பாடம் 3.1 ஒரு வேண்டுகோள்
நூல்வெளி
தேனரசன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். இவர் வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும். மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். பாடப்பகுதியிலுள்ள கவிதை பெய்து பழகிய மேகம் என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது. |
I. சொல்லும் பொருளும்
- பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்
- வனப்பு – அழகு
- நெடி – நாற்றம்
- பூரிப்பு – மகிழ்ச்சி
- மழலை – குழந்தை
- மேனி – உடல்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மயிலும் மானும் வனத்திற்கு _________ தருகின்றன.
- களைப்பு
- வனப்பு
- மலைப்பு
- உழைப்பு
விடை : வனப்பு
2. மிளகாய் வற்றலின் _________ தும்மலை வரவழைக்கும்.
- நெடி
- காட்சி
- மணம்
- ஓசை
விடை : நெடி
3. அன்னை தான் பெற்ற ______ சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.
- தங்கையின்
- தம்பியின்
- மழலையின்
- கணவனின்
விடை : மழலையின்
4. வனப்பில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
- வனம் + இல்லை
- வனப்பு + இல்லை
- வனப்பு + யில்லை
- வனப் + பில்லை
விடை : வனப்பு + இல்லை
5. வார்ப்பு + எனில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
- வார்ப்எனில்
- வார்ப்பினில்
- வார்ப்பெனில்
- வார்ப்பு எனில்
விடை : வார்ப்பெனில்
III. நயம் அறிக
ஒரே எழுத்திலோ ஓசையிலோ முடியும் இயைபுச் சொற்களைப் பாடலில் இருந்து எடுத்து எழுதுக.
- பிரும்மாக்களே – சேர்ப்பவர்களே
- உடைப்பவனின் – உழவனின்
- சிகரங்களா – அலைகளா – காடுகளா
- பள்ளத்தாக்குகளா – தோட்டங்களா
- வனப்பில்லை – உயிர்ப்பில்லை
IV. குறுவினா
1. தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை யாவை?
தாய்மையின் ஓவியத்தில் அன்பும் பாசமும் நிறைந்திருக்க வேண்டும்.
2. ஒரு கலை எப்பொழுது உயிர்ப்புடையதாக அமையும்?
இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலை வடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயம் இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.
V. சிறுவினா
1. சிற்பங்களும் ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
நீஙகள் பாறை உடைப்பவரின் சிலையை செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீச வேண்டும். உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈர மண்ணின் மணம் வீச வேண்டும். தாயின் மகிழ்ச்சியான உருவத்தை ஓவியமாக வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும், பாசமும் நிறைந்திருக்க வேண்டும். சிறு குழந்தையின் சித்திரத்தை தீட்டினால் அதன் உடலில் பால் மணம் கமழ வேண்டும். ஆல்பஸ் மலைச் சிகரஙகள் உள்ளிட்ட இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலை வடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயம் இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை. |
கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. தேனரசன் ________ பணியாற்றியவர்.
- தமிழாசிரியராகப்
- பொருளாதார நிபுணராக
- அறிவியல் அறிஞராக
- வானியியல் ஆய்வாளராக
விடை: தமிழாசிரியராகப்
2. வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியவர்
- முடியசரன்
- தேனரசன்
- கண்ணதாசன்
- வண்ணதாசன்
விடை: தேனரசன்
3. _________ கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படுகிறது.
- முடியசரன்
- கண்ணதாசன்
- வண்ணதாசன்
- தேனரசன்
விடை: தேனரசன்
4. தேனரசன் படைப்புகளில் பொருந்தாதது
- சிகப்பு மல்லி
- மண்வாசல்
- வெள்ளை ரோஜா
- பெய்து பழகிய மேகம்
விடை: சிகப்பு மல்லி
I. பிரித்து எழுதுக
- கலையுலகம் = கலை + உலகம்
- ஈரமண் = ஈரம் + மண்
- சித்திரமாக்கினால் = சித்திரம் + ஆக்கினால்
- வழித்தெடுக்குமாறு = வழித்து + எடுக்குமாறு
- முக்பொலிவு = முகம் + பொலிவு
- உயிர்ப்பில்லை = உயிர்ப்பு + இல்லை
II. குறுவினா
1. மனிதர்களின் வாழ்வோடு இணைந்து வளர்வது எவை?
கலைகள் மனிதர்களின் வாழ்வோடு இணைந்தே வளர்ந்திருக்கின்றன.
2. எதனைக் கலைஞர்களிடம் தேனரசன் ஒரு வேண்டுகோளாக வைக்கிறார்?
ஒரு கலைஞன் தான் படைக்கும் ஒவ்வொன்றையும் அழகியலோடு படைப்பான்.
கலைப்படைப்பு அழகியலை மட்டும் வெளிப்படுத்தினால் போதாது. அது மானுடத்தைப் பேச வேண்டும்.
இதனைக் கலைஞர்களிடம் தேனரசன் ஒரு வேண்டுகோளாக வைக்கிறார்.
3. பாறை உடைப்பவரின் சிலையை செதுக்கினால், அதில் என்ன வீச வேண்டும்?
பாறை உடைப்பவரின் சிலையை செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீச வேண்டும்.
4. எதில் ஈர மண்ணின் மணம் வீச வேண்டும்?
உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈர மண்ணின் மணம் வீச வேண்டும்.
5. தேனரசன் எழுதியுள்ள கவிதை நூல்கள் எவை?
மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
6. தேனரசன் எந்தெந்த இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்?
வானம்பாடி, குயில், தென்றல்