பாடம்.20 வளரிளம் பருவமடைதல்
பாடம்.20 வளரிளம் பருவமடைதல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. ________ வயதிற்கு இடைப்பட்ட காலம் வளரிளம் பருவம் எனப்படும்.
- 10 முதல் 16
- 11 முதல் 17
- 11 முதல் 19
- 11 முதல் 20
விடை : 11 முதல் 19
2. உயிரினங்கள் பாலின முதிர்ச்சியடையும் காலம் ________ என்று அழைக்கப்படுகிறது.
- பருவமடைதல்
- வளரிளம் பருவம்
- வளர்ச்சி
- முதிர்ச்சி
விடை : பருவமடைதல்
3. பருவமடைதலினபோது, இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதியானது ________ ல் அகன்று காணப்படுகிறது.
- ஆண்கள்
- பெண்கள்
- அ மற்றும் ஆ
- எதுவுமில்லை
விடை : பெண்கள்
4. ஆடம்ஸ் ஆப்பிள் என்பது இதன் வளர்ச்சியைக் குறிக்கிறது.
- தாெண்டை
- தைராய்டு
- குரல்வளை
- பாராதைராய்டு
விடை : குரல்வளை
5. வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் ________ சுரப்பியின சுரப்பினால் உண்டாகின்றன.
- வியர்வை
- எண்ணெய்
- வியர்வை மற்றும் எண்ணெய்
- எதுவுமில்லை
விடை : வியர்வை மற்றும் எண்ணெய்
6. விந்து செல்லானது ________ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது
- ஆண்குறி
- அண்டகம்
- கருப்பை
- விந்தகங்கள்
விடை : விந்தகங்கள்
7. நாளமில்லா சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் வேதிப் பொருள்கள் ________ எனப்படும்.
- ஹார்மோன்கள்
- நாெதிகள்
- புரதங்கள்
- காெழுப்பு அமிலங்கள்
விடை : ஹார்மோன்கள்
8. ஆன்ட்ராேஜன் உற்பத்தி ________ ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
- GH ஹார்மோன்
- LH ஹார்மோன்
- TSH ஹார்மோன்
- ACTH ஹார்மோன்
விடை : LH ஹார்மோன்
9. மாதவிடாயின் போது புராெஜெஸ்டிரானின் அளவு ________
- குறைகிறது
- அதிகரிக்கிறது
- நின்று விடுகிறது
- இயல்பாக உள்ளது
விடை : நின்று விடுகிற
10. நமது வாழ்வின பிந்தைய பகுதியில் ஆஸ்டியாேபோராேசிஸைத் தடுக்க
________ எடுத்துக் காெள்வது அவசியாகும்.
- பொட்டாசியம்
- பாஸ்பரஸ்
- இரும்பு
- கால்சியம்
விடை : கால்சியம்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. பெண்களில் அண்டகத்தால் ________ உற்பத்தி செய்யப்படுகிறது.
விடை : ஈஸ்ட்ரோஜன்
2. இனப்பெருக்க உறுப்புகளால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் ________ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.
விடை : பிட்யூட்ரியன் முன் கதுப்பினால்
3. பாலூட்டுதலின் போது பால் உற்பத்தியானது ________ ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது.
விடை : ப்ரோலாக்டின்
4. ஆண் மற்றும் பெண் இனச் செல்கள் இணைந்து ________ ஐ உருவாக்குகின்றன.
விடை : கருவுற்ற முட்டை
5. பருவமடைதலின் போது ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சி ________ என்று அழைக்கப்படுகிறது.
விடை : பூப்படைதல்
6. பொதுவாக அண்டம் விடுபட்ட 14 நாட்களுக்குப் பின் ________ ஏற்படுகிறது.
விடை : மாதவிடாய்
7. ________ என்பது புரதங்கள், கார்போ ஹைட்ரேட்டுகள், காெழுப்பு மற்றும் உயிர்ச் சத்துக்களை குறிப்பிட்ட அளவில் உள்ளடக்கியதாகும்.
விடை : சரிவிகித உணவு
8. தைராய்டு சுரப்பி தாெடர்புடைய நாேய்களைத் தடுப்பதில் ________ உதவுகிறது.
விடை : அயோடின்
9. இரும்புச் சத்துப் பற்றாக்குறை ________க்கு வழிவகுக்கிறது.
விடை : இரத்தசோகை
10. பெண்களில் கருவுறுதல் ________ ல் நிகழ்கிறது.
விடை : ஃபெலோப்பியன் நாளத்தில்
III. சரியா? தவறா எனக் கூறு
1. ஆண்கள் மற்றும் பெண்களில் பருவமடைதலின் போது, திடீரென உயரம் அதிகரிக்கின்றது
விடை : சரி
2. கருப்பையிலிருந்து அண்டம் வெளியேறுதல் அண்டம் விடுபடுதல் என அழைக்கப்படுகிறது.
விடை : சரி
சரியான கூற்று : அண்டகத்திலிருந்து அண்டம் வெளியேறுதல் அண்டம் விடுபடுதல் என அழைக்கப்படுகிறது.
3. கர்ப்பத்தின் போது, கார்பஸ்லூட்டியம் தாெடர்ந்து வளர்ந்து அதிக அளவில் ஈஸ்ட்ராேஜன் மற்றும் புராேஜெஸ்டிரானை உற்பத்தி செய்கிறது.
விடை : சரி
4. ஒரு முனை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நாப்கின்கள் அல்லது டாம்பூன்களைப் பயன்படுத்துதல் நாேய்த் தாெற்றிற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றது
விடை : தவறு
சரியான கூற்று : ஒரு முனை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நாப்கின்கள் அல்லது டாம்பூன்களைப் பயன்படுத்துதல் நாேய்த் தாெற்றிற்கான வாய்ப்பை குறைக்கின்றது
5. சுத்தமான கழிவறைகளை மலம் கழிக்கப் பயன்டுத்துதல் ஒரு நல்ல பழக்கமாகும்.
விடை : சரி
IV. பொருத்துக
1. பருவமடைதல் | டெஸ்டாேஸ்டீரான் |
2. ஆடம்ஸ் ஆப்பிள் | தசை உருவாக்கம் |
3. ஆண்ட்ராேஜன் | 45 முதல் 50 வயது |
4. ICSH | பாலின முதிர்ச்சி |
5. மாதவிடைவு | குரலில் மாற்றம் |
விடை : 1 – ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – இ |
V. சுருக்கமாக விடையளி.
1. வளரிளம் பருவம் என்றால் என்ன?
- வளரிளம் பரவமானத ஒருவர் குழந்தைப் பருவத்தில் இருந்து வயது வந்தோர் பருவத்திற்கு மாறக்கூடிய காலகட்டமாகும். இப்பருவமானது 13 வயதில் தொடங்கி 19 வயதில் முடிவடைகின்றது.
- வளரிளம் பருவம் சொ் “அடோலசர்” (adolescere) என்ற இலத்தீன மொழி வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன பொருள் ‘வளர்வதற்கு’ அல்லது ‘முதிர்ச்சிக்கான வளர்ச்சி’ எனப் பொருள்படும்.
2. பருவமடைதலின்போது ஏற்படும் மாற்றங்களைப் பட்டியலிடுக.
- உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள்
- உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்
- முதல்நிலை பால் பண்புகளின் வளர்ச்சி
- இரண்டாம்நிலை பால் பண்புகளின் வளர்ச்சி
3. இரண்டாம்நிலை பால் பண்புகள் என்றால் என்ன?
இரண்டாம்நிலை பால் பண்புகள் ஆண்கள் பெண்கள் மற்றும் பெண்களிடையே உடல் அமைப்பில் வேறுபாட்டை ஏற்படுத்துகின்றன. ஆண்களில் விந்தகங்களால் சுரக்கப்படும் டெஸ்ட்டாேஸ்டீரான் அல்லது ஆண்ட்ராேஜன் எனப்படும் ஹார்மோனாலும், பெண்களில் அண்டகங்களால் சுரக்கப்படும் ஈஸ்ட்ராேஜன் எனப்படும் ஹார்மோனாலும் இரண்டாம் நிலை பால் பண்புகள் கடடுப்படுத்தப்டுகின்றன
4. கருவுறுதல் என்றால் என்ன?
ஆண் விந்தணுவானது, அண்டகத்திலிருந்து விடுபட்ட அண்டகத்துடன் பெலோப்பியன் நாளத்தில் இணைந்து கருவுறுதல் நடைபெறுகிறது
5. பூப்படைதல் – குறிப்பு வரைக.
பருவமடைதலின் போது முதன் முதலில் தோன்றும் மாதவிடாய் சுழற்சி பூப்படைதல் எனப்படுகிறது. பருவடைதலின் தொடக்க நிலையில் அண்டம் முதிர்ச்சியடைகிறது
6. கருவுறுதல் நிகழ்வை விளக்குக.
அண்டகத்திலிருந்து விடுபட்ட அண்டம் பெலோப்பியன் நாளத்தை அடைந்தவுடன், கருவுறுதல் நடைபெறுகிறது. கருவுற்ற முட்டை வளர்ச்சியடைந்தவுடன், அது கருப்பையில் பதிய வைக்கப்படுகிறது. கார்பஸ்லூட்டியத்தின் தொடர் வளர்ச்சியனால் அதிக அளவில் புரோஜெஸ்டிரான் உற்பத்தி செய்யப்படுகிறது. இது கர்ப்பத்தை தோற்றுவிக்கிறது. பொதுவாக இது 280 நாட்கள் நீடிக்கும் இதன் முடிவில் குழந்தை பிறப்பு உண்டாகிறது.
7. பெண்களில், மாதவிடாய் சுழற்சியின் போது தூய்மையின் முக்கியத்துவம் பற்றிக் கூறுக.
மாதவிடாய் சுழற்சியின் போது, உடல் தூய்மையில் பெண்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். துணிகளுக்கு பதிலாக ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நாப்கின்கள் அல்லது டாம்பூன்களை பயன்படுத்துவதால் நோய் தொற்றிற்கான வாய்ப்பு குறைகிறது. மாவிடாயின் அளவைப் பொருத்த அடிக்கடி மாற்றப்பட வேண்டும்.
8. வளரிளம் பருவம் குழந்தைப் பருத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
குழந்தைப் பருவத்தில் உடல் பகுதியை விட கால்கள் அதிகமாக வளர்ச்சியுறுகின்றன. ஆனால் பருவமடைதலின்போது உடல் பகுதியும் வளரச்சியுறுகின்றது. மேலும் உடல் பகுதியில் இடுப்பு மற்றும் தோள்பட்டை ஆகியவை விரிவடைந்து உடலானது வயது வந்தோரின் தோற்றத்தை பெறுகிறது
VI. விரிவாக விடையளி.
1. வளரிளம் பருவத்தில் ஆண்கள் மற்றும் பெண்களில் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள் யாவை?
- பருவமடையும் நேரத்தில் ஏற்படும் முதல் பெரிய மாற்றம் வளர்ச்சியாகும்.
- இது உடலின் உயரம் மற்றும் எடையில் ஏற்படும் அதிகரிப்பாகும்.
- வழக்கமாக பெண்களில் இது 10 – 12 வயதில் துவங்கி 17 – 19 வயதில் முடிவடைகின்றது.
- ஆண்களில் 12 – 13 வயதில் துவங்கி 19 – 20 வயதில் முடிவடைகின்றது.
- வளரிளம் பருவத்தில் ஆண்கள் மற்றும் பெண்களின் உயரம் சராசரியாக 23 – 26 செ.மீ. வரை அதிகரிக்கிறது.
- உயரத்துடன் அவர்களின் உடல் எடையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது.
- இந்தக் காலகட்டத்தில் சராசரி எடை அதிகரிப்பானது 17-19 கிகி வரை உள்ளது.
- பெண்களில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது.
- ஆண்களில் தசை வளர்ச்சி ஏற்படுகின்றது.
2. இனப்பெருக்கத்தில் ஹார்மோன்களின் பங்கினை விளக்குக.
இனப்பெருக்கத்தை ஒழுங்குபடுத்தும் முதன்மை ஹார்மோன்களான ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஸ்டீராய்டு வகை ஹார்மோன்கள் முறையே ஆண்தன்மை, பெண்தன்மை மற்றும் கர்ப்பகால மாற்றங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.
பாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன் (FSH)
பெண்களில் FSH எனும் ஹார்மோன் கிராஃபியன் பாலிக்கிள்களின் வளர்ச்சியைத் தூண்டி ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்கிறது. ஆண்களில் விந்து நாளங்களின் வளர்ச்சி மற்றும் விந்தணுவாக்கத்திற்கு இது அவசியமாகிறது.
பெண்களில் FSH எனும் ஹார்மோன்
கிராஃபியன் பாலிக்கிள்களின் வளர்ச்சியைத் தூண்டி ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்கிறது. ஆண்களில் விந்து நாளங்களின் வளர்ச்சி மற்றும் விந்தணு உருவாக்கத்திற்கு இது அவசியமாகிறது.
லூட்டினைசிங் ஹார்மோன் (LH)
பெண்களில் அண்டம் விடுபடுதல், லூட்டியல் ஹார்மோனான புரோஜெஸ்ட்டிரான் உற்பத்தி, கிராஃபியன் பாலிக்கிள்களின் இறுதி முதிர்வுநிலை ஆகியவற்றிற்கு இந்த ஹார்மோன் தேவைப்படுகிறது. ஆண்களில் விந்தகங்களில் காணப்படும் டையீட்டுச் (லீடிக்) செல்களைத் தூண்டி டெஸ்டோஸ்டீரானை உற்பத்தி செய்கிறது. இது இடையீட்டு செல்களைத் தூண்டும் ஹார்மோன் (ICSH) என்றும் குறிப்பிடப்படுகிறது.
புரோலாக்டின் (PRL) அல்லது லாக்டோஜெனிக் ஹார்மோன்
பாலூட்டுதலின் போது பாலை உற்பத்தி செய்வது இதன் பணியாகும்.
ஆக்சிடோசின் ஹார்மோன்
ஆக்சிடோசின் ஹார்மோன் மார்பகங்களில் இருந்து பால் வெளியேறுதலுக்குக் காரணமாகிறது. மேலும், குழந்தைப் பிறப்பின்போது தசைகளை சுருங்கச் செய்து குழந்தைப் பிறப்பை எளிதாக்குகிறது.
3. மாதவிடாய் சுழற்சியினைப் பற்றி சுருக்கமாக விவரி.
பெண்களில் மாதவிடாய் சுழற்சியின் தொடக்கமானது பருவமடைதலைத் துவக்குகிறது. மாதவிடாய் சுழற்சி கருப்பையின் எண்டோமெட்ரியல் சுவர் உரிதல் மற்றும் இரத்தப்போக்குடன் தொடங்குகிறது. எண்டோமெட்ரியல் சுவர் உரித்தலானது, குறிப்பிட்ட கால இடைவெளியில் கருப்பையை கர்ப்பத்திற்குத் தயாராவதைக் குறிக்கிறது. ஒரு பெண்ணின் அண்டகத்திலிருந்து வெளியாகும் கருமுட்டையானது (அண்டம்) அண்டவிடுப்பின் போது விந்தணுக்களால் கருத்தரிக்காவிட்டால் மாதவிடாய் ஏற்படுகிறது. இது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
1. ஒரு பெண் சுமார் 10 வயதில் பருவம் அடையும் போது, அவளது இரத்தத்தில் வெளியாகும் பாலியல் ஹார்மோன்கள் அவளது அண்டகத்தில் உள்ள சில அண்டத்தை (முட்டையை) முதிர்ச்சியடையச் செய்கின்றன.
2. பொதுவாக ஒரு அண்டகத்திலிருந்து ஒரு முதிர்ச்சியடைந்த அண்டமானது, 28 நாள்களுக்கு ஒருமுறை அண்டநாளத்தை வந்தடைகிறது. இது அண்டம் விடுபடுதல் என்றழைக்கப்படுகிறது.
3. அண்டம் விடுபடுதலுக்கு முன், கருப்பபையின் சுவரானது தடித்து, மென்மையானதாகவும், முழுவதும் சிறிய இரத்தக் குழாய்களைக் கொண்டும் காணப்படுகிறது. இது கருவுற்ற முட்டையை ஏற்க தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது.
4. அண்டமானது கருவுறவில்லையெனில், தடித்த மென்மையான கருப்பபைச் சுவர் தேவைப்படாது. எனவே, அது சிதைந்து விடுகிறது. அதனால், தடித்த, மென்மையான கருப்பபைச் சுவர் இரத்தக் குழாயுடன் சேர்ந்து சிதைந்த அண்டத்துடன் இனப்பெருக்கக் குழாய் வழியாக இரத்தமாக வெளியேறுகிறது. இதுவே மாதவிடாய் எனப்படுகிறது.
5. அண்டம் விடுபடுதலிலிருந்து 14 ஆவது நாள் தோன்றும் மாதவிடாய் 3 முதல் 5 நாள்கள் வரை காணப்படுகிறது.
6. மாதவிடாய் முடிந்ததும், அடுத்தகருமுட்டையைப் பெற கருப்பபையின் உட்புறப் பகுதி தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது.
7. இந்த நிகழ்வின்போதும் அண்டமானது கருவுறவில்லலையெனில், மறுபடியும் மாதவிடாய் நடைபெறுகிறது. பெண்களில் 28 நாள்களுக்கு ஒருமுறை இம்மாதவிடாய் சுழற்சி திரும்பத் திரும்ப நடைபெறுகிறது. மாதவிடாய் சுழற்சியானது ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது.
4. வளரிளம் பருவத்தினருக்கான ஊட்டச்சத்துத் தேவைகள் பற்றி சுருக்கமாக விளக்குக
வளரிளம் பருவம் என்பது விரைவான வளர்ச்சி மற்றும் முன்னேற்த்திற்கான ஒரு நிலையாகும். எனவே, முறையான வளர்ச்சி மற்றும் உடல் செயல்பாடுகளுக்கு சரியான ஆற்றல் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவு தேவைப்படுகிறது. வளரிளம் பருவத்தில் சரிவிகித உணவு மிகவும் முக்கியமானதாகும். சரிவிகித உணவில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் தேவையான விகிதத்தில் அடங்கியுள்ளன. இந்திய உணவுகளான ரொட்டி, சோறு, பருப்பு வகைகள், பால், பழங்கள் மற்றும் காய்கறிகள் சரிவிகித உணவுகளாகும்.
இப்பருவத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் உடல் வளர்ச்சியைத் தடுப்பது மட்டுமல்லாமல், அறிவு வளர்ச்சியையும் பாதிக்கின்றன. மேலும், இது பாலியல் முதிர்ச்சியையும் தாமதப்படுத்துகிறது. இந்த வளர்ச்சிக் காலத்தில் புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வது அவசியமானதாகும். இவை தவிர, வளரிளம் பருவத்தினருக்கு பின்வரும் சத்துக்கள் உணவில் தேவைப்படுகின்றன.
கனிமங்கள்
வளரிளம் பருவத்தில் எலும்பின் எடை மற்றும் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதால், உடலுக்கு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற கனிமங்கள் தேவைப்படுகின்றன.
கால்சியம்
நமது வாழ்வின் பிந்தைய பகுதியில் உண்டாகும் ஆஸ்டியோபோரோசிஸைத் (எலும்பு உடையும் தன்மை) தடுக்க கால்சியத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்வது அவசியமாகும். பால் மற்றும் பால் பொருள்களில் கால்சியம் காணப்படுகிறது.
அயோடின்
தைராய்டு சுரப்பி தொடர்பபான நோய்களைத் தடுக்க இது உதவுகிறது.
இரும்பு
இரத்தத்ததை உருவாக்குவதில் இரும்புச் சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான பச்சை இலைக் காய்கறிகள், கீரைகள், வெல்லம், இறைச்சி, சிட்ரஸ் பழங்கள், நெல்லிக்ககாய் மற்றும் முழு பருப்பு வகைகள் ஆகியவை வளரிளம் பருவத்தினருக்கு உகந்தவையாகும். உணவில் உள்ள இரும்புச் சத்துக் குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்துகிறது. எனவே, இரும்புச்சத்துக் குறைபாட்டைப் போக்க வளரிளம் பருவத்தினருக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவு அவசியமாகும். ஆண்களில் சதை வளர்ச்சி காரணமாகவும், பெண்களில் மாதவிடாய் மற்றும் சதை வளர்ச்சி காரணமாகவும் இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படுகின்றது.