7th Std Social Science Term 3 Solution | Lesson.10 வரி மற்றும் அதன் முக்கியத்துவம்

பாடம்.10 வரி மற்றும் அதன் முக்கியத்துவம்

வரி மற்றும் அதன் முக்கியத்துவம் - பாட விடைகள்

பாடம்.10 வரி மற்றும் அதன் முக்கியத்துவம்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. வரிகள் என்பவை ——— செலுத்தப்பட வேண்டும்.

  1. விருப்பத்துடன்
  2. கட்டாயமாக
  3. அ மற்றும் ஆ
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : கட்டாயமாக

2. வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்படுவது——

  1. சமத்துவ விதி
  2. உறுதிப்பாட்டு விதி
  3. சிக்கன விதி
  4. வசதி விதி

விடை : சிக்கன விதி

3. வளர்வீத வரிக்கு எதிராக அமைந்துள்ள வரி ——

  1. விகிதச்சாரா வரி
  2. தேய்வுவீத வரி
  3. அ மற்றும் ஆ
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : தேய்வுவீத வரி

4. வருமான வரி என்பது ——

  1. நேர்முக வரி
  2. மறைமுக வரி
  3. அ மற்றும் ஆ
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : நேர்முக வரி

5. சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது ———

  1. செல்வ வரி
  2. நிறுவன வரி
  3. விற்பனை வரி
  4. சேவை வரி

விடை : சேவை வரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வழக்கமாக, அரசால் விதிக்கப்படும் வரியையே ——–என்னும் சொல்லால் குறிக்கிறோம்.

விடை : வரி விதிப்பு

2. வருமான அளவைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாக வரி விதிப்பது ———.

விடை : விகிதாச்சார வரி

3.  —– வரி என்பது, அன்பளிப்பின் மதிப்பைப் பொருத்து, அன்பளிப்பு பெறுபவர் அரசுக்குச் செலுத்துவதாகும்.

விடை : அன்பளிப்பு

4.  ___________ வரிச்சுமையை வரி செலுத்துவோர் மாற்ற முடியாது.

விடை : நேரடியாக

5.  மறைமுக வரி என்பது ______________________நெகிழ்ச்சி உடையது.

விடை : அதிக

III.பொருத்துக

1. வரி விதிப்புக் கொள்கைநேர்முக வரி
2. சொத்து வரிசரக்கு மற்றும் சேவை வரி
3. சுங்கவரிஆடம்ஸ்மித்
4. 01.07.2017குறைந்த நெகிழ்ச்சி உடையது
5. நேர்முக வரிமறைமுக வரி
விடை : 1 – இ, 2 – அ, 3 – உ, 4 – ஆ, 5 – ஈ

IV. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

1. பின்வருவனவற்றில் எது மறைமுக வரி அல்ல?

  1. சேவை வரி
  2. மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT)
  3. சொத்துவரி
  4. சுங்கவரி

விடை : சொத்துவரி

V. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

1. பின்வரும் வரியில் எது நேர்முக வரி?

  1. சேவை வரி
  2. செல்வ வரி
  3. விற்பனை வரி
  4. வளர் விகித வரி

விடை : செல்வ வரி

VI சுருக்கமாக விடையளிக்கவும்.

1. வரியை வரையறுக்கவும்.

வரி என்பது ஒரு நபரிடமிருந்து அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கட்டாய பங்களிப்பாக வரையறுக்கப்படுகிறது, அனைவருக்கும் வழங்கப்படும் சிறப்பு சலுகைகளைக் குறிப்பிடாமல் அனைவரின் பொது நலனுக்காக செலவினங்களை கட்டுப்படுத்தப்படுகின்றன.

2. வரி ஏன் விதிக்கப்படுகிறது?

வரி செலுத்த ஒவ்வொருவரும் சட்டத்தால் கடமைப்பட்டுள்ளனர். மொத்த வரி பணம் அரசாங்க கருவூலத்திற்கு செல்கிறது. அவ்வாறு பெறப்பட்ட வரிப்பணத்தை ஏவ்வாறு செலவிடுவது என்பதையும் வரவு செலவுத் திட்டத்தை எவ்வாற நிர்ணயிப்பத என்பதையும் அரேச தீர்மானிக்கிறது.

3. வரிவிதிப்பு வகைகளின் பெயரை எழுதி அதன் வரைபடத்தை வரையவும்.

1. விகிதாச்சார வரி (Propotional tax)
2. வளர் வீத வரி (Progressive tax)
3. தேய்வு வீத வரி (Regressive tax)

4. வரிகளின் முக்கியத்துவம் ஏதேனும் மூன்றினைக் கூறுக.

  1. நலவாழ்வு
  2. கல்வி
  3. ஆட்சி நிர்வாகம்

5. வரியின் வகைகள் யாவை? மற்றும் அதனைப் பற்றி விளக்குக.

நேர்முக வரி

  • நேர்முக வரி என்பது தனியாளோ, நிறுவனமோ நேரடியாக அரசுக்கு வரி செலுத்துவதைக் குறிக்கும். வரி செலுத்துபவர், பல்வேறு காரணங்களுக்காக அரசுக்கு நேர்முக வரியைச் செலுத்துகிறார்.
  • எடுத்துக்காட்டாக, உண்மையான சொத்து வரி, தனியாள் சொத்துவரி, வருமான வரி அல்லது உறுதிமொழிப் பத்திரங்களின் மீதான வரி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மறைமுக வரி

  • தொடக்கத்தில், ஒருவருக்கு விதிக்கப்பட் வரிச்சுமை, மற்றொருவர் மீத மாற்ற இயலம் முறையையே மறைமக வரி என்கிறோம்.
  • எடுத்தக்காட்டாக ஒருபொருளை விற்பனை செய்யும் விற்பனையாளர், தொடக்கத்தில் அதன் வரிச்சுமையை எற்கிறார். அவரிடமிருந்து, அந்தப் பொருளை யார் வாங்கிறார்களோ அவர்களே அந்த பொருளுக்கான வரிச்சுமையை ஏற்கிறார்கள்

6. நன்கொடை அல்லது அன்பளிப்பு வரி மற்றும் சேவை வரி பற்றிச் சிறுகுறிப்பு வரைக.

அன்பளிப்பு வரி:

ஒருவர் வெகுமதியாக அல்லத அன்பளிப்பாகப் பெறும் பொருள்களின் மதிப்புக் விதிக்கப்படும் வரி, அன்பளிப்பு வரியாகும்

சேவை வரி

சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது சேவை வரியாகும். சேவையைப் பெறவர்களிடமிருந்து வரி வசூலிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு செலுத்தப்படுகிறது.

7. சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்றால் என்ன?

பொருளின் விற்பனை, உற்பத்தி, பயன்பாட அகியவற்றின் அடிப்படையில் விதிக்கப்படுபவது பொரள் மற்றும் சேவை வரியாகும். தேசிய அளவில் ஒட்டமொத்த பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது.

8. நேர்முக மற்றும் மறைமுக வரிக்கு இடையிலான வேறுபாடுகள் யாவை

நேர்முக வரிமறைமுக வரி
1. வரி செலுத்துவோர், தமக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமையைப் பிறருக்கு மாற்ற இயலாது.ஒருவர், தமக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமையை மிக எளிதாக வேறொருவருக்கு மாற்ற இயலும
2. தனியாள் மற்றும் நிறுவனங்கள் பெறும் வருமானங்கள் மீது வரி விதிக்கப்படுகிறது.பல்வேறு பொருள் மற்றும் சேவைகளின் மீது வரி விதிக்கப்படுகிறது.
3. பணவீக்க அழுத்தம் இல்லைபணவீக்க அழுத்தம் உண்டு
4. வரித் தாக்கமும் வரி நிகழ்வும் சமமாக உள்ளன.வரித் தாக்கமும் வரி நிகழ்வும் வெவ்வேறாக உள்ளன.
5. நெகிழ்வுத் தன்மை குறைவு.நெகிழ்வுத்தன்மை அதிகம்.

VII விரிவான விடையளிக்கவும்.

1. வரி விதிப்பு கொள்கை பற்றிச் சுருக்கமாகக் கூறுக.

சமத்துவ வரி:

  • மக்கள் தத்தமது வசதிக்கேற்ற வகையில் செலுத்துவதற்காக அரசு விதிக்கும் முறைகளுள் ஒன்று சமத்தவ வரியாகும்.
  • இதனால் அனைவரும் சமாமாக வரி செலுத்த வேண்டும் என்பது பொருளன்று மாறாக, மக்கள் மீது  சுமத்தப்படும் வரியானது, எளிமையாகவும் நியாயமாகவும் இருக்கவேண்டும் என்பதையே இவ்விதி விளக்குகிறது

உறுதிப்பாட்டு வரி:

  • வசூலிக்கப்படும் வரியின் மூலம், வரி செலத்துவோருக்கு ஒர் உறுதிப்பாட்ட தன்மையை இவ்விதி உருவாக்குகிறது. பொருளாதார வளத்தை மேம்படுத்துகிறது.
  • ஏனெனனில் இவ்விதியின் முலம், பாெருளாதாரத்தில் ஏற்படும் அனைத்த வீண் செலவுகளும் தவிர்க்கப்டுகின்றன.

வசதி வரி:

  • வரி செலுத்துவோர்க்கு அதிக பட்ச வசதிகளை வழங்கும் வகையில் வரி விதிக்கப்ட்டு வசூலிக்கப்படுகிறது.
  • வரி செலுத்துவோர், தாம் செலுத்தும் வரியின் மூலம், குறைந்தபட்ச அளவிலேயே  துன்பப்படுவர் என்பதை எப்போதும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

விகிதாச்சார வரி:

  • வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்பட வேண்டும்.
  • வசூலிக்கப்பட்ட தொகை முழுவதும் அரசின் கருவூலத்தின் இருப்பில் வைக்கப்பட வேண்டும்

2. வரி விதிப்பின் வகைகளாக விளக்குக.

விகிதாச்சார வரி:

  • வருமான அளவைப் பொருட்படுத்தாமல், ஒரே மாதிரியாக வரி விதிப்பது, விகிதாச்சார வரி ஆகும். வருமான விகிதத்திற்கேற்ப, வரி விகிதமும் மாறுபடும்.
  • எடுத்துக்காட்டாக, வருமானத்திற்கு 5 % வரி விகிதம் விதிக்கப்படுகிறது. ஒருவர், ரூபாய் 1000 வருமானம் ஈட்டுகிறார் எனில், அவர் ரூபாய் 50/- செலுத்தவேண்டும். மற்றொருவர், ரூபாய் 5000 வருமானம் ஈட்டுகிறார் எனில், அவரும் ரூபாய் 50/- செலுத்தவேண்டும். சுருங்கக் கூறின், விகிதாச்சார வரி என்பது, வரி செலுத்துபவர்களின் வருமான வரி விகிதத்தை மாற்றாமல் விட்டுவிடுகிறது.

வளர்வீத வரி:

  • ஒருவரின் வருமானம் அதிகரிக்கும்போது, அதற்கேற்ப வரி விகிதிமும் அதிகரிப்பது, வளர்வீத வரி ஆகும். எடுத்துக்காட்டாக, ஒருவரின் ஆண்டு வருமானம் ரூபாய் 1000 எனில், அதற்கான வரி விகிதம் 10 %. ஆகவே, அவர் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 100 ஆகும்.
  • இதனைப் போலவே, மற்றொருவரின் வருமானம் ரூபாய் 10,000 எனில், அவருக்கு விதிக்கப்படும் வரி விகிதம் 25 %. அவர் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 2,500/-. வேறொருவர் ரூபாய் 100,000 வருமானம் பெற்றால், வரி விகிதம் 50 % எனில், அவர் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 50,000/.ஆகவே, வளர்வீத வரியானது, வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க வரி விகிதமும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதை விளக்குகிறது.

தேய்வு வீத வரி:

  • அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் ஒரே மாதிரியாக விதிக்கப்படும் வரி, தேய்வு வீத வரியாகும்.
  • இதனால், அதிக அளவு வருமானம் ஈட்டுபவர்களைக் காட்டிலும், குறைந்த அளவு வருமானம் ஈட்டுபவர்கள் அதிக வரி விகிதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
  • இத்தகைய தேய்வு வீத வரியானது, வளர்வீத வரிக்கு எதிரானதாக உள்ளது.

3. வரியின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்குக.

வரிகள் இல்லையெனில், சமுதாய நலத்திற்குத் தேவையானவற்றைச் செய்ய அரசால் இயலாது. அரசுக்கு வரிகள் மிகவும் இன்றியமையாத வளங்களாக உள்ளன. ஏனெனில், வசூலிக்கப்பட்ட வரிப்பணம் பின்வரும் சமுதாய நலன்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

1. நலவாழ்வு

  • சுகாதார நலவாழ்வுக்காக செலவழிக்கப்படும் தொகை, வரிப்பணத்தில் இருந்தே பெறப்படுகிறது. வரிகள் இல்லையெனில், இத்தகைய செயல்கள் நடைபெறுவது கடினம்.
  • சமூக நலவாழ்வு, மருத்துவ ஆய்வு, சமூக நலப் பாதுகாப்பு போன்றவற்றிற்காக வரிப்பணத்திலிருந்து நிதி ஒதுக்கப்படுகிறது.
  • மனித வளங்களை மேம்படுத்துவதற்கும் கல்வியை மையப்படுத்துவதற்கும் அரசு அதிக முதன்மை அளிக்கிறது.

3. ஆட்சி நிர்வாகம்

  • அரசின் நிர்வாக அமைப்புகள் நன்முறையில் இயங்கினால்தான், ஆட்சியும் நன்முறையில் இயங்கும்.
  • நிர்வாக அமைப்புகள் சரியாக இயங்கவில்லையெனில், பொருளாதார வளர்ச்சியில் அவை, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • ஆகவே, நன்முறையில் நிர்வகிக்கும் ஓர் அரசு, தான் வசூலிக்கும் வரிப்பணத்தை, நாட்டின் நலனுக்காகச் சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது.

4. உள்கட்டமைப்பு மேம்பாடு, போக்குவரத்து, வீட்டு வசதி போன்ற பிற பிரிவுகள்:

  • அரசு, தான் வசூலிக்கும் வரிப்பணத்தைச் சமூக நலத்திட்டங்களுக்காகச் செலவு செய்கிறது.
  • இது மட்டுமின்றி, மக்கள் நலன் காக்கும் வகையில் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பிரிவுகளுக்கும் நிதி ஒதுக்குகிறது.
  • மேலும் ஓய்வூதியங்கள், வேலைவாய்ப்பு இல்லாதோருக்கான ஊக்கத்தொகை, குழந்தைப் பாதுகாப்பு போன்றவற்றிற்காகவும் நிதி ஒதுக்கப்படுகிறது.
  • நாட்டின் போருளாதார வளர்ச்சி நிலையின்மீது வரிகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக, வரிகள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குத் (GDP) தம் பங்களிப்பை வழங்குகின்றன.
  • ஓய்வூதியம் வேலையின்மை சலுகைகள் குழந்தை பராமரிப்பு போன்ற நிதி திட்டங்களுக்கும் சிறுது பணம் செலுத்தப்படுகிறது.
  • வரி ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் நிலையை பாதிக்கும். வரி பொதுவாக ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பங்களிக்கிறது.

4. நேர்முக மற்றும் மறைமுக வரியை உதாரணத்துடன் விளக்குக

நேர்முக வரி

  • நேர்முக வரி என்பது தனியாளோ, நிறுவனமோ நேரடியாக அரசுக்கு வரி செலுத்துவதைக் குறிக்கும். வரி செலுத்துபவர், பல்வேறு காரணங்களுக்காக அரசுக்கு நேர்முக வரியைச் செலுத்துகிறார்.
  • எடுத்துக்காட்டாக, உண்மையான சொத்து வரி, தனியாள் சொத்துவரி, வருமான வரி அல்லது உறுதிமொழிப் பத்திரங்களின் மீதான வரி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மறைமுக வரி

  • தொடக்கத்தில், ஒருவருக்கு விதிக்கப்பட் வரிச்சுமை, மற்றொருவர் மீத மாற்ற இயலம் முறையையே மறைமக வரி என்கிறோம்.
  • எடுத்தக்காட்டாக ஒருபொருளை விற்பனை செய்யும் விற்பனையாளர், தொடக்கத்தில் அதன் வரிச்சுமையை எற்கிறார். அவரிடமிருந்து, அந்தப் பொருளை யார் வாங்கிறார்களோ அவர்களே அந்த பொருளுக்கான வரிச்சுமையை ஏற்கிறார்கள்

5. மக்கள் நலனுக்கு வரி ஏன் அவசியம் என்பதை பற்றி விளக்குக.

  • நிதி நிர்வாகத்திற்கு வருவாயை உயர்த்துவதே, வரி விதிப்பதன் நோக்கமாகும்.
  • நிதிப் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகளைச் சமன் செய்ய, விலை மாற்றத்திற்கு உதவுகிறது.
  • நிதி நிருவாக வரலாற்றில், மாநிலங்கள் வரி விதிப்பின் மூலமாகவே பல செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளன என்பதை அறியமுடிகிறது.
  • போக்குவரத்து, சுகாதாரம், பொதுமக்களின் பாதுகாப்பு, கல்வி, நலவாழ்வுத் திட்டங்கள், அறிவியல் ஆராய்ச்சி, கலையும் பண்பாடும், பொதுப்பணி, பொதுக் காப்பீடு மேலும் பல பொருளாதார உள்கட்டமைப்புகளுக்காகவும் வரிப்பணம் செலவழிக்கப்படுகிறது.
  • ஓர் அரசின் திறனுக்கேற்ப, வரிகளை உயர்த்துவது, அதன்‘நிதித் திறன்‘ என்றழைக்கப்படுகிறது.
  • செலவுகள், வரி வருவாயைவிட அதிமாகும்போது, அரசு கடன்களைத் திரட்டுகிறது.
  • வாராக் கடன்களைத் திரட்டுவதற்கு, வரிகளிலிருந்து ஒருபகுதியும் செலவழிக்கப்படலாம். மேலும், நலவாழ்வுக்கும் பொதுப் பணிகளுக்கும் தேவைப்படும் நிதிகளுக்கு வரிப்பணம் பயன்படுத்தப்படுகிறது.
  • கல்வித் திட்டங்கள், வயதானவர்களுக்கான ஓய்வூதியப் பலன்கள், வேலைவாய்ப்பு இல்லாதோருக்கான ஊக்கத் தொகைகள், பொதுப் போக்குவரத்துகள், ஆற்றல், நீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள் போன்ற பொதுப் பயன்பாட்டுகளுக்கு உரியவை அனைத்தும் பொதுப் பணிகளுக்குள் அடங்கும்.
  • பண உருவாக்கக் கோட்பாடுகளின் அடிப்படையில், ஒப்புறுதிப் பணம் அளிப்பதற்கு அரசு கேள்வி கேட்கும்வரை, அரசின் வருவாய்க்கு வரிகள் தேவைப்படா. நாணய மதிப்பைத் தக்கவைத்தல், சொத்துப் பங்கீடு தொடர்பான பொதுக் கொள்கை வெளியிடுதல், குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள் அல்லது குழுக்கள் அல்லது நெடுஞ்சாலைகள் அல்லது சமூகப் பாதுகாப்பு போன்ற தனிப்பட்ட வகையில் நன்மை தருவன ஆகியவற்றிற்கு மானியம் அளித்தல் போன்றவை வரி விதிப்பின் நோக்கங்களாகும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்