7th Std Science Term 3 Solution | Lesson.3 பலபடி வேதியியல்

பாடம்.3 பலபடி வேதியியல்

பலபடி வேதியியல் பாட வினா மற்றும் விடைகள்

பாடம்.3 பலபடி வேதியியல்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் இழை _________ ஆகும்.

  1. நைலான்
  2. பாலியஸ்டர்
  3. ரேயான்
  4. பஞ்சு

விடை : ரேயான்

2. வலுவான இழை _________ ஆகும்

  1. ரேயான்
  2. நைலான்
  3. அக்ரிலிக்
  4. பாலியஸ்டர்

விடை : நைலான்

3. ஓர் இயற்கை இழையினைச் சுடரில் காட்டினால் அவ்விழை _________

  1. உருகும்
  2. எரிதல்
  3. ஒன்றும் ஏற்படுவதில்லை
  4. வெடித்தல்

விடை : எரிதல்

4. கம்பளியைப் போன்ற பண்புகளைக் கொண்ட செயற்கை இழை _________ ஆகும்.

  1. நைலான்
  2. பாலியெஸ்டர்
  3. அக்ரிலிக்
  4. PVC

விடை : PVC

5. நெகிழியின் சிறந்த பயன்பாடென்பது _________ என்ற பயன்பாட்டில் அறியலாம்.

  1. இரத்தப்பைகள்
  2. நெகிழிக் கருவிகள்
  3. நெகிழி உறிஞ்சுக் குழாய்கள்
  4. நெகிழி கேரி பைகள்

விடை : நெகிழி உறிஞ்சுக் குழாய்கள்

6. _________ என்பது மட்கும் தன்மையற்ற ஒரு பொருள் 

  1. காகிதம்
  2. நெகிழி புட்டி
  3. பருத்தி துணி
  4. கம்பளி

விடை : நெகிழி புட்டி

7. PET என்பது _________ இன் சுருக்கெழுத்தாகும்.

  1. பாலியெஸ்டர்
  2. பாலியெஸ்டர் மற்றும் டெரிலின்
  3. பாலிஎத்திலின்டெரிப்தாலேட்
  4. பாலித்தின்டெரிலின்

விடை : பாலிஎத்திலின்டெரிப்தாலேட்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. _________ என்பது பாலியெஸ்டர் துணிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

விடை : பாலிகாட்

2. பல்வகை நெகிழிகளை இனம்காண _________ பயன்படுகின்றன.

விடை : ரெசின் குறீயீடு

3. சிறிய அலகுகளான பல ஒற்றைப்படிகளின் தொடர்ச்சியான சங்கிலித் தொடர் அமைப்பின் பெயர் _________ ஆகும்.

விடை : பலபடி

4. முழுமையான இயற்கை இழையின் எடுத்துக்காட்டு _________ ஆகும்.

விடை : பருத்தி

5. கக்கூன்களைக் கொதிக்க வைத்துப் பெறும் இயற்கை இழை _________ என்று பெயர்.

விடை : பட்டு

III. கீழ்க்காணும் கூற்றுகள் சரியா, தவறா என ஆராய்க. கூற்று தவறு எனில், சரியானகூற்றை எழுதுக

1. அதிக அளவிலான நெகிழிகள் சுற்றுச்சூழலை பாதிக்கின்றன.

விடை :சரி

2. மறுத்தல் (தவிர்த்தல்) என்பது நெகிழியைக் கையாளும் சிறந்த முறையாகும்.

விடை : சரி

3. செயற்கை இழைகளான ஆடைகளை அணிந்து சமையறையில் வேலை செய்வது சிறந்ததே.

விடை : தவறு

சரியான விடை : இயற்கை இழைகளான ஆடைகளை அணிந்து சமையறையில் வேலை செய்வது சிறந்ததே.

4. வீரியம் குறைந்த நெகிழிகள் சிதைந்து மைக்ரோநெகிழிகள் என்ற சிறிய துகள்களாகும்.

விடை : சரி

5. பருத்தி என்பது ஓர் இயற்கையான பாலிமர் ஆகும்.

விடை : சரி

IV. பொருத்துக

1. நைலான்வெப்பத்தால் இளகும் நெகிழி
2. PVCவெப்பத்தால் இறுகும் நெகிழி
3. பேக்லைட்இழை
4. டெஃப்லான்மரக்கூழ்
5. ரேயான்ஒட்டாத சமையல்கலன்கள்
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ, 4 – உ, 5 – ஈ

V. சரியான வரிசையில் எழுக

1. நீர், மாவு, வினிகர் மற்றும் கிளிசரினைக் கொண்ட ஒரு சமைக்கும் கலனைக் கலக்கவும்.

2. இப்பொருளை நாம் பயன்படுத்தும் முன் 24 மணி நேரம் குளிரவைக்கவும்.

3. ஒரு குவனை போன்றோ ஒரு கிண்ணம் போன்றோ வடிவமாக்கவும்.

4. அந்தத் திரவம் தெளிவடையும் வரை மிதமான சூட்டில் தொடர்ந்து கலக்கவும்.

5. அந்தத் திரவமானது கொதிக்கத் தொடங்கும் பொழுது அதனை அடுப்பில் இருந்து எடுத்துவிடலாம்.

6. அந்த ஜெல்லினை அலுமனியத் தட்டின் மேல் பரப்பி விடவும்.

விடை :

1. நீர், மாவு, வினிகர் மற்றும் கிளிசரினைக் கொண்ட ஒரு சமைக்கும் கலனைக் கலக்கவும்.

4. அந்தத் திரவம் தெளிவடையும் வரை மிதமான சூட்டில் தொடர்ந்து கலக்கவும்.

5. அந்தத் திரவமானது கொதிக்கத் தொடங்கும் பொழுது அதனை அடுப்பில் இருந்து எடுத்துவிடலாம்.

6. அந்த ஜெல்லினை அலுமினியத் தட்டின் மேல் பரப்பி விடவும்.

2. இப்பொருளை நாம் பயன்படுத்தும் முன் 24 மணி நேரம் குளிரவைக்கவும்.

3. ஒரு குவனை போன்றோ ஒரு கிண்ணம் போன்றோ வடிவமாக்கவும்.

VI. ஒப்புமை

1. பருத்தி : இயற்கை : பாலியெஸ்டர் : ____________

விடை : செயற்கை

2. PLA கரண்டி : மட்கும் தன்மை :: நெகிழி ஸ்பூன் : ____________

விடை : மட்காத தன்மை

3. நைலான் : வெப்பத்தால் உருகும் : பட்டு : ____________ 

விடை : வெப்பத்தால் எரியும்

VII வாக்கியம் மற்றும் காரணம்

1. வாக்கியம் : மண்ணில் புதைக்கப்பட்ட காய்கறித் தோல்கள் இரு வாரங்களில் மறைந்து போகின்றன.

காரணம் : காய்கறித் தோல்கள் மட்கும் தன்மை கொண்டவை.

விடை : வாக்கியம் மற்றும் காரணம் சரி, காரணம் வாக்கியத்தை விளக்குகிறது

2. வாக்கியம் : நைலான் ஆடைகள் சிதைந்து மைக்ரோ இழைகளாக மாற அதிக காலமாகும். ஆனால் பருத்தி ஆடைகள் சிதைவடைய ஆறு மாதகாலம் போதுமானது.

காரணம் : நைலான் பெட்ரோலிய வேதிப்பொருள்களால் தயாரிக்கப்படுவதால் மட்கும் தன்மை பெற்றிருப்பதில்லை. பருத்தித் துணி மட்கும் தன்மை கொண்டது.

விடை : வாக்கியம் மற்றும் காரணம் சரி, காரணம் வாக்கியத்தை விளக்குகிறது

3. வாக்கியம் : நெகிழி பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.

காரணம் : நெகிழிகள் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன.

விடை : வாக்கியம் மற்றும் காரணம் சரி, காரணம் வாக்கியத்தை விளக்குகிறது

VIII குறுக்கெழுத்து

இடமிருந்து வலம்

1. செயற்கை கம்பளியாகப் பயன்படும் இழை.

  • அக்ரிலிக்

2. நீர் பாட்டில்கள் உருவாக்கத் தேவைப்படும் நெகிழி

  • பாலிஎத்திலின்

கீழிருந்து மேல்

3. குறை – செயற்கை இழையான இதற்கு செயற்கைப்பட்டு என்ற பெயரும் உண்டு.

  • ரேயான்

4. சிறிய ஒற்றைப்படிகளின் தொடர்ச்சியான சேர்க்கை உருவாக்கும் நீண்ட சங்கிலிப் பொருள்

  • பலபடி

மேலிருந்து கீழ்

5. கூட்டிலிருந்து பெறப்படும் ஒரு வகையான இயற்கை இழை.

  • பட்டு

6. பாலியெஸ்டர் என வகைப்படுத்தப்படும் ஓர் செயற்கை இழை

  • டெரிகாட்

7. கயிறு தயாரிப்பில் பயன்படும் பலபடி

  • நைலான்

IX. மிகக் குறுகிய விடை தருக

1. பருத்தியை உருவாக்கும் பலபடிகளின் இரசாயனப் பெயர் என்ன?

ஆடைகளில் பயன்படுத்தப்படும் பருத்தியின் முக்கிய அங்கமான செல்லுலோஸ் மூலக்கூறுகளால் ஆனது.

எ.கா. கார்போ ஹைட்ரேட்

2. நெகிழி பொருள்கள் வெவ்வேறு பண்புகளையும் குணங்களையும் எங்ஙனம் பெறுகின்றன?

பலவகையான வேதிப்பொருள்கள் (சேர்த்திகள்) நெகிழியுடன் சேர்க்கப்படுவதால் அப்பொருள் நெகிழ்வுத்தன்மை, வலிமை, மென்மை அல்லது ஒளி ஊடுவும் தன்மை போன்ற பல பண்புகளையும் குணங்களையும் பெறுகின்றன.

3. நெகிழிகளையும், செயற்கை இழைகளையும் எரிப்பது நல்லதல்ல, ஏன்?

மீண்டும் புதுப்பிக்க இயலாத வளங்களைப் பாழ்படுத்துவதாலும், கையாள முடியாத அளவில் நச்சுத் தன்மை கொண்ட வாயுக்களும் சாம்பலும் உருவாவதாலும், நெகிழிகளை எரித்தல் என்பது சிறந்த முறையன்று.

4. நெகிழியினால் செய்த வாளியானது துருப்பிடிப்பதில்லை. ஆனால் இரும்பு வாளி துருப்பிடித்து விடுகிறது. ஏன்?

நெகிழியினால் செய்த வாளியானது துருப்பிடிப்பதில்லை. ஆனால் இரும்பு வாளி துருப்பிடித்து விடுகிறது. ஏனெனில்

  • நெகிழிகள், இயற்கை முறையில் பாக்டீரியாக்களின் செயல்பாட்டால் சிதைக்கப்படுவதில்லை.
  • எனவே, அவை மட்கும் தன்மை கொண்டதல்ல என்று அறியலாம்.

5. நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது எவ்வாறு சிறந்த முறையாகும்?

  • நெகிழியாலான பொருள்களைத் தவிர்ப்பதே மிகச் சிறந்த முறையாகும்.
  • ஒரு முறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களைப் பெரும்பாலும் தவிர்க்கலாம்.
  • எடுத்துக்காட்டாக, நாம் கடைகளுக்குச் செல்லும் பொழுது பருத்தியிலான பை அல்லது சணல் பைகளைக் கொண்டு சென்றால், கடைக்காரர் தரும் நெகிழிப் பைகளை வேண்டா என்று மறுக்கலாம்.

6. வெப்பத்தால் இறுகும் நெகிழிப் பொருள்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  • பேக்லைட்
  • மெலமைன்

7. 5 R – கொள்கை என்பது என்ன?

நெகிழிக் குப்பைகளை அகற்ற முயற்சிக்கும் வழிகளுள் ஒன்று 5R கொள்கை

  • தவிர்த்தல் (Refuse)
  • குறைத்தல் (Reduce)
  • மீண்டும் பயன்படுத்துதல் (Reuse),
  • மறுசுழற்சி செய் (Recycle)
  • மீட்டெடுத்தல் (Recover)

X. சிறுவினா

1. ‘மட்கும் தன்மை வாய்ந்தவை’ என்ற சொல்லின் பொருள் என்ன?

  • காய்கறிகளின் புறத்தோல்கள், பழங்கள் மற்றும் மீதமான உணவுப் பொருள்கள் போன்றவற்றை மண்ணில் இட்டால் அவை மண்ணில் உள்ள பாக்டீரியாவல் சிதைக்கப்பட்டு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இயற்கை உரமாகின்றன
  • இயற்கை முறையில் பாக்டீரியாக்களின் செயல்பட்டால் எந்தப்பொருள் சிதைக்கப்படுகிறதோ அதற்கு மட்கும் தன்மை கொண்ட பொருள் என்று பெயர்

2. கோடைக் காலங்களில் விளையாடும் பொழுது அணிய ஏதுவான ஆடைவகை யாது? ஏன்?

  • கோடைக் காலங்களில், செயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதைவிட இயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதே பொருத்தமானதாக இருக்கும்.
  • ஏனெனில், செயற்கை இழைகள் மிகக் குறைந்த அளவே நீரை உறிஞ்சுவதால், செயற்கை இழைகளாலான உடைகளை அணியும்பொழுது நமக்குப் போதுமான காற்றோட்டம் கிடைக்காததால் நாம் வெப்பமாகவும், சிர்மமாகவும் உணர்கிறோம்.

3. விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலில் நெகிழியின் தாக்கம் என்ன?

  • மீதமுள்ள உணவுப்பொருளை எறியும்பொழுது பெரும்பாலும் அவற்றை நெகிழி பையிலிட்டே எறிகிறோம். உணவுப்பொருள்களின் வாசனையை நுகரும் விலங்குகள், அவற்றை உண்ணும்பொழுது தவறுதலாக நெகிழி பைகளையும் சேர்த்தே உட்கொள்கின்றன.
  • பாசிகளால் சூழப்பட்ட சிறிய நெகிழி துகள்களையும், சிறிய நெகிழித் துணுக்குகளையும் அதிகளவு பறவைகள் அதிக அளவில் உண்ண நேரிடுகிறது.
  • இவ்வாறாக நெகிழிப் பொருள்களை உண்ட விலங்குகளின் வயிற்றில் நெகிழிப் பொருள்கள் அவற்றின் வயிறு உறுப்புகளில் இடத்தை அடைத்துக் கொள்வதால், அவ்விலங்குகள் உணவுப் பொருள்களை உண்ணமுடியாமல் பட்டினியால் வாடுகின்றன. வயிற்றில் உள்ள நெகிழிப் பொருள்கள் செரிமானம் அடைவதில்லை.
  • ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி எறியக்கூடிய பாலித்தீன்பைகள் மற்றும் உணவு பொட்டலங்களைப் அதிகளவு பயன்படுத்தி எறிவதால், நமது சுற்றுப்புறமும் குப்பைக் கூடமாகி வடிகால்களிலும் அடைத்துக் கொண்டு சுற்றுப்புறத்தினை மாசுபடுத்துகின்றன. வடிகால்களில் அடைப்பு ஏற்படுவதால், நீர் தேங்கி நிற்கின்றது.
  • இந்நீர்க்குட்டைகள் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்குக் காரணமாகி மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற வியாதிகளைப் பரப்புவதோடு, நீர் வடிந்து ஓடாமல், வெள்ளமாகப் பரவுவதற்கும் காரணமாகினறன.

XI. நெடுவினா

1. செயற்கை இழைகளின் பயன்களையும், வரம்புகளையும் பட்டியலிடுக.

செயற்கை இழைகளின் சிறப்புகள்

  • உமது ஆடைகளுள் சில ஆடைகள், சலவை செய்ய அவசியமில்லாமலும், பல வருடங்கள் பயன்படுத்திய பின்னரும் நிறம் மங்காமல் இருக்கின்றன. ஏனெனில் பாலியெஸ்டர் என்ற செயற்கை இழையால் ஆனவை.
  • செயற்கை இழை ஆடைகளின் சுருங்குவதும் இல்லை, நிறம் மங்குவதும் இல்லை.
  • எனவே, பருத்தியாலான ஆடைகளைவிட அதிக வருடங்களுக்கு அதே பொலிவுடன் காட்சியளிக்கின்றன
  • மீன்பிடி வலைபோல் பல பொருள்கள், செயற்கை இழைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
  • செயற்கை இழைகளைப் பயன்படுத்துவதில் உள்ள மற்றுமொரு சிறப்பம்சம் யாதெனில், பட்டு அல்லது கம்பளி இழைகளைக் காட்டிலும், நைலான் போன்ற செயற்கை இழைகள் அதிக வலிமை கொண்டதாக இருக்கின்றன.
  • டிராம்போலைன் என்ற செயற்கை இழையானது, அதிகவலிமையும் நீட்சித்தன்மை கொண்டதுமாக இருப்பதால் அவ்விழையானது அதன்மீது குதிப்பதையும் தாங்கும் தன்மை கொண்டதாக விளங்குகிறது.

செயற்கை இழையின் குறைபாடுகள்

  • பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழைகளின் ஒரு முக்கிய குறையாடென்பது அவை வெப்பத்தைத் தாங்கும் திறனற்றவை. மேலும் அவை எளிதில் தீப்பற்றக்கூடியவை.
  • கோடைக் காலங்களில், செயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதைவிட இயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதே பொருத்தமானதாக இருக்கும்.
  • ஏனெனில், செயற்கை இழைகள் மிகக் குறைந்த அளவே நீரை உறிஞ்சுவதால், செயற்கை இழைகளாலான உடைகளை அணியும்பொழுது நமக்குப் போதுமான காற்றோட்டம் கிடைக்காததால் நாம் வெப்பமாகவும், சிரமமாகவும் உணர்கிறோம்.
  • செயற்கை இழைகள், பெட்ரோலிய வேதிப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுவதால் மிக அதிககாலம் உறுதியாய் உழைக்கும்
  • இதுவே செயற்கை இழைகளின் குறைபாடாகவும் ஆனது. ஆடைகளிலிருந்து மிகச் சிறு பகுதிகள் உடைந்து நுண்ணிய நெகிழிகள் என்றழைக்கப்படும்.
  • துகள்களாய் உதிர்ந்து நீர் நிலைகளான ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களிலும், நிலத்திலும் மாசுபாட்டை உண்டாக்குகின்றன.

2. நெகிழிப் பொருள்களை அகற்றும் பாதுகாப்பான முறைகள் சிலவற்றினை பரிந்துரைக்கவும்.

நெகிழிக் குப்பைகளை அகற்ற முயற்சிக்கும் வழிகளுள் ஒன்று 5R கொள்கை

  • தவிர்த்தல் (Refuse)
  • குறைத்தல் (Reduce)
  • மீண்டும் பயன்படுத்துதல் (Reuse),
  • மறுசுழற்சி செய் (Recycle)
  • மீட்டெடுத்தல் (Recover)

மறுத்தல் / தவிர்த்தல் (Refuse)

  • நெகிழியாலான பொருள்களைத் தவிர்ப்பதே மிகச் சிறந்த முறையாகும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் நெகிழிப்  பொருள்களைப் பெரும்பாலும் தவிர்க்கலாம்.
  • எடுத்துக்காட்டாக, நாம் கடைகளுக்குச் செல்லும் பொழுது பருத்தியிலான பை அல்லது சணல் பைகளைக் கொண்டு சென்றால், கடைக்காரர் தரும் நெகிழிப் பைகளை வேண்டா என்று மறுக்கலாம்.

குறைத்தல் (Reduce)

  • நாம் பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும் முக்கியமான முறையாகும்.
  • நெகிழிப் பொருள் ஒன்றை வாங்கும் முன், அப்பொருளுக்குச் சமமாக அல்லது மாற்றாக வேறு ஏதேனும் மூலப்பொருளால் செய்யப்பட்ட பதிலிப்பொருள் உள்ளதா என சரிபார்த்தபின் அப்பொருளை வாங்கலாம்.
  • நாமே நெகிழிப் பொருள்களைப் குறைவாக பயன்படுத்தினால், குறைந்த அளவிலேயே நெகிழிக் கழிவுகளையும் உருவாக்குவோம்.

மீண்டும் பயன்படுத்துதல் (Reuse)

  • நெகிழியினால் செய்யப்பட்ட பொருள்களை முடிந்தளவு மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.
  • எடுத்துக்காட்டாக, நம்மிடம் நல்ல நிலையில் ஒரு நெகிழிப் பை இருந்தால், அதனைத் தூக்கியெறிலாம் மறுமுறை கடைக்குப் பொருள்கள் வாங்கச் செல்லும்பொழுது, மீண்டும் பயன்படுத்தலாம்.
  • நம்மிடம் நல்ல நிலையில் உள்ள ஒரு நெகிழிப் பொருள் இருந்து, நமக்கு அதைப் பயன்படுத்த விருப்பமில்லை எனில், அதனைத் தூக்கி எறியாமல், அப்பொருளை பயன்படும் வேறொருவருக்குக் கொடுக்கலாம்.

மறுசுழற்சி செய்தல் (Recycle)

  • நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வது நல்ல முறையாகும்.
  • பயனற்ற பொருள்களில் இருந்து பயனுள்ள புதிய பொருள்களை உற்பத்தி செய்யும் பொருட்டு, நெகிழிக் கழிவுகளை ரெசின் குறியீடுகளின் அடிப்படையில் பிரித்தெடுத்து, அவற்றை மறுசுழற்சிக்கு உட்படுத்துதல் சிறந்த முறையாகும்.
  • பலவகையான வெப்பத்தால் இளகும் நெகிழிகளை மறுசுழற்சி செய்யலாம். அவை வெப்பத்தால் இளகி, உருகியபின் அவற்றை மறுசுழற்சியால் வேறொரு பொருளாக மாற்ற முடியும்,

மீட்டெடுத்தல், மட்குதல் மற்றும் எரித்துச் சாம்பலாக்குதல் – (Recover)

  • பெரும்பாலும் நெகிழிக் கழிவுகளைக் கையாள்வதற்காகக் சாதகமான வழியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், நெகிழிப் பொருள்களை எரிப்பதால் நச்சுத் தன்மை கொண்ட வாயுக்கள் வெளிவருவதும், நச்சுத் தன்மை கொண்ட வேதிப்பொருள்களும், கன உலோகங்கள் சாம்பலில் வெளிவருவதும் தவிர்க்க இயலாதவைகளாகும்.
  • மீண்டும் புதுப்பிக்க இயலாத வளங்களைப் பாழ்படுத்துவதாலும், கையாள முடியாத அளவில் நச்சுத் தன்மை கொண்ட வாயுக்களும் சாம்பலும் உருவாவதாலும், நெகிழிகளை எரித்தல் என்பது சிறந்த முறையன்று

 

சில பயனுள்ள பக்கங்கள்