பாடம் 1.4. பயணம்
மதிப்பீடு
பாடப்பகுதிப் பொம்மலாட்டக் காட்சிகளைச் சிறுகதையாக எழுதுக.
முன்னுரை:
கல்வியின் அவசியத்தை உணர்த்தும் “ஆளுக்கு ஒரு வேலை” என்னும் பொம்மலாட்டக் கதை நிகழ்வைச் சிறுகதை வடிவில் காண்போம்.
பையனின் பிடிவாதமும் பெற்றோர் அறிவுரையும்:
அம்மா, அப்பா, பையன் என சிறு குடும்பம் ஒன்றுள்ளது. அக்குடும்பத்தில் உள்ள பையன் ஒழுங்காகப் பள்ளிக்கூடம் செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டே இருப்பான். யார் அறிவுரை கூறினாலும் கேட்காத பிடிவாத குணம் கொண்டவன். அவனது பிடிவாதத்தை யாராலும் மாற்ற முடியாது. ஒரு நாள் அப்பா அந்தப் பையனிடம், “இப்பொழுது நீ படிக்கவில்லை என்றால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. பள்ளிக்கூடம் போய் படி” என்றார். அம்மாவும், “படிக்கவில்லையென்றால் யாரும் மதிக்கமாட்டார்கள்” என்றார். அவன் வேண்டா வெறுப்பாகப் பள்ளிக்கூடம் சென்றான்.
விளையாட அழைத்தல்
வழக்கம் போலவே பள்ளிக்கூடத்தை விட்டு ஓட்டம் பிடிக்கிறான். விளையாட யாராவது வருவார்களா? என்ற பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது எறும்பு ஒன்று வந்தது. அதனை விளையாடக் கூப்பிட்டான். ஆனால் அது தன் குழந்தைகளுக்குத் தீனி கொடுக்க வேண்டும். அரிசி, தவிடு சேகரிக்க வேண்டும். உனக்குத்தான் வேலை இல்லை என்றது. பிறகு தேனீ, பொதிமாடு, ஆமை, முயல் ஆகியவற்றை ஒவ்வொன்றாக விளையாடக் கூப்பிட்டான். அவனுக்கு புத்தி புகட்டும் வண்ணம் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவை விளையாட மறுத்து விட்டன.
மனமாற்றம்
ஈரமான குட்டிச் சுவர் மீது அவன் அமர்ந்தான். சுவர் இடிந்து, அதிலிருந்த பூச்சி, எறும்பு, வண்டும் ஆகியன ” உனக்குத் தான் வேலை இல்லை, நாங்கள் சேர்த்த பொருள் எல்லாவற்றையும் உடைத்துவிட்டாயே!” என்றுச் சொல்லி அவனை கடித்தன. மனம் மாறிய பையன் தன் அம்மாவிடம், “உலகத்தில் ஈ, எறும்பு கூட சும்மா இல்லாமல் வேலை செய்கின்றன. படிப்பது தான் என் வேலை என்பதைப் புரிந்து கொண்டன். இனி ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்கின்றேன்” என்றார்.
முடிவுரை
“ஒவ்வொருக்கு ஒரு வேலை உண்டு. மாணக்கர்களுக்குப் படிப்பது மட்டும் தான் நம் வேலை” என்பதை இக்கதையின் மூலம் நாம் அறிய முடிகின்றது.
கதை உணர்த்தும் நீதி
படி! முதற்படி! அது வாழ்க்கைப் படி!
கூடுதல் வினாக்கள்
1. ‘பயணம்’ கதையில் கூறப்பட்டுள்ள சொலவடைகள் சிலவற்றை கூறுக
- புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா?
- அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது.
- வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் சென்மப் பகை
- எறும்பு ஊரக் கல்லும் தேயுங்கிற
- உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும்.
- அடை மழை விட்டாலும் செடி மழை விடாது
- நினைச்சதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டமுங்கிற
- குடல் கூழுக்கு அழுவுதாம், கொண்டை பூவுக்கு அழுவுதாம்.
- சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா?
- நல்ல பாம்பு படம் எடுக்கலாம்; நாக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா?
- ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
- ஆள் கூடுனா பாம்பு சாகுமா? கைய ஊனித்தான் கரணம் போட முடியும்?
- காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும்.
- இருப்பவனுக்குப் புளியேப்பம்; இல்லாதவனுக்குப் பசியேப்பம்.
- நாலு வீட்டில கல்யாணமாம். நாய்க்கு அங்கேயும் இங்கேயும் ஓட்டமாம்
- அவப்பொழுது போக்குவதிலும் (வீணாகப் பொழுதுபோக்குதல்) தவப்பொழுது நல்லதும்பாங்க.
- பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா?
- அதிர அடிச்சா உதிர விளையும்.
- குத்துக்கல்லுக்கு என்ன குளிரா வெயிலாங்கிற மாதிரி
- அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்
- அதை விட்டாலும் கதி இல்ல, அப்பால போனாலும் விதி இல்ல
- தட்டிப் போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லாம
- அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாது
- அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழிதான்
சில பயனுள்ள பக்கங்கள்