பாடம்.9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
பாடம்.9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
1. வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்படும் திரவ உலோகம்
- தாமிரம்
- பாதரசம்
- வெள்ளி
- தங்கம்
விடை : பாதரசம்
2. இரசவாதிகள் நீரை குறிக்கப்பயன்படுத்திய படக்குறியீடு
விடை : இ
3. எந்தத் தனிமத்தின் பெயர் கோள்களின் பெயரிலிருந்து பெறப்படவில்லை?
- புளுட்டோனியம்
- நெப்டியூனியம்
- யுரேனியம்
- பாதரசம்
விடை : பாதரசம்
4. பாதரசத்தின் குறியீடு
- Ag
- Hg
- Au
- Pb
விடை : Hg
5. கம்பியாக நீளும் தன்மையை பெற்றுள்ள அலோகம் எது?
- நைட்ரஜன்
- ஆக்ஸிஜன்
- குளோரின்
- கார்பன்
விடை : கார்பன்
6. உலோகங்களை அவற்றின் தகடுகளாக மாற்ற உதவும் பண்பு எது?
- கம்பியாக நீளும் பண்பு
- தகடாக விரியும் பண்பு
- கடத்துத்திறன்
- கடத்துத்திறன்
விடை : தகடாக விரியும் பண்பு
7. மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்
- கார்பன்
- ஆக்ஸிஜன்
- அலுமினியம்
- அலுமினியம்
விடை : கார்பன்
8. கரிக்கோலின் (பென்சிலின்) நடுத்தண்டில் இருப்பது
- கிராஃபைட்
- வைரம்
- அலுமினியம்
- கந்தகம்
விடை : கிராஃபைட்.
9. மூலக்கூறுகளின் அமைப்பைக் கொண்டு பின்வரும் பொருள்களின் இயற்பியல் நிலைகளை அடையாளம் காண்க
- A – வாயு, B – திண்மம், C – திரவம்
- A – திரவம், B – திண்மம், C – வாயு
- A – வாயு, B – திண்மம், C – திரவம்
- A – திரவம், B – வாயு, C – திண்மம்
விடை : A – வாயு, B – திண்மம், C – திரவம்
10. பருப்பொருள்களில் அடங்குவது ________________
- அணுக்கள்
- மூலக்கூறுகள்
- அயனிகள்
- மேற்கண்ட அனைத்தும்
விடை : மேற்கண்ட அனைத்தும்
11. பின்வரும் எந்தத் தனிமம் குறைந்த திருபுத்தாங்கும் பண்பைக் கொண்டுள்ளது?
- வெள்ளி
- தாமிரம்
- துத்தநாகம்
- அலுமினியம்
விடை : துத்தநாகம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. உலோகங்களின் பண்புகளையும் அலோகங்களின் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் _____ என அழைக்கப்படுகின்றனர்
விடை : உலோகப்போலி
2. டங்ஸ்டனின் குறியீடு _______________
விடை : W
3. பெரும்பான்மையான உலோகங்களின் உருகுநிலை அலோகங்களின் உருகு நிலையைவிட ______
விடை : அதிகம்
4. நீரில் உள்ள தனிமங்கள் ______ மற்றும் _______
விடை : ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
5. ______________________ குறைக்கடத்தி தொழிலில் பயன்படுகிறது.
விடை : சிலிக்கான்
lll. சரியா? தவறா? என ஆராய்க தவறாக இருப்பின் சரியான சொற்றொடரை எழுதுக.
1. உலோகங்கள் பொதுவாக நல்ல மின்கடத்திகள் ஆனால் வெப்பத்தைக் கடத்துவதில்லை
விடை : தவறு
சரியான கூற்று : உலோகங்கள் பொதுவாக நல்ல மின்கடத்திகள் மேலும் வெப்பத்தைக் கடத்தும்
2. அறை வெப்பநிலை மற்றும் அதற்குமேல் உள்ள வெப்பநிலைகளில் காலியம் என்ற உலோகம் திண்ம நிலையில் உள்ளது.
விடை : தவறு
சரியான கூற்று : அறை வெப்பநிலை மற்றும் அதற்குமேல் உள்ள வெப்பநிலைகளில் காலியம் என்ற உலோகம் திரவ நிலையில் உள்ளது.
3. ஒரு அணுவைக்கொண்டு சேர்மங்களை உருவாக்கலாம்.
விடை : தவறு
சரியான கூற்று : ஒரு அணுவைக்கொண்டு சேர்மங்களை உருவாக்க முடியாது.
4. நிலக்கரியை கம்பியாக நீட்டலாம்.
விடை : தவறு
சரியான கூற்று : நிலக்கரியை கம்பியாக நீட்ட முடியாது
5. துத்தநாகம் கம்பியாக நீளும் பண்பு அதிகம் கொண்ட உலோகம்.
விடை : தவறு
சரியான கூற்று : தாமிரம் கம்பியாக நீளும் பண்பு அதிகம் கொண்ட உலோகம்.
IV. பொருள்களையும் அவற்றின் பயன்களையும் பொருத்துக
1. இரும்பு | மின்கம்பிகள் தயாரிக்க |
2. தாமிரம் | தையல் ஊசி தயாரிக்க |
3. டங்ஸ்டன் | இராக்கெட் எரிபொருள் பற்றவைப்பானாக |
4. போரான் | மின் விளக்கிற்கான இழைகள் செய்ய |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ |
2. பின்வருவனவற்றைப் பொருத்துக.
1. அணு | பருப்பொருள்களின் கட்டுமான அலகு |
2. தனிமம் | பல்வேறு வகை அணுக்கள் |
3. சேர்மம் | ஒரே வகை அணுக்கள் |
4. மூலக்கூறு | பருப்பொருளின் மிகச்சிறிய அலகு |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 -ஆ, 4 – அ |
V. மிகக்குறுகிய விடைத் தருக
1. கம்பியாக நீளும் தன்மை என்றால் என்ன?
- உலோகங்களை இழுத்து மெல்லிய கம்பியாக மாற்றிவிடலாம்
- உலோகங்களின் இப்பண்பு கம்பியாக நீளும் பண்பு என அழைக்கப்படுகிறது
- எ.கா. : தாமிரக் கம்பிகள்
2. பின்வரும் சேர்மங்களில் உள்ள தனிமங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் எழுதுக.
அ. கார்பன் மோனாக்சைடு
- கார்பன் – C
- ஆக்ஸிஜன் – O
ஆ. சலவை சோடா
- சோடியம் – Na
- கார்பன் – C
- ஆக்ஸிஜன் – O
3. பின்வரும் தனிமங்களின் குறியீடுகளை எழுதுக.
அ. ஆக்ஸிஜன்
- ஆக்ஸிஜன் – O
ஆ. தங்கம்
- தங்கம் – Au
இ. கால்சியம்
- கால்சியம் – Ca
ஈ. காட்மியம்
- காட்மியம் – Cd
உ. இரும்பு
- இரும்பு – Fe
4. கத்தியால் வெட்டுமளவுக்கு மென்மையான இரண்டு தனிமங்களைக் குறிப்பிடுக
- சோடியம் (Na)
- பொட்டாசியம் (K)
5. நாம் உயிர் வாழ்வதற்கு மிக அவசியமானதும், அனைத்த உயிரினங்களும் சுவாசிக்கும்போது உள்ளிழுத்துக் கொள்வதுமான அலோகம் எது?
ஆக்ஸிஜன்
6. ஏன் ஆலய மணிகள் உலோகங்களால் செய்யப்படுகின்றன?
உலோகங்கள தட்டப்படும்பாேது தனித்துவமான ஒலி எழுப்பும் பண்பை பெற்றுள்ளன. இப்பண்பு ஆலய மணிகளை செய்ய பயன்படுத்தப்படுகிறது.
7. வேதிக்குறியீடுகள் தரும் தகவல்கள் யாவை?
தனிமங்களையும், வேதி வாய்ப்பாடுகளையும் வேதிகுறியீடுகள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்
8. உலோக போலிகளுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
ஆர்சனிக், ஜெர்மானியம்
9. திரவ நிலையில் உள்ள ஏதேனும் மூன்று சேர்மங்களைக் குறிப்பிடுக.
- நீர்
- அசிட்டிக் அமிலம்
- ஹைட்ரோகுளோரிக் அமிலம்
10. உலோகப் போலிகளின் ஏதேனும் மூன்று பண்புகள் குறிப்பிடுக.
- உலோகப் போலிகள் அனைத்தும் அறைவெப்பநிலையில் திண்மங்கள்.
- உலோகப் போலிகள் மற்ற உலோகங்களுடன் சேர்ந்து உலோகக் கலவைகளை ஏற்படுத்துகின்றன.
- உளோகங்களை விட குறைந்த அளவே மின்சாரத்தையும், வெப்பத்தையும் கடக்கிறது.
VI. குறுகிய விடைத் தருக (புரிதல் வினாக்கள்)
1. ஊறுகாயை அலுமினிய பாத்திரத்தில் வைக்கலாமா? விளக்குக.
- ஊறுகாயில் காணப்படும் அமிலங்கள் அலுமினியத்துடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ஊறுகாய் கெட்டு விடும்
- எனவே ஊறுகாயை அலுமினிய பாத்திரத்தில் வைக்கக் கூடாது
2. உலோகங்களுக்கும் அலோகங்களுக்கும் உள்ள வேறுபாடுகளில் ஏதேனும் நான்கினை அட்டவணைப்படுத்துக.
பண்பு | உலாேகம் | அலாேகம் |
திண்ம நிலையில் தோற்றம் | உலோக பளப்பளப்புடையவை | பளப்பளப்பற்றவை |
உருகுநிலை | பொதுவாக அதிகம் | பொதுவாக குறைவு |
கொதிநிலை | பொதுவாக அதிகம் | பொதுவாக குறைவு |
அடர்த்தி | பொதுவாக அதிகம் | பொதுவாகக் குறைவு |
வெப்பம் மற்றும் மின் கடத்தும் திறன் | நற்கடத்திகள் | அரிதிற்கடத்திகள் |
3. திரிபுத்தாங்கும் பண்பு – வரையறு
அலோகங்கள் திரிபுத் தாங்கும் பண்பு பெற்றிருப்பதில்லை இருப்பினும் கார்பன் இழை (கார்பனின் ஒரு வடிவம்) எஃகுக்கு இணையான திரிபுத்தாங்கும் பண்பினைப் பெற்றுள்ளது.
4. சமையல் பாத்திரங்கள் ஏன் அலுமினியம் மற்றும் பித்தளையில் செய்யப்படுகின்றன?
- அலுமினியம் மற்றும் பித்தளை சிறந்த வெப்பக்கடத்திகள் ஆகும்
- மேலும் இவை உணவுப் பொருட்களடன் வினைபுரியாத வகையில் சமையல் பாத்திரங்கள் செய்ப்படுகின்றன. மேலும் விரைவாக சமைப்பதற்கு உதவுகின்றன
எனவே சமையல் பாத்திரங்கள் அலுமினியம் மற்றும் பித்தளையில் செய்யப்படுகின்றன
5. ரசவாதம் வரையறு
- சிலர் குறைந்த மதிப்புடைய உலோகங்களை தங்கமாக மாற்ற முயற்சித்தனர்.
- அவர்களின் செயலுக்கு இரசவாதம் என்று பெயர்.
- அவர்கள் இரசவாதிகள் என அழைக்கப்பட்டனர்.
6. பின்வரும் குறியீடுகளால் குறிக்கப் பெறும் தனிமங்களின் பெயர்களை எழுதுக.
அ. Na
- சோடியம்
ஆ. Ba
- பேரியம்
இ. W
- டங்க்ஸ்டன்
ஈ. U
- யுரேனியம்
7. ஏதேனும் ஆறு அலோகங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் எழுதுக.
- கார்பன் – C
- ஆக்ஸிஜன் – O
- கந்தகம் – S
- நைட்ரஜன் – N
- பாஸ்பரஸ் – P
- குளோரின் – Cl
8. ஏதேனும் நான்கு சேர்மங்களையும் அவற்றின் பயன்களையும் எழுதுக.
நீர்
- குடிநீராக மற்றும் கரைப்பானாகப் பயன்படுகிறது
சர்க்கரை
- இனிப்புகள், மிட்டாய்கள் பழச்சாறுகள் தயாரிக்கப் பயன்படுகிறது
நீற்றிய சுண்ணாம்பு
- சுவர்களில் வெள்ளை அடிப்பதற்குப் பயன்படுகிறது.
சுண்ணாம்புக் கல்
- சுண்ணக்கட்டி தயாரிக்கப் பயன்படுகிறது.
9. அலங்கார நகைத் தயாரிப்பில் பயன்படும் உலோகங்களை குறிப்பிடுக.
- தங்கம்
- வெள்ளி
- தாமிரம்
10. பின்வரும் சேர்மங்களின் பயன்களை குறிப்பிடுக.
அ. ரொட்டிசோடா
- தீயணைக்கும் சாதனங்களில் பேக்கிங் பவுடர் தயாரிப்பில் கேக், ரொட்டி தயாரிப்பில் பயன்படுகிறது.
ஆ. சலவைத்தூள்
- சலவைத் தொழிலில், வெளுப்பானாகவும், கிருமி நாசினியாகவும், குடிநீர் சுத்திகரிப்பிலும் பயன்படுகிறது.
இ. சுட்ட சுண்ணாம்பு
- சிமெண்ட் மற்றும் கண்ணாடித் தயாரிப்பில் பயன்படுகிறது.