8th Std Social Science Term 3 Solution | Lesson.1 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

பாடம்.1 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

பாடம்.1 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. பழங்கால நகரங்கள் எனப்படுவது

  1. ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ
  2. டெல்லி மற்றும் ஹைதரபாத்
  3. பம்பாய் மற்றும் கல்கத்தா
  4. மேற்கொண்ட எதுவுமில்லை

விடை : இவற்றில் எதுவுமில்லை

2. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கடலோர நரகம்/நகரங்கள்

  1. சூரத்
  2. கோவா
  3. பம்பாய்
  4. மேற்கண்ட அனைத்தும்

விடை : பம்பாய்

3. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய நகரமயமாக்கலின் ஒரு புதிய நடைமுறை

  1. சூயஸ் கால்வாய் திறப்பு
  2. நீராவிப் போக்குவரத்து அதிகம்
  3. ரயில்வே கட்டுமானம்
  4. மேற்கண்ட அனைத்தும்

விடை : மேற்கண்ட அனைத்தும்

4. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தது

  1. வர்த்தகத்திற்காக
  2. தங்கள் சமயத்தை பரப்புவதற்காக
  3. பணி புரிவதற்காக
  4. ஆட்சி செய்வதற்காக

விடை : வர்த்தகத்திற்காக

5. புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இடம்

  1. பம்பாய்
  2. கடலூர்
  3. மதராஸ்
  4. கல்கத்தா

விடை : மதராஸ்

6. 1744ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது எது?

  1. புனித வில்லியம் கோட்டை
  2. புனித டேவிட் கோட்டை
  3. புனித ஜார்ஜ் கோட்டை
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : புனித ஜார்ஜ் கோட்டை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இந்தியாவில் இருப்புப்பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு _____________ 

விடை : 1853

2. இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் _____________

விடை : ரிப்பன் பிரபு

3. 1919ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மாகாணங்களில் _____________ அறிமுகப்படுதியது

விடை : இரட்டையாட்சி முறையை

4. நகராட்சி உருவாவதற்கு பொறுப்பாக இருந்தவர் _____________

விடை : சர் ஜோசியா சைல்டு

5.  _____________ இல் பிரான்சிஸ் டே ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் மதராசப்பட்டினத்தில் ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனத்தை நிறுவதற்க அனுமதி பெற்றனர்

விடை : 1639

III.பொருத்துக

1. பம்பாய்சமய மையம்
2. இராணுவ குடியிருப்புகள்மலை வாழிடங்கள்
3. கேதர்நாத்பண்டைய நகரம்
4. டார்ஜிலிங்ஏழு தீவு
5. மதுரைகான்பூர்
விடை : 1 – ஈ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 -இ

IV. சரியா / தவறா?

1. இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து நகரங்கள் செழித்து வளர்ந்தன.

விடை : சரி

2. பிளாசிப் போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் அரசியல் ஆதிக்கம் பெற்றனர்

விடை : சரி

3. புனித வில்லியம் கோட்டை சென்னையில் அமைந்துள்ளது

விடை : தவறு

4. குடியிருப்புகளில் இராணுவ வீரர்கள் வாழத் தொடங்கினர்.

விடை : சரி

5. மதராஸ் 1998இல் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது

விடை : தவறு

V சரியான கூற்றைத் தேர்ந்தேடு

1. கூற்று : இந்தியா பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது.

காரணம் : பிரிட்டிஷாரின் ஒரு வழியிலான சுதந்திரமான வர்த்தக் கொள்கை மற்றும் தொழில்துறை புரட்சி இந்திய உள்நாட்டு தொழில்களை அழித்தன.

  1. கூற்று சரி மற்றும் காரணம் தவறு
  2. கூற்று தவறு மற்றும் காரணம் சரி
  3. கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது
  4. கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை

விடை : கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது

2. பின்வரும் எந்த அறிக்கை / அறிக்கைகள் உண்மையற்றவை

i) ஸ்ரீரங்க ராயலு ஆஙகிலேயர்களுக்கு மதராசப்பட்டணத்தை மானியமாக வழங்கினார்.

ii) டே மற்றும் மோகன் ஆகிய இருவரும் புனித ஜார்ஜ் காேட்டை கடடியதற்கு பொறுப்பானவர்கள்.

iii) 1969ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.

  1. i மட்டும்
  2. ii மற்றும் ii
  3. ii மற்றும் iii
  4. iii மட்டும்

விடை : ii மற்றும் ii

3. கூற்று : ஆங்கிலேயர்கள் தங்கள் மாற்று தலைநகரங்களை மலைப்பாங்கான பகுதிகளில் அமைத்தனர்

காரணம் : அவர்கள் இந்தியாவில் கோடைகாலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர்

  1. கூற்று சரி மற்றும் காரணம் தவறு
  2. கூற்று தவறு மற்றும் காரணம் சரி
  3. கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது
  4. கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை

விடை : கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளின் விடையளி

1. நகர்ப்புற பகுதி என்றால் என்ன?

ஒரு நகர்ப்புற பகுதி என்பது அதிக மக்கள் தொகை அடர்த்தியோடு உணவு உற்பத்தியல்லாத தொழில்களில் ஈடுபடுவதும் நன்கு கட்டமைக்கப்பட்ட சூழலில் வாழ்வது ஆகும்.

2. மலைப்பிரதேசங்கள் காலனித்துவ நகர்ப்புற வளர்ச்சியில் தனித்துவமான அம்சமாக இருந்தன ஏன்?

மலைப்பிரதேசங்கள் படைகள் தங்குடமிமாகவும் எல்லைகளை பாதுகாக்கவும் தாக்குதலை தொடங்கும் இடமாகவும் இருந்தன. மலை வாழிடங்கள் வட மற்றும் தென் இந்தியாவில் வளர்ச்சி பெற்றன.

  • எகா. சிம்லா, நைனிடால், டார்ஜிலிங், உதகமண்டலம், கொடைக்கானல்

3. மாகாண நகரங்கள் மூன்றின் பெயர்களைக் குறிப்பிடுக

  • மதராஸ்
  • கல்கத்தா
  • பம்பாய்

4. 19ஆம் நூற்றாண்டில் நகரமயமாக்கலின் புதிய போக்குக்கு ஏதேனும் நான்கு காரணங்களைக் கூறுக

  • சூயல்கால்வாய் திறப்பு
  • நீராவிப்போக்குவரத்து அறிமுகம்
  • ரயில்வே சாலைகள் அமைத்தல்
  • கால்வாய்கள், துறைமுகங்கள், தொழிற்சாலைகள் வளர்ச்சி

5. இராணுவ குடியிருப்பு நகரங்கள் பற்றி சிறு குறிப்பு எழுதுக

ஆங்கிலேயர்க்கு வலுவான இராணுவ முகாம்கள் தேவைப்பட்டதால் இராணுவக் குடியிருப்புகளை ஏற்படுத்தினர். இராணுவ வீரர்கள் இந்தப்பகுதிகளில் வசிக்கத் தொடங்கினர். மேலும் இப்பகுதிகள் படிப்படியாக நகரங்களாக வளர்ந்தன

  • எ.கா. கான்பூர், லாகூர்

6. பிரிட்டிஷ் ஆட்சியின் போது மதராஸ் மாகாணம் உள்ளடக்கிய பகுதிகள் யாவை?

  • தமிழ்நாடு
  • லட்சத்தீவு
  • வடக்கு கேரளா
  • ராயலசீமா
  • கடலோர ஆந்திரா
  • கர்நாடகா
  • தெற்கு ஒரிசாவின் பல்வேறு மாவட்டங்கள்

VII. பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக

1.  காலனித்துவ நகர்ப்புற வளர்ச்சயை பற்றி விளக்குக

துறைமுகங்கள்

துறைமுகங்களைச் சுற்றி மாகாணங்களின் தலைநகரங்கள் வளர்ச்சியடைந்தது

எ.கா.

  • மதராஸ்
  • கல்கத்தா
  • பம்பாய்

இராணுவ குடியிருப்பு நகரங்கள்

பெருவழிச்சாலைகள் மற்றும் போர்த் திறன் வாய்ந்த பகதிகளில் உள்மாகாணங்களின் தலைநகரங்கள் வளர்ச்சியடைந்தது

எ.கா.

  • கான்பூர்
  • லாகூர்

மலைவாழிடங்கள்

காலணித்துவ சமூகம் சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்குக்காக உருவாக்கிய நகரங்கள்

எ.கா.

  • சிம்லா
  • நைனிடால்
  • டார்ஜிலிங்
  • உலகமண்டலம்
  • கொடைக்கானல்

இரயில்வே நகரங்கள்

படைகள் மற்றும் பொருட்களின் விரைவான போக்குவரத்து சமவெளிகள் உருவாக்கப்பட்டது

2. மதராஸின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை எடுத்துரைக்கவும்

  • கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த சர்பிரான்சிஸ் டே விற்கு 1639இல் தொழிற்சாலை கட்டுவதற்காக நிலம் மானியமாக வழங்கப்பட்டு அது பின்னர் மதராஸ் என பெயரிடப்பட்டது.
  • புனித ஜார்ஜின் தினமான எப்ரல் 23, 164 அன்று இதன் முதல் தொழிற்சாலை கட்டிமுடிக்கப்பட்டு அதற்க புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது.
  • புனித ஜார்ஜ் கோட்டையை கட்டப்பட்டதற்கு டே மற்றும் கோகன் ஆகிய இருவரும் கூட்டாக பொறுப்பாவார்கள்.
  • இது 1774 வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது.
  • 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு மதராஸ் மாகாணமானது மதராஸ் மாநிலமாக மாறியது.
  • பின்னர் 1969 இல் மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.
  • ஜீலை 17, 1996இல் மதராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது.

3. இந்தியா பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது எப்படி?

  • பிரிட்டிஷாரின் ஒரு வழியிலான சுதந்திரமான வர்த்தகத்தின் விளைவாக இந்திய உற்பத்தித் தொழில்கள் அழிக்கப்பட்டன.
  • பாராம்பரியத் தொழில்களை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்திய கைவினைத் தொழில் பொருட்கள், உற்பத்தி செய்யும் நகரங்கள் தொழிற்புரட்சியின் விளைவாக அழிந்தன.
  • அதிகப்படியான இறக்குமதி வரி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பிற கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியப் பொருட்கள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இறக்குமதி செய்யப்படவது குறையலாயின.
  • இவ்வாறு இந்தியா, பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது.

சில பயனுள்ள பக்கங்கள்