பாடம்.10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
பாடம்.10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
1. காகிதம் எரிதல் என்பது ஒரு _________ மாற்றம்.
- இயற்பியல்
- வேதியியல்
- இயற்பியல் மற்றும் வேதியியல்
- நடுநிலையான.
விடை : வேதியியல்
2. தீக்குச்சி எரிதல் என்பது __________ அடிப்படையிலான வேதி வினைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
- இயல் நிலையில் சேர்தல்
- மின்சாரம்
- ஒளி
- வினைவேக மாற்றி
விடை : வினைவேக மாற்றி
3. __________ உலோகம் துருப்பிடித்தலுக்கு உள்ளாகிறது.
- வெள்ளீயம்
- சோடியம்
- காப்பர்
- இரும்பு
விடை : இரும்பு
4. வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்கு காரணமான நிறமி ________
- நீரேறிய இரும்பு (II) ஆக்சைடு
- மெலனின்
- ஸ்டார்ச்
- ஓசோன்
விடை : மெலனின்
5. பிரைன் என்பது ___________ இன் அடர் கரைசல் ஆகும்.
- சோடியம் சல்பேட்
- சோடியம் குளோரைடு
- கால்சியம் குளோரைடு
- சோடியம் புரோமைடு
விடை : சோடியம் குளோரைடு
6. சுண்ணாம்புக்கல்___________ ஐ முதன்மையாகக் கொண்டுள்ளது.
- கால்சியம் குளோரைடு
- கால்சியம் கார்பனேட்
- கால்சியம் நைட்ரேட்
- கால்சியம் சல்பேட்
விடை : கால்சியம் கார்பனேட்
7. கீழ்கண்ட எது மின்னாற்பகுத்தலை தூண்டுகிறது?
- வெப்பம்
- ஒளி
- மின்சாரம்
- வினைவேக மாற்றி
விடை : மின்சாரம்
8. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் __________ வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.
- நைட்ரஜன்
- ஹைட்ரஜன்
- இரும்பு
- நிக்கல்
விடை : இரும்பு
9. மழை நீரில் கரைந்துள்ள சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் _________ ஐ உருவாக்குகின்றன.
விடை : அமில மழை
10. _________ பசுமை இல்ல விளைவுக்குக் காரணமாகின்றன.
- கார்பன் டை ஆக்சைடு
- மீத்தேன்
- குளோரோ புளோரோ கார்பன்கள்
- இவை அனைத்தும்
விடை : இவை அனைத்தும்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. ஒரு வேதிவினையில் வினைபடுபொருள்கள் → _______________
விடை : வினைவிளைபொருள்கள்
2. ஒளிச்சேர்க்கை என்பது _________ முன்னிலையில் நிகழும் ஒரு வேதி வினையாகும்.
விடை : ஒளியின்
3. இரும்பாலான பொருள்கள் ______________ உதவியுடன் துருப்பிடிக்கின்றன.
விடை : ஈரக்காற்றின்
4. ____________ யூரியா தயாரிப்பதில் அடிப்படைப் பொருளாக உள்ளது.
விடை : அம்மோனியா
5. பிரைன் கரைசலின் மின்னாற்பகுத்தல் _________ , __________ வாயுக்களைத் தருகிறது.
விடை : குளோரின் மற்றும் ஹைட்ரஜன்
6. ______ ஒரு வேதிவினையின் வேகத்தை மாற்றும் வேதிப்பொருள் எனப்படும்.
விடை : வினைவேக மாற்றி
7. வெட்டப்பட்ட காய்கறிகள், பழங்கள் பழுப்பாக மாறக் காரணம் ________ என்ற நொதியாகும்.
விடை : பாலி பீனால் ஆக்சிடேஸ்
lll. சரியா? தவறா? என ஆராய்க தவறாக இருப்பின் சரியான சொற்றொடரை எழுதுக.
1. ஒரு வேதிவினை என்பது தற்காலிக வினையாகும்.
விடை : தவறு
சரியான கூற்று : ஒரு வேதிவினை என்பது நிரந்தர வினையாகும்.
2. ஒரு வேதிவினையின் பொழுது நிறமாற்றம் நிகழலாம்.
விடை : சரி
3. சுட்ட சுண்ணாம்பிலிருந்து நீற்றுச்சுண்ணாம்பு உருவாவது ஒரு வெப்பக்கொள் வினையாகும்.
விடை : தவறு
சரியான கூற்று : சுட்ட சுண்ணாம்பிலிருந்து நீற்றுச்சுண்ணாம்பு உருவாவது ஒரு வெப்பஉமிழ் வினையாகும்.
4. CFC என்பது ஒரு மாசுபடுத்தியாகும்
விடை : சரி
5. சில காய்கறிகள், பழங்களை வெட்டி வைத்தால் பழுப்பு நிறமாக மாறுவது மெலனின் உருவாதலினால் ஆகும்.
விடை : சரி
IV. பொருத்துக
பொருத்துக – அ
1. துருப்பிடித்தல் | ஒளிச்சேர்க்கை |
2. மின்னாற்பகுத்தல் | ஹேபர் முறை |
3. வெப்ப வேதி வினை | இரும்பு |
4. ஒளி வேதி வினை | பிரைன் |
5. வினைவேக மாற்றம் | சுண்ணாம்புக்கல் சிதைவடைதல் |
விடை : 1 – இ, 2 – ஆ, 3 – உ, 4 – அ, 5 – ஆ |
பொருத்துக – ஆ
1. ஊசிப்போதல் | சிதைவடைதல் |
2. ஓசோன் | உயிரி வினையூக்கி |
3. மங்குதல் | ஆக்சிஜன் |
4. ஈஸ்ட் | வேதிவினை |
5. கால்சியம் ஆக்சைடு | மீன் |
விடை : 1 – உ, 2 – இ, 3 – ஈ, 4 – ஆ, 5 – அ |
V. ஓரிருசொற்களில் விடையளி்:
1. வேதிவினை என்பதை வரையறுக்க.
- ஒரு வேதி மாற்றம் என்பது நிரந்தரமான, மீளாத்தன்மையுடைய மற்றும் புதிய பொருளை உருவாக்கக்கூடிய மாற்றமாகும்.
- வேதியியல் மாற்றங்களை வேதிவினைகள் என்றழைக்கலாம்.
2. ஒரு வேதிவினை நிகழ்வதற்குத் தேவையான பல்வேறு நிபந்தனைகளை எழுதுக.
வேதிவினைகளைக் கீழ்க்கண்டவற்றின் மூலம் நிகழ்த்தலாம்.
- இயல்நிலையில் சேர்தல்
- கரைசல் நிலையில் உள்ள வினைபடுபொருள்கள்
- மின்சாரம்
- வெப்பம்
- ஒளி
- வினைவேகமாற்றி
3. வினைவேக மாற்றம் என்பதை வரையறுக்க.
வினைவேக மாற்றம் என்பது வினைவேக மாற்றியைக் கொண்டு ஒரு வேதி வினையின் வேகத்தை மாற்றுவதாகும்.
4. ஒரு இரும்பு ஆணியை காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும் போது என்ன நிகழ்கிறது?
- ஒரு இரும்பு ஆணியை காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும்பொழுது காப்பர் சல்பேட் கரைசலின் நீல நிறம் மெதுவாக பச்சை நிறத்திற்கு மாறுகிறது.
- ஏனெனில் இரும்பு காப்பர் சல்பேட் கரைசலுடன் வேதிவினைக்குட்படுகிறது.
5. மாசுபடுதல் என்றால் என்ன?
சுற்றுச்சூழலின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய நிகழ்வு மாசுபடுதல் எனப்படும்.
மாசுபடுதலை நிகழ்த்தும் பொருள்கள் மாசுபடுத்திகள் எனப்படும்.
6. மங்குதல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
பளபளப்பான உலோகங்கள் மற்றும் பாத்திரங்களின் மேற்பரப்பு அவற்றின் வேதிவினைகளின் காரணமாக பளபளப்புத் தன்மையை இழக்கின்றன.
இதற்கு மங்குதல் எனப் பெயர்
எ.கா.
வெள்ளிப் பொருள்கள் வளிமண்டலக் காற்றுடன் தொடர்புக்கு வரும் பொழுது கருமை நிறமுடையதாக மாறுகின்றன.
7. பிரைன் கரைசலை மின்னாற்பகுக்கும் பொழுது நிகழ்வது என்ன?
- பிரைன் கரைசலை அடர் சோடியம் குளோரைடு கரைசல் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்பொழுது குளோரின், ஹைட்ரஜன் வாயுக்கள் வெளிவருகின்றன.
- சோடியம் ஹைட்ராக்சைடு கூடுதலாக உருவாகிறது.
- தொழிற்சாலைகளில் பெருமளவு குளோரின் தயாரிக்க இம்முறை பயன்படுகிறது.
8. கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்தும் பொழுது கால்சியம் ஆக்சைடும், ஆக்சிஜனும் கிடைக்கின்றன. இது வெப்ப உமிழ்வினையா? வெப்பக் கொள்வினையா?
வெப்ப கொள்வினை
9. ஒரு வேதிவினையில் வினைவேக மாற்றியின் பங்கு என்ன?
வினைவேக மாற்றி வேதிவினைக்கு உட்படாமல் வினையின் வேகத்தை மாற்ற உதவுகின்றன. இதனால் வேதி வினையின் வேகம் மாறுகின்றது.
10. ஏன் ஒளிச்சேர்க்கை ஒரு வேதிவினையாகும்?
- ஒளிச்சேர்க்கை என்பது தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில் கார்பன் டைஆக்சைடு, நீர் ஆகியவற்றைக் கொண்டு ஸ்டார்ச் என்னும் உணவுப்பொருளைத் தயாரிக்கும் நிகழ்வாகும். இந்நிகழ்வானது ஒரு வேதிவினையாகும்.
- இங்கு சூரிய ஓளி கார்பன் டைஆக்சைடுக்கும் நீருக்கும் இடையே வேதிவினையைத் தூண்டி முடிவில் ஸ்டார்ச் உருவாகிறது.
- இவ்வாறு ஒளியைக் கொண்டு தூண்டப்படும் வேதிவினைகள் ஒளி வேதிவினைகள் எனப்படும்.
VI. உயர் சிந்தனை வினாக்கள்:
1. கேக்குகள் தயாரிப்பில் ஈஸ்ட்டின் பங்கு என்ன என்பதை விளக்குக.
- ஈஸ்ட் பெரிய மூலக்கூறுகளை சிறிய மூலக்கூறுகளாக மாற்றுகிறது. கேக தயாரிப்பில் சர்க்கரை மூலக்கூறை ஈஸ் நாெதிக்க செய்கிறது.
- எனவே சர்க்கரை மூலக்கூறு வளர்சிதை மாற்றத்தின் காரணமாக கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் ஆல்கஹாலை வெளியிடுகிறது
2. புவி வெப்பமாதலுக்கு படிம எரிபொருட்களின் பயன்பாடு காரணமாகின்றன என்பதை நியாயப்படுத்துக.
- நாம் மின்சாரத்தை பெறுவதற்காக படிம எரிபொருட்களை பயன்படுத்துகிறோம்
- படிம எரிபொருட்களை எரிக்கும்போது அதிலிருந்து Co2 வாயுவானது வளிமண்டலத்தில் கலந்த விடுகிறது. இந்த Co2 வாயு தான் புவி வெப்பமாதலுக்கு முக்கிய காரணமாகும்
3. வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளிவிடும் புகையால் அமில மழை உருவாகிறது என்பதை விவாதிக்க.
- வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளிவிடும் புகையில் So2, No2 வாயுக்கள் வெளிவருகின்றன
- இவை காற்றில் கலந்தவிடுகின்றன
- வளிமண்டலத்தில் So2, No2 வாயுக்கள் உள்ள போது மழை பெய்வதால் இந்த வாயுக்கள் மழைநீரில் கரைந்து அமில மழையை உருவாக்கின்றன
4. துருப்பிடித்தல் இரும்பு பொருட்களுக்கு நல்லதா என்பதை விளக்குக?
- துருப்பிடித்தல் இரும்பு பொருட்களுக்கு நல்லதல்ல
- துருப்பிடித்தல் என்னம் நிகழ்வால் இரும்பு அரிமானத்திற்கு உட்படுகிறது
- மேலும் துருப்பிடித்த இரும்பு தன் வினைதிறனை இழக்கிறது.
5. அனைத்து பழங்களும், காய்கறிகளும் பழுப்பாதல் நிகழ்வுக்கு உள்ளாகின்றனவா?
- அனைத்து பழங்களும், காய்கறிகளும் பழுப்பாதல் நிகழ்வுக்கு உள்ளாகின்றன
- அனைத்து பழங்களம் நறுக்கி வைத்த பிறகு காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து பழுப்பு நிறத்தை அடைகிறது.
6. கொடுக்கப்பட்டுள்ள நம் அன்றாட வாழ்வின் செயல்பாடுகளை வேதிவினை நிகழ தேவைப்படும் நிபந்தனைகளின் அடிப்படையில் வகைப்படுத்துக.
அ) விழாக்காலங்களில் பட்டாசு வெடித்தல்
- வெப்பத்தால் நிகழும் வேதிவினை
ஆ) சுட்ட சுண்ணாம்புடன் நீர் சேர்த்து நீற்றுச்சுண்ணாம்பாக்குதல்
- இயன்நிலையில் சேர்தல் வினை
இ) வெகுநேரம் காற்றுபடும்படி வைக்கும்பொழுது வெள்ளிபொருள்கள் கருமை நிறமாதல்.
- இயன்நிலையில் சேர்த்தல் – காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினை புரிவதால் நிறம் மாறுதல்
ஈ) காப்பர் பாத்திரங்களில் பச்சை நிற படிமம் தோன்றுதல்.
- இயன்நிலையில் சேர்த்தல் – காற்றில் உள்ள Co2 வினை புரிவதால் பச்சை நிறம் படிமம் தோன்றுதல்
VIII. விரிவான விடையளி:
1. வேதி வினைகளால் எவ்வாறு உணவுப்பொருள்கள் கெட்டுப் போகின்றன என்பதை விளக்குக?
உணவு, காற்கறிகள் கெட்டுபோதல்
- மனிதன் உண்பதற்கு தகுதியில்லாத வகையில் உணவுப்பொருளில் ஏற்படும் மாற்றமே உணவு கெட்டுப்போதல் எனப்படும்.
- ஒரு உணவில் துர்நாற்றம், நிறமாற்றம், ஊட்டச்சத்து இழப்பு போன்ற நிகழ்வுகளால் உணவின் தரம் குறைய என்சைம் என்ற உயிரி வினைவேகமாற்றி காரணமாக அமைகின்றது.
எ.கா. 1 : முட்டைகள் அழுகும்பொழுது ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாவதால் துர்நாற்றம் வீசுகிறது.
எ.கா. 2 : காய்கறிகள், பழங்கள் நுண்ணுயிரிகளால் கெட்டுப்போகின்றன.
2. மூன்று வகையான மாசுபடுதல்களை எடுத்துக்காட்டுடன் விவரிக்க?
காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு ஏற்படுத்தும் வேதிப்பொருள்கள்
- கார்பன் டை ஆக்சைடு
- கார்பன் மோனாக்சைடு
- சல்பர்
- நைட்ரஜன் ஆக்சைடுகள்
- குளோரோ புளோரோ கார்பன்கள்
- மீத்தேன்
விளைவுகள்
- அமில மழை
- புவி வெப்பமயமாதல்
- சுவாசக் கோளாறுகள்
நீர் மாசுபாடு
நீர் மாசுபாடு ஏற்படுத்தும் வேதிப்பொருள்கள்
- வேதிப்பொருள்கள் கொண்ட கழிவுநீர் (சாயப்பட்டறைகள்)
- டிடர்ஜெண்டுகள்
- கச்சா எண்ணெய்
விளைவுகள்
- நீரின் தரம் குறைதல்
- தோல் நோய்கள்
நில மாசுபாடு
நீல மாசுபாடு ஏற்படுத்தும் வேதிப்பொருள்கள்
- யூரியா போன்ற உரங்கள்
- பூச்சிக்கொல்லி,
- களைக்கொல்லிகள்
விளைவுகள்
- பயிரிடும் நிலம் கெட்டுப் போதல்
- புற்றுநோய்
- சுவாச நோய்கள்
3. வேதிவினை நடைபெறுவதற்கான ஏதேனும் மூன்று நிபந்தனைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
இயல்பு நிலையில் சேர்தல்
வேதிப்பொருள்கள் அவற்றின் இயல்நிலைகளில் இருந்து ஒன்றுடன் ஒன்று சேரும்பொழுது நிகழ்கின்றன. இந்த இயல்நிலை சேர்தல் என்பது வினைபடுபொருள்கள் அவற்றின் இயல்நிலைகளான திண்மம், திரவம் மற்றும் வாயு நிலைகளிலிருந்து வினைபடுவதைக் குறிக்கும்.
எ.கா.
காய்ந்த விறகுகள் நெருப்புடன் தொடர்புக்கு வரும்பொழுது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து எரிந்து கார்பன் டைஆக்சைடை புகையாக வெளிவிடுகின்றன.
இயல்பு நிலையில் சேர்தல்
இரு வினைபடுபொருட்களை கரைசல் நிலையில் சேர்க்கும்பொழுது வேதிவினை நடைபெற்று புதிய விளைபொருட்களைத் தோற்றுவிக்கின்றன.
எ.கா.
சில்வர் நைட்ரேட் கரைசலை சோடியம் குளோரைடு கரைசலுடன் சேர்க்கும்பொழுது வேதிவினை நிகழ்ந்து வெண்மையான சில்வர் குளோரைடு வீழ்படிவும் சோடியம் நைட்ரேட் கரைசலும் கிடைக்கின்றன.
வெப்பம் மூலம் நிகழும் வேதிவினைகள்
சில வேதி வினைகளை வெப்பத்தின் மூலமே நிகழ்த்த முடியும்.
எ.கா.
தொழிற்சாலைகளில் சுண்ணாம்புக்கல் பாறைகள் வெப்பப்படுத்தப்பட்டு சுட்ட சுண்ணாம்பு (கால்சியம் ஆக்சைடு) பெறப்படுகிறது