பாடம் 1.1. கலங்கரை விளக்கம்
கலங்கரை விளக்கம் – பாடல்
வானம் ஊன்றிய மதலை போல – கடியலூர் உருத்திரங் கண்ணனார் |
நூல்வெளி
கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர். இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர். இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன். இந்நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன. வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும். |
I. சொல்லும் பொருளும்
- தேடல் – தூண்
- சென்னி – உச்சி
- ஞெகிழி – தீச்சுடர்
- உரவுநீர் – பெருநீர்பரப்பு
- அழுவம் – கடல்
- கரையும் – அழைக்கும்
- வேயா மாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. வேயாமாடம் எனப்படுவது ……………….
- வைக்கோலால் வேயப்படுவது
- சாந்தினால் பூசப்படுவது
- இலையால் வேயப்படுவது
- துணியால் மூடப்படுவது
விடை : சாந்தினால் பூசப்படுவது
2. உரவுநீர் அழுவம் இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ______.
- காற்று
- வானம்
- கடல்
- மலை
விடை : கடல்
3. கடலில் துறை அறியாமல் கலங்குவன ______.
- மீன்கள்
- மரக்கலங்கள்
- தூண்கள்
- மாடங்கள்
விடை : மரக்கலங்கள்
4. தூண் என்னும் பொருள் தரும் சொல் ______.
- ஞெகிழி
- சென்னி
- ஏணி
- மதலை
விடை : மதலை
III. குறுவினா
1. மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது எது?
மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது – கலங்கரை விளக்கின் ஒளி
2. கலங்கரை விளக்கில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?
கலங்கரை விளக்கில் இரவு நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்
IV. சிறுவினா
கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகளை எழுதுக.
|
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் _________
விடை : தொண்டைமான் இளந்திரையன்
2. பெரும்பாணாற்றும்படை நூலின் ஆசிரியர் _________
விடை : கடியலூர் உருத்திரங் கண்ணனார்
3. உருத்திரங்கண்ணனார் _________ என்ற ஊரில் வாழ்ந்தார்
விடை : கடியலூர்
4. கடலில் துறை அறியாமல் கலங்குவது _________
விடை : மரக்கலங்கள்
5. கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பம் _________
விடை : கலங்கரை விளக்கம்
4. கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பம் _________
விடை : கலங்கரை விளக்கம்
5. உருத்திரங்கண்ணனார் _________ ஊரில் வாழ்ந்தவர்.
விடை : கடியலூர்
6. பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியவர் _________
விடை : கடியலூர் உருத்திரங் கண்ணனார்
7. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் _________
விடை : தொண்டைமான் இளந்திரையன்
II. பிரித்து எழுது
- மரக்கலங்கள் = மரம் + கலங்கள்
- பத்துப்பாட்டு = பத்து + பாட்டு
- முல்லைப்பாட்டு = முல்லை + பாட்டு
- அம்மாடத்தில் = அ + மாடத்தில்
- தீச்சுடர் = தீ + சுடர்
III. பொருத்துக
1. சென்னி | அ. தீச்சுடர் |
2. ஞெகிழி | ஆ. பெருநீர்பரப்பு |
3. உரவுநீர் | இ. கடல் |
4. அழுவம் | ஈ. உச்சி |
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ |
IV. பாடப் பகுதியில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எழுதுக
மோனைச் சொற்கள்
- ஏணி – ஏற்றருஞ்சென்னி
- இரவில் – இலங்குசுடர்
எதுகைச் சொற்கள்
- ஊன்றிய – சென்னி
- இரவில் – உரவு நீர்
V. வினாக்கள்
1. உருத்திரங்கண்ணனார் பற்றி குறிப்பு வரைக
- கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்காலப்புலவர்.
- இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தார்.
- இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
2. ஆற்றுப்படை இலக்கியம் என்றால் என்ன?
வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்
3. பத்துப்பாட்டு நூல்கள் யாவை?
- திருமுருகாற்றுப்படை
- மதுரைக்காஞ்சி
- பெருநாராற்றுப்படை
- நெடுநெல்வாடை
- பெரும்பாணாற்றுப்படை
- குறிஞ்சிப்பாட்டு
- சிறுபாணாற்றுப்படை
- பட்டினப்பாலை
- முல்லைப்பாட்டு
- மலைபடுகடாம்
4. பெரும்பாணாற்றுப்படை பற்றி நீவிர் அறிவன யாவை?
பெரும்பாணாற்றுப்படை பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. இந்நூலை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், ஆற்றுப்படை இலக்கியம் சார்ந்தது. இந்நூலின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன் |
5. வேயா மாடம் தொடர் பொருள் கூறுக.
வேயா மாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாக சாந்து பூசப்பட்ட மாடம்
சில பயனுள்ள பக்கங்கள்