8th Std Science Term 3 Solution in Tamil | Lesson.9 காட்சித் தொடர்பியல்

பாடம்.9 காட்சித் தொடர்பியல்

8ஆம் வகுப்பு அறிவியல், காட்சித் தொடர்பியல் Book Back Solution

பாடம்.9 காட்சித் தொடர்பியல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. தேர்ந்தெடுத்த உரையை நகலெடுக்க விசைப்பலகைக் குறுக்குவழி பயன்படுகிறது.

  1. Ctrl + C
  2. Ctrl + V
  3. Ctrl + X
  4. Ctrl + A

விடை :  Ctrl + C

2. தேர்ந்தெடுத்த உரையை வெட்ட விசைப்பலகைக் குறுக்குவழி பயன்படுகிறது.

  1. Ctrl + C
  2. Ctrl + V
  3. Ctrl + X
  4. Ctrl + A

விடை : Ctrl + X

3. லிபெர் ஆபிஸ் ரைட்டரில் எத்தனை வகையான பக்க அமைவுகள் உள்ளன?

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

விடை : 2

4. திரையில் ரூலர் தெரியாவிட்டால் ___________ கிளிக் செய்ய வேண்டும்.

  1. View → ruler
  2. view → task
  3. file → save
  4. edit → paste

விடை : View → ruler

5. ஆவணத்தைச் சேமிக்க மெனு பயன்படுகிறது.

  1. File → open
  2. File → print
  3. File → save
  4. File → close

விடை : File → save

II. கீழ்காணும் வினாக்களுக்கு விடையளிக்க

1. உரை ஆவண மென்பொருளின பயன்கள் யாவை?

எழுத்தாற்றல், புத்தகங்கள், அறிக்கைகள், செய்தி மடல்கள், கையேடுகள், மற்றும் பிற ஆவணங்களைத் தாேற்றுவிப்பதற்கு உணர ஆகும் (Word செயலி) ஒரு கருவியாகும்.

2. உரையை தேர்ந்தெடுத்தல் என்றால் என்ன?

  • ஆவணத்தை உருவாக்கும் போது ஒவவொரு எழுத்தாக தட்டச்சு செய்தாலும் திருத்தும் போதும் வடிவூட்டும் போதும் சொற்களையாே வரிகளையாே பத்திகளையாே அல்லது  சில நேரம் முழு ஆவணத்தையோ தேர்ந்தெடுக்க வேண்டி வரும்.
  • உரைகளை தேர்ந்தெடுத்த பின்னால் தேவையான மாற்றங்களை செய்து காெள்ளலாம்.
  • உரையை நகர்த்தவும், நகல் எடுக்கவும் தடிப்பாக்கவும் முடியும்.
  • உரையை தேர்ந்தெடுக்க சுட்டி அல்லது விசைப்பலகையை பயன்டுத்தலாம்.

3. ஒரு ஆவணத்தை மூடலாம்?

ஒரு ஆவணத்தில் வேலை முடிந்தவுடன் அந்த காேப்பினை மூடி விட File ——> Close என்ற கட்டளையை பயன்படுத்தலாம்.

4. வலது இசைவு என்பது என்ன?

  • பத்தி ஒழுங்கமைப்பு என்பது பத்தியின இடது மற்றும் வலது பக்கங்களின தாேற்றத்தை குறிக்கிறது.
  • இயல்பாக, Word-இல் பத்திகளை வலதுபக்கம் ஒழுங்குபடுத்தலாம், அதனால் வலது பக்கம் சமச்சீராக இருக்கும்.
  • இது வலது இசைவு (Right Alignment) எனப்படுகிறது.

5. ஏற்கனவே உள்ள ஒரு ஆவணத்தை திறப்பது எப்படி?

சேமிக்கப்பட்டு மூடப்பட்ட ஒரு ஆவணத்தை திறக்க, பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றை செய்யலாம்.

1. மெனு பட்டியில் உள்ள திறந்த காேப்பு (Open) பொத்தானை அழுத்தவும்.

2. File Open என் கட்டளையை பயன்படுத்தவும்

3. விசைப்பலகையில் CTRL + O விசைகளை அழுத்தவும்.

திறந்த உரையாடல் பெட்டி தாேன்றும். காேப்பை தேர்ந்தெடுத்து திறக்க (Open) பொத்தானை அழுத்தவும்.

6. உரையை நகலெடுத்தல் பற்றி குறிப்பு வரைக

  • முதலில் நகலெடுக்க வேண்டிய உரையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • பிறகு Edit ——–> Copy கட்டளையை தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது கருவிப்பட்டையில் பணிக்குறியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அதன் பிறகு செருகும் இடத்தை உரையை எங்கு ஒட்ட வேண்டுமோ அங்கு வைக்க வேணடும்.
  • இறுதியாக Edit ———> Paste கட்டளையை அல்லது கருவிப்பட்டையில் பணிக்குறியை தேர்ந்தெடுத்து புதிய இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உரையை ஒட்ட வேண்டும்.

கீழ்க்காணும் குறுக்கு வழியைப் பயன்படுத்தியும் உரையை நகர்த்தலாம்.

  • Ctrl + C → நகலெடுக்க
  • Ctrl + V → ஒட்ட

 

பயனுள்ள பக்கங்கள்