பாடம்.19 விலங்குகளின் இயக்கம்
பாடம்.19 விலங்குகளின் இயக்கம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. நமது உடலின் பின்வரும் பாகங்களுள் எவை இயக்கத்திற்கு உதவுகின்றன?
i) எலும்புகள் | ii) தாேல் |
iii) தசைகள் | iv) உறுப்புகள் |
கீழே உள்ளவற்றில் இருந்து சரியான பதிலைத் தேர்வு செய்க.
- (i) மற்றும் (iii)
- (ii) மற்றும் (iv)
- (i) மற்றும் (iv)
- (iii) மற்றும் (ii)
விடை : (i) மற்றும் (iii)
2. பின்வரும் உயிரினங்களுள் எதில் இயக்கத்திற்குத் தேவையான தசைகள்
மற்றும் எலும்புகள் காணப்பவடுதில்லை?
- நாய்
- நத்தை
- மண்புழு
- மனிதர்
விடை : நத்தை
3. _________ மூட்டுகள் அசையாதவை
- தாேள்பட்டை மற்றும் கை
- முழங்கால் மற்றும் மூட்டு
- மேல் தாடை மற்றும் மண்டை ஓடு
- கீழ் தாடை மற்றும் மேல் தாடை
விடை : மேல் தாடை மற்றும் மண்டை ஓடு
4. நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்பு போன்ற ஃபிளிப்பர்களை அணிகிறார்கள்?
- தண்ணீரில் எளிதாக நீந்த
- ஒரு மீன் போல காணப்பட
- நீரின மேற்பரப்பில் நடக்க
- கடலின அடிப்பகுதியில் நடக்க (கடல் பேடுக்கை)
விடை : தண்ணீரில் எளிதாக நீந்த.
5. உங்கள் பங்ளிப்புக் காதினைத் (பின்னர்) தாங்குவது எது?
- எலும்பு
- குருத்தெலும்பு
- தசைநார்
- காப்ஸ்யூல்
விடை : குருத்தெலும்பு
6. கரப்பான் பூச்சி எதன் உதவியுடன் நகர்கிறது?
- கால்
- எலும்பு
- தசைக்கால்
- முழு உடல்
விடை : கால்
7. முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?
- கழுத்தெலும்பு -7
- மார்பெலும்பு -10
- இடுப்பு எலும்பு – 4
- வால் எலும்பு – 4
விடை : கழுத்தெலும்பு -7
8. _________ என்பது சுருங்கி விரியும் திசுக்கற்றை
- எலும்பு
- எலும்புக்கூடு
- தசை
- மூட்டுகள்
விடை : தசை
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. உயிரினங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது _________ எனப்படும்.
விடை : இடம்பெயர்தல்
2. _________ என்பது ஒரு உயிரினத்தின் உடல் பகுதியின் நிலையிலுள்ள மாற்றத்தைக் குறிக்கிறது.
விடை : இயக்கம்
3. உடலுக்கு வலிமையான கட்டமைப்பை வழங்கும் அமைப்பு _________ எனப்படும்.
விடை : எலும்பு மண்டலம்
4. மனிதனின் அச்சு எலும்புக்கூடு _________, _________, _________ மற்றும் ________ ஆகியவற்றைக் காெண்டுள்ளது.
விடை : மண்டையோடு, விலா எலும்பு, ஸ்டெர்னம் மற்றும் முதுகெலும்புத் தொடர்
5. மனிதனின் இணைப்பு எலும்புக்கூடு _________ மற்றும் _________ ஆகியவற்றைக் காெண்டுள்ளது.
விடை : பெக்டோரல் வளையம் மற்றும் பெல்விக் வளையம்
6. இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம் _________ என அழைக்கப்படுகிறது.
விடை : இணைப்பு
7. இரத்த நாளங்கள், கருவிழி, மூச்சுக்குழாய் மற்றும் தாேல் போன்ற உடலின் மென்மையானை பாகங்களுடன் _________ இணைக்கப்பட்டுள்ளது
விடை : எதிரெதிர் தசைகள்
8. _________ தசை கண்பாவையை அகலமாக்குகிறது
விடை : ரேடியம்
9. அசையாத மூட்டு _________ல் காணப்படும்.
விடை : மண்டையோட்டில்
III. சரியா? தவறா எனக் கூறு
1. மனிதர்களின் மண்டை ஓடு 22 எலும்புகளைக் காெண்டுள்ளது.
விடை : சரி
2. மனித உடலில் 12 ஜாேடி விலா எலும்புகள் உள்ளன.
விடை : சரி
3. இடுப்பு என்பது அச்சு எலும்புக்கூட்டின ஒரு பகுதியாகும்.
விடை : தவறு
சரியான கூற்று : இடுப்பு என்பது இணையுறுப்பு எலும்புக்கூட்டின ஒரு பகுதியாகும்.
4. கீல் மூட்டு சற்று நகரக்கூடிய மூட்டு.
விடை : தவறு
சரியான கூற்று : கீல் மூட்டு நகரக்கூடிய மூட்டு.
5. இதயத் தசை ஒரு இயக்கு தசை.
விடை : தவறு
சரியான கூற்று : இதயத் தசை ஒரு தன்னிச்சையற்ற தசை
6. கையில் காணப்படும் வளைதசைகளும் நீள்தசைகளும் எதிரெதிர் தசைகளாகும்
விடை : சரி
7. மனித முதுகுத்தண்டில் 30 முதுகெலும்புகள் உள்ளன.
விடை : தவறு
சரியான கூற்று : மனித முதுகுத்தண்டில் 33 முதுகெலும்புகள் உள்ளன.
IV. சுருக்கமாக விடையளி.
1. எலும்புக்கூடு என்றால் என்ன?
எலும்புகளும், குருத்தெலும்புகளும் இணைந்து மனித எலும்பு மண்டலத்தை உருவாக்குகின்றன. அவை மனித உடலுக்கு கடினத்தன்மை அல்லது கட்டமைப்பை வழங்கி இயக்கத்திற்கு உதவுகின்றன. அவை உடல் உள்ளுறுப்புகளையும் பாதுகாக்கின்றன.
2. கிரானியம் என்றால் என்ன?
மண்டை ஓடு என்பது சிறிய எலும்புகளால் ஆன கடினமான அமைப்பு ஆகும். இது 22 எலும்புகளால் ஆனது. இதில் எலும்புகள் ஒன்றாக இணைவதால் கிரேனியம் உருவாகிறது.
3. நமது முதுகெலும்பு ஏன் சற்று நகரக்கூடியது?
முதுகெலும்புகள் வழுக்கு மூட்டுக்களால் இணைக்கப்பட்டுள்ளதால் அவை உடலை முன்னும் பின்னும் பக்கவாட்டில் வளைய அனமதிக்கிறது
4. அச்சு மற்றும் இணைப்பு எலும்புக்கூட்டை வேறுபடுத்துக.
அச்சு எலும்புக்கூடு | இணைப்பு எலும்புக்கூடு |
1. மனித உடலின் அச்சு அல்லது மையக்கோட்டில் அமைந்துள்ள எலும்புகளை அச்சு எலும்புக்கூடு கொண்டுள்ளது | இணையுறுப்பு எலும்புக்கூடு, உடலின் இணையுறுப்புகளில் உள்ள எலும்புகளையும் இணை உறுப்புகளை அச்சு எலும்பு கூட்டுடன் இணைக்கும் அமைப்பிலுள்ள எலும்புகளையும் கொண்டுள்ளது. |
2. இது 80 எலும்புகளை கொண்டுள்ளது | இது 126 எலும்புகளை கொண்டுள்ளது |
5. தசைநார் என்றால் என்ன?
திசுக்களை எலும்புடன் இணைக்கக்கூடிய, விரைப்புத் தன்மையுடைய நார் போன்ற கடினமான பட்டைத் திசு தசை நார் எனப்படும்
6. தசை – வரையறு.
நீண்ட சுருங்கும் தன்மையுள்ள திசுக்களின் கற்றை தசை எனப்படும்
அனைத்து இயக்கங்களுக்கும் உடலில் உள்ள தசைகள் வழிவகை செய்கின்றன.
7. தசைநாண் மற்றும் தசைநார் ஆகியவற்றை வேறுபடுத்துக.
தசைநாண் | தசைநார் |
1. மனித உடலின் அச்சு அல்லது மையக்கோட்டில் அமைந்துள்ள எலும்புகளை அச்சு எலும்புக்கூடு கொண்டுள்ளது | இணையுறுப்பு எலும்புக்கூடு, உடலின் இணையுறுப்புகளில் உள்ள எலும்புகளையும் இணை உறுப்புகளை அச்சு எலும்பு கூட்டுடன் இணைக்கும் அமைப்பிலுள்ள எலும்புகளையும் கொண்டுள்ளது. |
2. இது 80 எலும்புகளை கொண்டுள்ளது | இது எலும்புடன் எலும்பை இணைக்கிறது. |
V. சுருக்கமாக விடையளி.
1. பின்வருவனவற்றினை வேறுபடுத்துக.
அ) இயக்கம் மற்றும் இடம்பெயர்தல்.
இடம்பெயர்தல் | இயக்கம் |
1. ஒர் உயிரினம் ஒரிடத்திலிருந்து வேறோரு இடத்திற்கு இடம்பெயர்தல் | உடலின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளால் இடம் அல்லது நிலையை மாற்றும் செயல் |
2. தன்னிச்சையாக நடைபெறக் கூடியது | தன்னிச்சையானதாக அல்லது தன்னிச்சை அற்றதாக இருக்கலாம். |
3. உயிரின நிலையில் நடைபெறுகிறது | உயிரியல் நிலையில் நடைபெறகிறது |
4. ஆற்றல் தேவை இல்லை | ஆற்றல் தேவை |
ஆ) புற எலும்பு மண்டலம் மற்றும் அக எலும்பு மேண்டலம்
புற எலும்பு மண்டலம் | அக எலும்பு மேண்டலம் |
1. உடலின் வெளிப்புற அடுக்கில் காணப்படும் எலும்புக்கூடு ஆகும் | மனித உடலுக்குள் காணப்படும் எலும்புக்கூடு ஆகும் |
2. வளரும் கருவின் புறப்படை அல்லது இடைப்படை அடுக்கிலிருந்து இது உருவாகிறது | இது இடைப்படையிலிருந்து உருவாகிறது. |
3. மீன்களில் உள்ள செதில்கள், ஆமையின் வெளிப்புற கடின அடுக்கு மற்றும் பறவைகளின் இறகுகள் ஆகியவற்றைப் போல இது உடலின் உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது | இவை அனைத்து முதுகெலும்பிகளிலும் காணப்படுகின்றன. அவற்றின் உடல் அமைப்பை இவை உருவாக்குகின்றன |
இ) தாேள்பட்டை வளையம் மற்றும் இடுப்பு வளையம்
தாேள்பட்டை வளையம் | இடுப்பு வளையம் |
1. தோள்பட்டை எலும்பு முன்பக்கத்தில் காலர் எலும்பாலும், பின்புறத்தில் தோள்பட்டை சுத்தியாலும் உருவானது | இடுப்பு எலும்பு பின்புறத்தில் ஐந்து இணைந்த முதுகெலும்புகளால் ஆனது |
2. தோள்பட்டை எலும்பு, கை, மணிக்கட்டு, மேற்கை எலும்புகள் அகியவற்றை கொண்டுள்ளது | இடுப்பு, கால், கணுக்கால் மற்றும் பாத எலும்புகள் ஆகியவற்றைக கொண்டுள்ளது. |
ஈ) பந்துக் கிண்ண மூட்டு மற்றும் கீல் மூட்டு
பந்துக் கிண்ண மூட்டு | கீல் மூட்டு |
1. பந்துமுனை போன்ற எலும்பின் தலைப்பகுதி, அருகிலுள்ள கிண்ணம் போன்ற எலும்புடன் இணைந்து காணப்படும் | உருளை வடிவ எலும்பின் புடைப்பு அருகிலுள்ள எலும்பின் குழுிப்பகுதியில் இணைந்துள்ளது |
எ.கா. தோள்ப்பட்டை, இடுப்பு | எ.கா. முழங்கால், முழங்கை, கணுக்கால் |
உ) தன்னிச்சையானை மற்றும் தன்னிச்சையற்ற தசை
தன்னிச்சையானை தசை | தன்னிச்சையற்ற தசை |
1. கிளைகள் அற்றது தன்னிச்சையானது | ஒற்றை மையக்கரு தன்னிச்சையற்றது |
2. கைகள், கால்கள, கழுத்து ஆகிய இடங்களில் காணப்படுகிறது | இரத்த நாளங்கள், கருவிழி, மூச்சுக் குழாய் மற்றும் தோல் போன்ற உடலின் மென்மையான பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது |
2. எதிரெதிர் தசைகள் என்றால் என்ன? ஒரு உதாரணம் காெடு.
தசைகள் பெரும்பாலும் ஜோடியாக ஒன்றக்கொன்று எதிராக வேலை செய்கின்றன. இவை எதிரெதிர் தசைகள் என்று அழைக்கப்படுகின்றன.
உதாரணம் : ரேடியல் தசைகள் கண்ணின் பாவையை அகலமாக்குகின்றன.
3. பறவையின எலும்புக்கூடு எவ்வாறு பறப்பதற்கு ஏற்றதாக உள்ளது?
- பறைவ எலும்புகள் எடை குறைந்தும் வலுவுடனும் காணப்படுகின்றன.
- எலும்புகள் உள்ளீடற்றும், காற்று இடைவெளிகளைக் கொண்டும் காணப்படுகின்றன.
- பறவைகளின் பின்னங்கால்கள் நகங்களாக மாறியுள்ளன. அவை நடக்கவும், அமரவும் பயன்படுகின்றன.
- இறக்கைகளை மேலும் கீழும் அசைப்பதற்கு உதவக்கூடிய பெரிய தசைகளைக் கொண்டிருக்கும் வகையில் மார்பெலும்புகள் மாற்றமடைந்து உள்ளன.
- மேலும் முன்னங்கால்கள் சிறகுகளாக மாற்றடைந்துள்ளன
4. மனித உடலில் எலும்புக்கூட்டின் செயல்பாடுகள் யாவை?
- இது உடலுக்கு அமைப்பு மற்றும் வடிவத்தை வழங்குகிறது.
- உடலின் உள்ளுறுப்பைகளைத் தாங்கி அவற்றைச் சூழ்ந்து காணப்படுகிறது.
- உடலைச் சீரமைக்கும் செயல்பாடுகளுக்குத் தேவையான கால்சியம் மற்றம் பாஸ்பரஸ் அகியன இரண்டு முக்கிய தாதுக்கள் எலும்புகளுக்குள் சேமிக்கப்படுகின்றன.
- எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அறுக்களை உருவாக்குகின்றன
- எலும்பு மண்டலத்தின் எலும்புகள் தசைகளின் செயல்பாட்டிற்கு நெம்புகோல் போ் செயல்படுகின்றன. டெண்டான் எனப்டும் தசைநாண்கள் (எலும்புடன் தசையை இணைக்கும் திசுக்களின் இழை நாண்கள்) மற்றும் லிகமெண் எனப்படும் தசைநார்கள் (எலும்புடன் இணைக்கும் திசுக்களின் இழை நாண்கள்) ஆகியவை இல்லாமல் தசை இயக்கம் நடைபெறாது.
VI. விரிவாக விடையளி.
1. மூட்டுகளின் வகைகளைக் கூறுக. ஒவ்வொரு வகைக்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.
இரண்டு தனித்தனி எலும்புகள் சந்திக்கும் இடம் மூட்டு என்று அழைக்கப்படுகிறது. அசைக்கக்கூடிய தன்மையின் அடிப்படையில் மூட்டுக்களில் மூன்று வகைகள் உள்ளன.
அவையாவன:
- நிலையானவை
- சற்று நகரக்கூடியவை
- நகரக்கூடியவை.
நிலையான அலலது அசையா மூட்டுகள்
இந்த வகை மூட்டுகளில் இரண்டு எலும்புகளுக்கிடையில் எந்த ஒரு இயக்கமும் காணப்படாது. மண்டையோட்டின் எலும்புகளுக்கு இடையிலான கட்டமைப்புகள் அசையாத மூட்டுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
சற்று நகரக்கூடிய மூட்டுகள்
இவ்வகை மூட்டுகளில், இரண்டு எலும்புகளுக்கு இடையில் மிகக் குறைந்த இயக்கம் மட்டுமே நிகழ்கிறது. ஒரு விலா எலும்புக்கும் மார்பக எலும்புக்கும் இடையில் அல்லது முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள மூட்டு, சற்று நகரக்கூடிய மூட்டிற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
நகரக்கூடிய மூட்டுகள்
இந்த வகையில், மூட்டுகளை உருவாக்கும் இரண்டு எலும்புகளுக்கு இடையே பல்வேறு வகையான அசைவுகள் நடைபெறுகின்றன. ஆறு
முக்கியமான அசையும் மூட்டுகள் உள்ளன. அவை
கீழ் உள்ள அடடவணையில் தரப்பட்டுள்ளன.
மூட்டு | எ.கா. |
பந்து கிண்ண மூட்டு | தோள்பட்டை, இடுப்பு |
கீல் மூட்டு | முழங்கால், முழங்கை, கணுக்கால் |
மூளை அச்சு மூட்டு அல்லது சுழலச்சு மூட்டு | முள்ளெலும்புச்சுழல் அச்சு முனை மூட்டு |
முண்டணையா மூட்டு | மணிக்கட்டு |
வழுக்கு மூட்டு | முள்ளெலும்பு |
சேண மூட்டு | கட்டை விரல், தோள்பட்டை, உட்செவி |
2. மனித அச்சு எலும்புக்கூட்டைப் பற்றி எழுதுக. அதன் படம் வரைந்து பாகங்களைக் குறி.
எலும்பு மண்டலமானது உடல் இயக்கத்திற்கு உதவும் எலும்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டமைப்புகளால் ஆனது. இது இரண்டு முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. அவை, அச்சுச் சட்டகம் மற்றும் இணையுறுப்புச் சட்டகம் ஆகும்.
I. அச்சுச் சட்டகம்
மனித உடலின் அச்சு அல்லது மையக்கோட்டில் அமைந்துள்ள எலும்புகளை அச்சுச் சட்டகம் கொண்டுள்ளது. அச்சுச் சட்டகத்தில் மண்டை ஓடு, முக எலும்புகள், ஸ்டடெர்னம் (மார்பக எலும்பு), விலா எலும்புகள் மற்றும் முதுகெலும்புத் தொடர் ஆகியவை உள்ளன.
அ. மண்டை ஓடு
மண்டை ஓடு என்பது சிறிய எலும்புகளால் ஆன கடினமான அமைப்பு ஆகும். இது 22 எலும்புகளால் ஆனது. அதில் 8 எலும்புகள் ஒன்றாக இணைவதால் கிரேனியம் உருவாகிறது. மேலும், 14 எலும்புகள் இணைந்து முகத்தை உருவாக்குகின்றன. இதில் அசையும் மூட்டைக் கொண்ட ஒரே எலும்பு கீழ்த்ததாடை எலும்பாகும். இந்த அசையும் மூட்டிற்கு தசை மற்றும் எலும்பிணைப்பு இழைகள் ஆதாரமளிக்கின்றன. முதுகெலும்பின் மேற்புறத்தில் வைக்கப்பட்டுள்ள மண்டை ஓட்டை மேலும், கீழும் மற்றும் பக்கவாட்டிலும் நகர்த்தலாம்.
ஆ. முள்ளெலும்புத் தொடர்
உடலின் பின்புறத்தில் நீண்டிருக்கும் முள்ளெலும்புத் தொடர் முதுகுத்தண்டு அல்லது முதுகெலும்பு என்று அழைககப்படுகிறது. உடலின் மேல் பகுதியினைத் தாங்குகின்ற தண்டுப் பகுதியாக இது உள்ளது. முள்ளெலும்புத் தொடர் முதுகு எலும்புகள் எனப்படும் தனிப்பட்ட எலும்புகளால் ஆனது. முள்ளெலும்புத் தொடரில் 7 கழுத்து எலும்புகள், 12 மார்பு எலும்புகள், 5 விலா எலும்புகள், 5 இணைந்த திருவெலும்புகள் மற்றும் இணைந்த 3 வால் எலும்புகள் அடங்கியுள்ளன. முள்ளெலும்புத் தொடர் மண்டை ஓட்டின் அடிப்பகுதியிலிருந்து இடுப்பு எலும்பு வரை சென்று ஒரு குழாய் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இந்தக் குழாயின் உள்ளே தண்டுவடம் செல்கிறது. முள்ளெலும்புகள் வழுக்கு மூட்டுக்களால் இணைக்கப்பட்டுள்ளன. அவை உடலை முன்னும், பின்னும் மற்றும் பக்கவாட்டிலும் வளைக்க உதவுகின்றன.
இ. மார்பபெலும்பு மற்றும் விலா எலும்புக்கூடு
விலா எலும்புக்கூடு மார்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது 12 ஜோடி விலா எலும்புகளைக் கொண்ட கூம்பு வடிவ அமைப்பாகக் காணப்படுகிறது. விலா எலும்புகள் பின்புறத்தில் முதுகெலும்புகளுடன் இணைக்கப்பட்டு ஒரு கூண்டு போன்ற அமைப்பாகக் காணப்படுகின்றன. முன்புறத்தில் 10 ஜோடி விலா எலும்புகள் மார்பபெலும்புடன் இணைக்கப்பட்டுள்ளன. 2 ஜோடி விலா எலும்புகள் தனித்துக் காணப்படுகின்றன. இவை மிதக்கும் விலா எலும்புகள் என்று அழைக்கப்படுகின்றன. சுவாசித்தல் நிகழ்வின்போது சுருங்கி விரிவடையும் வகையில் விலா எலும்புக்கூடு அமைக்கப்பட்டுள்ளது. நுரையீரல், இதயம் மற்றும் கல்லீரலின் சில பகுதியை இது மூடிப் பாதுகாக்கிறது.
3. பல்வேறு வகையான இயக்கம் குறித்து சிறு குறிப்பு எழுதுக.
1. அமீபாய்டு இயக்கம்
இவ்வகையான இயக்கம் போலிக்கால்கள் மூலம் நடைபெறுகிறது. செல்லில் உள்ள புரோட்டோ பிளாசம் நகரும்போது இவையும் சேர்ந்து நகர்கின்றன.
2. சிலியரி இயக்கம்
புறத்தோலில் உள்ள ரோமம் போன்ற நீட்சிகளாகிய சிலியாக்கம் எனப்படும் இணை உறுப்புகள் மூலம் இவ்வியக்கம் நடைபெறுகிறது. இவ்விரு இயக்கங்களும் நிணநீர் மண்டல செல்களில் நடைபெறுகின்றன.
3. தசைகளின் இயக்கம்
இது பல பகுதிகளை உள்ளடக்கிய இயக்கமாகும். இது எலும்புத்தசை மண்டலத்தைக் கொண்டு நடைபெறுகிறது. இவ்வகை இயக்கம் மேம்பட்ட முதுகெலும்பிகளில் காணப்படுகிறது.