Tamil Nadu 7th Standard Tamil Book Term 1 பேச்சுமொழியும் எழுத்துமொழியும் Solution | Lesson 1.3

பாடம் 1.3. பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மொழியின் முதல் நிலை பேசுதல், ________ ஆகியனவாகும்.

  1. படித்தல்
  2. கேட்டல்
  3. எழுதுதல்
  4. வரைதல்

விடை : கேட்டல்

2. ஒலியின் வரிவடிவம் _________ ஆகும்.

  1. பேச்சு
  2. எழுத்து
  3. குரல்
  4. பாட்ட

விடை : எழுத்து

3. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று _________

  1. உருது
  2. இந்தி
  3. தெலுங்கு
  4. ஆங்கிலம்

விடை : தெலுங்கு

4. பேச்சுமொழியை ________ வழக்கு என்றும் கூறுவர்

  1. இலக்கிய
  2. உலக
  3. நூல்
  4. மொழி

விடை : உலக

II. சரியா தவறா என எழுதுக.

1. மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது.

விடை : சரி

2. எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.

விடை : சரி

3. பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி. 

விடை : தவறு

4. எழுத்து மொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.

விடை : தவறு

5. பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம்.

விடை : சரி

III. ஊடகங்களை வகைப்படுத்துக.

வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள், திரைப்படம், மின்னஞ்சல்

எழுத்துமொழிபேச்சுமொழி
மின்னஞ்சல், செய்தித்தாள்,  நூல்கள்வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம்

IV. குறுவினா

1. மொழியின் இரு வடிவங்கள் யாவை?

  • பேச்சு மொழி
  • எழுத்து மொழி

2. பேச்சுமொழி என்றால் என்ன?

வாயினால் பேசப்பட்டு உணரப்படுவது பேச்சு மொழி ஆகும்

3. வட்டார மொழி எனப்படுவது யாது?

இடத்திற்கு இடம் பேச்சு மொழி மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் பேச்சுமொழி மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.

V. சிறுவினா

1. பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுள் நான்கனை விளக்குக.

பேச்சுமொழிஎழுத்துமொழி
1. பேச்சுமொழியில் சொற்கள் குறுகி ஒலிக்கும்.

எ.கா. நல்லாச் சாப்டான்

எழுத்து மொழியல் சொற்கள் முழுமையாக எழுதப்படும்.

எ.கா. நன்றாகச்சாப்பிட்டான்

2. உணர்ச்சிக் கூறுகள் அதிகம்உணர்ச்சிக் கூறுகள் குறைவு
3. உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வுக்கு இடம் உண்டுஉடல் மொழி, குரல் ஏற்றத்தாழ்வுக்கு இடம் இல்லை
4. திருத்தமான மொழி நடையில் அமைகிறதுதிருத்தமான மொழி நடையில் அமைவதில்லை

2. கிளை மொழிகள் எவ்வாறு உருவாகின்றன?

  • ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றன.
  • வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கைத்தடைகள் போன்றவற்றின் காரணமாக அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும்.
  • அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறையும் போது இம்மாற்றங்கள் மிகுதியாகிப் புதிய மொழியாகப் பிரியும். அதுவே கிளை மொழி என்பர்
  • கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளை மொழி ஆகும்

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பேசுவதும் கேட்பதும் மொழியின் _________ ஆகும்.

விடை : முதல் நிலை

2. பேச்சு மொழிக்கு நாம் தந்த வரிவடிமே _________ ஆகும்.

விடை : எழுத்து மொழி

3. வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது _________ ஆகும்.

விடை : பேச்சுமொழி

4. கண்ணால் கண்டு உணருமாறு வரி வடிவமாக எழுதப்பட்டு படிக்கப்படுவது _________ ஆகும்.

விடை : எழுத்து மொழி

5. எழுதப்படுவதும், படிக்கப்படுவது மொழியின் _________

விடை : இரண்டாம் நிலை

6. மாறுபாடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள் _________ என்பர்.

விடை : வட்டார மொழி

7. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும் என்று ________ கூறினார்.

விடை : மு.வரதராசனார்

8. சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால், பொருள் வேறுபடுமென ________ உணர்த்துகிறது.

விடை : நன்னூல் நூற்பா

9. கேட்டல், பேசுதல் என்னும் _________  நிலையிலேயே குழந்தைகளுக்குத் தாய்மொழி அறிமுகமாகிறது.

விடை : முதல்

10. படித்தல், எழுதுதல் என்னும் _________  நிலையில் பிற மொழிகள் அறிமுகம் ஆகின்றன.

விடை : இரண்டாம்

11. மனித சிந்தனை காலம் கடந்தும் வாழ்வதற்க காரணம்

விடை : எழுத்து மொழி

II. வினாக்கள்

1. இரட்டை வழக்கு மொழி என்றால் என்ன?

பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி (Diglossic Language) எனப்படும்.

2. தமிழில் இருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள் யாவை?

  • கன்னடம்
  • தெலுங்கு
  • மலையாளம்

3. மொழி என்பது யாது?

தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே மொழி ஆகும்.

4. திருத்தமான தமிழை எங்கெங்குப் பயன்படுத்த வேண்டும்?

திருத்தமான தமிழை ஊடகங்களிலும், இலக்கியங்களிலும் பயன்படுத்த வேண்டும்

5. பேச்சு மொழியின் சிறப்புக்கூறுகள் யாவை?

பேசுபவனின் உடல்மொழி, ஒலிப்பில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சுமொழியின் சிறப்பு கூறுகள் ஆகும்.

6. மொழி மு.வரதராசனாரின் கூற்றினை எழுதுக

  • ‘ பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி;
  • எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறு வகை மொழி நிலைகளும் உண்டு.
  • எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்’

7. சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால், பொருள் வேறுபடும் என்பதை நன்னூல் நூற்பா எவ்வாறு உணர்த்துகிறது?

சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால், பொருள் வேறுபடும் என்பதை,

”எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்
திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” – என்று நன்னூல் நூற்பா உணர்த்துகிறது.

8. தொல்காப்பியர் தமிழ் மொழியில் உள்ள வேறுபாடுகளை எவ்வாறு வகைப்படுத்தியுள்ளார்?

தமிழில் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இருந்துள்ளது. தொல்காப்பியர் இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியுள்ளார்.

9. எதன் காரணமாகப் இக்காலத்தில் பேச்சுமொழி நீண்ட காலம் நிலைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது?

இக்காலத்தில் புதியஅறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் சான்றோர்களின் உரைகள் ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன. இதன் காரணமாகப் பேச்சுமொழியும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

10. கேட்டல், பேசுதல் எந்நிலையில் அறிமுகமாகிறது?

கேட்டல், பேசுதல் என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்குத் தாய்மொழி அறிமுகமாகிறது.

11. படித்தல், எழுதுதல் எந்நிலையில் அறிமுகமாகிறது?

படித்தல், எழுதுதல் என்னும் இரண்டாம் நிலையில் பிற மொழிகள் அறிமுகம் ஆகின்றன.

 

சில பயனுள்ள பக்கங்கள்