Tamil Nadu 8th Standard Tamil Book Term 1 சொற்பூங்கா Solution | Lesson 1.4

பாடம் 1.4. சொற்பூங்கா

நூல் வெளி

செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.

நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.

இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.

திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார்.

இவரது “தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள்” என்னும் நூலிலிருந்து செய்திகள் தொகுத்து தரப்பட்டுள்ளன.

மதிப்பீடு

தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளை தொகுதது எழுதுக

முன்னுரை

மொழி என்பதற்குச் சொல் என்பதும் ஒரு பொருள். மொழியை (சொல்லை) ஓர் எழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் உடைய மொழி என மூன்று வகையாக்குவர்.

ஓரெழுத்து ஒருமொழி

உயிர் எழுத்துகள் வரிசையில் ஆறு எழுத்துகளும், மகர வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, நகர வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும். க, ச, வகர வரிசைகளில் நான்கு எழுத்துகளும், யகர வரிசையில் ஒரு எழுத்தும் ஆக மொத்தம் நாற்பது நெடில் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார். நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.

பூ-யா சொற்கள்

பூ என்பது ஓரெழுத்து ஒரு மொழி. கா என்பதும் ஒரெழுத்து ஒரு மொழி. இவை இரண்டையும் இணைத்து பூங்கா எனக் கலைச்சொல் ஆக்கி வைத்துள்ளனர். யா என்பது வினா. யாது, யாவர், யாவன், யாங்கு, யார், யாவை என்றெல்லாம் வினாவுவதற்கு முன் வந்து நிற்கும் எழுத்து “யா” தானே!

மா சொல்

மா என்பதும் ஓரெழுத்து ஒரு மொழிகளுள் ஒன்று. நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவையை மாநாடு என்கிறோம். பல குறு நிலங்களை உள்ளடக்கிய பெருநிலத்தை மாநிலம் என்கிறோம். மா என்பது விலங்கையும் குறிக்கும். அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா என்றெல்லாம் வந்து விலங்கினப் பெயராகி நிற்கின்றது.

ஈ-காரச் சொல்

ஈ என்பது பொதுப்பெயர் ஓயாது ஒலி செய்யும் ஒலிக்குறிப்பைக் காட்டி நிற்கிறது. மாட்டு ஈ, தேன் ஈ எனப் பகுத்து வழங்கும் வழக்கம் உள்ளது. ஈ என்பது ஈகை என்னும் பொருளில் வழங்குதல் வெளிப்படை. ஈ என்று பல்லைக் காட்டாதே என்று அறிவுரை கூறுவதும் உண்டு.

கால மாற்றத்தில் கரைந்தவை

இன்னொரு வகையாகவும் பார்க்கலாம். ஆன் என்பது ஆ ஆகியது; மான் என்பது மா ஆகியது;  கோன் என்பது கோ ஆகியது; தேன் என்பது தே ஆகியது; பேய் என்பது பே ஆகியது இவையெல்லாம் கால வெள்ளத்தில் கரைந்து தேய்ந்தவை.

ஏகாரச் சொல்

எட்டத்தில் போகிற ஒருவனை ஏய் என அழைத்தனர். ஏற் என்பது என்னோடு கூடு, பொருந்து, சேர் என்னும் பொருளை உடையது. ஏய் என்பது ஏ என வழக்கில் ஊன்றிவிட்டது. அம்மை ஏவு என்பர். ஏவுதல் என்பது “அம்பு விடுதல்” ஏவும் அம்பு” ஏ என்றாகியது. அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் ஏவலன் எனப்பட்டான். அம்பு விடும் கலை ஏகலை என்றது தமிழ். அதில் வல்லவனை ஏகலைவன் என்று பாராட்டியது.

முடிவுரை

தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பனவற்றை கையில் கனியாகக் காட்டும்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்பு

1. தமிழில் சொல் என்பதற்கு ________ என்பது பொருள்

விடை: நெல்

2. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது ________ கூற்று.

விடை: தொல்காப்பியர்

3. நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி ________ என்பார்

விடை: ஒருமொழி

4. குற்றெழுத்து ஐந்தும் ________ இலவே என்பார்.

விடை: மொழிநிறைபு

5. உயிர் வரிசையில் _______ ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன

விடை: ஆறு

6. உயிர்மெய் நெட்டெழுத்துகள் _______

விடை: 126

7. நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் _________

விடை: நன்னூலார்

8. குறில்கள் ஓரெழுத்து ஒரு மொழி ____, _____

விடை: நொ, து

9. அம்புவிடும் கலையை _________ என்பார்

விடை: ஏகலை

10. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர்

விடை: இரா.இளங்குமரனார்

11. தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்தவர்

விடை: இரா.இளங்குமரனார்

12.  இரா.இளங்குமரனார் திருச்சிக்கு அருகில் அல்லூரில் _________, _________ அமைத்துள்ளார்.

விடை: திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும்

II. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. இரா.இளங்குமரனார் எழுதிய நூல்களில் பொருந்தாதது?

  1. இலக்கண வரலாறு
  2. தமிழிசை இயக்கம்
  3. தொன்னூல் விளக்கம்
  4. தனித்தமிழ் இயக்கம்

விடை: தொன்னூல் விளக்கம்

2. தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்தவர்.

  1. டி.கே.சிதம்பரனார்
  2. வாணிதாசன்
  3. இரா.இளங்குமரனார்
  4. கண்ணதாசன்

விடை: இரா.இளங்குமரனார்

 

II. குறு வினா

1. உயிரெழுத்துகளில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிகளை எழுதுக?

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ

2. தகர வரிசையில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிகளை எழுதுக?

தா, தீ, தூ, தே, தை

3. வகர வரிசையில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிகளை எழுதுக?

வா, வீ, வை, வெள

4. குறில் எழுத்துகளின் ஓரெழுத்து ஒருமொழிகளை எழுதுக?

நொ, து

5. ‘யா’ எழுத்து முன் வந்து நிற்கும் சொற்களை கூறுக

யா என்பது வினா. யாது, யாவர், யாவன், யாவள், யாங்கு, யாண்டு, யார், யாவை

3. ஒர் எழுத்து மொழி பற்றிய தொல்காப்பியர் கருத்து யாது?

“நெட்டெழுத்தும் ஏழே ஓரெழுத்து ஒருமொழி” என்பது ஒர் எழுத்து மொழி பற்றிய தொல்காப்பியர் கருத்து ஆகும்.

4. கால வெள்ளத்தில் கரைந்து தேய்ந்த சொற்களை எழுதுக.

ஆன் என்பது ஆ ஆகியது; மான் என்பது மா ஆகியது; கோன் என்பது கோ ஆகியது; தேன் என்பது தே ஆகியது; பேய் என்பது பே ஆகியது இவையெல்லாம் கால வெள்ளத்தில் கரைந்து தேய்ந்தவை ஆகும்

5. இரா.இளங்குமரனார் தொகுத்த நூலின் பெயர் என்ன?

இரா.இளங்குமரனார் தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.

6. சொற்பூங்கா இரா.இளங்குமரனாரின் எந்த நூலிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது?

சொற்பூங்கா இரா.இளங்குமரனாரின் தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள் என்னும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

7. தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளை அட்டவணைப்படுத்துக

உயிர் எழுத்துஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
மகர வரிசைமா, மீ, மூ, மே, மே, மோ
தகர வரிசைதா, தீ, தூ, தே, தை
பகர வரிசைபா, பூ, பே, பை, போ
நகர வரிசைநா, நீ, நே, நை, நோ
ககர வரிசைகா, கூ, கை, கோ
சகர வரிசைசா, சீ, சே, சோ
வகர வரிசைவா, வீ, வை, வெள
யகர வரிசையா
குறில் எழுத்துநொ, து

 

சில பயனுள்ள பக்கங்கள்