பாடம் 2.2. அறம் என்னும் கதிர்
அறம் என்னும் கதிர் – பாடல்
இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக – முனைப்பாடியார் |
நூல் வெளி
முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர். இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. இவர் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது. அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது. இந்நூலின் பதினைந்தாம் பாடல் நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது. |
I. சொல்லும் பொருளும்
- வித்து – விதை
- ஈன – பெற
- நிலன் – நிலம்
- களை – வேண்டாத செடி
- பைங்கூழ – பசுமையான பயிர்
- வன்சொல் – கடுஞ்சொல்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. காந்தியடிகள் எப்போதும் _________ப் பேசினார்
- வன்சொற்களை
- அரசியலை
- கதைகளை
- வாய்மையை
விடை : வாய்மையை
2. இன்சொல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
- இனிய + சொல்
- இன்மை + சொல்
- இனிமை + சொல்
- இன் + சொல்
விடை : இனிமை + சொல்
3. அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________
- அற கதிர்
- அறுகதிர்
- அறக்கதிர்
- அறம்கதிர்
விடை : அறக்கதிர்
4. இளமை என்னும் சொல்லின் எதிர்ச்சொல் _________
- முதுமை
- புதுமை
- தனிமை
- இனிமை
விடை : முதுமை
III. பொருத்துக
1. விளைநிலம் | அ. உண்மை |
2. விதை | ஆ. இன்சொல் |
3. களை | இ. ஈகை |
4. உரம் | ஈ. வன்சொல் |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ |
IV. குறுவினா
1. அறக்கதிர் விளைய எதனை எருவாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்?
அறக்கதிர் விளைய உண்மையை எருவாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்
2. நீக்கவேண்டிய களை என்று அறநெறிச்சாரம் எதனைக் குறிப்பிடுகிறது?
வன்சொல்லை நீக்கவேண்டிய களை என்று அறநெறிச்சாரம் குறிப்பிடுகிறது
V. சிறுவினா
இளம் வயதிலேயே செய்ய வேண்டிய செயல்களாக முனைப்பாடியார் கூறுவன யாவை?
இனிய சொல்லை விளைநிலமாகக் கொள்ள வேண்டும். அதில் ஈகை என்னும் பண்பை விதையாக கொண்டு விதைக்க வேண்டும். வன்சொல் என்னும் களை நீக்க வேணடும். உண்மை பேசுதல் என்னும் எருவினை இடுதல் வேண்டும். அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும். அப்போது தான் அறமாகிய கதிரைப் பெற முடியும். இளம் வயதில் இச்செயல்களைச் செய்ய வேண்டும் என்று முனைப்பாடியார் கூறிகின்றார். |
கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. _________லை விளைநிலமாகக் கொள்ள வேண்டும்.
- வன்சொல்
- இனிய சொல்
- கதைகளை
- வாய்மையை
விடை : இனிய சொல்
2. _________ என்ற களை நீக்க வேணடும்.
- வன்சொல்
- இனிய சொல்
- கதைகளை
- வாய்மையை
விடை : வன்சொல்
3. முனைப்பாடியாரின் காலம் _________
- கி.பி. 5
- கி.பி. 13
- கி.பி. 10
- கி.பி. 12
விடை : கி.பி. 13
4. அறநெறிச்சாரம் _________ பாடல்களை கொண்டது
- 225
- 223
- 252
- 525
விடை : 225
5. இளமையில் _________ என்னும் நீர் பாய்ச்ச வேண்டும்
- உண்மை பேசுதல்
- கடுஞ்சொல்
- கொடை
- அன்பு
விடை : அன்பு
6. முனைப்பாடியார் ________ புலவர்.
- வைணவ
- பெளத்த
- சமண
- கிறித்துவ
விடை : சமண
7. முனைப்பாடியார் _________ என்னும் ஊரைச் சேர்ந்தவர்
- திருமுனைப்பாடி
- கயத்தூர்
- திருக்கூர்
- ஸ்ரீவைகுண்டம்
விடை : திருமுனைப்பாடி
8. முனைப்பாடியார் _________ நூற்றாண்டைச் சேர்ந்தவர்
- 7
- 13
- 5
- 18
விடை : 13
9. அறநெறிச்சாரம் என்னும் நூலினை எழுதியவர்
- உமறுப்புலவர்
- கண்ணதாசன்
- முனைப்பாடியார்
- வண்ணதாசன்
விடை : முனைப்பாடியார்
9. அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் _______ எனப் பெயர்பெற்றது.
- அறவுரைக்கோவை
- நான்மணிக்கடிகை
- அறநெறிச்சாரம்
- நீதிச்சாரம்
விடை : அறநெறிச்சாரம்
II. அறம் என்னும் கதிர் பாடலில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எழுதுக
மோனைச் சொற்கள்
- அன்புநீர் – அறக்கதிர்
எதுகைச் சொற்கள்
- இன்சொல் – வன்சொல் – அன்புநீர்
- விளைநிலனா – களைகட்ட
III. வினாக்கள்
1. முனைப்பாடியார் – குறிப்பு வரைக
முனைப்பாடியார் திருமுனைப்பாடி எனனும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர். இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. இவர் இயற்றிய நூல் அறநெறிச்சாரம்
2. அறநெறிச்சாரம் – குறிப்பு வரைக
முனைப்பாடியார் இயற்றிய நூல் அறநெறிச்சாரம். முனைப்பாடியார் 225 பாடல்களைக காெண்டது. அறநெறிகளைத் தாெகுத்துக் கூறுவதால் இநநூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது.
3. அறநெறிச்சாரம் பெயர் வரக்காரணம் யாது?
அறநெறிகளைத் தாெகுத்துக் கூறுவதால் இநநூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது.
4. எந்த பண்பை விதையாக விதைக்க வேண்டும்?
ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும்.
5. எதனை விளைநிலமாகக் கொள்ள வேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்?
இனிய சொல்லை விளைநிலமாகக் கொள்ள வேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்
6. வாழ்வு முழுமைக்கும் பயனளிப்பது எது?
இளமைப்பருவத்தில் கல்வியை மட்டுமல்லாது நற்பண்புகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் . அது வாழ்வு முழுமைக்கும் பயனளிக்கும்.
சில பயனுள்ள பக்கங்கள்