பாடம் 3.2. தன்னை அறிதல்
நூல்வெளி
சே. பிருந்தா புகழ்பெற்ற பெண்கவிஞர்களுள் ஒருவர். மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். இக்கவிதை “மகளுக்குச் சொன்ன கதை” என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது. |
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கூடுகட்டத் தெரியாத பறவை _______
- காக்கை
- குயில்
- சிட்டுக்குருவி
- தூக்கணாங்குருவி
விடை : குயில்
2. தானொரு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- தா + ஒரு
- தான் + னொரு
- தான் + ஒரு
- தானே + ஒரு
விடை : தான் + ஒரு
II. குறு வினா
1. காக்கை ஏன் குயில் குஞ்சை போகச் சொன்னது?
காக்கை கூட்டில் உள்ளது காக்கைக் குஞ்சு அல்ல. குயில் குஞ்சு தான் என்று ஒரு நாள் தெரிய வந்தது. எனவே, இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி குயில் குஞ்சைப் போகச் சொன்னது.
2. குயில் குஞ்சு தன்னை எப்போது ‘குயில்’ என உணர்ந்தது?
ஒரு விடியலில் குயில் குஞ்ச “கூ” என்று கூவயிது. அன்று தான் ஒரு “குயில்” என உணர்ந்தது.
III.சிறு வினா
குயில் குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கிய நிகழ்வை எழுதுக
காக்கை கூட்டில் உள்ளது காக்கைக் குஞ்சு அல்ல. குயில் குஞ்சு தான் என்று ஒரு நாள் தெரிய வந்தது. எனவே, இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி குயில் குஞ்சைப் போகச் சொன்னது. அதனால் தாய் காக்கையை விட்டுச் செல்ல முடியவில்லை. அந்த மரத்திலேயே வாழ ஆரம்பித்தது. “கா” என்று கத்த முயற்சித்தது, அதனால் முடியவில்லை. அதற்குக் கூடு கட்டத் தெரியாது. அம்மா, அப்பா, தோழர் யாரும் இல்லை. குளிர், மழை, வெயில் ஆகியவற்றை கடந்தது. தானே இரை தேடத் தொடங்கியது. வாழ்க்கை வாழப் பழகி விட்டது. ஒரு விடியலில் குயில் குஞ்ச “கூ” என்று கூவயிது. அன்று தான் ஒரு “குயில்” என உணர்ந்தது. |
கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. தன்னை அறிதல் கவிதை இடம் பெற்ற நூல்
- மழை பற்றிய பகிர்தல்கள்
- வீடு முழுக்க வானம்
- மகளுக்குச் சொன்ன கதை
- எதுவுமில்லை
விடை : மகளுக்குச் சொன்ன கதை
2. குயில் _______ன் கூட்டில் முட்டையிட்டது
- காக்கை
- குருவி
- குயில்
- புறா
விடை : காக்கை
3. காக்கை குஞ்சு _______ தன் அம்மா காக்காவை எவ்வாறு அழைக்க முயற்சி செய்தது
- கா
- கூ
- லொள்
- மியாவ்
விடை : கா
4. குயில் குஞ்சு _______ கூவியது
- கா
- கூ
- லொள்
- மியாவ்
விடை : கூ
4. சே. பிருந்தா எழுதியுள்ள நூல்களில் பொருந்தாதது
- மழை பற்றிய பகிர்தல்கள்
- வீடு முழுக்க வானம்
- மகளுக்குச் சொன்ன கதை
- ஏழாவது கால்கள்
விடை : ஏழாவது கால்கள்
II. குறு வினா
1. காக்கையின் கூட்டில் முட்டையிட்டது எது?
குயில் காக்கையின் கூட்டில் முட்டையிட்டது
2. காக்கையைப் போல கரைய முயல்வது எது?
குயில் குஞ்சு காக்கையைப் போல கரைய முயன்றது
3. தன்னை அறிதல் என்ற கவிதையில் உட்பொருள் யாது?
நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகள் புரியலாம்
4. “தன்னை அறிதல்” கவிதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது
“தன்னை அறிதல்” கவிதை “மகளுக்கு சொன்ன கதை” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது
5. வாழ்க்கை எப்படி எளிதாகும்?
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தனித்தன்மையும், தனித்திறமையும் இருக்கும். அதை அறியாத வரையில் எதிர்காலம் அச்சமூட்டும். நாம் யார், நம் ஆற்றல் என்ன என்பதை உணர்ந்து கொண்டால் வாழ்க்கை எளிதாகிவிடும். |
6. சே.பிருந்தா குறிப்பு வரைக
சே.பிருந்தா புகழ்பெற்ற பெண் கவிஞர்களுள் ஒருவர். மழை பற்றி பகிர்தல்கள். வீடு முழுக்க வானம், மகளுக்கு சொன்ன கதை ஆகிய நூல்களை எழுதியுள்ளார். |
சில பயனுள்ள பக்கங்கள்