Tamil Nadu 7th Standard Tamil Book Term 2 அழியாச்செல்வம் Solution | Lesson 2.2

பாடம் 2.2. அழியாச்செல்வம்

அழியாச்செல்வம் – பாடல்

வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்
எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற்று அல்ல பிற.*

-சமண முனிவர்

நூல்வெளி

நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.

பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.

இது நானூறு வெண்பாக்களால் ஆனது.

நாலடி நானூறு, வேளாண் வேதம் என அழைக்கப்ட்டது.

திருக்குறளை போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் பகுப்புகளை கொண்டது.

இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை “நாளும் இரண்டும் சொல்லும் சொல்லுக்குறுதி” என்னும் தொடர் மூலம் அறியலாம்.

I. சொல்லும் பொருளும்

  1. வைப்புழி – பொருள் சேமித்து வைக்கும் இடம்
  2. கோட்பா – ஒருவரால் கொள்ளப்படாது
  3. வாய்த்து ஈயில் – வாய்க்கும் படி கொடுத்தலும்
  4. விச்சை – கல்வி

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் _____.

  1. வீடு
  2. கல்வி
  3. பொருள்
  4. அணிகலன்

விடை : கல்வி

2. கல்வியைப் போல் _______ செல்லாத செல்வம் வேறில்லை.

  1. விலையில்லாத
  2. கேடில்லாத
  3. உயர்வில்லாத
  4. தவறில்லாத

விடை : விலையில்லாத

3. வாய்த்தீயின் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. வாய்த்து + ஈயீன்
  2. வாய் + தீயின்
  3. வாய்த்து +தீயின்
  4. வாய் + ஈயீன்

விடை : வாய்த்து + ஈயீன்

4. கேடில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. கேடி + இல்லை
  2. கே +இல்லை
  3. கேள்வி + இல்லை
  4. கேடு + இல்லை

விடை : கேடு + இல்லை

5. எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. எவன்ஒருவன்
  2. எவன்னொருவன்
  3. எவனொருவன்
  4. ஏன்னொருவன்

விடை : எவனொருவன்

III. குறுவினா

கல்விச் செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.

கல்வியைப் பொருள் போல வைத்திருபபினும் அது பிறரால்  கொள்ளபடாது. ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.

IV. சிறுவினா

கல்விச் செல்வம் குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால்  கொள்ளபடாது.

ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.

மிக்க சிறப்பினை உடைய அரசாலும் கவர முடியாது.

ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும்.

மற்றவை செல்வம் ஆகாது.

கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. சமண முனிவர் பலரால் எழுதப்பட்ட நூல்

  1. நாலடியார்
  2. திருக்குறள்
  3. புறநானூறு
  4. அகநானூறு

விடை : நாலடியார்

2. நாலடியார் ____________ நூல்களுள் ஒன்று

  1. பத்துப்பாட்டு
  2. எட்டுத்தொகை
  3. பதினெண்கீழ்கணக்கு
  4. பதினென்மேல்கணக்கு

விடை : பதினெண்கீழ்கணக்கு

3. விச்சை என்பதன் பொருள்

  1. புத்தகம்
  2. பாடம்
  3. பாடல்
  4. கல்வி

விடை : கல்வி

4. நாலடியார் எந்த நூலுக்கு இணையாக ________ போற்றப்படுகிறது

  1. திரிகடுகம்
  2. நற்றிணை
  3. குறுந்தொகை
  4. திருக்குறள்

விடை : திருக்குறள்

5. நாலடியார் நூலில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை

  1. 100
  2. 200
  3. 300
  4. 400

விடை : 400

6. நாலடி நானூறு என போற்றப்படும் நூல்

  1. திரிகடுகம்
  2. நற்றிணை
  3. குறுந்தொகை
  4. நாலடியார்

விடை : நாலடியார்

7. வேளாண்வேதம் என்று சிறப்பிக்கப்படும் நூலின் பெயர்

  1. திரிகடுகம்
  2. நாலடியார்
  3. நற்றிணை
  4. குறுந்தொகை

விடை : நாலடியார்

8. நாலடியார் திருக்குறளுக்கு இணையாக வைத்து போற்றப்படுகிறது என்பதை குறிப்பிடும் தொடர்

  1. ஆலும் வேலும் பல்லுக்குறுதி
  2. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி 
  3. நாலும் வேலும் பல்லுக்குறுதி
  4. வேலும் இரண்டும் சொல்லுக்குறுதி

விடை : நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

9. விச்சை என்பதன் பொருள் தருக

  1. பொருள்
  2. கல்வி
  3. உலகம்
  4. இன்பம்

விடை : கல்வி

10. தம் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்

  1. பொருள்
  2. புண்ணியம்
  3. பாவம்
  4. கல்வி

விடை : கல்வி

II. வினாக்கள்

1. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் எது?

ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகாது.

2. நாலடியார் நூலின் வேறு பெயர்கள் யாவை?

நாலடி நானூறு, வேளாண்வேதம்

3. நாலடியார் – திருக்குறள் ஒப்புமை தருக?

நாலடியாரும் திருக்குறளும் அறம், பொருள், இன்பம் என்ற முப்பால் பகுப்புகளை கொண்டது

4. திருக்குறளுக்கு இணையாக நாலடியார் போற்றப்படுவதை எத் தொடரின் மூலம் அறியலாம்?

“நாளும் இரண்டும் சொல்லும் சொல்லுக்குறுதி”

 

சில பயனுள்ள பக்கங்கள்