பாடம்.6 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
பாடம்.6 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் _____________ மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
- ஐ. நா. சபை
- உச்ச நீதிமன்றம்
- சர்வதேச நீதிமன்றம்
- இவைகளில் எதுவுமில்லை
விடை : ஐ. நா. சபை
2. 1995ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் _____________ இல் கூடினர்
- பெய்ஜிங்
- நியூயார்க்
- டெல்லி
- இவைகளில் எதுவுமில்லை
விடை : பெய்ஜிங்
3. தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு
- 1990
- 1993
- 1978
- 1979
விடை : 1993
4. ஐ.நா. சபை 1979ஆம் ஆண்டை _____________ சர்வதேச ஆண்டாக அறிவித்தது
- பெண் குழந்தைகள்
- குழந்தைகள்
- பெண்கள்
- இவைகளில் எதுவுமில்லை
விடை : குழந்தைகள்
5. உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
- டிசம்பர் 9
- டிசம்பர் 10
- டிசம்பர் 11
- டிசம்பர் 12
விடை : டிசம்பர் 10
6. மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் எனஅழைக்கப்படுவது எது?
- மனித உரிமைகளக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)
- தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)
- மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC)
- சர்வதேச பெண்கள் ஆண்டு
விடை : மனித உரிமைகளக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)
7. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுவர் யார்?
- ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி
- ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
- குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் எதேனும் ஒருவர்
- ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி
விடை : ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
8. உலக மனித உரிமைகள் அறிவிப்பில் உள்ள சட்டப்பிரிவுகளின் எண்ணிக்கை யாவை?
- 20
- 30
- 40
- 50
விடை : 30
9. தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவரின் பதவிக்காலம் என்ன?
- 5 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை
- 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
- 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
- 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை
விடை : 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை
10 தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
- புது டெல்லி
- மும்பை
- அகமதாபாத்
- கொல்கத்தா
விடை : புது டெல்லி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. ஒவ்வொரு தனிமனிதனும் கண்ணிமான வாழ்க்கை வாழ _____________ உண்டு
விடை : உரிமை
2. மனித உரிமைகள் என்பது _____________ உரிமைகள்.
விடை : அனைத்து மனிதர்களுக்கான இயல்பான
3. மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு _____________
விடை : 1997
4. இந்திய அரசியலமைப்பின் 24வது சட்ப்பிரிவு _____________ தடைசெய்கிறது
விடை : குழந்தை தொழிலாளர் முறையை
5. ஐக்கியநாடுகள் சபை நிறுவப்பட்ட ஆண்டு _____________
விடை : 1945
III.பொருத்துக
1. எலினார் ரூஸ்வெல்ட் | உலகின் முதல் மனித உரிமைகள் சாசனம் |
2. சைரஸ் சிலிண்டர் | 1997 |
3. பெண்களை கேலி செய்வதற்கு எதிரான சட்டம் | அடிமைத் தனத்திலிருந்து விடுதலை |
4. குழந்தை உதவி மைய எண் | மனித உரிமைகளுக்கான ஆணையம் |
5. வாழ்வியல் உரிமைகள் | வாக்களிக்கும் உரிமை |
6. அரசியல் உரிமை | 1098 |
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – ஊ, 5 – இ, 6 – உ |
IV. சரியா / தவறா?
1. மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகள் ஒரே மாதிரியானவை
விடை : தவறு
2. மனித மற்றும் குடிமகனின் உரிமைகள் அறிவிப்பு இந்தியாவில் அறிவிக்கப்பட்டது.
விடை : தவறு
3. 1993ஆம் ஆணடு மனித உரிமைச் சட்டம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உருவாக வழிவகுத்தது
விடை : சரி
4. பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது.
விடை : சரி
5. மனித உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய, மாநில அளவிலான மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.
விடை : சரி
V சரியான கூற்றைத் தேர்ந்தேடு
1. தவறான கூற்றைத் தேர்ந்தேடு
- தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.
- தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓர் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்.
- தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓரு சுதந்திரமான அமைப்பாகும்.
- தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓரு பல தரப்பு நிறுவனங்களை கொண்டதாகும்
விடை : தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓர் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்.
2. தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறித்து பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல
அ) இது 1993 இல் நிறுவப்பட்டது.
ஆ) மனித உரிமை மீறல் வழக்குகளில் குற்றவாளியை தண்டிக்க ஆணையத்திற்கு எந்த உரிமையும் இல்லை.
இ) இந்த ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.
ஈ) இந்த ஆணையம் தனது ஆண்டு அறிக்கையை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்புகிறது.
விடை : இந்த ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.
3. கூற்று : டிசம்பர் 10ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
காரணம் : இது எலினார் ரூஸ்வெல்டின் பிறந்த நாளை நினைவு கூர்கிறது.
- கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
- கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது
- கூற்று காரணம் இரணடும் சரி
- கூற்று காரணம் இரணடும் தவறு
விடை : கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
4. பின்வரும் கூற்றை ஆராய்க
1) மாநில மனித உரிமைகள் ஆணையம் பல உறுப்பினர்களை காெண்ட அமைப்பு ஆகும்.
2) மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒரு தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் காெண்டதாகும்
மேற்கூறிய கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?
- 1 மட்டும்
- 2 மட்டும்
- 1, 2
- எதுவுமில்லை
விடை : 1, 2
VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளின் விடையளி
1. மனித உரிமைகள் என்றால் என்ன?
மனித உரிமைகள் என்பது இனம், பாலினம், தேசிய இனம், இனக்குழுக்களின் தன்மை மொழி மற்றும் சமய வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்கும் இயல்பான உரிமைகள் ஆகும்
2. மனித உரிமைகளுக்கான உலகாவிய அறிவிப்பின் முக்கியத்துவத்தை எழுதுக
- இந்த அறிவிப்பு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஐ.நா. பொதுச்சபையால் 1948 ஆம் ஆண்டு டிசமபர் 10 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது.
- இது மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.
3. இந்திய அரசியலமைப்பின் 45வது சட்டப்பிரிவு எதனை அறிவுறுத்துகிறது?
பிரிவு 45 – 6 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க அரசு முயல்கிறது
4. கல்வி உரிமைச்சட்டம் பற்றி எழுதுக
- 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக மற்றும் கட்டாயக் கல்வியை அரசு வழங்குவதற்கு சட்டப்பிரிவு 21A வாயிலாக கல்வி உரிமைச் சட்டம் வழிவகை செய்கிறது
5. பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்களை குறிப்பிடுக
- இந்து விதவை மறுமணச் சட்டம் – 1856
- இந்த திருமணச்சட்டம் – 1955
- வரதட்சணைத் தடைச்சட்டம் – 1961
6. அரசியல் உரிமைகள் சிலவற்றை குறிப்பிடுக
- கருத்துச் சுதந்திரம்
- அமைதியாக கூட்டம் நடத்துதல்
- தன் நாட்டின் அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் உரிமை
- வாக்களிக்கும் உரிமை
- பேச்சுரிமை
- தகவல்களைப் பெறும் உரிமை
7. மனித உரிமைகளின் ஐந்து முதன்மைப் பிரிவுகளை குறிப்பிடுக
- வாழ்வியல் உரிமைகள்
- அரசியல் உரிமைகள்
- பொரளாதார உரிமைகள்
- சமூக உரிமைகள்
- கலாச்சார உரிமைகள்
VII. விரிவான விடையளி
1. மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகள் வேறுபடுத்துக
மனித உரிமைகள் | வாழ்வியல் உரிமைகள் |
1. தேசிய இனம், பாலினம், இன, மத, வயத மற்றும் இட வேறுபாடின்றி அனைவருக்கும் உரித்தானது | குறிப்பிட்ட நாட்டில் அல்லது மாநிலத்தில் குடியுரிமை பெறுவதன் மூலம் ஒருவர் அனுபவிக்கும் உரிமைகள் ஆகும் |
2. உலகிலுள்ள அனைத்து மக்களும் மற்றும் நாடுகளுக்கும் உரியதாகும் | அந்தந்த நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களுக்கு ஏற்றவாறு வேறுபடும் |
3. எந்தவொரு தேசமும் தனிநபருக்கான மனித உரிமைகளை பறிக்க முடியாது | அந்தந்த நாடுகளின் சிவில் உரிமைகள் மூலம் சுதந்திரத்தை வழங்கவோ அல்லது மறுக்கவோ முடியாது. |
4. பிறப்பின் அடிப்படையில் இயற்கையாக அமையப்பெற்ற அடிப்படை உரிமைகள் | சமுகத்தால் உருவாக்கப்டுகின்றன |
2. மனித உரிமைகள் ஏதேனும் ஐந்து அடிப்படைப் பண்புகளை விவரி
இயல்பானவை
அவை எந்தவொரு நபராலும் அதிகாரத்தாலும் வழங்கப்படுவதில்லை
அடிப்படையானவை
இந்த அடிப்படை உரிமைகள் இல்லையென்றால் மனிதல் வாழக்கையும், கண்ணியமும் அர்த்தமற்றதாகிவிடும்
மாற்றமுடியாதவை
இவைகள் தனிநபரிடம் இருந்து பறிக்க முடியாதவைகள் அகம்
பிரிக்கமுடியாதவை
மற்ற உரிமைகளை ஏற்கனேவ அனுபவித்துக் கொண்டிருந்தாலும் கூட இந்த அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது.
உலகளாவியவை
இந்த உலகாளவிய உரிமைகளை ஒருவரின் தோற்றம் அல்லது நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இந்த உரிமைகள் பொருந்தும்.
சார்புடையவை
இவைகள் ஒன்றுக்கொன்று சார்புடையவைகள் ஆகும். ஏனென்றால் ஒரு உரிமையைப் பயன்படுத்தம் போது மற்றொன்றை உணராமல் இருக்க முடியாது.
3. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அரசு மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள் யாவை?
கல்வி உரிமைச் சட்டம்
6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக மற்றும் கட்டாயக் கல்வியை அரசு வழங்குவதற்கு சட்டப்பிரிவு 21A வாயிலாக கல்வி உரிமைச் சட்டம் வழிவகை செய்கிறது
குழந்தை தொழிலாளர் சட்டம்
15 வயது பூர்த்தியடையாத எந்தவொரு குழந்தையும் வேலைக்கு அமர்த்துவதை தடை செய்கிறது.
சிறார் நீதிச்சட்டம் 2000
போதுமான கவனிப்பு இல்லாத குழந்தைகள் நட்பு ரீதியில் அணுகி அவர்களை சீர்திருத்த முயற்சி செய்கிறது.
போக்சோ சட்டம் 2012
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கிறது.
சில பயனுள்ள பக்கங்கள்