பாடம் 1.1. விருந்தோம்பல்
விருந்தோம்பல் – பாடல்
மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும் – முன்றுறை அரையனார் |
நூல்வெளி
பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார். இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது. பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இது நானூறு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது. இந்நூலின் ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது. |
I. சொல்லும் பொருளும்
- மாரி – மழை
- வறந்திருந்த – வறண்டிருந்த
- புகவா – உணவாக
- மடமகள் – இளமகள்
- நல்கினாள் – கொடுத்தாள்
- முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்ணை) இங்கு வீட்டைக் குறிக்கிறது
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மரம் வளரத்தால் _________ பெறலாம்
- மாறி
- மாரி
- காரி
- பாரி
விடை : மாரி
2. நீருலையில் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
- நீரு + உலையில்
- நீர் + இலையில்
- நீர் + உலையில்
- நீரு + இலையில்
விடை : நீர் + உலையில்
3. மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________.
- மாரியொன்று
- மாரிஒன்று
- மாரியின்று
- மாரியன்று
விடை : மாரியொன்று
III. குறுவினா
1. பாரி மகளிரின் பெயர்களை எழுதுக
அங்கவை, சங்கவை
2. பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை எவ்வாறு?
மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர்.
பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர்.அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.
கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. திண்ணை என்பதை குறிக்கும் சொல் __________
- மாரி
- புகவா
- மடமகள்
- முன்றில்
விடை : மாரி
2. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் __________
- முன்றுறை அரையனார்
- காரியாசன்
- விளம்பிநாகனார்
- பார்
விடை : முன்றுறை அரையனார்
3. பழமொழி நானூறு நூல்களுள் ஒன்று __________
- பதினெண்கீழ்கணக்கு
- பதினெண்மேல்கணக்கு
- சிற்றிலக்கியம்
- காப்பியம்
விடை : பதினெண்கீழ்கணக்கு
4. முன்றுறை அரையனார் __________ சமயத்தைச் சேர்ந்தவர்
- சமண
- வைணவம்
- பொத்தம்
- சைவ
விடை : சமண
5. முன்றுறை அரையனார் __________ நூற்றாண்டைச் சேர்ந்தவர்
- 7
- 4
- 11
- 2
விடை : 4
6. பாரி மகளிர் _________, _________
- பொன்னி, வசுந்திராதேவி
- அங்கவை, சங்கவை
- குந்தவை, அம்பாலிகை
- அம்பை, துருபதை
விடை : அங்கவை, சங்கவை
7. பொருந்தாததை தேர்க
- மாரி – மழை
- மடமகள் – இளமகள்
- நல்கினாள் – எடுத்துக் கொண்டாள்
- வறந்திருந்த – வறண்டிருந்த
விடை : நல்கினாள் – எடுத்துக் கொண்டாள்
II. சேர்த்து எழுதுக.
- மாரி + ஒன்று = மாரியொன்று
- வறந்து + இருந்து = வறந்திருந்த
- ஒன்று + ஆகு = ஒன்றாகு
- முன்று + இலோ = முன்றிலோ
III. விருந்தோம்பல் பாடலில் உள்ள எதுகை, மோனைச்சொற்களை எழுதுக
மோனைச் சொற்கள்
- பாரி – பாண்மகற்கு
- இன்றி – இல்
எதுகைச் சொற்கள்
- மாரி – பாரி
- பொன்திறந்து – ஒன்றாகு
- முன்றிலோ – இன்றி
IV. வினாக்கள்
1. விருந்தோம்பல் பாடலில் இடம்பெற்றுள்ள பழமொழி என்ன?
ஒன்றுறா முன்றிலோ இல்
2. ஒன்றாகு முன்றிலோ இல் என்னும் பழமொழியின் பொருள் யாது?
ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பதே ஒன்றாகு முன்றிலோ இல் என்னும் பழமொழியின் பொருள் ஆகும்
3. பழமொழி நானூறு பெயர்க்காரணம் கூறுக
ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் பழமொழி நானூறு எனப் பெயர் பெற்றது.
4. முன்றுறை அரையனார்-குறிப்பு எழுதுக
பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார். இவர் கி.பி (பொ.ஆ) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தை சேரந்தவர் என அறிய முடிகிறது |
5. பழமொழி நானூறு குறிப்பு எழுதுக
பழமொழி நானூறு பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று. இது நானூறு பாடல்களை கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் பழமொழி நானூறு எனப் பெயர் பெற்றது. |
6. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையானது எது?
தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ‘விருந்தோம்பல்’ முதன்மையானதாகும்.
7. இலக்கியங்கள் எதைப் பேசுகின்றன?
தமக்கு இல்லாவிட்டாலும் இருப்பதை விருந்தினருக்குத் தந்து மகிழ்ந்த நிகழ்வுகளைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன.
8. கடையெழு வள்ளல்களுள் ஒருவர் யார்?
கடையெழு வள்ளல்களுள் ஒருவர் பாரி.
சில பயனுள்ள பக்கங்கள்