பாடம்.6 ஒலியியல்
பாடம்.6 ஒலியியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. ஒலி அலைகள் எதில் மிக வேகமாக பயணிக்கின்றன
- காற்று
- உலோகங்கள்
- வெற்றிடம்
- திரவங்கள்
விடை : உலோகங்கள்
2. பின்வருவனற்றில் அதிர்வுகளின பண்புகள் யாவை?
i) அதிர்வெண் | ii) கால அளவு |
iii) சுருதி | iv) உரப்பு |
- i மற்றும் ii
- ii மற்றும் iii
- iii மற்றும் iv
- i மற்றும் iv
விடை : i மற்றும் ii
3. ஒலி அலைகளின் வீச்சு எதை தீர்மானிக்கிறது
- வேகம்
- சுருதி
- உரப்பு
- அதிர்வெண்
விடை : உரப்பு
4. சித்தார் எந்த வகையானை இசைக்கருவி?
- கம்பி கருவி
- தாள வாத்தியம்
- காற்று கருவி
- இவை எதுவும் இல்லை
விடை : கம்பி கருவி
5. பொருந்தாத ஒன்றைக் கணடுபிடி.
- ஹார்மோனியம்
- புல்லாங்குழல்
- நாதஸ்வரம்
- வயலின்
விடை : வயலின்
6. இரைச்சலை ஏற்படுத்துவது
- அதிக அதிர்வெண் காெண்ட அதிர்வுகள்.
- வழக்கமான அதிர்வுகள்.
- ஒழுங்கானை மற்றும் சீரான அதிர்வுகள்
- ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்.
விடை : ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்.
7. மனித காதுக்கு கேட்கக்கூடிய அதிர்வெண் வரம்பு
- 2Hz முதல் 2000Hz
- 20Hz முதல் 2000Hz வரை
- 20 Hz முதல் 20000Hz
- 200 Hz முதல் 20000Hz வரை
விடை : 20 Hz முதல் 20000Hz
8. ஒலி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் அதிகரித்தால், பின்வருவனவற்றில் எது உண்மை?
- உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்.
- உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி மாறாோைாது.
- சத்தம் அதிகரிக்கிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்.
- உரப்பு குறைகிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்.
விடை : உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்.
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. ஒலி ____________ ஆல் உருவாக்கப்படுகிறது.
விடை : அதிர்வுகளால்
2. தனி ஊசலின் அதிர்வுகள் ____________ என்றும் அழைக்கப்படுகின்றன.
விடை : குறுக்கலை
3. ஒலி ____________ வடிவத்தில் பயணிக்கிறது.
விடை : இயந்திர அலை
4. உங்களால் கேட்க முடியாத உயர் அதிர்வெண் ஒலிகள் ____________ என அழைக்கப்படுகின்றன.
விடை : மீயொலி
5. ஒலியின் சுருதி அதிர்வுகளின் ____________ சார்ந்தது.
விடை : எண்ணிக்கை
6. அதிர்வுறும் கம்பியின் தடிமன் அதிகரித்தால், அதன் சுருதி ____________ .
விடை : குறையும்
III. பொருத்துக
1. மீயாெலி | 20 Hz க்கு கீழ் |
2. காற்றில் ஒலியின் வேகம் | ஊடகம் தேவை |
3. இன்ஃப்ராசோனிக்ஸ | 331 ms-1 |
4. ஒலி | 20000 Hz க்கு கீழ் மேல் |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ |
IV. கூற்று மற்றும் காரணம்.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் உண்மை மற்றும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் உண்மை மற்றும் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
- கூற்று உண்மை ஆனால் காரணம் தவறானது.
- கூற்று தவறானது, ஆனால் காரணம் உண்மை
- கூற்று மற்றும் காரணம் இரணடும் தவறானவை
1. கூற்று: மின்னல் தாக்கும்போது மின்னலை பார்த்த சிறிது நேரம் கழித்து ஒலி கேட்கப்படுகிறது.
காரணம்: ஒலியின் வேகத்தை விட ஒளியின் வேகம் அதிகம்.
விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் உண்மை மற்றும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
2. கூற்று: சந்திரனின் மேறபரப்பில் இரண்டு நபர்கள் ஒருவருக்காெருவர் பேச முடியாது.
காரணம்: சந்திரனில் வளிமண்டலம் இல்லை
விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் உண்மை மற்றும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
V. சுருக்கமாக விடையளி.
1. அதிர்வுகள் என்றால் என்ன?
ஒரு பொருளின் முன்னும் பின்னுமான இயக்கம் அதிர்வுகள் ஆகும்.
2. ஒளி ஒலியை விட வேகமாக பயணிக்கிறது என்பதைக் காட்ட ஒரு உதாரணம் தருக?
மின்னல்
- ஒளி பரவ ஊடகம் தேவையில்லை. ஒளி வெற்றிடத்தின் வழியாக செல்லும்
- வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் C = 3 x 108மீவி-1
3. ஒலியின் உரப்பை நான்கு மடங்கு அதிகரிக்க, அதிர்வுகளின் வீச்சு எவ்வளவு மாற்றப்பட்ட வேண்டும்?
ஒலியின் உரப்பை நான்கு மடங்கு அதிகரிக்க, அதிர்வுகளின் வீச்சு நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்ட வேண்டும்.
4. மீயாெலி ஒலி என்றால் என்ன?
2000 ஹெர்டஸை விட அதிக அதிர்வெண் கொண்ட ஒலி மீயொலி என அழைக்கப்படுகிறது. வெளவால்கள், நாய்கள், டால்பின்கள் போன்ற விலங்குகள் மீயாெலிகளை கேட்கும் தன்மை கொண்டது
5. இசைக்கும் இரைச்சலுக்கும் இரண்டு வேறுபாடுகளைத் தருக?
இசை | இரைச்சல் |
1. செவிக்கு மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தக் கூடியது | செவிக்கு விரும்பத்தகாத உணர்வை ஏற்படுத்தக் கூடியது |
2. சீரான அதிர்வுகளால் உருவாக்கப்படுகிறது | சீரற்ற அதிர்வுகளால் உருவாக்கப்படுகிறது |
6. ஒலி மாசுபாட்டின் விளைவுகள் யாவை?
- இரைச்சலானது, எரிச்சல், மன அழுத்தம், பேதட்டம் மற்றும் தலைவலி ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும்.
- இரைச்சல் நீண்ட காலத்திற்கு கேட்கும்போது ஒரு நபரின் தூக்க முறை மாறக்கூடும்.
- இரைச்சல் தாெடர்ந்து கேட்கும்போது செவிப்புலன் திறனை பாதிக்கலாம். சில நேரங்களில், இது செவிப்புலன் இழப்புக்கு வழிவகுக்கிறது.
- திடீரென ஏற்படும் இரைச்சல் மாரடைப்பு மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
7. ஒலி மாசுபாட்டினைக் குறைக்க எடுக்க வேண்டிய இரண்டு நடவடிக்கைகளைக் குறிப்பிடுக?
- சமூக, மத மற்றும் அரசியல் விழாக்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு கடுமையான வழிகாட்டுதல்கள் அமைக்கப்பட வேண்டும்.
- அனைத்து வாகனங்களும் குறைவானை ஒலியெழுப்பும் (Silencer) சைலன்சர் காெணடிருக்க வேண்டும்.
8. பின்வரும் சொற்களை வரையறுக்கவும்:
அ) வீச்சு
அலையின் வீச்சு என்பது மையப்புள்ளியில் இருந்து துகளின் அதிகபட்ச இடப்பெயர்ச்சி ஆகும். இதை ‘A’. என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது வீச்சின் அலகு ‘மீட்டர்’ (m).
ஆ) உரப்பு
மெல்லிய அல்லது பலவீனமான ஒலியை உரத்த ஒலியிலிருந்து வேறுபடுத்துவதற்கு உதவும் ஒலியின் சிறப்பியல்பே உரப்பு என
வரையறுக்கப்படுகிறது
9. ஒலி மாசுபாட்டைக் குறைக்க மரங்களை நடுவது எவ்வாறு உதவுகிறது?
- மரங்கள் ஒலியை உறிஞ்சுகின்றன
- எனவே ஒலி மாசுபாட்டைக் குறைக்க மரங்களை நடுவது உதவுகிறது