பாடம்.13 நீர்
பாடம்.13 நீர்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. நீர் பனிக்கட்டியாக எந்த வெப்நிலையில் மாற்றமடையும்?
- 0oC
- 100oC
- 102oC
- 98oC
விடை : 0oC
2. நீரில் கார்பன்-டை-ஆக்சைடு கரைதிறன் அதிகமாவது?
- குறைவான அழுத்ததில்
- அதிகமான அழுத்ததில்
- வெப்பநிலை உயர்வால்
- ஏதுமில்லை
விடை : அதிகமான அழுத்ததில்
3. நீரின் மின்னபாற்குக்கும் பாேது எதிர்மின் வாயில் சேகரிக்கப்படும் வாயு?
- ஆக்சிஜன்
- ஹைட்ரஜன்
- நைட்ரஜன்
- கார்ன்- டை- ஆக்சைடு
விடை : ஹைட்ரஜன்
4. கீழே கொடுக்கப்ட்டுள்ளவைகளில் எது நீரை மாசுபடுத்தும்?
- ஈயம்
- படிகாரம்
- ஆக்சிஜன்
- குளோரின்
விடை : ஈயம்
5. நீரின் நிரந்தர கடினதன்மைக்கு காரணமாக இருப்பவை
- சல்பேட்டுகள்
- தூசுக்கள்
- கார்பனேட் மற்றும் பை கார்பனேட்
- கரைந்துள்ள பிற பாெருள்கள்
விடை : சல்பேட்டுகள்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. நீர் நிறமற்றது, மணமற்றது மற்றும் __________
விடை : சுவையற்றது
2. நீரின் கொதிநிலை __________
விடை : 100oC
3. நீரின் தற்காலிக கடினதன்மை __________ முறையில் நீக்கப்படுகிறது.
விடை : கொதிக்க வைத்தல்
4. நீர் _________ வெப்பநிலையில் அதிக அடர்த்தியினை பெற்றிருக்கும்
விடை : 4oC
5. ஏற்றம் _________ செயல்பாட்டைத் துரிதப்படுத்தும்.
விடை : வீழ்படிவு
III. சரியா அல்லது தவறா எனக்கூறு தவறான கூற்றைத் திருத்து.
1. கழிவுநீரின் நன்கு சுத்திகரித்த பிறகே நன்னீர் நிலைகளில் கலக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
விடை : சரி
2. கடல் நீரில் உப்புகள் கரைந்துள்ளதால் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.
விடை : தவறு
சரியான கூற்று : கடல் நீரில் உப்புகள் கரைந்துள்ளதால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாது.
3. வேதி உரங்கள அதிக அளவில் பயன்படுத்துவதால் மண்ணின் தரம்
குறைந்து நீர் மாசபடுகிறது.
விடை : சரி
4. நீரின் அடர்த்தியானது அனைத்து வெப்பநிலையிலும் மாறாமல் இருக்கும்.
விடை : தவறு
சரியான கூற்று : வெவ்வேறு வெப்ப நிலைகளில் நீர் வெவ்வேறு அடத்தியை கொண்டிருக்கும்.
5. கடின நீரில் சோப்பு நன்கு நுரையினைத் தரும்.
விடை : தவறு
சரியான கூற்று : மென் நீரில் சோப்பு நன்கு நுரையினைத் தரும்
IV. பொருத்துக
1. சர்வ கரைப்பான் | நீர் மாசுபடுத்தி |
2. கடினநீர் | கிருமிகள் கொள்ளுதல் |
3. கொதித்தல் – | ஓசோனேற்றம் |
4. நுண்ணுயிர் நீக்கம் | நீர் |
5. கழிவுநீக்கம் | வயிற்று உபாதைகள் |
விடை : 1 – ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – இ, 5 – அ |
V. கீழ்காணும் கூற்றுகளுக்கு காரணம் கூறுக
1. வீழ்படிவு தொட்டியில் நீருடன் படிகாரம் சேர்த்தல்
- சில நேரங்களில் வீழ்படிதலை துரிதப்படுத்துவதற்காக பொட்டாஷ் துரிதப்படுத்துவதற்காக பொட்டாஷ் படிகாரமானது நீருடன் சேகரிக்கப்படுகிறது. இந்நிகழ்வினை ஏற்றம் என்கிறோம்.
- பொட்டாஷ் படிகாரமானது மாசுடன் சேர்ந்து வீழ்படிதலை துரிதப்படுத்தகிறது
2. நீர் ஒரு சர்வ கரைப்பான்.
- கரைப்பான் என்பது பிற பொருள்களை கரைக்கக்கூடிய பொருளாகும்
- பிற திரவங்களுடன் ஒப்பிடுகையில் தண்ணீருக்கு மட்டுமே அநேக பொருட்களை கரைக்கும் தனித்துவமான பண்பு உள்ளத
- எனவே இரு சர்வ கரைப்பான் என்று அழைக்கப்படுகிறது.
3. பனிக்கட்டி நீரில் மிதத்தல்.
- பனிக்கட்டியானது நீரை விட இலேசானது
- பனிக்கட்டியின் அடத்தியானது நீரின் அடர்த்தியை விட குறைவு
- எனவே பனிக்கட்டி நீரில் மிதக்கிறது.
4. நீர் வாழ் விலங்கினங்கள் நீரினுள் சுவாசித்தல்.
- நீர்வாழ் விலங்கினங்கள் நீரிலிருந்து ஆக்சிஜனை எடுத்தக்கொண்டு, செவுள் அல்லது தோல் வழியே நீரை வெளியேற்றுகின்றன.
- நீரில் ஆக்சிஜன் கரைந்திருப்பதாலேயே நீர் வாழ் விலங்கினங்கள் நீரில் வாழ முடிகிறது
5. கடல் நீர் குடிப்பதற்கு உகந்த நீரல்ல.
- ஒவ்வொரு லிட்டர் கடல் நீரிலும் 35 கிராம் சாதாரண உப்பு எனப்படும் சோடியம் குளோரைடு கரைந்துள்ளது. அது உவர் நீர் எனப்படும்.
- இது பருகுவதற்கு உகந்ததல்லாத நீர் எனப்படுகிறது.
6. பாத்திரங்களை தூய்மையாக்க கடின நீர் உகந்தது அல்ல.
- கடின நீர் பாத்திரங்கள் மற்றும் கொள்கலன்களின் மீது கடினமான படிவுகளை உருவாக்கி அவற்றை சேதப்படுத்தகிறது.
- எனவே பாத்திரங்களை தூய்மையாக்க கடின நீர் உகந்தது அல்ல
VI. கீழ்கண்டவற்றை விவரி
1. உருகுநிலை
எந்த வெப்பநிலையில் ஒரு திடப்பொருள் உருகி திரவப் பொருளாக மாறுகின்றதோ அதுவே திடப் பொருளின் உருகுநிலை எனப்படும்.
பனிக்கட்டியின் உருகு நிலை = 0oC
2. கொதிநிலை
எந்த வெப்பநிலையில் ஒரு திரவமானது கொதிக்க ஆரம்பிக்கிறதோ, அதுவே அத்திரவத்தின் கொதிநிலை எனப்படும்.
நீரின் உருகு நிலை = 100oC
3. தன் வெப்ப ஏற்புத்திறன்
ஒரு பொருளின் ஓர் அலகு வெப்பநிலையை 1oC ஆக உயர்த்த தேவையான வெப்பத்தின் அளவு அப்பொருளின் தன் வெப்ப ஏற்பத்திற்ன் எனப்படும்
4. ஆவியாதலின் உள்ளுறை வெப்பம்
பனிக்கட்டியை நீராக மாற்றுத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் எனப்படும்
5. குடிக்க தகுந்த நீர்
மனித நுகர்வுக்கு தகுதியான நீரே பருக உகந்த நீர் எனப்படும். ஒவ்வொரு லிட்டர் பருக 1 முதல் 2 கிராம் சாதாரண உப்பையும், கரைந்த நிலையிலுள்ள பிற உப்புகளையும் கொண்டுள்ளது
VII. குறுகிய விடையளி
1. நீரினை மின்னாற்பகுக்கும் பாேது நேர்மின் மற்றும் எதிர்மின்வாயில் வெளியேறும் வாயுக்களின் பெயர் மற்றும் விகிதம் என்ன?
- நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் போன்ற கூற்கள் உள்ளன அதன் மூலக்கூறு வாய்ப்பாடு H2O
- மின்னாற் பகுப்பின் மூலம் நீர் இரு வேறு வாயுக்களாக பிரிக்கப்படுகிறது.
- மின்னாற்பகுப்பின் போது ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் 2 : 1 என்ற விதிகத்தில் பெறப்படுகின்றன
- கேத்தோடில் ஹைட்ரஜன் வாயுவும், ஆனோடில் ஆக்சிஜன் வாயும் சேகரிக்கப்படுகிறது.
2. நீரில் கரைந்த ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைட்டின் முக்கியத்துவத்தைக் கூறுக.
- நீரில் நைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு தவிர ஆக்சிஜனும் கரைந்துள்ளது. பின்வரம் காரணங்களுக்காக நீரில் காற்று கரைந்திருப்பது அவசியமாகும்
- உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு நீரில் காற்று கலந்திருப்பது அவசியமாகும்.
- மீன்கள் நீரிலிருந்து ஆக்சிஜனை எடுத்தக்கொண்டு, செவுள் அல்லது தோல் வழியே நீரை வெளியேற்றுகின்றன. நீரில் ஆக்சிஜன் கரைந்திருப்பதாலேயே நீர் வாழ் விலங்கினங்கள் நீரில் வாழ முடிகிறது.
- ஒளிச்சேர்க்கைக்கு நீர்வாா் தாவரங்கள் நீரில் கரைந்தள்ள கார்பன் டை ஆக்ஸைடைப் பயன்படுத்துகின்றன
- நீரில் கரைந்த கார்பன்-டை-ஆக்ஸைடு சுண்ணாம்புடன் வினைபுரிந்து கால்சியம் பை கார்பனேட்டை உருவாக்குகிறது. நத்தைகள், சிப்பிகள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் கால்சியம் பை கார்பேனட்டிலிருந்து கால்சியம் கார்பனேட்டைப் பிரித்தொடுத்து தங்கள் மேல் ஓடுகளை உருவாக்கிக் கொள்கின்றன
3. நீரின் தற்காலிக மற்றும் நிரந்தர கடினத்தன்மைக்கான காரணிகள் என்ன?
தற்காலிக கடினத்தன்மை
தற்காலிக கடினத்தன்மை கால்சியம், மெக்னீசியத்தின் கார்பனேட் மற்றும் பை கார்பனேட் உப்புகளால் ஏற்படுகிறது
நிரந்தர கடினத்தன்மை
நிரந்தர கடினத்தன்மையானது கால்சியம், மெக்னீசியத்தின் குளோரைடு மற்றும் சல்பேட் உப்புகளால் ஏற்படுகிறது
4. நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் – விவரி.
- நீரானது 100oC வெப்பநிலைய அடையும்போது அது திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாற்றமடைகிறது.
- எனினும், நீரின் வெப்பநிலை 100oC-க்கு மேல் உயராது. ஏனெனில் கொடுக்கப்படும் வெப்ப ஆற்றல் கொதிக்கும் நீரின் இயற்பியல் நிலையை மட்டுமே மாற்றுகிறது.
- இந்த வெப்ப ஆற்றல் நீராவியினுள் சேமிக்கப்படுகிறது. எனவே இது நீர் ஆவியாதின் உள்ளுறை வெப்பம் எனப்படுகிறது.
5. நீரின் கடினத்தன்மையை நீக்கும் முறைகள் யாவை?
கொதிக்க வைத்தல்
சூடுபடுத்தப்படும் பொழுது கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் சிதைவடைந்து கரையாத கால்சியம் கார்பேனட் உருவாகிறது.
சலவை சோடாவைச் சேர்த்தல்
சலவை சோடாவானது குளோரைடு மற்றும் சல்பேட்டுகளை கரையாத கார்பனேட் உப்புகளாக மாற்றுகிறது
அயனி பரிமாற்றம்
நீரினை அயனி பரிமாற்றம் செய்யும் பிசின்களுள் அனுப்பும்போது கால்சியம் மற்றும் மெக்னிசியம் அயனிகள் சோடியம் அயனிகளாக மாற்றப்படுகின்றன
வாலை வடித்தல்
இம்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின் பெறப்படும் காய்ச்சிய நீர் வாலை வடிநீர் என அழைக்கப்படுகிறது. இது மிகவும் தூய்மையான நீராகும்