8th Std Social Science Term 1 Solution | Lesson.9 குடிமக்களும் குடியுரிமையும்

பாடம்.9 குடிமக்களும் குடியுரிமையும்

குடிமக்களும் குடியுரிமையும் - பாட விடைகள் 2021

பாடம்.9 குடிமக்களும் குடியுரிமையும்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?

  1. பிறப்பின் மூலம்
  2. சொத்துரிமை பெறுவதன் மூலம்
  3. வம்சாவழியின் மூலம்
  4. இயல்பு குடியுரிமை மூலம்

விடை :  சொத்துரிமை பெறுவதன் மூலம்

2. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?

  1. பகுதி II
  2. பகுதி II பிரிவு 5 – 11
  3. பகுதி II பிரிவு 5 – 11
  4. பகுதி I பிரிவு 5 – 11

விடை : பகுதி II பிரிவு 5 – 11

3. இந்தியாவின் முதல் குடிமகன் யார்?

  1. பிரதமர்
  2. குடியரசுத் தலைவர்
  3. முதலமைச்சர்
  4. இந்திய தலைமை நீதிபதி

விடை :  குடியரசுத் தலைவர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  ஒரு நாட்டின் _______, அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெறத் தகுதியுடையவர் ஆவார்.

விடை : குடிமக்கள்

2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் _______ குடியுரிமையை மட்டும் வழங்குகிறது.

விடை : ஒற்றை

3. இந்தியக் கடவுச் சீட்டினைப் பெற்று வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன் ________ என அழைக்கப்படுகிறார்.

விடை : வெளிநாடுவாழ் இந்தியர்

4. மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும் ________ யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர்.

விடை : சலுகைகளை

5. ________ என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும்.

விடை : உலகளாவிய குடியுரிமை

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

1. ஒரு இந்தியக் குடிமகனின் குடியுரிமை கீழ்க்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது.

i) ஒருவர் வேறு நாட்டுக் குடியுரிமையை பெறும் போது

ii) பதிவு செய்வதன் மூலம்

iii) தவறான மோசடி வழிகளில் ஒருவர் குடியுரிமை பெற்றார் என்று அரசு கருதும் போது

iv) போரின் போது எதிரி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும் போது

  1. I மற்றும் II சரி
  2. I மற்றும் III சரி
  3. I, II, IV சரி
  4. I, II, III சரி

விடை : I மற்றும் III சரி

2. கூற்று : 1962 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாயினர்.

காரணம் : 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்

  1. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
  2. காரணம் தவறு
  3. கூற்று தவறு ஆனால் காரணம் சரி
  4. காரணம், கூற்று இரண்டும் தவறு

விடை : காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

IV. சரியா, தவறா?

1. அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது.

விடை : தவறு

2. வெளிநாட்டுக் குடியுரிமையை கொண்டு இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை வைத்திருப்பவருக்கு வாக்குரிமை உண்டு.

விடை : தவறு

3.  அடிப்படை உரிமைகளை இந்தியக் குடிமகன் அனுபவிக்க நமது அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதம் அளிக்கிறது.

விடை : சரி

3. நாட்டுரிமையை மாற்ற இயலும். ஆனால் குடியுரிமையை மாற்ற இயலாது.

விடை : தவறு

V கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி.

1. குடியுரிமையின் வகைகளை குறிப்பிடுக.

  • இயற்கை குடியுரிமை: பிறப்பால் இயற்கையாக பெறக்கூடிய குடியுரிமை
  • இயல்புக் குடியுரிமை; இயல்பாக விண்ணப்பித்து பெறும் குடியுரிமை

2. ஓர் இந்தியக் குடிமகன் நமது நாட்டில் அனுபவிக்கும் உரிமைகள் யாவை?

  • அடிப்படை உரிமைகள்
  • மக்களவை தேர்தலுக்கும், மாநில சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்களிக்கும் உரிமை
  • இந்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உரிமை. இந்திய பாராளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்களில் உறுப்பினராவதற்கான உரிமை.

3. நற்குடிமகனின் மூன்று பண்புகளை குறிப்பிடுக

  • அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடத்தல்
  • சட்டத்துக்கு கீழ்படிதல்
  • சமுதாயத்திற்கு தன் பங்களிப்பை ஆற்றுதல் மற்றும் குடிமைப் பணியை செயலாற்றுதல்.
  • நற்பண்புகளையும், நீதியையும் நிலைநாட்டுதல்
  • வேற்றுமைகளை மறந்து நடத்தல்

4. இந்தியக் குடிமகனாவதற்குரிய ஐந்து வழிமுறைகளை எழுதுக?

  1. பிறப்பால் குடியுரிமை பெறுதல்
  2. வம்சாவளியால் குடியுரிமை பெறுதல்
  3. பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்
  4. இயல்புக் குடியுரிமை
  5. பிரதேசங்களை இணைத்தல் மூலம் பெறும் குடியுரிமை

5. 1955 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்டம் பற்றி நீவிர் அறிவது யாது?

இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955 இந்தியக் குடிமகன் தன்னுடைய குடியுரிமையை பெறுதலையும், நீக்குதலையும் பற்றிய விதிகளை இச்சட்டம் கூறுகிறது.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

1. ஒருவருக்கு எதன் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை இரத்து செய்யப்படுகிறது?

குடியுரிமை இழப்பு பற்றிய மூன்று வழிமுறைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது பகுதியின் 5 முதல் 11 வரையிலான விதிகள் குறிப்பிடுகின்றன.

குடியுரிமையை துறத்தல் (தானாக முன்வந்து குடியுரிமையைத் துறத்தல்)

ஒருவர் வெளி நாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்தியக் குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது.

குடியுரிமை முடிவுக்கு வருதல் (சட்டப்படி நடைபெறுதல்)

ஒர் இந்தியக் குடிமகன் தாமாக முன்வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரது இந்தியக் குடியுரிமை தானாகவே முடக்கப்படுகிறது.

குடியுரிமை மறுத்தல் (கட்டாயமாக முடிவுக்கு வருதல்)

மோசடி, தவறான பிரதிநிதித்துவம் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் ஆகியவற்றின் மூலம் இந்தியக் குடியுரிமையை பெறும் ஒருவரின் குடியுரிமையை இந்திய அரசு ஓர் ஆணை மூலம் இழக்கச் செய்கிறது.

 

சில பயனுள்ள பக்கங்கள்