பாடம் 2.3. ஒப்புரவு நெறி
நூல் வெளி
மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். குன்றக்குடி திருமடத்தின் தலைவராக விளங்கிய இவர் தமது பேச்சாலும் எழுத்தாலும் இறைத்தொண்டும் சமூகத் தொண்டும் இலக்கியத் தொண்டும் ஆற்றியவர். திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர். நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். அருளோசை, அறிக அறிவியல் உள்ளிட்ட சில இதழ்களையும் நடத்தியுள்ளார். ஒப்புரவு நெறி என்னும் தலைப்பில் அடிகளார் கூறியுள்ள கருத்துகள் நம் பாடப் பகுதியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. |
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது ________ நெறி
- தனியுடமை
- பொதுவுடமை
- பொருளுடைமை
- ஒழுக்கமுடைமை
விடை : பொதுவுடமை
2. செல்வத்தின் பயன் ________ வாழ்வு.
- ஆடம்பர
- நீண்ட
- ஒப்புரவு
- நோயற்ற
விடை : ஒப்புரவு
3. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை ________ என்றும் கூறுவர்.
- மருந்து
- மருத்துவர்
- மருத்துவமனை
- மாத்திரை
விடை : மருந்து
4. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் ________.
- பாரதியார்
- பாரதிதாசன்
- முடியரசன்
- கண்ணதாசன்
விடை : பாரதிதாசன்
II. எதிர்ச்சொற்களைப் பொருத்துக.
1. எளிது | புரவலர் |
2. ஈதல் | அரிது |
3. அந்நியர் | ஏற்றல் |
4. இரவலர் | உறவினர் |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ |
III. தொடர்களில் அமைத்து எழுதுக.
1. குறிக்கோள்
- விளையாட்டு வெற்றியை குறிக்கோளாக வைத்து விளையாட வேண்டும்
2. கடமைகள்
- நம் வீட்டில் தந்தைக்கு பல கடமைகளை நமக்காக புரிவார்
3. வாழ்நாள்
- தம் வாழ்நாள் முழுவதும் அன்னை தெரசா சமூக நலனுக்காகவே அர்ப்பணித்தார்
4. சிந்தித்து
- சிந்தித்து செயல்பட்டால் வாழ்வில் பல துன்பங்களை வெல்லலாம்
IV. குறுவினா
1. பொருளீட்டுவதை விடவும் பெரிய செயல் எது?
பொருளீட்டுவதை விடவும் பெரிய செயல் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்
2. பொருளீட்டுவதன் நோக்கமாகக் குன்றக்குடி அடிகளார் கூறுவது யாது?
மற்றவர்களுக்கு வழங்கி மகிழ்வித்து மகிழ, வாழ்வித்து வாழப் பொருள் தேவை என்பதே பொருளீட்டலுக்கான நோக்கமாகும்.
V. சிறுவினா
1. ஒப்புரவுக்கு அடிகளார் தரும் விளக்கம் யாது?
ஒருவர் செய்யும் செயலானது அது தரும் பயனைவிட, செய்பவரின் மனப்பாங்கு, உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது. தரத்தைக் காட்டுகிறது. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுதல் மட்டும் போதாது. உதவி செய்தல் எதற்காக? தற்காப்புக்காகவும் இலாபத்திற்காகவும் கூட உதவி செய்யலாமே! சொல்லப்போனால் இத்தகைய உதவிகள் ஒரு வகையில் வாணிகம் போலத்தான். அதே உதவியைக் கட்டுப்பாட்டு உணர்வுடன், உதவி பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக நினைந்து, உதவிசெய்வதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு ஆகும். |
2. ஊருணியையும் மரத்தையும் எடுத்துக்காட்டிக் குன்றக்குடி அடிகளார் கூறும்
செய்திகள் யாவை?
ஊருணி, தேவைப்படுவோர் அனைவரும் தண்ணீர் எடுத்துக் குடிப்பதற்கு உரிமை உடையது. அதைத் தடுப்போர் யாருமில்லை. ஊருணித்தண்ணீர் எடுத்து அனுபவிக்கப்படுவது. பழுத்த பயன் மரத்தின் கனிகளை அனைவரும் எடுத்து அனுபவிக்கலாம். பயன்மரம் பழங்களைத் தருவது உரிமை எல்லைகளைக் கவனத்தில் கொண்டல்ல. மருந்துமரம் உதவி செய்தலில் தன்னை மறந்த நிலையிலான பயன்பாட்டு நிலை ஒன்றே காணப் பெறுகிறது. நோயுடையார் எல்லாரும் பயன்படுத்தலாம். ஒப்புரவை விளக்கப் பயன்படுத்தியுள்ள இந்த உவமைகள் இன்றும் பயன்படுத்தலாம். |
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. _______________ தனித்து வாழப் பிறந்தவர்கள் அல்லர்.
விடை : மனிதர்கள்
2. ஒப்புரவு நெறியை அறிமுகம் செய்வது _______________
விடை : திருக்குறள்
3. ஊருளி, பயன்மரம் பற்றி குறிப்பிடும் நூல் _______________
விடை : திருக்குறள்
4. வாழ்க்கையின் கருவி _______________
விடை : பொருள்
5. ஊருணியை அகழ்ந்தவன் _______________
விடை : மனிதன்
6. மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் __________
விடை : குன்றக்குடி அடிகளார்
7. குன்றக்குடி அடிகளார் __________ நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்.
விடை : திருக்குறள்
8. குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்கள் __________, __________
விடை : அருளோசை, அறிக அறிவியல்
9. ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும் __________ திருவள்ளுவரின் வாழும் நெறி
விடை : பொதுவுடைமை நெறியே
10. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் __________
விடை : பாரதிதாசன்
11. செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே என்ற பாடல் வரிகள் __________ என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.
விடை : புறநானூறு
II. வினாக்கள்
1. எது சிறந்த பண்பாகும்?
பிறருக்கு உதவி செய்யும் பொழுது அவர்களுக்குத் தாழ்வு ஏற்படாவண்ணம் உதவுவதே சிறந்த பண்பாகும்.
2. ஒப்புரவு நெறி என்றால் என்ன?
அறநெறியில் பொருளீட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஒப்புரவு நெறியாகும்.
3. திருவள்ளுவரின் வாழும் நெறி பற்றி கூறுக
“ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும்” என்னும் பொதுவுடைமை நெறியே திருவள்ளுவரின் வாழும் நெறி
4. ஒருவர் செய்யும் செயலானது எதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது?
ஒருவர் செய்யும் செயலானது அது தரும் பயனைவிட, செய்பவரின் மனப்பாங்கு, உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது.
5. உலகினர் விரும்புமாறு உதவி செய்து வாழ்பவரது செல்வமானது எவ்வாறு பயன்படும்?
உலகினர் விரும்புமாறு உதவி செய்து வாழ்பவரது செல்வமானது ஊருணியில் நிரம்பிய நீர்போலப் பலருக்கும் பயன்டும்
6. நற்ண்பு உடையவரிடம் செல்வம் சேர்வது எதைப் போன்றது?
நற்ண்பு உடையவரிடம் செல்வம் சேர்வது ஊருக்குள் பழமரத்தில் பழங்கள் பழுத்திருப்பதைப் போன்றது
7. மனிதர்கள் தம் படைப்பாற்றல் கொண்டு படைத்தவையாக குன்றக்குடி அடிகளார் கூறுவன யாவை?
- ஊருணி
- பயன்மரம்
- மருந்து மரம்
8. குன்றக்குடி அடிகளார் இயற்றிய நூல்கள் யாவை?
- நாயன்மார் அடிச்சுவட்டில்
- குறட்செல்வம்
- ஆலயங்கள் சமுதாய மையங்கள்
9. குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்கள் யாவை?
- அருளோசை
- அறிக அறிவியல்
சில பயனுள்ள பக்கங்கள்