பாடம்.5 மின்னியல்
பாடம்.5 மின்னியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும்போது, கம்பளி பெற்றுக் கொள்ளும் மின்னோட்டம் எது?
- எதிர் மின்னூட்டம்
- நேர் மின்னூட்டம்
- பகுதி நேர் மின்னூட்டம் பகுதி மின்னூட்டம்
- எதுவுமில்லை
விடை : எதிர் மின்னூட்டம்
2. இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?
- நியூட்ரான்கள்
- புரோட்டான்கள்
- எலக்ட்ரான்கள்
- புரோட்டான்களும், எலக்ட்ரான்களும்
விடை : எலக்ட்ரான்கள்
3. ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவைப்படும் மின் கூறுகள் எவை?
- ஆற்றல் மூலம், மின்கலம், மின்தடை
- ஆற்றல் மூலம், மின் கம்பி, சாவி
- ஆற்றல் மூலம், மின் கம்பி, சாவி
- மின்கலம், மின் கம்பி, சாவி
விடை : மின்கலம், மின் கம்பி, சாவி
4. ஒரு நிலைமின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலை மின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?
- எதிர் மின்னூட்டம்
- நேர் மின்னூட்டம்
- அ மற்றும் ஆ இரண்டும்
- எதுவும் இல்லை
விடை : நேர் மின்னூட்டம்
5. மின் உருகி என்பது
- சாவி
- குறைந்த மின்தடை கொண்ட ஒரு மின்கம்பி
- அதிக மின்தடை காெண்ட ஒரு மின்கம்பி
- மினசுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி.
விடை : மினசுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி.
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. பொருட்களை ஒன்றுடனொன்று தேய்க்கும் போது _______ நடைபெறுகிறது.
விடை : உராய்வு
2. ஒரு பொருள் எலக்டரானை இழந்து _______ ஆகிறது.
விடை : நேர்மின் முனை
3. மின்னலில் இருந்து கட்ட்டங்களைப் பாதுகாக்கும் கருவி _______
விடை : மின்னல் கடத்தி
4. அதிகமான அளவு மின்னோட்டம் மின்சாதனங்கள் வழியாகப் பாயும்போது அவை பாதிக்கப்படால் இருக்க _______ அவற்றுடன இணைக்கப்படுகின்றன.
விடை : மின் உருகி
5. மூன்று மின்விளக்குகள் ஒரே சுற்றில் மின்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மின்சுற்று _______ எனப்படும்.
விடை : தொடர் இணைப்புச்சுற்று
III. சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறான கூற்றைத் திருத்துக.
1. எபோனைட் தண்டினை கம்பளித் துணி ஒன்றுடன் தேய்க்கும்போது எபோனைட் தண்டு எதிர் மினனூட்டங்களைப் பெற்றுக்காெள்கிறது.
விடை : சரி
2. ஒரு மின்னூட்டம் பெற்ற பொருளை மின்னூட்டம் பெறாத பொருளின் அருகே காெண்டு செல்லும்போது மின்னூட்டம் பெற்ற பொருளுக்கு எதிரான மின்னூட்டம் அதில் தூண்டப்படும்.
விடை : தவறு
3. தூண்டல் முனையில் மின்னேற்றம் செய்யப் பயன்படும் ஒரு கருவி நிலைமின்காட்டி.
விடை : தவறு
4. நீர் மின்சாரத்தைக் கடத்தும்.
விடை : சரி
5. பக்க இணைப்பில் அனைத்துக் கூறுகளிலும் மின்னோட்டம் மாறிலியாக இருக்கும்.
விடை : தவறு
சரியான கூற்று : பக்க இணைப்பில் அனைத்துக் கூறுகளிலும் மின்னழுத்தம் மாறிலியாக இருக்கும்.
IV. பொருத்துக.
1 இரு ஓரின மின்துகள்கள் | நேர்மின்னூட்டம் பெறும் |
2. இரு வேறினை மின்துகள்கள் | மின்சுற்று அதிக சூடாகாமல் பாதுகாக்கும். |
3. கண்ணாடி துண்டை பட்டுத் துணியில் தேய்க்கும் போது | ஒன்றை விட்டு ஒன்று விலகும் |
4. ரப்பர் தண்டை கம்பளியில் தேய்க்கும் போது | ஒன்றை ஒன்று சேரும் |
5. மின் உருகி | எதிர் மின்னூட்டம் பெறும். |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ, 5 – ஆ |
V. பின்வரும் வினாக்களுககு கீழக்கண்ட குறிப்புகள் மூலம் விடையளிக்க.
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சேரி. மேலும் காரணம் கூற்றிற்கானை சேரியான விளக்கம்.
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சேரி. மேலும் காரணம் கூற்றிற்கானை சேரியான விளக்கமல்ல.
- கூற்று சரியானது, ஆனால் காரணம் சரியல்ல
- கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது
1. கூற்று : மின்னலினால் பாதிக்கப்படும் நபர்கள் கடுமையான மின்னதிர்ச்சியை உணர்வார்கள்.
காரணம் : மின்னல் அதிக மின்னழுத்தத்தைக் காெண்டிருக்கும்.
விடை : கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சேரி. மேலும் காரணம் கூற்றிற்கானை சேரியான விளக்கம்.
2. கூற்று : மின்னலின் போது உயரமான மேரத்தினடியில் நிற்பது நல்லது.
காரணம் : அது உங்களை மின்னலுக்கானை இலக்காக மாற்றும்.
விடை : கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது
VI. சுருக்கமாக விடையளி.
1. உராய்வு மூலம் மின்னூட்டஙகளை எவ்வாறு உருவாக்க முடியும்?
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை குறையும். சிலவகை பொருள்களை ஒன்றையொன்று தேய்க்கும்போது மின்துகள்கள் இடமாற்றமடைந்து அந்த பொருள்களின் மேற்பகுதியில் தங்கி விடுகின்றன. இதிலிருந்து உராய்வின் மூலம் மின்துகள்கள் இடமாற்றம் அடைகின்றன என்பதை அறியலாம்.
2. புவித்தாெடுப்பு என்றால் என்ன?
மின்னிறக்கம் அடையும் மின்னாற்றலை குறைந்த மின்தடை கொண்ட கம்பியின் மூலம் புவிக்கு இடமாற்றம் செய்யும் முறையே புவித் தொடுப்பு என்று வரையறுக்கப்படுகிறது
3. மின்சுற்று என்றால் என்ன?
மின்மூலம் ஒன்றின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு எலக்ட்ரானக்ள் பாயும் பாதை மின்சுற்று எனப்படும்
4. மின்முலாம் பூசுதல் என்றால் என்ன?
மின்னோட்டத்தை பாயச்செய்வதன் மூலம், ஒரு உலோகத்தின் படலத்தை மற்றொரு உலோகத்தின் மேற்பரப்பில் படிய வைக்கும் நிகழ்வு மின்முலாம் பூசுதல் எனப்படும்
5. மின்முலாம் பூசுதலுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
- இரும்பின் மீது ஏற்படும் அரிமானம் மற்றும் துருப்பிடித்தலை தவிர்ப்பதற்காக அதன் மீது துத்தநாக படலம் பூசப்படுகிறது.
- வாகனங்களின் உதிரிப் பாகங்கள், குழாய்கள், எரிவாய், எரிகலன்கள் மிதிவண்டியின் கைப்பிடிகள், வாகனங்களின் சக்கரங்கள் ஆகியவற்றை மலிவான உலோகத்தால் செய்த பிறகு அதன் மீது குரோமியம் மேற்பூச்சாக பூசப்படுகிறது