7th Std Social Science Term 3 Solution | Lesson.7 பெண்கள் மேம்பாடு

பாடம்.7 பெண்கள் மேம்பாடு

பெண்கள் மேம்பாடு - பாட விடைகள் 2021

பாடம்.7 பெண்கள் மேம்பாடு

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. பின்வருவனவற்றில் எது பாலின சமத்துவமின்மை அல்ல?

  1. மோசமான பேறுகால ஆரோக்கியம்
  2. ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை
  3. எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவுதல்
  4. பெண்களின் குறைந்த எழுத்தறிவு விகிதம்

விடை : ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை

2. பாலின சமத்துவம் என்பது எது தொடர்புடைய பிரச்சனை

  1. பெண்குழந்தைகள்; பெண்களின் பிரச்சனை
  2. அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்,
  3. மூன்றாம் உலக நாடுகள் மட்டும்
  4. வளர்ந்த நாடுகள் மட்டும் மதிப்பீடு

விடை : அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்,

3. பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பின்வரும் எந்த உத்திகள் உதவுகின்றது?

  1. பாகுபாடுகளுக்கு எதிரான சவால்களுக்கு பெண்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.
  2. பெண்களுக்கான அதிகமான வருமான ஆதாரங்கள்
  3. மேம்பட்ட கல்விக்கான அணுகுமுறை
  4. மேலே உள்ள அனைத்தும்

விடை : மேலே உள்ள அனைத்தும்

4. வளரும் நாடுகளில் சிறுவர்களைவிட பெண்குழந்தைகள் இடைநிலைக் கல்வியை தவற விடுவது ஏன்?

  1. பள்ளிக் கல்வி கட்டணம் உயர்வு காரணமாக, சிறுவர்கள் மட்டும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள்
  2. பெண்குழந்தைகள் வீட்டுவேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது
  3. குழந்தைத் திருமணம் அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது
  4. மேலே உள்ள அனைத்தும்

விடை : பெண்குழந்தைகள் வீட்டுவேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  இந்தியாவில் பெண்கள் கல்வியை செயல்வடிவாக்கிய ஜோதிராவ் புலே நினைவில் வைக்கப்படுகிறார் அவர், தனது மனைவியுடன் _______________ 1848 இல் சிறுமிகளுக்கான முதல் பள்ளியைத் தொடங்கினார்

விடை :சாவித்திரிபாய் பூலே

2. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் ____________

விடை : சுஷ்மன் ஸ்வராஜ்

3. முதல் பெண் காவல்துறை இயக்குநர் (DGP) ______________ ஆவார்

விடை :காஞ்சன் செளத்ரி பட்டாச்சாரியா

4. புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய பெண் _____________.

விடை : அருந்ததி ராய்

III.பொருத்துக

1. சிரிமாவோ பண்டாரநாயகஇங்கிலாந்து
2. வாலென்டினா தெரோஷ்கோவாஜப்பான்
3. ஜன்கோ தபேஇலங்கை
4. சார்லோட் கூப்பர்சோவியத் ஒன்றியம்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

IV. பின்வரும் அறிக்கைகளை ஆராய்க.

1. கூற்று : இப்போது அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்கள் ஒருங்கிணைகிறார்கள்.

காரணம் : சமூகத்தின் அனைத்து மோதல்களிலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.

  1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
  2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
  3. கூற்று சரி ஆனால் காரணம் தவறு
  4. கூற்று தவறானது ஆனால் காரணம் சரி

விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

2. கூற்று : பெண்களுக்கு எதிரான வன்முறை சாதி, மதம், வர்க்கம், வயது மற்றும் கல்வியை கடந்து நடைபெறுகிறது

கூற்று : வீட்டு வன்முறைகள், கருக்கலைப்பு, பெண்சிசுக் கொலை, வரதட்சணை கொலை, திருமணம் மூலம் கொடுமை, சிறுவருக்கு நிகழும் கொடுமைகள் என வெளிப்படுகிறது

  1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
  2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
  3. கூற்று சரி ஆனால் காரணம் தவறு
  4. கூற்று தவறானது ஆனால் காரணம் சரி

விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க

1. பாலின சமத்துவம் என்றால் என்ன?

நாட்டின் நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சிக்கு நமது சமூகத்தில் பெண்களுக்கு அதிகாரப் பகிர்வு அளித்தலும் பாலினச் சமத்துவம் அடைதலும் அவசியமாகும்.

2. பெண்களின் மேம்பாட்டிற்கான அத்தியாவசிய காரணிகளை பட்டியலிடுக

  1. கல்வி ஒருவருக்கு அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் திறன் மற்றும் தனித்தன்மை வாய்ந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.
  2. பாலினப்பாகுபாடு பார்க்கும் சமூகம் எக்காலத்திலும் முன்னேவறுதற்கான வாய்ப்பு அரிது.
  3. சாதி, இன, சமய பாகுபாடுகளை அடிப்படையாகக் காெண்ட சமூகம், முன்னேற்றம் அடையாது.

3. பெண் கல்வியின் முக்கியத்துவத்தை குறிபிட்டு ஒரு கட்டுரையை எழுதுக.

1. அதிகரித்த கல்வியறிவு:

  • உலகெங்கிலும் கல்வியறிவற்ற இளையோரில் கிட்டத்தட்ட 63 சதவிகிதம்பேர் பெண்கள்.
  • எனவே அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் அப்போதுதான் பின்தங்கிய நாடுகளும் முன்னேற்றம் அடையும்.

2. ஆள் கடத்தல்:

  • ஆள் கடத்தலில் அதிகம் பாதிக்கப்படுவது படிப்பறிவு இல்லாத பெண்கள் மற்றும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களேயாகும்.
  • இளம் பெண்களுக்கு அடிப்படைத் திறன்கள் மற்றும் அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதினால் ஆள் கடத்தல்கள் கணிசமாகக் குறைக்கப்படும் என்று ஆள்கடத்தல்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் இடை முகமைத் திட்டம் விளக்குகின்றது.

3. அரசியல் பிரதிநிதித்துவம்:

  • உலகம் முழுவதும் பெண்கள் வாக்காளர்களாகவே உள்ளனர். அவர்களது அரசியல் ஈடுபாடு கட்டுப்படுத்தப்படுகிறது.
  • குடிமைக்கல்வி மற்றும் குடிமைப் பயிற்சி அனைத்து விதமான மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான தடைகளை உடைக்கின்றது என்று ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான தலைமை மற்றும் பங்கேற்பினைப் பற்றிய ஆய்வு பரிந்துரைக்கிறது.

4. வளரும் குழந்தைகள்:

  • கல்வியறிவு பெற்ற தாய்மார்களின் குழந்தைகள் கல்வியறிவு பெறாத தாய்மார்களின் குழந்தைகளை ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகரித்து ஐந்து வயதுக்கு மேல் வாழ வாய்ப்புள்ளது என்று ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான கல்வி முனைப்பு நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

5. காலம் தாழ்த்திய திருமணம்:

  • பின்தங்கிய நாடுகளில் மூன்றில் ஒரு பெண்குழந்தைக்குப் பதினெட்டு வயதுக்குள் திருமணமாகிவிடுகிறது மற்றும் எந்த நாடுகளில் பெண்குழந்தைகள் ஏழு அல்லது அதற்கும் மேலான வருடங்கள் படிக்கிறார்களோ, அவர்களின் திருமணம் நான்கு ஆண்டுகள்வரை தள்ளிப்போகிறது என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் பரிந்துரைக்கிறது.

6. வருமான சாத்தியம்:

  • ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) கூற்றுப்படி கல்வி ஒரு பெண்ணின் வருமானம் ஈட்டும் திறனை அதிகரிக்கிறது.
  • ஒரு பெண் ஆரம்பக் கல்வி பெற்றாள் கூட அந்த பெண்ணின் வருவாயில் 20 சதவீதம் வரை அதிகரிக்க உதவுகின்றது.

7. மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துதல்:

  • பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் வழங்கப்படும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியானது உயருகிறது.
  • 10 சதவீதம் கூடுதலாக பெண்கள் கல்வி கற்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக மூன்று சதவிகிதம் அதிகரிக்கின்றது.

8. வறுமை குறைப்பு:

  • பெண்களுக்குக் கல்வியில் உரிமைகள் சம வாய்ப்புகள் வழங்கப்பட்டால் அவர்களும் பொருளாதார செயல்பாடுகளில் பங்கேற்பர்.
  • இதனால் அவர்களின்  வருவாய் ஈட்டும் திறன் அதிகரித்த வறுமை அளவை குறைக்க வழி ஏற்படும்

 

சில பயனுள்ள பக்கங்கள்