Tamil Nadu 7th Standard Tamil Book Term 2 தமிழரின் கப்பற்கலை Solution | Lesson 1.3

பாடம் 1.3. தமிழரின் கப்பற்கலை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது ___________.

  1. கலம்
  2. வங்கம்
  3. நாவாய்
  4. ஓடம்

விடை : ஓடம்

2. தொல்காப்பியம் கடற்பயணத்தை ____________ வழக்கம் என்று கூறுகிறது.

  1. நன்னீர்
  2. தண்ணீர்
  3. முந்நீர்
  4. கண்ணீர்

விடை : முந்நீர்

3. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி __________.

  1. சுக்கான்
  2. நங்கூரம்
  3. கண்ணடை
  4. சமுக்கு

விடை : சுக்கான்

II. கோடிட்ட இடங்ளை நிரப்புக.

1. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் _________ என அழைக்கப்படும்.

விடை : தொகுதி

2. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது _________

விடை : நங்கூரம்

3. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் _________ எனக் குறிப்பிடப்படும்.

விடை : கண்ணடை

III. பொருத்துக.

1. எராஅ. திசைகாட்டும் கருவி
2. பருமல்ஆ. அடிமரம்
3. மீகாமன்இ. குறுக்கு மரம்
4. காந்தஊசிஈ. கப்பலைச் செலுத்துபவர்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

IV. தொடர்களில் அமைத்து எழுதுக.

1. நீரோட்டம்

  • ஆழ்துளைக்கிணறு அமைக்கும் முன்னர் நீரோட்டம் பார்ப்பர்

2. காற்றின் திசை

  • கப்பலைக் காற்றின் திசைக்கேற்ப செலுத்துவர்

3. வானியல் அறிவு

  • தமிழர் வானியல் அறிவில் சிறந்து விளங்கினர்

4. ஏற்றுமதி

  • துறைமுகத்தில் கப்பல்கள் மூலம் பொருள்களை ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்படுகின்றன

V. குறுவினா

1. தோணி என்னும் சொல்லின் பெயர்க்காரணத்தைக் கூறுக.

எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியை குடைந்து தோண்டப்பட்டவை தோணி எனப்பட்டன.

2. கப்பல் கட்டும்போது மரப்பலகைகளுக்கு இடையே தேங்காய் நார் (அ) பஞ்சு வைப்பதன் நோக்கம் என்ன?

மரங்களையும், பலகைகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க தேங்காய் நார் (அ) பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இறுக்கி ஆணிகளை அறைந்தனர்.

3. கப்பல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.

  • ஏரா
  • பருமல்
  • வங்கு
  • கூம்பு
  • பாய்மரம்
  • சுக்கான்
  • நங்கூரம்

VI. சிறுவினா

1. சிறிய நீர்நிலைகளையும். கடல்களையும் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்களை எழுதுக.

சிறிய நீர்நிலைகளைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள்

  • தோணி
  • ஓடம்
  • படகு
  • புணை
  • மிதவை
  • தெப்பம்

கடல்களைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள்

  • கலம்
  • வங்கம்
  • நாவாய்

2. பண்டைத் தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றி எழுதுக.

காற்றின் திசையை அறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

கடலில் காற்று வீசும் திசை, கடல் நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத் தமிழர்கள் நன்கு அறிந்து அவற்றுக்கேற்ப உரிய காலத்தில் சரியான திசையில் கப்பலைச் செலுத்தினர் .

திசைகாட்டும் கருவி மற்றும் விண்மீன்களின் நிலையை வைத்தும் திசையை அறிந்து கப்பலைச் செலுத்தினர்.

கப்பல் ஓட்டும் மாலுமிகள் சிறந்த வானியல் அறிவையும் பெற்றிருந்தனர்.

கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை போன்றவை தோன்றும் காலங்களையும் கடல் நீர் பொங்கும் காலத்தையும் அறிந்து தகுந்த காலத்தில் கப்பல்களைச் செலுத்தினர்.

3. கப்பல் பாதுகாப்பானதாக அமையத் தமிழர்கள் கையாண்ட வழிமுறைகள் யாவை?

கப்பல்கள் தண்ணீரிலேயே இருப்பவை என்பதால் தண்ணீரால் பாதிப்பு ஏற்படாத மரங்களையே பயன்படுத்தினர்.

நீர் மட்ட வைப்பிற்கு வேம்ப், இலுப்பை, புன்னை, நாவல் மரங்களையும் பக்கங்களுக்கு தேக்கு, வெண் தேக்கு மரங்களையும் பயன்படுத்தினர்.

சுழி உடைய மரங்களைத் தவிர்த்தனர்.

மரங்களையும், பலகைகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க தேங்காய் நார் (அ) பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இறுக்கி ஆணிகளை அறைந்தனர்.

சுண்ணாம்பையும் சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். இதனால் கப்பல் பழுதடையாமல் நீண்ட காலம் உழைத்தன.

இரும்பு துருப்பிடிக்கும் என்பதால் மர ஆணிகளைப் பயன்படுத்தினர்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. _________ செய்வதில் தமிழர்களுக்கு எப்போதும் பெருவிருப்பம் உண்டு.

விடை : பயணம்

2. வானூர்திகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவியவை _________ ஆகும்.

விடை : கப்பல்கள்

3. தொல்காப்பியம் _________ என்று கடற்பயணத்தைக் குறிப்பிடுகிறது.

விடை : முந்நீர் வழக்கம்

4. கப்பல் கட்டும் கலைஞர்கள் _________ என்று அழைக்கப்பட்டனர்.

விடை : கம்மியர்

5. நீளம், அகலம், உயரம் ஆகியவற்றைச் சரியான முறையில் கணக்கிட்டுக் கப்பல்களை உருவாக்க _________ என்னும் நீட்டல் அளவையால் கணக்கிட்டனர்

விடை : தச்சுமுழம்

6. நமக்குக் கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழமையானது ________

விடை : தொல்காப்பியம்

7. உலகு கிளர்நதன்ன உருகெழு வங்கம் என்று பெரிய கப்பலை ______ குறிப்பிடுகிறது

விடை : அகநானூறு

8. ______ என்னும் நிகண்டு நூலில் பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

விடை : சேந்தன் திவாரகம்

9. உட்பகுதி தோண்டப்பட்டவை என்பதால் _________ எனப்பட்டன.

விடை : தோணிகள்

10._________ கம்மியர் என்று அழைக்கப்பட்டனர்.

விடை : கப்பல் கட்டும் கலைஞர்கள்

11. _________ மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி முதலிய பல பெயர்களால் அழைப்பர்.

விடை : கப்பல் செலுத்துபவரை

II. வினாக்கள்

1. பயணம் எத்தனை வகைப்படும்?

  • தரைவழிப் பயணம்
  • நீர்வழிப் பயணம்
  • வான்வழிப் பயணம் என மூன்று வகைப்படும்.

2. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழர்கள் கடல் பயணம் செய்துள்ளனர் என்பதை எதன் மூலம் அறியலாம்

நமக்குக் கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழமையானது தொல்காப்பியம். அந்நூல் முந்நீர் வழக்கம் என்று கடற்பயணத்தைக் குறிப்பிடுகிறது. எனவே, தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழர்கள் கடல் பயணம் செய்துள்ளனர் என்பதை அறியலாம்.

3. தமிழர்கள் கப்பல் கட்டும் தொழிலில் பரந்துபட்ட அறிவு பெற்றிருந்தார்கள் என்பதை எவ்வாறு உணரலாம்.

சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டு நூலில் பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழர்கள் கப்பல் கட்டும் தொழிலில் பரந்துபட்ட அறிவு பெற்றிருந்தார்கள் என்பதை உணரலாம்.

4. தோணி என்றால் என்ன?

எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து எடுத்து விட்டுத் தோணியாகப் பயன்படுத்தினான். உட்பகுதி தோண்டப்பட்டவை என்பதால் அவை தோணிகள் எனப்பட்டன.

5. கரிமுக அம்பி, பரிமுக அம்பி என்றால் என்ன?

கரிமுக அம்பி

  • பெரிய படகுகளில் முன்பக்கத்தை யானை தலையை போன்று வடிவமைப்பதாகும்

பரிமுக அம்பி

  • பெரிய படகுகளில் முன்பக்கத்தை குதிரை தலையை போன்று வடிவமைப்பதாகும்

6. கலங்கரை விளக்கம் என் பெயர் வருவதற்கு காரணம் யாது?

கடலில் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தைக் காட்டுவதற்காக அமைக்கப்படுவது கலங்கரை விளக்கம் ஆகும்.

உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினை கொண்டாதாக இஃது அமைக்கப்படும்

கலம் என்றால் கப்பல், கரைதல் என்றால் அழைத்தல் அழைக்கும் விளக்கு என்னும் பொருளில் இது கலங்கரை விளக்கம் எனப்படும்

7. கப்பல்கள் கட்டும் தமிழர்கள் பற்றிய வாக்கர் கூற்றினை எழுதுக

“ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை” என்று வாக்கர் என்னும் ஆங்கிலேயர் கூறியுள்ளார்.

8. பெரிய கப்பற்படை கொண்டு பல நாடுகள் வென்ற சோழர்கள் யாவை?

இராசராச சோழன், இராசேந்திர சோழன்

9. தமிழர்கள் பயன்படுத்திய பாய்மரங்கள் யாவை?

  • பெரிய பாய்மரம்
  • திருக்கைத்திப்பாய்மரம்
  • காணப்பாய்மரம்
  • கோசுப்பாய்மரம்

10. கப்பல் செலுத்துபவர்களுக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?

மாலுமி, மீகான், நீகான், கப்பலோட்டி

11. தொகுதி என்றால் என்ன?

இரும்பு ஆணிகள் துருப்பிடித்துவிடும் என்பதால் மரத்தினாலான ஆணிகளையே பயன்படுத்தினர். இந்த ஆணிகளைத் தொகுதி என்பர்.

12. பழந்தமிழர்கள் ஆமைகளை வழிகாட்டிகளாகப் பயன்படுத்திக் கடல் பயணம் செய்து இருக்கலாம் என்பதை எவ்வாறு அறியலாம்?

கடல் ஆமைகள் இனப்பெருக்கத்துக்காகத் தகுந்த இடம் தேடி நீண்ட தூரம் பயணம் செய்கின்றன.

அவை செல்லும் வழியைச் செயற்கைக்கோள்கள் மூலம் தற்போது ஆராய்ந்துள்ளனர். அவ்வழியில் உள்ள நாடுகளுடன் தமிழர்கள் வாணிகத் தொடர்பு கொண்டு இருந்ததை அறிய முடிகிறது.

எனவே பழந்தமிழர்கள் ஆமைகளை வழிகாட்டிகளாகப் பயன்படுத்திக் கடல் பயணம் செய்து இருக்கலாம் என்னும் கருத்தும் உள்ளது.

 

சில பயனுள்ள பக்கங்கள்