON – ற்கும் இடையே உள்ள கோணம் படுகோணம் ஆகும். படுகோணம் ‘i’ எனக் குறிப்பிடப்படுகிறது.
6. சமதள ஆடியில் தோன்றும் பிம்பங்களை, ஊசித்துளைக் காமிரா காமிரா உருவாக்கும் பிம்பங்களோடு ஒப்பிடுக
ஊசித்துளை காமிராவில் தோன்றும் பிம்பம்
- மெய் பிம்பம்
- பிம்பத்தின் அளவு, பொருளின் அளவுடன் ஒப்பிடும் போது மாறுபடலாம்
- தலைகீழ்ப் பிம்பம்
சமதள ஆடியில் தோன்றும் பிம்பம்
- மாய பிம்பம்.
- பிம்பம் மற்றும் பொருளின் அளவு சமம்
- நேரான பிம்பம்
சில பயனுள்ள பக்கங்கள்