பாடம் 1.3. தமிழ் வரிவடிவ வளர்ச்சி
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற _____ காரணமாக அமைந்தது?
- ஓவியக்கலை
- இசைக்கலை
- அச்சுக்கலை
- நுண்கலை
விடை : அச்சுக்கலை
2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது?
- கோட்டெழுத்து
- வட்டெழுத்து
- சித்திர எழுத்து
- ஓவிய எழுத்து
விடை : வட்டெழுத்து
3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் _____.
- பாரதிதாசன்
- தந்தை பெரியார்
- வ.உ. சிதம்பரனார்
- பெருஞ்சித்திரனார்
விடை : தந்தை பெரியார்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ___________ என அழைக்கப்பட்டன.
விடை : கண்ணெழுத்துக்கள்
2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ___________
விடை : வீரமாமுனிவர்
III. குறுவினா
1. ஓவிய எழுத்து என்றால் என்ன?
தொடக்க காலத்தில் எழுத்து என்பது பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தால் அதனை ஓவிய எழுத்து என்பர்.
2. ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.
3. ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
ஆகிய காரணங்களால் ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலவில்லை |
4. வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக
ஒகர வரிசை எழுத்துக்களில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை வீரமாமுனிவர் போக்கினார். “எ” என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு “ஏ” என்னும் எழுத்தை நெடிலாகவும் “ஒ” என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு “ஓ” என்னும் எழுத்தாக உருவாக்கினார் |
IV. சிறுவினா
1. எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர். ஓலைச் சுவடிகளில் நிறுத்தற் குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது. புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது. இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று. |
2. தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் (ர) பயன்படுகின்றது. ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு (ை) பயன்படுகின்றது. ஒளகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால் (ள) பயன்படுகின்றது. குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்து விட்டது. |
V. நெடுவினா
எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.
மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும். தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர். அடுதத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து |
கூடுதல் வினாக்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. மொழியை நிலைபெறச் செய்ய __________ உருவாக்கினான்
விடை : எழுத்துகளை
2. ‘ஸ’ எனும் __________ காணப்படுகிறது.
விடை : வட எழுத்து
3. தமிழ் எழுத்துக்களின் பழைய வரி வடிவங்களை கருங்கல் __________ , __________ காணமுடிகிறது
விடை : சுவர்களிலும், செப்பேடுகளிலும்
4. வரி வடிவங்களை __________, __________ என இருவகைப்படுத்தலாம்.
விடை : வட்டெழுத்து, தமிழெழுத்து
5. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை __________ என்பர்.
விடை : ஒலி எழுத்து நிலை
6. __________ கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன
விடை : செப்பேடுகள்
7. __________ கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன
விடை : கல்வெட்டுகள்
8. கண்ணெழுத்துகள் பற்றிக் குறிப்பிடும் நூல் __________
விடை : சிலப்பதிகாரம்
9. தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்த்திருத்தைச் செய்தவர் __________
விடை : வீரமாமுனிவர்
10. எ என்னும் எழுத்திற்கு கீழ்கோடிட்டு ஏ என சீர்திருத்தம் செய்தவர் __________
விடை : வீரமாமுனிவர்
11. 20ஆம் நூற்றாண்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் __________
விடை : வீரமாமுனிவர்
குறுவினா
1. மனிதன் எதற்கு மொழியைக் கண்டுபிடித்தான்?
மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க மொழியைக் கண்டுபிடித்தான்.
2. மொழிக்கு மொழி எவை வேறுபடுகின்றன?
எழுத்துகளின் வரிவடிவங்கள் மொழிக்கு மொழி வேறுபடுகின்றன. அவை ஒரே மொழியிலும் கூட, காலந்தோறும் மாறி வருகின்றன.
3. எழுத்துக்களில் மாற்றங்கள் ஏற்பட காரணமானவைகளாக அமைகின்றன யாவை?
ழுத்துக்களில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணமானவைகளாக அமைகின்றன
4. கல்வெட்டுகள், செப்பேடுகள் எந்த ஆண்டுகளிலிருந்து நமக்கு கிடைக்கப்பெற்றன.
கல்வெட்டுகள் கி.மு. (பொ.ஆ.மு.) மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. செப்பேடுகள் கி.பி. (பொ.ஆ.) ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
5. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் வரி வடிவங்களை எத்தனை வகைப்படுத்தலாம்?
கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் வரி வடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகைப்படுத்தலாம்.
6. கண்ணெழுத்துக்கள் என்றால் என்ன?
கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் கண்ணெழுத்துக்கள் என அழைக்கப்பட்டன.
7. கண்ணெழுத்துக்களை எவ்வாறு அறியலாம்?
கண்ணெழுத்துக்களை சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கணணெழுத்துப் படுத்த எணணுப் பல்பொதி (சிலம்பு 5 : 112) என்னும் தொடரால் அறியலாம்.
8. ஓலைச்சுவடிகளிலும், கல்வெட்டுகளிலும் புள்ளி இடாமல் எழுதுவதற்கு காரணம் யாது?
ஓலைச்சுவடிகளிலும், கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துக்களை அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதுவதற்கு காரணம் ஆகும்
சில பயனுள்ள பக்கங்கள்