7th Std Social Science Term 1 Solution | Lesson.1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

பாடம்.1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் - பாட விடைகள்

பாடம்.1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. ______________ என்பவை பாறைகள், கற்கள், கோவில்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.

  1. காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள்
  2. பயணக்குறிப்புகள்
  3. நாணயங்கள்
  4. பொறிப்புகள்

விடை : பொறிப்புகள்

2. கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ______________ ஆகும்.

  1. வேளாண்வகை
  2. சாலபோகம்
  3. பிரம்மதேயம்
  4. தேவதானம்

விடை : தேவதானம்

3. ______________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.

  1. சோழர்
  2. பாண்டியர்
  3. ராஜபுத்திரர்
  4. விஜயநகர அரசர்கள்

விடை : சோழர்

4. முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ________________ ஆகும்.

  1. அயினி அக்பரி
  2. தாஜ் – உல் – மா -அசிர்
  3. தசுக்-இ-ஜாஹாங்கீரி
  4. தாரிக் – இ – பெரிஷ்டா

விடை : தாஜ் – உல் – மா -அசிர்

5. அராபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ___________ ஆவார்.

  1. மார்க்கோபோலோ
  2. அல் -பரூனி
  3. டோமிங்கோ பயஸ்
  4. இபன் பதூதா

விடை : இபன் பதூதா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ___________ கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது.

விடை : உத்திரமேரூர்

2. தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் ___________ ஆவார்.

விடை : முகமது காேரி

3. ஒரு ___________ என்பது 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது.

விடை : ஜிட்டல்

4. அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர்_________ ஆவார்.

விடை : மின்கஜ் உஸ் சிராஜ்

5. கி.பி.1420 இல் விஜயநகருக்கு வருகைபுரிந்த இத்தாலியப் பயணி ___________ ஆவார்.

விடை : நிகாேலாே காேண்டி

III. பொருத்துக:

1. கஜுராகோஒடிசா
2. கொனாரக்ஹம்பி
3. தில்வாராமத்தியப்பிரதேசம்
4. விருப்பாக்சாராஜஸ்தான
Ans : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

IV. சரியா? தவறா?

1. பள்ளிச்சந்தம் என்பது சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமாகும்.

விடை : சரி

2. நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் அரசியல் நிலை குறித்த தகவல்களை நமக்கு வழங்குகின்றன.

விடை : தவறு

3. தாமிரத்தின் விலை அதிகமாக இருந்ததால் அரசு ஆணைகளையும் அரசவை நிகழ்வுகளையும் பதிவு செய்வதற்கு குறைந்த செலவிலான பனையோலைகளும் காகிதமும் பயன்படுத்தப்பட்டன.

விடை : சரி

4. டோமிங்கோ பயஸ் எனும் போர்த்துகீசியப்பயணி கி.பி.1522 இல் சோழப்பேரரசுக்கு வருகை புரிந்தார்.

விடை : தவறு

V. (அ) கூற்றைக் காரணத்தோடு பொருத்துக: பொருத்தமான விடையை ( √ ) டிக் இட்டுக் காட்டவும்.

கூற்று : முகமதுகோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார். 

காரணம் : இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.

  1. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
  2. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  3. கூற்று தவறு, காரணம் சரி.
  4. கூற்று, காரணம் இரண்டுமே தவறு.

விடை : காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

(ஆ) தவறான இணையைக் கண்டறியவும்:

  1. மதுரா விஜயம் – கங்காதேவி
  2. அபுல் பாசல் – அயினி அக்பர்
  3. இபன் பதூதா – தாகுயூக்-இ- ஹிந்த்
  4. அமுக்தமால்யதா – கிருஷ்ணதேவராயர்

விடை : இபன் பதூதா – தாகுயூக்-இ- ஹிந்த்

(இ) பொருந்தாததைக் கண்டுபிடி:

பொறிப்புகள், பயணக்குறிப்புகள், நினைவுச் சின்னங்கள், நாணயங்கள்.

விடை : பயணக்குறிப்புகள்

VI. ஒரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

1. நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?

நாதமுனி

2. ‘தசுக்’ எனும் வார்த்தையின் பொருள் யாது?

வாழ்க்கை நினைவுகள்

3. ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பின் பெயர் என்ன?

தசுக்-இ-ஜாஹாங்கீர்

4. வரலாற்றை அறிந்துகொள்வதற்கான இருவகைச் சான்றுகளைக் கூறுக.

  • முதல் நிலைச் சான்றுகள்
  • இரண்டாம் நிலைச் சான்றுகள்

5. இடைக்காலத்தில் கட்டப்பட்ட முக்கிய மசூதிகளையும், கோட்டைகளையும் பட்டியலிடவும்.

மசூதிகள்

  • குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி
  • மோத்- கி-மசூதி
  • ஜமா மசூதி
  • பதேப்பூர் சிக்ரி தர்கா

மசூதிகள்

  • ஆக்ரா கோட்டை
  • சித்தூர் கோட்டை,
  • குவாலியர் கோட்டை
  • டெல்லி செங்கோட்டை
  • தௌலதாபாத் (ஔரங்காபாத்), பிரோஷ் ஷா கொத்தளம்

6. இடைக்காலத்தில் இந்தியாவிற்கு வருகைதந்த முக்கியமான அயல்நாட்டுப் பயணிகளின் பெயர்களைக் கூறவும்.

  • மார்க்கோபோலோ
  • அல்பருனி
  • இயன் பதூதா
  • நிகோலோ கோண்டி
  • டோமிங்கோ பயஸ்

 

சில பயனுள்ள பக்கங்கள்