பாடம்.5 பாறை மற்றும் மண்
பாடம்.5 பாறை மற்றும் மண்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைக்கப்படுகிறது.
- வளிமண்டலம்
- உயிர்க்கோளம்
- நிலக்கோளம்
- நீர்க்கோளம்
விடை : நிலக்கோளம்
2. உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்
- ஆகஸ்ட் 15
- ஜனவரி 12
- அக்டோபர் 15
- டிசம்பர் 5
விடை : டிசம்பர் 5
3. உயிரினப் படிமங்கள் ————– பாறைகளில் காணப்படுன்றன.
- படிவுப் பாறைகள்
- தீப்பாறைகள்
- உருமாறியப் பாறைகள்
- அடியாழப் பாறைகள்
விடை : படிவுப் பாறைகள்
4. மண்ணின் முதல் நிலை அடுக்கு
- கரிசல் மண்
- பாறைப்படிவு
- சிதைவடையாத பாறைகள்
- பாதியளவு சிதைவடைந்த பாறைகள்
விடை : கரிசல் மண்
5. பருத்தி வளர ஏற்ற மண்
- செம்மண்
- கரிசல் மண்
- வண்டல் மண்
- மலை மண்
விடை : கரிசல் மண்
6. மண்ணின் முக்கிய கூறு.
- பாறைகள்
- வாயுக்கள்
- நீர்
- கனிமங்கள்
விடை : கனிமங்கள்
7. கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?
- வண்டல் மண்
- கரிசல் மண்
- செம்மண்
- மலை மண்
விடை : வண்டல் மண்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. பாறைகளைப் பற்றிய அறிவியல் சார்ந்த படிப்பு ______________
விடை : பாறையியல்
2. _______ மண் பருத்தி விளைவிப்பதற்கு ஏற்றதாகும்.
விடை : கரிசல்
3. உருமாறிய புவியின் தோல்’ என்று ______________ அழைக்கப்படுகிறது
விடை : மண்
4. உருமாறிய பாறைகளின் ஒரு வகையான _____________________ பாறை தாஜ்மகால் கட்ட பயன்படுத்தப்பட்டது
விடை : வெள்ளைப் பளிங்கு
5. _______ பாறை ‘முதன்மை பாறை’ என்று அழைக்கப்படுகிறது.
விடை :தீப்
III.பொருத்துக
1.
1. கிரானைட் | அடிப்பாறை |
2. மண் அடுக்கு | அடியாழப் பாறைகள் |
3. பாரன் தீவு | பட்டைப் பயிரிடல் வேளாண்மை |
4. மண் வளப்பாதுகாப்பு | செயல்படும் எரிமலை |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ |
2.
1. பசால்ட் (கருங்கல்) | ஆந்த்ரசைட் |
2. சுண்ணாம்புப் பாறை | வெளிப்புற தீப்பாறைகள் |
3. நிலக்கரி | உருமாறியப் பாறைகள் |
4. ஜெனிஸ் (நைஸ்) | படிவுப்பாறைகள |
விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ |
IV. சரியா, தவறா?
1. தீப்பாறைகள் முதன்மை பாறைகள் என்று அழைக்கப்படுகிறது
விடை : சரி
2. களிமண் பாறையிலிருந்து பலகைக்கல் (Slate) உருவாகிறது.
விடை : சரி
3. செம்மண் சுவருதல் (Leaching) செயல்முறைகளில் உருவாகிறது.
விடை : தவறு
4. இயற்கை மணலுக்கு மாற்றாக கட்டுமான பணிகளுக்கு “செயற்கை மணல்” (M-Sand) பயன்படுகிறது
விடை : சரி
5. படிவுப் பாறைகளைச் சுற்றி எரிமலைகள்
காணப்படுகின்றன
விடை : தவறு
V. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்
1.
- தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் என்று அழைக்கப்படுகிறது.
- பாறைகள் வானிலை சிதைவினால் மண்ணாக உருமாறுகிறது.
- படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை.
- தக்காண பீடபூமி பகுதிகள் தீப்பாறைகளால் உருவானவை.
விடை : படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை.
2.
- மண்ணரிப்பு மண் வளத்தை குறைக்கிறது.
- இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது.
- மண் ஒரு புதுப்பிக்கக் கூடிய வளம்.
- இலைமக்குகள் மேல் மட்ட மண்ணின் ஒரு பகுதியாகும்.
விடை : இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது.
VI கொடுக்கப்பட்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றைக் கண்டுபிடித்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
கூற்று 1 - படிவுப் பாறைகள் பல்வேறு அடுக்குகளைக் கொண்டவை
கூற்று 2 - படிவுப் பாறைகள் பல்வேறு காலங்களில் உருவானவை.
- கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம்.
- கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம் அல்ல.
- கூற்று 1 சரி ஆனால் கூற்று 2 தவறு.
- கூற்று 2 சரி ஆனால் கூற்று 1 தவறு.
விடை : கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம்.
VII காரணம் கூறுக
1. நீர்த்தேக்கப் படுகைகளில் இரசாயன படிவுப் பாறைகள் காணப்படுகின்றன.
- பாறைகளில் உள்ள கனிமங்கள் நீரில் கரைந்து, இரசாயன கலவையாக மாறுகிறது.
- இக்கனிமங்கள் நீர்தேக்கப் படுகைகளில் படிவதால் இராசயன படிவு பாறைகள் உருவாகின்றன.
2. தீப்பாறைகள் எரிமலை பகுதிகளில் காணப்படுகிறது
- தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து எரிமலை வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு உறைந்த உருவானதாகும்.
- ஆகையால் தீப்பாறைகள் எரிமலைப் பகுதிகளில் காணப்படுகிறது.
VIII வேறுபடுத்துக.
1. உருமாறிய பாறைகள் மற்றும் படிவுப்பாறைகள்
உருமாறிய பாறைகள் | படிவுப்பாறைகள் |
அதிகவெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து உருமாறிய பாறைகள் என பெயர் பெறுகிறது. | அரிப்பு காரணிகளால் அரிக்கப்பட்டு (காற்று, நீர், பனியாறுகள்) படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட லமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் படிவுப் பாறைகள் உருவாகின்றன. |
2. மண் வள பாதுகாப்பு மற்றும் மண்ணரிப்பு
மண் வள பாதுகாப்பு | மண்ணரிப்பு |
மண் வளப்பாதுகாப்பு என்பது மண் அரிப்பிலிருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும் செயல்முறையாகும். | மண்ணரிப்பு என்பது இயற்கை காரணிகள் மற்றும் மனித செயல்பாடுகளினால் மண்ணின் மேலடுக்கு நீக்கப்படுதல் அல்லது அரிக்கப்படுதல் ஆகும் |
IX சுருக்கமாக விடையளிக்கவும்.
1. தீப்பாறைகள் எவ்வாறு உருவாகின்றன?
- தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு (Magma) உறைந்து உருவானதாகும்.
- இப்பாறைகளிலிருந்து மற்ற பாறைகள் உ ரு வா கி ன்றதால் இவற்றை முதன்மைப் பாறைகள் (Primary Rocks) அல்லது தாய்ப் பாறைகள் (Parent Rocks) என்று அழைக்கிறோம்.
2. பாறைகளின் கூட்டமைப்பு பற்றி விவரி?
- பாறைகள் என்பது கனிமங்கள் தனித்த கூறுகளாகவோ அல்லது கூட்டுக் கலவையாகவோ உருவாகலாம்.
- கனிமங்கள் வேதி மூலங்களின் தொகுதிகளால் ஆனவை.
3. ‘பாறைகள்’ வரையறு.
- பாறைகள் என்பது திட கனிம பொருட்களால் புவியின் மேற்பரப்பில் மற்ற கோள்களில் உள்ளது போல் உருவானதாகும்.
- இது ஒரு திடநிலையில் உள்ள ஒரு முக்கியமான இயற்கை வளம் ஆகும்.
4. மண்ணின் வகைகளைக் கூறுக.
- வண்டல் மண்
- கரிசல் மண்
- செம்மண்
- சரளை மண்
- மலை மண்
- பாலை மண்
5. மண்வளப் பாதுகாப்பு என்றால் என்ன?
மண் வளப்பாதுகாப்பு என்பது மண் அரிப்பிலிருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும் செயல்முறையாகும்.
X விரிவான விடையளிக்கவும்
1. மண் உருவாக்கச் செயல்முறைகள் பற்றி விவரி.
- மண் என்பது பல்வகை கரிமப்பொருள்கள், கனிமங்கள், வாயுக்கள், திரவப் பொருள்கள் மற்றும் பல உயிரினங்கள் கலந்த கலவையாகும்.
- இது உயிரினங்கள் வாழ துணைபுரிகிறது.
- மண்ணில் உள்ள கனிமங்கள் மண்ணை உருவாக்கும் ஒரு அடிப்படை காரணியாகும். புவிபரப்பின் மேல் மண் உருவாவதால் இது “புவியின் தோல்” (Skin of the Earth) என்று அழைக்கப்படுகிறது.
- பாறைகள், வானிலை சிதைவு மற்றும் அரித்தல் செயல்முறைகளுக்கு உட்படுத்தபடும் பொழுது மண்ணாக உருவாகிறது.
- நீர், காற்று, வெப்ப நிலைமாறுபாடு, புவி ஈர்ப்பு விசை, வேதிபரிமாற்றம், உயிரினங்கள் மற்றும் அழுத்த வேறுபாடுகளால் தாய்ப்பாறைகள் சிதைவுறுகின்றன. மேலும், தாய்ப்பாறையை தளர்ந்த பாறைகளாக மண் மாற்றுகின்றன.
- காலப்போக்கில் இப்பாறைகள் உடைபட்டு மிருதுவான துகள்களாக மாறுகிறது. இந்தச் செயல்முறைகள் பாறைத் துகள்களிலிருந்து தாதுக்கள் வெளிப்படக் காரணமாகின்றன.
- பின்னாளில் தாவரங்கள் வளர்ந்து அம் மண்ணிற்கும் இலைக்கும் சத்தை ஊட்டுகின்றன. இச்சீரான செயல்முறைகள் மண்ணை வளமடையச் செய்கின்றன.
2. பாறைகளை வகைப்படுத்தி விவரிக்கவும்
புவி பரப்பில் காணப்படும் பாறைகளை, அவை தோன்றும் முறைகளின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
- தீப்பாறைகள் (Igneous Rocks)
- படிவுப் பாறைகள் (Sedimentary Rocks)
- உருமாறியப் பாறைகள் அல்லது மாற்றுருப் பாறைகள் (Metamorphic Rocks)
தீப்பாறைகள்
- தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு (Magma) உறைந்து உருவானதாகும்.
- இப்பாறைகளிலிருந்து மற்ற பாறைகள் உருவாகின்றதால் இவற்றை முதன்மைப் பாறைகள் (Primary Rocks) அல்லது தாய்ப் பாறைகள் (Parent Rocks) என்று அழைக்கிறோம்.
படிவுப் பாறைகள்
- படிவுப் பாறைகள் அரிப்பு காரணிகளால் அரிக்கப்பட்டு (காற்று, நீர், பனியாறுகள்) படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட காலமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் படிவுப் பாறைகள் உருவாகின்றன.
- இப்பாறைகள் பல அடுக்குகளை உள்ளடக்கியுள்ளன.
- பல்வேறு காலக்கட்டத்தில் படியவைக்கப்பட்டபொருள்கள் பல படிநிலைகளைக் கொண்டிருப்பதால் இவைகள் அடுக்குப்பாறைகள் (Stratified Rocks) என அழைக்கப்படுகின்றன.
உருமாறிய பாறைகள்
- அதிகவெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து உருமாறிய பாறைகள் என பெயர் பெறுகிறது.
3. மண்ணடுக்குகள் பற்றி விவரிக்கவும்.
இலை மக்கு அடுக்கு
- இலைகள், சருகுகள், கிளைகள், பாசிகள் போன்ற கரிமப் பொருட்களால் உருவானவை.
மேல்மட்ட அடுக்கு
- கரிம மற்றும் கனிமப் பொருட்களால் ஆன அடுக்கு
உயர்மட்ட அடுக்கு
- இவ்வடுக்கு உயர்மட்ட அடுக்காகும்.
- அதிக அளவு சுவர்தலுக்கு (Leaching), உட்பட்ட அடுக்கு
- களிமண், இரும்பு மற்றும் அலுமினிய ஆக்ஸைடு போன்ற தாதுக்கள் இவ்வடுக்கில் கனிசமாக காணப்படுகின்றன.
அடி மண்
- இவ்வடுக்கு தாய்பாறையின் இரசாயன, (அ) பௌதீக மாற்றத்திற்கு உட்பட்டவை.
- இரும்பு, களிமண், அலுமினிய ஆக்ஸைடு மற்றும் கனிமப் பொருட்களால் தோன்றிய அடுக்கு அல்லது திரள் மண்டலம் (Zone of Accumulation) என அழைக்கப்படுகிறது
தாய்பாறை அடுக்கு
- இவ்வடுக்கில் தாய்ப்பாறைகள் குறைந்த அளவே சிதைக்கப்படுகின்றன.
சிதைவடையாத தாய்ப்பாறை
- இவ்வடுக்கு சிதைவடையாத அடிமட்ட பாறையாகும்.
4. மண்ணினை வகைப்படுத்தி விவரிக்கவும்
வண்டல் மண்
- வண்டல் மண் ஆற்றுச் சமவெளிகள், வெள்ளச் சமவெளிகள், கடற்கரைச் சமவெளிகளில் காணப்படுகிறது.
- இவை ஓடும் நீரின் மூலம் கடத்தப்படும் நுண்ணிய துகள்களால் படிய வைக்கப்பட்டு உருவாகிறது. இது மற்ற மண் வகைகளைக் காட்டிலும் வளம்மிக்கது.
- இது நெல், கரும்பு, கோதுமை, சணல் மற்றும் மற்ற உணவுப் பயிர்கள் பயிரிட ஏற்றது.
கரிசல் மண்
- கரிசல் மண், தீப்பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன.
- கரிசல் மண் இயற்கையிலேயே களிமண் தன்மையையும், ஈரப்பதத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது.
- கரிசல் மண்ணில் பருத்திப் பயிர் நன்கு வளரும்.
செம்மண்
- செம்மண், உருமாறியப் பாறைகள் மற்றும் படிகப் பாறைகள் ஆகியவை சிதைவடைவதால் உருவாகிறது.
- இம்மண்ணில் உள்ள இரும்பு ஆக்சைடு அளவைப் பொருத்து மண்ணின் நிறமானது பழுப்பு முதல் சிகப்பு நிறம் வரை வேறுபடுகிறது. இது வளம் குறைந்த மண்ணாக இருப்பதால் தினைப் பயிர்கள் பயிரிட ஏற்றது.
சரளை மண்
- சரளை மண் அயனமண்டல பிரதேச காலநிலையில் உருவாகிறது.
- இம்மண் அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு கொண்ட பகுதிகளில் ஊடுருதலின் (Leaching) செயலாக்கத்தினால் உருவாவதால் இம்மண் வளம் குறைந்து காணப்படுகிறது.
- இது தேயிலை, காப்பி போன்ற தோட்டப் பயிர்கள் பயிரிட ஏற்றது.
மலை மண்
- மலைமண், மலைச்சரிவுகளில் காணப்படுகிறது.
- இப்பகுதிகளில் கார தன்மையுடன் குறைந்த பருமன் கொண்ட அடுக்காக உள்ளது.
- உயரத்திற்கு ஏற்றவாறு இம்மண்ணின் பண்புகள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன.
பாலை மண்
- பாலை மண் அயன மண்டல பாலைவனப் பிரதேசங்களில் காணப்படுகிறது.
- இது உவர்தன்மை, மற்றும் நுண்துளைகளைக் கொண்டது. வளம் குறைந்த இம்மண்ணில் வேளாண்மையை மேற்கொள்ள இயலாது.
சில பயனுள்ள பக்கங்கள்