பாடம்.3 தொழிலகங்கள்
பாடம்.3 தொழிலகங்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள் _____________ பிரிவுகளின் கீழ் வருகின்றன
- சிறிய அளவிலான தொழிலகம்
- பெரிய அளவிலான தொழிலகம்
- கடல் சார்ந்த தொழிலகம்
- மூலதனம் சார்ந்த தொழிலகம்
விடை : சிறிய அளவிலான தொழிலகம்
2. உடைமையாளர்கள் அடிப்படையிலான தொழிலகங்கள் _____________ வகைகளாகப் பிரிக்கபட்டுள்ளன
- 2
- 3
- 4
- 5
விடை : 4
3. ஆனந்த் பால் பண்ணைத் தொழிலகம் (அமுல்) _____________ துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்
- தனியார் துறை
- பொதுத்துறை
- கூட்டுறவுத்துறை
- கூட்டுத்துறை
விடை : கூட்டுறவுத்துறை
4. இரும்பு எஃகு மற்றும் சிமெண்ட் தொழிலகங்கள் _____________ தொழிலகங்களுக்கு சிறந்த எ.கா.
- வேளாண் சார்ந்த
- கனிம வளம் சார்ந்த
- வனப்பொருட்கள் சார்ந்த
- கடல் வளம் சார்ந்த
விடை : கனிம வளம் சார்ந்த
5. சார்புத் துறை _____________ வகைகளாக பிரிக்கப்பட்டள்ளது
- 4
- 3
- 2
- 5
விடை : 3
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. வங்கித்துறை என்பது _____________ பொருளாதார நடவடிக்கையாகும்
விடை : நான்காம் நிலை
2. மூன்றாம் நிலை _____________ வகைப்படுத்தப்படுகிறது.
விடை : தொழில்கள் நான்கு மற்றும் ஐந்தாம் நிலை பொருளாதார நடவடிக்கைகளாக
3. அரசாங்க முடிவு எடுக்கும் செயல்முறைகள் _____________ துறையின் கீழ்வரும் மூன்றாம் நிலை செயல்பாடாகும்.
விடை : ஐந்தாம்
4. மூலப்பொருட்கள் அடிப்படையில் பருத்தி நெசவாலை ஒரு _____________ தொழிலாகும்
விடை : வேளாண் சார்ந்த
5.பெரிய அளவிலான தொழிற்சாலையை நிறுவுவதற்கு தேவையான மூலதனம் _____________ ஆகும்
விடை : 1 கோடிக்கும் மேல்
III.பொருத்துக
1. நீதித்துறை | தனியார்துறை |
2. தொலைக்காட்சி ஒளிபரப்பு | புவியியல் அல்லாத காரணிகள் |
3. புவியியல் காரணிகள் | நான்காம் நிலை செயல்பாடு |
4. மூலதனம் | மூலப்பொருட்கள் |
5. பஜாஜ் ஆட்டோ | ஐந்தாம் நிலை செயல்பாடுகள் |
விடை : 1 – உ, 2 – இ, 3 – ஈ, 4 – ஆ, 5 – அ |
IV. வேறுபடுத்துக
1. இரண்டாம் நிலை பொருளாதார செயல்பாடு மற்றும் மூன்றாம் நிலை பொருளாதார செயல்பாடு
இரண்டாம் நிலை பொருளாதார செயல்பாடு | மூன்றாம் நிலை பொருளாதார செயல்பாடு |
1. மூலப்பொருட்களை முறைப்படுத்துதல் மற்றும் உற்பத்தி மூலம் பயன்படும் பொருட்களாக மாற்றம் செய்வது | அத்தியாவசிய சேவைகளை அளிக்கிறது. மேலும் தொழிலகங்கள் இயங்குவதற்கு உதவி புரிகின்றது. |
2. எ.கா. நூற்பாலைகள் | எ.கா. வங்கித்துறை |
2. வேளாண் சார்ந்த தொழிலகங்கள் மற்றம் கடல் வளம் சார்ந்த தொழிலகங்கள்
வேளாண் சார்ந்த தொழிலகங்கள் | கடல் வளம் சார்ந்த தொழிலகங்கள் |
1. வேளாண் மற்றும் விலங்கு சார்ந்த பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன | கடல் மற்றும் பெருங்கடலில் இருந்து கிடைக்கப்பெறும் பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன |
2. எ.கா. உணவுப் பதப்படத்தல், தாவர எண்ணெய் உற்பத்தி, பருத்தி நெசவாலைகள், பால் உற்பத்தி பொருட்கள் | எ.கா. பதப்படுத்தப்பட்ட கல் சார் உணவு, மீன் எண்ணெய் உற்பத்தி அலகுகள் |
3. பெரிய அளவிலான தொழிலகங்கள் மற்றும் சிறிய அளவிலான தொழிலகங்கள்
பெரிய அளவிலான தொழிலகங்கள் | சிறிய அளவிலான தொழிலகங்கள் |
1. ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் மூலதனம் கொண்டு நிறுவப்படும் தொழிற்சாலைகள் | ரூபாய் ஒரு கோடிக்கும் குறைவான மூலதனம் கொண்டு நிறுவப்படும் தொழிற்சாலைகள் |
எ.கா. இரும்பு மற்றும் எஃகு ஆலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சிமெண்ட் தொழிற்சாலை | எ.கா. பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள் |
V. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளின் விடையளி
1. தொழிற்சாலை வரையறு
மூலப்பொருட்களை இயந்திரங்களின் மூலம் பயன்படுத்த கூடிய பொருட்களாக மாற்றப்படம் இடமே தொழிற்சாலை எனப்படும்.
2. பொருளாதார நடவடிக்கை என்றால் என்ன?
உற்பத்தி, விநியோகம், நுகர்வு அல்லது சேவைகளில் ஈடுபடும் எந்த ஒரு செயலும் பொருளாதார நடவடிக்கையாகும்.
3. முக்கிய பொருளாதார நடவடிக்கைகளின் பெயர்களை எழுதுக
- முதன்மை பொருளாதார செயல்பாடுகள் (கச்சா பருத்தி உற்பத்தி)
- இரண்டாம் பொருளாதார செயல்பாடுகள் (நூற்பாலைகள்)
- மூன்றாம் பொருளாதார செயல்பாடுகள் (வர்த்தகம், போக்குவரத்து)
- நான்காம் பொருளாதார செயல்பாடுகள் (வங்கித்துறை)
- ஐந்தாம் பொருளாதார செயல்பாடுகள் (நீதித்துறை)
4. இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
மூலப்பொருட்களை முறைப்படுத்துதல் மற்றும் உற்பத்தி மூலம் பயன்படும் பொருட்களாக மாற்றம் செய்வது இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கை ஆகும்
எ.கா. நூற்பாலைகள்
5. ஐந்தாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் தெளிவாக்கு
தொழிற்சாலைகள், வணிகம், கல்வி மற்றும் அரசாங்கங்களின் உயர்மட்ட அளவில் முடிவெடுக்கும் நிர்வாகிகளை குறிப்பிடுகின்றன.
உதாரணமாக
அமைச்சரவை குழுவினர் ஒரு மாநிலத்தின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைப் பற்றிய முடிவுகளை அவர்களே எடுக்கின்றனர்.
6. தொழிலக அமைவிடத்திற்கு காரணமான காரணிகளைக் குறிப்பிடுக
- புவியில் காரணிகள்
- புவியில் அல்லாத காரணிகள்
7. பின்வருவனவற்றிக்கு சிறு குறிப்பு தருக
அ. பெரிய அளவிலான தொழிலகங்கள்
1. ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் மூலதனம் கொண்டு நிறுவப்படும் தொழிற்சாலைகள்
எ.கா. இரும்பு மற்றும் எஃகு ஆலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சிமெண்ட் தொழிற்சாலை
ஆ. சிறிய அளவிலான தொழிலகங்கள்
ரூபாய் ஒரு கோடிக்கும் குறைவான மூலதனம் கொண்டு நிறுவப்படும் தொழிற்சாலைகள்
எ.கா. பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள்
VII. பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக
1. மூலப்பொருட்களின் அடிப்படையில் தொழிலகங்களை வகைப்படுத்தி விளக்குக
வேளாண் சார்ந்த தொழிலகங்கள்
வேளாண் மற்றும் விலங்கு சார்ந்த பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன.
எ.கா.
- உணவு பதப்படுத்துதல்
- தாவர எண்ணெய் உற்பத்தி
- பருத்தி நெசவாலைகள்
- பால் உற்பத்தி பொருட்கள்
கனிமவளம் சார்ந்த தொழிலகங்கள்
இவ்வகை தொழிலகங்கள் கனிமத் தாதுக்களை மூலப்பொருட்களாக பயன்படுத்துகின்றன
எ.கா.
- இரும்பு தாதுவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இரும்பு கனிம வளம்சார்ந்த தொழிலகம்
வனவளம்சார்ந்த தொழிலகங்கள்
இவ்வகை தொழிலகங்களுக்கு வனப்பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்டுகின்றன.
எ.கா.
- மரக்கூழ் &காகித உற்பத்தி, மரத்தளவாடங்கள் தொழிலகங்கள்
கடல்வளம்சார்ந்த தொழிலகங்கள்
கடல் மற்றும் பெருங்கடலில் இருந்து கிடைக்கப்பெறும் பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன
எ.கா.
- பதப்படுத்தப்பட்ட கல் சார் உணவு,
- மீன் எண்ணெய் உற்பத்தி அலகுகள்
2. தொழில் அமைவிடத்தை நிர்ணயிக்கும் புவியில் காரணிகளை விளக்குக
மூலப்பொருட்கள்
அதிக அளவு மூலப்பொருட்கள் மற்றும் எடை இழக்கும் பொருட்களை நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்ல முடியாது. எனவே அவை கிடைக்கும் இடத்திற்கு அருகிலேயே தொழிலகங்கள் அமைந்துள்ள. இரும்பு எஃகு சர்க்கரை தொழிலகங்கள்
ஆற்றல் வளம்
எரிசக்தி, மின்சக்தியை பூர்த்தி செய்யும் பொருட்டு மேற்கண்ட ஒரு வளம் அமைந்துள்ள இடங்களுக்கு அருகாமையில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகிறது.
மனித சக்தி
தொழிலாளர் சார்ந்த தொழில்களுக்கு மலிவான மற்றும் திறமையான தொழிலாளர்கள் அவசியமாகும்.
எ.கா. தேயிலை தொழிற்சாலை
போக்குவரத்து
எளிதான போக்குவரத்து தொழிலகங்களின் அமைவிடத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சேமிப்பு மற்றும் கிடங்கு
உற்பத்தியின் முடிவில் முடிவுற்ற பொருள்கள் சந்தைக்கு எடுத்து செல்லும் வரை பொருத்தமான கிடங்குகளில் சேமித்து வைக்க வேண்டும்
நிலத்தோற்றம்
ஒரு தொழிற்சாலையை நிறுவுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் சமமானதாக இருக்க வேண்டும்
காலநிலை
தொழிற்சாலை வளர்ச்சிக்கு தீவீர காலநிலை பொருத்தமானது அல்ல. ஒவ்வொரு தொழிலகங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலநிலை தேவைப்படுகிறது.
நீர்வளம்
ஆறுகள், கால்வாய்கள் மற்றும் ஏரிகளுக்கு அருகே பல தொழிலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
3. தொழிலகங்களின் வகைப்பாட்டை விளக்கப்படம் மூலம் விளக்குக
சில பயனுள்ள பக்கங்கள்