8th Std Science Solution in Tamil | Lesson.15 அன்றாட வாழ்வில் வேதியியல்

பாடம்.15 அன்றாட வாழ்வில் வேதியியல்

8th-Std-Science-Book-Back-Answers in Tamil Lesson-15

பாடம்.15 அன்றாட வாழ்வில் வேதியியல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. வாயுக்கசிவை அறிவதற்காக LPG வாயுவுடன் சேர்க்கப்படும் வ வேதிப்பொருள் ________.

  1. மெத்தனால்
  2. எத்தனால்
  3. கற்பூரம்
  4. மெர்காப்டன்

விடை : மெர்காப்டன்

2. தாெகுப்பு வாயு என்று அழைக்கப்படுவது எது?

  1. சதுப்பு நில வாயு
  2. நீர்வாயு
  3. உற்பத்தி வாயு
  4. நிலக்கரி வாயு

விடை : நீர்வாயு

3. ஒரு எரிபொருள் கலோரி மதிப்பின் அலகு

  1. கிலோ ஜுல்/மோல்
  2. கிலோ ஜுல்/கிராம்
  3. கிலோ ஜுல்/கிலோ கிராம்
  4. ஜுல்/கிலோ கிராம்

விடை : கிலோ ஜுல்/கிலோ கிராம்

4. ________ என்பது உயர்தரமான நிலக்கரி வகையாகும்.

  1. பீட்
  2. லிக்னைட்
  3. பிட்டுமினஸ்
  4. ஆந்த்ரசைட்

விடை : ஆந்த்ரசைட்

5. இயற்கை வாயுவில் பெரும்பான்மையான பகுதிப்பொருள் _______

  1. மீத்தேன்
  2. ஈத்தேன்
  3. புராேப்பேன்
  4. பியூட்டேன்

விடை : மீத்தேன்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. உற்பத்தி வாயு எனது, ________ மற்றும் ________ ஆகியவற்றின் கலவையாகும்.

விடை : கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன்

2. _________ சதுப்பு நில வாயு எனப்படுகிறது.

விடை : மீதேன்

3. பெட்ராேலியம் என்ற சொல் குறிப்பது ________

விடை : பாறை

4. காற்றில்லாச் சூழலில் நிலக்கரியை வெப்படுத்துவது _______ எனப்படும்

விடை : சிதைத்து வடித்தல்

5. படிம எரிபொருளுக்கு ஒரு உதாரணம் _______

விடை : நிலக்கரி

III.பொருத்துக.

1. ஆக்டேன் மதிப்பீடுடீசல்
2. சீட்டேன் மதீப்பீடுமீத்தேன்
3. எளிய ஹைட்ராே கார்பன்பெட்ராேல்
4. பீட்பழுப்பு நிறம் கொண்டது
5. லிக்னைட்முதல் நிலை நிலக்கரி
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ, 4 – உ, 5 – ஈ

IV. குறுகிய விடையளி

1. சங்கிலித்தாெடராக்கம் என்றால் என்ன?

ஹைட்ரோ கார்பன்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வேதிப்பிணைப்புகளை உருவாக்கும் தன்மை கொண்டவை. இந்த பண்பு சங்கிலித் தொடராக்கம் எனப்படும்

2. இயற்கை வாயுவின் அனுகூலங்கள் யாவை?

  • இயற்கை வாயு எளிதில் எரியக்கூடியது என்பதால், இது பெருமளவில் வெப்பத்தை வெளியிடுகிறது.
  • எரியும்பொழுது எந்தக் கழிவையும் இது தருவதில்லை
  • எரியும்பொழுது புகையை வெளிடாததால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதில்லை.
  • இந்த வாயுவை குழாய்கள் மூலும் எளிதில் எடுத்துச்சென்று சேர்க்க முடியும்.
  • இதனை வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் நேரடியாக எரிபொருளாகப் பயன்படுத்த முடியும்.

3. CNG என்பதை விரிவுபடுத்தி எழுது. அதன் இரு பயன்களை எழுது.

CNG – Compressed Natural Gas

  • அதிக அழுத்தம் கொண்டு இயற்கை வாயுவை அழுத்தும்பொழுது அழுத்தப்பட்ட இயற்கைவாயு கிடைக்கிறது.
  • இது மிகவும் மலிவானை மற்றும் தூய்மையான எரிபொருள்
  • இதனை பயன்டுத்தும் வாகனங்கள் மிக குறைவான கார்பன்-டை-ஆக்சைடையும், ஹைட்ரோ கார்பன்களையும் வெளிவிடுகின்றன.
  • பெட்ரோல் மற்றும் டீசலை விட மிகவும் விலைக் குறைந்தது.

4. தாெகுப்பு வாயு என்று அறியப்படும் வாயுவை கண்டறிந்து எழுது. அது ஏன் அவ்வாறு என்றழைக்கப்படுகிறது?

நீர் வாயு தொகுப்பு வாயு என அழைக்கப்படுகிறது. இது கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களின் கலவையாகும்.

கல்கரியின் மீது 1000oC வெப்பநிலையில் நீராவியைச் செலுத்து இது உற்பத்தி செய்யப்படுகிறது

C(g)   +   H2O(g)1000oC
—————>
CO(g)  +   H2 (g)

வாயுக்களின் கலவை என்பதால் இது தொகுப்பு வாயு என்று அழைக்கப்படுகிறது.

5. ஏன் ஆந்த்ரசைட் வகை நிலக்கரி மிகவும் உயர்தரமான நிலக்கரி எனப்படுகிறது. அதற்கானை காரணம் தருக.

  • இது மிகவும் உயர்தரம் காெண்ட நிலக்கரி வகையாகும்.
  • மிகுந்த  கடினத் தன்மையும் அடர் கருமை நிறத்தையும் காெண்டது.
  • இவ்வகை நிலக்கரி மிகவும் இலேசானதும் உயர்ந்த வெப்ப ஆற்றலையும் காெண்டது.
  • ஆந்த்ரசைட் நிலக்கரியானது மிகவும் கடினமானது.
  • அடர் கருமை நிறமும் பளபளக்கும் தன்மையையும் காெண்டது
  • இதிலுள்ள கார்பனின் சதவீதம் 86-97% ஆகும்.
  • பிட்டுமினஸ் நிலக்கரியை விட சற்று உயர்ந்த வெப்பாற்றல் மதிப்பை உடையது .
  • ஆந்த்ரசைட் நிலக்கரி நீண்ட நேரம் எரிந்து அதிக வெப்பத்தையும் குறைவான தூசியினையும் தருகிறது.

6. ஆக்டோன் எண் – சீட்டோன் எண் வேறுப்படுத்துக

ஆக்டோன்சீட்டோன்
1. ஆக்டேன் எண் மதிப்பீடு பெட்ரோலுக்கு பயன்படுகிறதுசீட்டோன் எண் மதிப்பீடு டீசலுக்கு பயன்படுகிறது
2. இது பெட்ரோலில் உள்ள ஆக்டேனின்ன அளவைக் குறிக்கிறதுஇது டீசல் எஞ்சினிலுள்ள எரிபொருளின் பற்றவைப்பு தாமதக்கால அளவை குறிக்கிறது.
3. பென்சீன் அல்லது டொலுவின் சேர்ப்பதன் மூலம் பெட்ரோலின் ஆக்டேன் எண்ணை அதிகரிக்க முடியும்அசிட்டோனைச் சேர்ப்பதன் மூலம் டீசலின் சீட்டேன் எண்ணை அதிகரிக்க முடியும்.
4. உயர்ந்த ஆக்டேன் எண் பெற்றுள்ள எரிபொருளின் சீட்டேன் எண் குறைவாக இருக்கும்அதிக சீட்டேன் எண் பெற்றுள்ள எரிபொருளின் ஆக்டேன் எண் குறைவாக இருக்கும்

7. தமிழ்நாட்டில் காற்றாலைகளைப் பயன்படுத்தி காற்றாற்றல் உற்பத்தி செய்யப்படும் இடங்களை எழுதுக.

  • கயத்தாறு
  • ஆரல்வாய் மொழி
  • பல்லடம்
  • குடிமங்கலம்

8. சூரிய ஆற்றல் எப்பொழுதும் தீராத ஒரு ஆற்றல் மூலமாகும். இக்கூற்றை நியாயப்படுத்துக.

  • சூரியனே பூமியில் உயிரினங்கள் வாழத் தகுந்த சூழ்நிலையை உண்டாக்கக்கூடிய முதன்மையான மற்றும் முக்கியமான ஆற்றல் மூலமாகும்.
  • சூரிய ஆற்றல் மட்டுமே தீர்ந்துவிடாத ஆற்றல் மூலமாகும்.
  • இது விலையில்லா மற்றும் புதுபிக்ககூடிய ஆற்றல் வளமாக உள்ளது.
  • இது சுற்றுச்சூழலைப் பாதிக்காத, தீர்ந்து போக ஆற்றல் வளமாகும்.
  • இது படிம எரிபொருள்களைப் பதிலீடு செய்து உலகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆற்றல் வாய்ந்த வளமாகும்.
  • அறிவியில் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியனால் சூரிய ஆற்றலானது பயன்படுத்துவதற்கு எளிதானதாகவும், இன்றைய ஆறறல் சார்ந்த் பிரச்சனைகளைத் தீர்ப்பதாகவும் உள்ளது.
  • சூரிய ஆற்றல் ஒரு சுத்தமான ஆற்ல் ஆகும்
  • பல்வேறு கருவிகளை கொண்டு குறைந்த அளவு முயற்சியுன் அதிக அளவு ஆற்றலை சூரியனிடமிருந்து நாம் பெற முடியும்.

V. விரிவாக விடையளி.

1. நிலக்கரியின் பல்வேறு வகைகளைப் பற்றி விளக்குக.

நிலக்கரியிலுள்ள கார்பனின் அளவைப் பொருத்தும், அது வெளிவிடும் வெப்ப ஆற்றலைப் பொருத்தும் அதனை நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம் அவையாவன: லிக்னைட், துணை பிட்டுமினஸ், பிட்டுமினஸ் மற்றும் ஆந்த்ரசைட். இந்த நான்கு வகைகளுள் அதிக வெப்ப ஆற்றலைத் தரும் நிலக்கரியான ஆந்த்ரசைட் நிலக்கரியே மிகவும் விரும்பப்படுகிறது.

லிக்னைட்

  • இது பழுப்பு நிறமுடைய, மிகவும் தரம் குறைந்த நிலக்கரியாகும்.
  • இது குறைந்த அளவு கார்பனைக் கொண்டுள்ளது.
  • இதிலுள்ள கார்பனின் சதவீதம் 25-35%. லிக்னைட் அதிக அளவு ஈரப்பதத்தையும், மொத்த நிலக்கரி இருப்பில் ஏறக்குறைய பாதியளவினையும் கொண்டுள்ளது.
  • இது மின்சார உற்பத்தியில் பயன்படுகிறது.
  • தொகுப்பு முறையிலான இயற்கை வாயுவையும், உரப்பொருள்களையும் உற்பத்தி செய்ய லிக்னைட் பயன்படுகிறது.

துணை-பிட்டுமினஸ்

  • லிக்னைட் நிலக்கரி அடர் நிறமாகவும் கடினமாகவும் மாறும்பொழுது துணை பிட்டுமினஸ் நிலக்கரி உருவாகிறது.
  • இது கருமை நிறமுடைய மந்தமான நிலக்கரி வகையாகும்.
  • லிக்னைட் வகையைவிட அதிகளவு வெப்பத்தை வெளியிடும் திறனைக் கொண்டது. இதிலுள்ள கார்பனின் சதவீதம் 35-44% ஆகும்.
  • இது முதன்மையாக மின்சார உற்பத்தியில் எரிபொருளாகப் பயன்படுகிறது.
  • இவ்வகை நிலக்கரியில் பிற நிலக்கரி வகைகளைவிட குறைந்தளவு சல்பர் உள்ளது.
  • எனவே, இது மாசுக்களை உருவாக்குவதில்லை.

பிட்டுமினஸ் நிலக்கரி

  • அதிகளவு இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களால் துணை பிட்டுமினஸ் நிலக்கரி பிட்டுமினஸ் வகை நிலக்கரியாக மாற்றம் பெற்றுள்ளது.
  • இது அடர் கருமை நிறமும், கடினத் தன்மையையும் கொண்டது.
  • இவ்வகை நிலக்கரியில் 45-86% கார்பன் உள்ளது. மேலும், இது அதிக வெப்ப ஆற்றலையும் பெற்றுள்ளது.
  • இது மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. இதன் மற்றுமொரு பயன்பாடு, இரும்பு மற்றும் எஃகு உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு கல்கரி வழங்குவதாகும்.
  • மேலும், இவ்வகை நிலக்கரியிலிருந்து கிடைக்கும் உப விளைபொருள்கள் வெவ்வேறு வேதிப் பொருள்களாகமாற்றப்பட்டு பெயிண்டுகள், நைலான் மற்றும் பல்வேறு வகையான பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

ஆந்த்ரசைட்

  • இது மிகவும் உயர்தரம் கொண்ட நிலக்கரி வகையாகும்.
  • இவ்வகை நிலக்கரி மிகவும் இலேசானதாகவும், உயர்ந்த வெப்ப ஆற்றலைக் கொண்டதாகவும் உள்ளது.
  • ஆந்த்ரசைட் நிலக்கரி கடினத் தன்மையையும், அடர் கருமை நிறத்தையும், பளபளக்கும் தன்மையையும் கொண்டது.
  • இதிலுள்ள கார்பனின் சதவீதம் 86-97% ஆகும்.
  • இது பிட்டுமினஸ் நிலக்கரியை விட சற்று உயர்ந்த வெப்ப ஆற்றல் மதிப்பை உடையது .
  • ஆந்த்ரசைட் நிலக்கரி நீண்ட நேரம் எரிந்து அதிக வெப்பத்தையும் குறைவான மாசுக்களையும் வெளியிடுகிறது.

2. பல்வேறு எரிபொருள் வாயுக்களைப் பற்றி எழுதுக.

இயற்கை வாயுவைத் தவிர மேலும் சில வாயுக்களும் எரிபொருளாகப் பயன்படுகின்றன. அவற்றுள் சில. உற்பத்தி வாயு, நிலக்கரி வாயு, உயிரி-வாயு மற்றும் நீர் வாயு.

உற்பத்தி வாயு

உற்பத்தி வாயு என்பது கார்பன்மோனாக்சைடு வாயுவும் நைட்ரஜன் வாயுவும் கலந்த கலவையாகும். செஞ்சூடான கல்கரியின் மீது 1100°c வெப்பநிலையில் நீராவி கலந்துள்ள காற்றினைச் செலுத்துவதன் மூலம் இது உருவாக்கப்படுகிறது. இது எஃகு உற்பத்தித் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுகிறது.

நிலக்கரி வாயு

இது ஹைட்ரஜன், மீத்தேன் மற்றும் கார்பன் டைஆக்சைடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலவையாகும். நிலக்கரியைச் சிதைத்து வடிப்பதன் மூலம் இது பெறப்படுகிறது. சிதைத்து வடித்தல் என்பது காற்றில்லா சூழ்நிலையில் நிலக்கரியை வெப்பப்படுத்துவதாகும். இவ்வாயு எஃகு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் திறந்த வெப்ப உலையைச் சூடுபடுத்தப் பயன்படுகிறது. சில உலோகவியல் செயல்பாடுகளில் ஒடுக்கும் பொருளாகவும் இவ்வாயு பயன்படுகிறது.

நீர் வாயு

இது கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன்வாயுக்களின்கலவையாகும். கல்கரியின் மீது 10000C வெப்பநிலையில் நீராவியைச் செலுத்தி இது உற்பத்தி செய்யப்படுகிறது.

C(g) + H2 O(g)1000°C
————–>
CO(g) + H2 (g)

 

இது தொகுப்பு வாயு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், மெத்தனால் மற்றும் எளிய ஹைட்ரோகார்பன்களை உற்பத்தி செய்ய இது பயன்படுகிறது. தொழிற்சாலைகளில் எரிபொருளாகவும் இது பயன்படுகிறது.

உயிரி – வாயு

உயிரி – வாயு என்பது மீத்தேன் மற்றும் கார்பன் டைஆக்சைடு வாயுக்களின் கலவையாகும். இவ்வாயு கரிமப் பொருள்களை உண்டுபண்ணும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளைச் சிதைவடையச் செய்து உருவாக்கப்படுகிறது. காற்றில்லா (ஆக்சிஜன் இல்லாத) சூழ்நிலையில் கரிமப் பொருள்கள் சிதைவடையும்பொழுது உயிரி – வாயு உருவாகிறது. இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலத்திற்கு ஒரு உதாரணம் ஆகும்.

பயனுள்ள பக்கங்கள்