Tamil Nadu 8th Standard Tamil Book Term 1 நிலம் பொது Solution | Lesson 2.3

பாடம் 2.3. நிலம் பொது

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர்.

  1. தாயாக
  2. தந்தையாக
  3. தெய்வமாக
  4. தூய்மையாக

விடை : தாயாக

2. இன்னோசை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. இன் + ஓசை
  2. இனி + ஓசை
  3. இனிமை + ஓசை
  4. இன் + னோசை

விடை : இனிமை + ஓசை

3. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. பால்ஊறும்
  2. பாலூறும்
  3. பால்லூறும்
  4. பாஊறும்

விடை : பாலூறும்

II. தொடரில் அமைத்து எழுதுக.

1. வேடிக்கை:

  • குழந்தை  விளையாடுவதை தந்தை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்தார்.

2. உடன்பிறந்தார்:

  • தர்மன் தன் உடன்பிறந்தார் உடன் மிகுந்த அன்பு வைத்திருந்தான்.

III. குறுவினா

1. விலைகொடுத்து வாங்க இயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை?

இந்த பூமிக்கு அணுக்கமாக உள்ள வானம், காற்றின் தூய்மை, நீரின் உயர்வு யாருக்கும் சொந்தமானவை அல்ல.

அப்படி இருக்கையில், அவற்றை எவ்வாறு விலை கொடுத்து வாங்க முடியும் என்று சியாட்டல் கூறுகின்றார்.

2. நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?

இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் செவ்விந்தியர்களுப் புனிதமாகும்.

இந்தப் பூமியை எப்பொழுதும் செவ்விந்தியர்கள் மறப்பதேயில்லை. ஏனெனில் பூமியே அவர்களுக்கு தாயாகும்.

அவர்கள் அந்த மண்ணுக்கு உரியவர்கள்; அந்த மண்ணும் அவர்களுக்கு உரியதாகும்.

3. எதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்?

  • செவ்விந்தியர்கள் வாழும் பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுவதையும்,
  • எங்கு பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதையும்,
  • தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருவதையும்

தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்

IV. சிறு வினா

1. நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.

ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவுகூர்பவை.

இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்களேயாகும்.

இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள். இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள்.

எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர்; குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர்.

இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீரன்று; எமது மூதாதையரின் குருதியாகும் என நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளார்

2. எவையெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று சியாட்டல் கூறுகிறார்?

இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள்.

மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள்.

மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல்சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும்

இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம் என்று சியாட்டல் கூறுகிறார்

V. நெடு வினா

தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

இந்த பூமியின் ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்கு புனிதமாகும். எமது மக்கள், இந்தப் பூமியை எப்போதும் மறப்பதேயில்லை. ஏனெனில் இது எமக்கு தாயாகும்.

நாங்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள்; இந்த மண்ணும் எமக்குரியதாகும். இந்நிலமானது எங்களுக்கு மிகவும் புனிதமானது என்பதால் இந்நிலத்தை விற்க சம்மதிப்பது எனபது மிகவும் இயலாத ஒன்றாகும்.

நாங்கள் பூமியை தாயாகவும், வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள். எங்கள் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால் ஆனதாகும்.

நீங்கள் இதனை உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக சொல்லித் தர வேண்டும். அப்போது தான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள்.

இந்நிலமே எங்கள் தாயாகும்; எமது உறவு முறையாரின் வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும். இதனை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போல் உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

இப்பூமியின் மீது வந்து விழுந்தாலும் அவையெல்லாம் பூமித்தாயின் மீது வந்து விழுவனவே யாகும். மேலும், இப்பூமியின் மீது மக்கள் துப்பக் கூடுமானால் அது அவர்கள் தம் தாய் மீது துப்புவதற்கு ஒப்பானதாகும்.

இந்நிலமானது கடவுளும் மதிக்கக்கூடிய ஒன்றாகும். ஆகவே, இதற்குக் கெடுதல் செய்வதென்பது அதனைப் படைத்த இறைவனை அவமதிக்கும் செயலாகிவிடும்.

நீங்கள் மற்றப் பழங்குடியினரைக் காட்டிலும் முன்கூட்டியே இந்நிலத்தை விட்டுச் செல்லக்கூடும்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் _________

விடை: சுகுவாமிஷ் பழங்குடியினர்

2. _________ பெருந்தலைவர் செவ்விந்தியர்களின் நிலங்களை வாங்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.

விடை: வாஷிங்டனின்

3. _________ களில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள்

விடை: ஏரி

4. சுகுவாமிஷ் பழங்குடியினரின் ________ தாயாக கருதுகின்றன

விடை: நிலத்தினை

5. தமிழகப் பழங்குடிகள் எனும் நூலினை எழுதியவர் ________

விடை: பக்தவத்சல பாரதி

I. பிரித்து எழுதுக

  1. ஊசியிலை = ஊசி + இலை
  2. மறப்பதேயில்லை = மறப்பதே + இல்லை
  3. உணவளிக்கின்றனர் = உணவு + அளிக்கின்றனர்
  4. நீரானது = நீர் + ஆனது
  5. நிலத்திலிருந்து = நிலத்தில் + இருந்து
  6. உங்களுடைய = உங்கள் + உடைய
  7. பாழாக்கி = பாழ் + ஆக்கி
  8. முறையிலிருந்து = முறையில் + இருந்து
  9. காட்சிகளெல்லாம் = காட்சிகள் + எல்லாம்
  10. ஒன்றாகும் = ஒன்று + ஆகும்
  11. சொந்தமானவை = சொந்தம் + ஆனவை
  12. பனித்துளி = பனி + துளி
  13. புனிதமானது = புனிதம் + ஆனது
  14. தண்ணீரன்று = தண்ணீர் + அன்று
  15. தேவையானவை = தேவை + ஆனவை

II. சிறு வினா

1. சுகுவாமிஷ் பழங்குடியினர் எங்கு வாழ்ந்தனர்?

அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் சுகுவாமிஷ் பழங்குடியினர்.

2. சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் யார்?

சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் சியாட்டல் ஆவார்

3. சுகுவாமிஷ் பழங்குடியினரின் தாயாகவும், தந்தையாகவும் கருதக்கூடியவை யாவை?

சுகுவாமிஷ் பழங்குடியினரின் பூமியை தாயாகவும், வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள்.

4. சுகுவாமிஷ் பழங்குடியினரின் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எதனாலனது?

சுகுவாமிஷ் பழங்குடியினரின் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது அவர்களுடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால் ஆனதாகும்.

5. சுகுவாமிஷ் பழங்குடியினர் பூமியில் துப்புவதை எப்படி கருதினார்கள்?

சுகுவாமிஷ் பழங்குடியினர் பூமியின் மீது மக்கள் துப்பக் கூடுமானால் அது அவர்கள் தம் தாய் மீது துப்புவதற்கு ஒப்பானதாகும்.

6. சுகுவாமிஷ் பழங்குடியினர் அவர்களது சகோதரிகள், சகோதர்கள், குடும்பமென எவற்றையெல்லாம் கருதினார்கள்?

  • இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள்
  • மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள்
  • மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித் துளிகள், மட்ட க் குதிரைகளின் உடல்சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும் இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம்.

7. ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள் எதனை பழங்குடியினருக்கு நினைவு கூர்கின்றன?

ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு கூர்கின்றன.

8. நீரின் முணுமுணுப்புகள் எவரின் குரல்களாகும்?

நீரின் முணுமுணுப்புகள் சுகுவாமிஷ் பழங்குடியினரின் பாட்டன்மார்களின் குரல்களாகும்.

9. மூதாதையரின் குருதி எதற்கு ஒப்பாகும்?

ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது பழங்குடியினரின் மூதாதையரின் குருதிக்கு ஒப்பாகும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்